செங்கிஸ்கானின் மரணமும் அண்ணன் ஜமாஅத்தின் அலறலும்
செங்கிஸ்கான் எனும் அழைப்பாளரை அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.மரணத்தின் பிடி தவிர்க்க முடியாதது எனும் இறை விதியை மனித குலத்துக்கு ஞாபகமூட்டிய இச்சகோதரனின் மரணம் மனக்கண்ணில் இருந்து மறைவதற்கும் முன்னர் செங்கிஸ்கானின் மாமிசம் சாப்பிடும் TNTJ நரமாமிச உண்ணிகளின் நாதாரி ஆக்கங்கள் இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டன...நம்மோடு இல்லின்னா அவன் செத்தாலும் விட மாட்டோம் எனும் செத்தாந்தத்தை பறைசாற்றும் தக்லீத் ஜமாஅத்தினர் செங்கிஸ்கான் தவ்ஹீதை அழிக்கப் பாடு பட்டதாக கூறி அதற்கு ஆதாரமாக ததஜ வுக்கு எதிராக அவர் செயல்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளனர்.தவ்ஹீத் என்றால் அது ததஜ மட்டுமே என்கின்ற இவர்களின் கோமாளிக் கொள்கை இவர்களை இப்படி கிறுக்குத்தனமாய் கிறுக்க வைத்துள்ளது.
அண்ணன் பீஜே யின் அந்தரங்கங்களை
அசிங்கப்படுத்தி இணையத்தில் அவதூறு பரப்பியவராம் செங்கிஸ். இதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும் கூட அடுத்தவனின் அந்தரங்க வாழ்வை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்துவதை அறுவறுப்பான செயல் என்று கூறும் தார்மீக உரிமை இந்த தனிமனித தக்லீத் ஜமாஅத்துக்கு (ததஜ) உள்ளதா? அபூ அப்துல்லாஹ் முதல் பெரியார்தாசன் அப்துல்லாஹ் வரை யாரையுமே விட்டு வைக்காத அவதூறு ஆலையின் முழு நேர சேவகர்கள் அல்லவா இவர்கள்? அதிலும் மரணித்தவரின் கண்ணியம் பேணும் நல்லெண்ணம் இவர்களிடம் கிஞ்சித்தும் இருந்திருந்தால் குறைந்த பட்சம் செங்கிஸ்கான் அவதூறு பரப்பினார் என்று மொட்டையாக கூறி விடயத்தை அத்தோடு விட்டிருக்கலாம். பகரமாக ஆற்காடு பெண் தொட்டு குப்ரா வரை அசிங்கங்களை மீண்டும் பட்டியல் போட்டு அன்புள்ள அண்ணணையே இவர்கள் ஏன் மீண்டும் அசிங்கப்படுத்த வேண்டும்? அதிலும் பக்கா குடிகாரன் பக்கத்திலே தொட்டுக் கொள்ள ஊறுகாயை வைத்திருப்பது போல பாக்கரின் செய்திகளையும் தொட்டுச் சென்றுள்ளனர் தனி மனிதரை தாக்கும் ஜமாஅத்தினர் (ததஜ).தவறு செய்யாதவனையும் தவறு செய்யத்தூண்டி chatting இல் setting செய்து அசிங்கப்படுத்தும் அருமையான (?) வரலாற்று புருஷர்கள் அவதூரைப்பற்றி ஆக்கம் வரைவது ஆண்டு ஆரம்பத்தின் அளப்பரிய நகைச்சுவையாகும்.
அதிலும் செங்கிஸ்கானின் மரணம் அவர்களுக்கு கவலையளிப்பதில் மாற்றுக் கருத்து இல்லையாம்.!!!.உலகிலேயே இப்படியொரு கவலையை இப்போதுதான் பார்க்கிறோம்...நீங்கள் இப்படி ஒரு ஸ்டைலில் கவலைப்பட்டுள்ளது தான் எங்களின் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது.ஒருவனை அடியடியென்று அடித்து ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ஆப்பிள் வாங்கிக் கொடுக்கும் அபூர்வ ஆசாமிகள் இவர்கள். அண்ணணுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய ஒருவரின் திடீர் மரணம் அண்ணன் அடிவருடிகளுக்கு கவலை என்பது இமாலயப் பொய்யாகவே இருக்க வேண்டும்.
செங்கிஸ்கான் மரணித்து விட்டார்.அவரின் நற்காரியங்களுக்கு அல்லாஹ் பலமடங்கு நற்கூலியை நல்கட்டும்.ஆனால் அவரின் மரணத்தில் கூட இன்பம் காணும் அளவுக்கு ஒரு சில அரைவேற்காடுகளின் மனித நேயமும் மரணித்து விட்டது தான் கவலை.
ஒரு வேளை மரணித்தவர்களின் நற்காரியங்களை மட்டுமே பேசுங்கள் எனும் நபி மொழி அண்ணன் பீஜேயின் வாழ்வில் அவர் அனுபவித்த நிதர்சன உண்மைக்கு முரணாக இருந்திருக்கலாம்.அதனால் அது ஹதீஸ் அல்ல எனும் முடிவுக்கு அடியார்கள் வந்திருக்கலாம் அதனால் மரணித்தவனின் உடம்பை மண் சாப்பிடும் முன்னரேயே இந்த மண்ணடி மைந்தர்கள் பச்சையாக சாப்பிட்டிருக்கலாம்.எது எப்படியோ இந்த தப்பு தப்பு ஜமாஅத்தின்(ததஜ) இன்றைய தொண்டர்களுக்கு ஒரு எச்சரிக்கையை இறுதியாக பதிவிடுகிறோம்..நாளை ஒரு வேளை இவர்களை விட்டு நீங்கும் நிலை உங்களுக்கும் ஏற்படலாம்.பின்னர் நீங்களும் ஒரு நாள் மரணிக்கலாம்.அப்போது உங்கள் மாமிசத்தையும் மண் சாப்பிடும் முன் மண்ணடி ஆபிஸில் பந்தி போட்டு சாப்பிடும் அவல நிலைக்கு நீங்களும் ஆளாகலாம்...அனைவரும் அல்லாஹ்வை பயந்து அறிவுபூர்வமாய் முடிவெடுப்போம்
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்
இலங்கையிலிருந்து அபூ ஸஹத்
Comments