தமிழ் மக்களை நம்பிய பைசல் இறந்து விட்டார்.

கோவை சிறைவாசிகளின் வழக்குகளுக்காக நிதி திரட்ட  2004இல் கோவை தங்கப்பா, காயல் S.K. வந்தபொழுது தங்கியது பைஸல் ரெஸ்ட்ராரண்டில்தான். 

விஸிட் விஸாவில் வேலை தேடி வந்த தமிழகத்தைச் சார்ந்த பல  பகுதியினர் இலவசமாக தங்கி உண்டது பைஸல் ரெஸ்ட்ராரண்டில்தான்.

குறிப்பாக துபாய் வந்த பெரும்பாலான மேலப்பாளையம் மக்களுக்கு பேருதவியாக இருந்தது பைஸல் ரெஸ்ட்ராரண்ட்தான்.

1984 முதல்  24 மணி நேரமும் குர்ஆன் ஹதீஸ் பிரச்சார மையமாக செயல்பட்டது பைஸல் ரெஸ்ட்ராரண்ட்தான்.

1995இல் இருந்து 2002 வரை 24 மணி நேரமும் த மு மு க வின் அலுவலகம் ஆகவும் செயல்பட்டது பைஸல்  ரெஸ்ட்டாரண்ட்தான். 

ஒரு நாளுக்கு குறைந்தது 5 பேரிலிருந்து 30 பேர் வரை தமிழ் மக்கள் இலவசமாக சாப்பிடும் இடமாக இருந்தது பைஸல்  ரெஸ்ட்டாரண்ட்தான்.

அரபி ஹோட்டலாக இருந்த போதிலும் ஆரம்பத்திலிருந்து (1979இல் இருந்து)  தமிழரின் பொறுப்பில் உள்ளது பைஸல்  ரெஸ்ட்டாரண்ட்தான். 

எத்தனையோ அரபிகள் வந்து அரபி ஹோட்டல் இது. ஆகவே அரபிகளை நிர்வாகிகளாக வை என்று சொன்னார்கள். சிரியா, எகிப்து, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் என எந்த நாட்டுக்காரர்கள் வேலைக்கு வந்தாலும். அரபியின் குடும்பத்தினராக இருந்தாலும். தமிழரின் கீழ்தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வேலைக்குச் சேர்ப்பட்ட இடம். பைஸல்  ரெஸ்ட்டாரண்ட்தான்.

அந்த பைஸல் ரெஸ்ட்டாரண்ட் அதிபர் பைஸல்  முஹம்மது திப்ஸாவி 24.1.2016 அன்று மதியம் 1.30மணிக்கு  துபை ஆஸ்பத்திரியில் வைத்து இறந்து விட்டார்கள். (இன்னாலில்லாஹி..)  அவருக்கு வயது 68.

இக்வான்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டால் 1979க்குப் பிறகு அவரது தாய் நாடான சிரியாவுக்கு செல்ல முடியாதவராகவே ஆகி விட்டார். 

கடைசி இரண்டு மாதமாக திரும்பத் திரும்ப என்னிடம் கூறியது. சாப்பிட்டு விட்டு பகீர் என்று சொன்னால் விட்டு விடு. காசு வாங்காதே என்பதுதான். 

25.1.2016 அன்று ஷார்ஜா காஸிமியா ஆஸ்பத்ரி அருகில் உள்ள அஷ்ஷைகு சவூத் அல் காஸிமி பள்ளியில் வைத்து பைஸல் முஹம்மது திப்ஸாவி ஜனாஸா தொழுகை அஸருக்குப்  பின்னர் நடைபெறும். சனாயா கபரஸ்தானில் அடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக. 


கீழே  உள்ள செய்தி மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் வாட்ஸப்பில் அனுப்பியது. 

உன்மையில் மார்க்கம் மற்றும் சமுதாய விசயங்கள் அதிகம் பேசப்பட்ட இடம் பைஸல் ரெஸ்ட்டாரண்ட் தான் தமுமுக வின் ஆரம்ப காலத்தில் அங்கே தான் பல மசூரா நடைபெற்றது

கீழே  உள்ள செய்தி பெங்களூரிலிருந்து மேலப்பாளையம் சுலைமான் அவர்கள் வாட்ஸப்பில் அனுப்பியது.

[1/25, 5:52 AM] Sulaiman பெங்களூர்: அஸ்ஸலாமு அலைக்கும் பைஸல்ரெஸ்ட்ரான்ட் முதாலாலி அவர்களின் பாவங்களை மனித்து சொற்கத்தில் சேர்பாநக பைஸல்ரெஸ்ட்ரான்டில் நடந்த தவ்ஹித் பிரச்சாரங்களைப்பற்றி த மு மு க உள்வர்களுக்கும் த த ஜ வில் உள்ளவர்கள் எத்தனை பேருக்கு தெரியும்



குணங்குடி முஹைதீன் எங்களை போன்ற சிறைவாசிகளின் குடும்பத்தினர்களை சகோதரர் இலாஹி அவர்கள் விஷிட் விஷாவில் எடுத்து வேலை கிடைத்து ரெஸிடென்ட் விஷா வில் மாற்றும் வரை நாங்கள தங்கும் பாதுகாப்பு அரணாக இருந்ததும் அல் பைசல் ரெஷ்ட்டெரன்ட் தான்



Ibrahim Alim பைசல் ஹோட்டல் என்னைப்போன்றவர்களுக்கு அடைக்களம் கொடுத்து வாழ வைத்த இடம்



Comments

மேன்மக்கள் என்போர் இருந்தாலும் இறந்தாலும் மேன்மக்களே.

அன்னாரின் குடும்பத்தார்க்கும் ரெஸ்ட்டாரெண்ட் குடும்பத்தார்க்கும் அல்லாஹ் ஆறுதல் வழங்குவானாக!

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு