எல்லா மதங்களும் நல்லதை சொல்லும் போது நான் ஏன் இஸ்லாத்தில் இணைய வேண்டும் ?-செங்கிஸ் கான்
எல்லாப் பள்ளிகளிலும் சமசீர் கல்விதான் என்றாலும் உங்கள் குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பீர்கள் ?
எங்கு சிறந்த கற்பிக்கும் முறையும், ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ளதோ அங்குதான் சேர்ப்பேன் !
எல்லா மதங்களும் இறைவன் ஒருவன்தான் என்று போதிக்கிறது ! ஆனால் எந்த மதத்தில் அது செயல் பாட்டில் உள்ளது ?
மனிதர்கள் அனைவரும் சமம் என அனைவரும் சொல்கிறோம் ! சாதியை இருந்த இடம் தெரியாமல் மறைக்கும் மார்க்கம் எது?
எல்லா மதங்களும் மது தீமை என்றுதான் சொல்கிறது ?
ஆனால் மது ஒழிப்பில் எந்த மதம் வெற்றி பெற்றுள்ளது ?
பாலியல் குற்றங்களை தவறு என எல்லா மதங்களும் சொல்கிறது ! ஆனால் அதைத் தடுப்பதற்கான பர்தா வழிமுறை எங்கு நடைமுறையில் உள்ளது?
வட்டி ஒரு சுரண்டல் என்பது எல்லா மதவாதிகளும் கூறினாலும் அதை வெறுத்து ஒதுக்கும் வாழ்வியல் எங்கு உள்ளது ?
பெண்ணிடம் வரதட்சணை வாங்குவது தவறு என எல்லோரும் கூறுகிறார்கள் அதை ஒழிப்பதற்கான மஹர் நடைமுறை எங்கு உள்ளது ?
சிசுக்கொலை தவறு என எல்லா மதமும் சொல்கிறது ஆனால் அதைத் தடுக்கும் வழிமுறை எங்கு உள்ளது ?
ஆன்மிகம் அமைதியைத் தரும் என அனைத்து மதங்களும் சொல்கிறது ஆனால் அதற்காக திட்டமிடப்பட்ட ஐவேளை தியானப் பயிற்சி எங்கு உள்ளது?
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி!
இது போன்ற எத்தனையோ விவகாரங்கள் ஏட்டளவில் இல்லாமல் இஸ்லாம் நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டுள்ளது !
உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் உங்கள் முன் உள்ள நான்கு பள்ளிகளின் தரத்தை பரிசோதித்து சேர்ப்பீர்கள் இல்லையா ?
உணவு, உடை , வீடு வாகனம், வாழ்க்கைத் துணை, மொபைல் உள்பட அனைத்திலும் ஆய்வு செய்து சிறந்ததை தேர்வெடுக்கும் நாம் நமது வாழ்வியல் கொள்கையையும் சிறந்தததாக தேர்ந்தெடுக்க வேண்டாமா ?
உண்மைதான் சார் !
இஸ்லாத்தை ஏற்றாக வேண்டும் எனும் எந்த நிர்பந்தமுமில்லை ! இது நேர்வழி இது வழிகேடு என அறிவிக்கும் இது குர்ஆன்! இறைவனின் வழிகாட்டுதல் படி அமைந்த வாழ்க்கைத் திட்டம்! படியுங்கள் ! சிறந்ததாக இருந்தால் கடைப்பிடியுங்கள்!
நிச்சயமாக சார்!
அல்ஹம்து லில்லாஹ் !
-செங்கிஸ் கான்
Comments