முஹம்மது நபி ﷺ அவர்களை நான் நினைவுக் கூறுகிறேன்.

[1/19, 9:58 AM] ‪+91 98941 90816‬: 

என் உணவின் 🍜 சுவையை பற்றி நான் அலுத்துக் கொள்ளும் போது  முஹம்மது நபி ﷺ அவர்கள் பசித்தப்போது தன் வயிற்றில் சில கற்களை கட்டிக்கொண்டதை நான் நினைவுக் கூறுகிறேன்.

எனக்கு எவ்வளவு குறைந்த ஆடைகள் 👕 இருக்கின்றன என்று நான் அலுத்துக் கொள்ளும் போது முஹம்மது நபி ﷺ அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இரண்டே ஆடைகள் மட்டுமே வைத்திருந்ததை நான் நினைவுக் கூறுகிறேன்.

என்னுடைய படுக்கை 🏡 எவ்வளவு வசதியற்றதாக இருக்கின்றது என்று நான் அலுத்துக் கொள்ளும் போது முஹம்மது நபி ﷺ அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தன் உள்ளங்கையிலும் பொசுப்பொசுப்பற்ற கோர துணியிலும் படுத்திருந்ததை நான் நினைவுக் கூறுகிறேன்.

மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க 💰 எனக்கு மனம் வராதபோது முஹம்மது நபி ﷺ அவர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கென கொடுத்துவிட்டு தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் இருந்ததை நான் நினைவுக் கூறுகிறேன்.

என் வாழ்க்கை ஏழ்மையில் 💵 இருக்கிறது என்று நான் அலுத்துக் கொள்ளும் போது முஹம்மது நபி ﷺ அவர்கள் ஏழ்மையானவர்களை எவ்வளவு நேசித்தார்கள் என்பதையும், ஏழ்மையானவர்களுடன் தாங்களும் சொர்க்கத்தில் இருப்பதாக வாக்களித்துள்ளதையும்
நான் நினைவுக் கூறுகிறேன்.


என்னை புன்படுத்தியவர்களை நினைத்து நான் வறுத்தப்படும் போது 😔 முஹம்மது நபி ﷺ அவர்கள் தங்களை புன்படுத்தியவர்கள் மீதும் கருணைக் காட்டியதை நான் நினைவுக் கூறுகிறேன்.

என்னை வெறுப்பவர்களை 😒 நான் நினைவுக்கூறும் போது முஹம்மது நபி ﷺ அவர்கள் தங்களை அவமானப்படுத்தியவர்களுக்காகவும் பிரார்த்தித்ததை நான் நினைவுக் 
கூறுகிறேன்.


நான் செய்த உதவிக்கு எனக்கு நன்றி செலுத்தாதவர்களை நான் நினைவுக்கூறும் போது முஹம்மது நபி ﷺ அவர்கள் கூலிகளிலே சிறந்தக் கூலி அல்லாஹ்விடமிருந்தே வருகிறது என்று நினைவுக் கூறியதை நான் நினைவுக் கூறுகிறேன்.

என்னை யாரும் நேசிக்காத போது 💕 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே என்னை நேசித்த முஹம்மது நபி ﷺ அவர்கள்  எனக்கு இருப்பதை நான் நினைவுக் கூறுகிறேன்.

என் வாழ்க்கையில் எவ்வளவுக் கஷ்டங்கள் 😩 என்று நான் அலுத்துக் கொள்ளும் போது முஹம்மது நபி ﷺ அவர்கள் என்னைவிட தங்கள் வாழ்க்கையில் பல மடங்கு அதிகமாக கஷ்டப்பட்டதை நான் நினைவுக் கூறுகிறேன். அது என்னை வலுப்படுத்துகிறது.
முஹம்மது நபி ﷺ அவர்களை விட நம் வாழ்க்கையில் ஒரு சிறந்த 👍 எடுத்துக்காட்டு, வழிக்காட்டி இருக்க முடியாது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு