முஸ்லிம்கள் போர்க் குணம் உடையவர்கள் என்பதெல்லாம் உண்மையா?
இறைவனின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அறப்போர் வரலாற்றில் உள்ள சிறப்பு அம்சம் என்ன? அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய
சம்பவங்கள். பொன் எழுத்துக்களால் என்ற உடன் வீண் விரயம் செய்யலாமா
என்ற கேள்வி வந்து விடும். இது செயலாக்கச் சொல் அல்ல.
அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சொல்.
இறைவனின் துாதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒவ்வொன்றும். கிளர்ச்சி, புரட்சி, முற்றுகை, மறியல், அறப்போர் என என்ன மாதிரி வார்த்தைகளால், பெயர்களால் சொல்லிக் கொண்டாலும். இவை எல்லாமே உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய விஷயங்கள். அப்படி இருந்தும்
ஒட்டு மொத்த பாட திட்டங்களிலிருந்தும் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. கடந்த காலங்களில் மட்டும் அல்ல நிகழ் காலமாகிய இன்றும். அதுதான் நிலை.
முஸ்லிம்களாகிய நாம் இவையெல்லாம்
உலக வரலாறு மற்றும் பாட நுால்களில் இடம் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இஸ்லாம்
மாணவ பருவத்திலேயே விளங்க வரும். எந்த ஒரு சமுதயாத்தையும் ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று சொன்னால். அந்த சமுதாய வரலாற்றை மூடி மறைத்தால் போதும். இலக்கணம் இல்லாத மொழி அழிந்து விடும். அது போல் வரலாறு இல்லாத சமுதாயமும் அழிந்து விடும்.
இதை கடந்த கால வரலாற்றில் கண்டோம். ஸ்பெயினில் முஸ்லிம்கள்
வாழ்ந்தார்கள். அவர்களுடைய வரலாறுகள் அங்கே கட்டிடங்களாக இருந்தது. அதையும் இல்லாமல்
ஆக்கி அழித்து விட்ட பிறகு என்ன ஆனது. இஸ்லாம் என்றாலே
கேள்விக் குறியாக ஆகி
விட்டது.
மறுபடியும் சமீப
காலமாக இந்த நுாற்றாண்டில்தான் ஒரு சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் சிறுகச் சிறுக துளிர் விட ஆரம்பித்து இருப்பதை நாம் காண்கிறோம். சுமார் ஏழு நுாறு ஆண்டு காலம் முஸ்லிம்கள் ஆண்டு வந்தார்கள் என்பது மிகப் பெரிய ஆச்சரியம். எந்த ஒரு
நாடாக இருந்தாலும். ஒரு ஐந்து வருடம் ஆளக் கூடியவர்கள் கூட தங்கள் சிலைகளை வைத்து விடுகிறார்கள். அல்லது ஏதாவது ஒரு கட்டிடத்தை கட்டி வைத்து தங்களது நினைவுச் சின்னமாக விட்டுச் செல்கிறார்கள்.
இந்தியா என்ற
இந்த பெரிய நாட்டிலே முகலாயர்கள் ஆண்டதை இன்றளவும் உலகம் வியந்து பார்க்கிறதை காண்கிறோம். அதற்கு காரணம் தாஜ்மஹால், குதுப் மினார், செங்கோட்டை போன்ற கட்டிடங்கள்தான். தாஜ்மஹால் காதல் சின்னம் என்கிறார்கள். அது இஸ்லாத்திற்கு புறம்பானதுதான்.
இஸ்லாத்திற்கு இழுக்கானதுதான். இருந்தாலும், வரலாற்றில் அமைந்து விட்ட செய்தி
என்பதால் குறிப்பிடுகிறோம். இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதற்கு பின்னால்
வந்த ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டிய கட்டிடம் அவர்கள் வரலாற்றை கூறிக் கொண்டிருக்கின்றன. ரிப்பன் பில்டிங் இப்பொழுது சென்னை மாநகராட்சி அலுவலகமாக இருக்கிறது. இருந்தாலும் அதை கட்டிய ரிப்பன் பிரபு பெயரால்தான் ரிப்பன் பில்டிங் என்றுதான்
அழைக்கப்படுகிறது.
இப்பொழுது 2016 வரை தமிழக அரசின் தலைமைச் செயலமாக உள்ள கட்டிடம். புனித ஜார்ஜ்
கோட்டை. ஏன் இப்பொழுது இப்பொழுது என குறிப்பிடுகிறோம்? ஒவ்வொரு ஆட்சியாளர்களும் வரலாறு தங்களை நினைவு
கூற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக அரசு அலுவலகங்களை நாளுக்கு நாள்
மாற்றிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். எனவேதான் இப்பொழுது என்பதையும் சேர்த்து
பதிகிறோம்.
இப்பொழுது தமிழக அரசின் தலைமைச் செயலமாக ஜார்ஜ் கோட்டை இருந்தாலும்.
ஆங்கிலேயர்களின் வரலாற்றை அது கூறிக் கொண்டிருக்கிறது. கூற வைத்துக்
கொண்டிருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால். அரபகத்திலே நடந்த மிகப் பெரிய ஒரு புரட்சி.
உலகமெல்லாம் வியர்ந்து பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி. இப்படி எல்லா சிறப்பு
அம்சங்கள் இருந்தும் வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இது மிக மிக
கண்டிக்கத்தக்க ஒன்று.
எனவே அதை
வரலாற்றில் பதிவு செய்வதற்கு நாமெல்லாம் முயற்சி செய்ய வேண்டும். இதை விளங்கி செயல்பட வேண்டும். பத்ரு போருக்கு முன்னால்
நடந்த இரு வேறு அம்சங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு
மத்தியில் நடந்த விஷயங்கள். முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும்
நடந்த மிகப் பெரிய ஒரு ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தத்தை பல இஸ்லாமிய புத்தகங்களிலே படித்தும் இருப்போம். பலரின் உரைகளிலே கேட்டும் இருப்போம்.
எங்கேயாவது முஸ்லிம் ஜமாஅத்துக்களோ, குழுக்களோ,
அமைப்புகளோ, கட்சிகளோ தனித்து விடப்படுகிறார்கள்.
பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவர்கள் தங்களின்
அடுத்த நிலைப்பாட்டிற்கு இந்த ஒப்பந்தங்களை சொல்லிக் காட்டக் கூடியவர்களாக இருப்பதை
நாம் கண்டு வருகிறோம்.
நாம் ஏன் இந்த ஒப்பபந்தத்தை இங்கே குறிப்பிடுகிறோம்.
போர்களா? போராட்டங்களா? என்பதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஒப்பந்தம்
என எண்ணலாம். இந்த ஒப்பந்தத்தை மேலோட்டமாகப் பார்த்தால் சம்பந்தம்
இல்லாத ஒப்பந்தம் போல் தோன்றும். சிந்தித்துப் பார்த்தால் இந்த ஒப்பந்தத்திற்கும் போர்களா? போராட்டங்களா?
என்பதற்கு மிகப் பெரிய சம்பந்தமும், விளக்கமும் உள்ளதை அறியலாம்.
இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காக
முஸ்லிம்கள் போர் செய்தார்கள். சண்டையிட்டார்கள். முஸ்லிம்கள் போர்க் குணம் உடையவர்கள்
என்பதெல்லாம் உண்மையா? அது உண்மையானால் முஸ்லிம்கள் முதன் முதலில் யாரை எதிர்த்துப்
போர் செய்து இருக்க வேண்டும்? யாரை
அழித்து இருக்க வேண்டும்? முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதியான மதீனாவிலே இருந்த அந்த யூதர்களை
எதிர்த்துப் போர் செய்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த
போரும் செய்யவில்லை. யூதர்களோடு ஒப்பந்தம்தான் செய்திருக்கிறார்கள்.
ஆகவே அது பொய் என நிரூபனம் ஆகிறது.
இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காக எந்த போரும் செய்யவே இல்லை. தங்களை காத்துக் கொள்வதற்காகத்தான் போர்கள்
செய்தார்கள். இதற்கு இந்த ஒப்பந்தம் மிகப் பெரிய ஆதாரமாகும். ஒரு பூனையை அறையில் விட்டு ஒருவன் அடிக்க முற்பட்டால் அது எப்படியும் அவனை
எதிர்க்கத்தான் செய்யும். இந்த ஒரு நிலையைத்தான்
முஸ்லிம்களுடைய எந்த ஒரு போருக்கும் சொல்ல முடியும்.
பத்ரு போருக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். குறைஷிகளுடைய பொருளாதார திரட்டலை முறியடிக்க
ரசூல்(ஸல்) அவர்கள் முற்றுகை, மறியல்
போன்ற போராட்டத்தை துவங்கியதாக ஹதீஸ் நுால்களில் நாம் பார்க்கிறோம். இந்த இரண்டு வருஷ காலத்திலே 8 முற்றுகைகள் நடக்கிறது.
இந்த எட்டு முற்றுகைகளும் அவர்களது இருப்பிடங்களை நோக்கிச் செல்லவில்லை.
அவர்களுடைய பொருளாதாரங்களை அழித்து விடப் போகவில்லை. எதற்காகப் போனார்கள்? எங்கு நோக்கி போனார்கள்?
தமக்கு எதிராக எந்த பொருளாதாரம் பயன்படுத்தப்பட்டு விடும் என்று அஞ்சினார்களோ. அதை தடுத்து மறிக்கத்தான் போனார்கள். தற்காப்புக்காக
போனார்கள். குறைஷிகள் பயண ஏற்பாடுகளோடு போருக்கான வியாபாரத்துக்காக
செல்லும்பொழுதும் திரும்பும்பொழுதும் அந்தப் பொருளாதாரத்தை மட்டுமே முடக்கி போர்
வராமல் தடுக்க வேண்டும் என்று போனார்கள். இன்றைய மக்கள் விளங்கும்
வார்த்தையில் சொல்வதாக இருந்தால். பொருளாதாரத் தடை விதித்தல் என்று சொல்லலாம். பொருளாதாரத்தை
தடை விதித்தல் என்பது இன்றும் நடக்கத்தான் செய்கிறது.
தீவிரவாதத்தில் ஈடுபடும் நாடுகள்.
தீவிரவாதத்திற்கு உதவி செய்யும் நாடுகள். அணு ஆயுதம் வைத்துள்ளார்கள். விஷ வாயு பதுக்கி
வைத்துள்ளார்கள். போர் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கூறி உலக
ஆட்சியாளர்கள்(?) ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளுக்கு சென்ற பொருளாதாரங்களைத்
தடை செய்ததைப் பார்த்தோம். அவை பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்பது தனி விஷயம்.
போர் வராமல் தடுக்க வேண்டும். இந்த ஒரே ஒரு நோக்கத்துக்காக.
ஆட்சியாளர் என்ற முறையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த பொருளாதாரத் தடைதான் அது. ஸல்மான் ருஷ்டிகளும் அவன்களது
ஏஜெண்டுகளும் சொல்வது போல் அவை வழிப்பறியோ, கொள்ளையோ அல்ல.
ஆக பொருளாதாரத் தடை என்ற அடிப்படையில்
செய்த முயற்சிகள், நடத்திய முற்றுகைப் போராட்டங்கள் எட்டு. அதில் யார் யார் கலந்து கொண்டார்கள்.
அவற்றில் எத்தனைகளில் ரசூல்(ஸல்) அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பின்னணிகளை நாம் தெரிந்து
கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பத்ருப் போர் என்பது மிக மிக அவசியமான
ஒன்று. நிர்ப்பந்தத்தில் நடந்த ஒன்று என்ற உண்மை நிலைக்கு உலகில்
உள்ள ஒவ்வொருவரும் வர முடியும்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி
மக்கள் உரிமை
Comments