ஜியாரத்து என்பது போராட்டமா?
நாம் முதலில்
அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும். தெரியாத மொழியில்
வார்த்தைகளை பயன்படுத்துவது மிகப் பெரிய குறைபாடு.
எந்த ஒரு
விஷயத்தை எடுத்துக் கொண்டாலும். அந்த மொழியிலே சொல்லக் கூடிய வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? என்பது நமக்கு விளங்க வேண்டும். அது நமக்கு விளங்கியது என்று சொன்னால். அதன் மூலம்
எந்த தவறுகளும் தீமைகளும்
ஏற்படாது.
விளங்காமல் இருந்த
ஒரு சில வார்த்தைகளினால் ஏற்பட்ட விபரீதங்களையும் நாம் சிந்தித்து விளங்க கடமைப்பட்டுள்ளோம். அந்த கட்டாய காலத்தில் இருக்கிறோம்.
இப்பொழுது ஜியாரத் என்பது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு எதிராக செய்யப்படும் போராட்டம்
போல் ஆக்கி விட்டார்கள்.
ஒரு காலத்தில் ஜியாரத்து என்று சொல்லுவார்கள். கேள்விப் பட்டிருக்கிறோம். இது அரபி வார்த்தை. தமிழர்களாகிய நாம்
இதை எங்கே கேள்வி படுவோம். ஜியாரத் என்று
சொன்னால் கபுரை ஜியாரத் செய்தல். இதைத் தவிர
வேறு எந்த ஜியாரத்தையும் கேள்வி பட்டிருக்க மாட்டோம். அது ஒரு
காலம்.
இப்பொழுது அரபு
நாடுகளிலிருந்து விஸாக்கள் வருகின்றன. எம்ளாய் விஸா
வருகின்றது. ரெஸிடண்ட் விஸா வருகின்றது, விஸிட் விஸாவும் வருகின்றது. இந்த விஸிட் விஸாவில் அரபியில் என்ன போட்டு இருக்கும். ஜியாரத் என்றுதான்
போட்டிருக்கும்.
zஸியாரா என்று எழுதி இருக்குமே அதற்கு என்ன அர்த்தம்? விஸிட் என்றால்
என்ன அர்த்தமோ
அதே அர்த்தம்தான் zஸியாரா
என்பதற்கும். ஒரு ஆபீஸுக்கு
ஏதாவது ஒரு அதிகாரி வந்து விட்டுப் போனால் என்ன சொல்கிறார்கள். இப்பொழுதுதான் அந்த
அதிகாரி விஸிட் பண்ணி விட்டு போனார் என்பார்கள். விஸிட் என்றாலே என்ன? போய் வருதல், வந்து போகுதல் என்பதுதான். ஜியாரத் என்றால் என்ன என்று கேட்டால் சென்று வருதல், வந்து போகுதல் என்பதுதான்.
ஒரு இடத்திற்கு
நாம் போய் விட்டு வந்தோம் என்றால் அதற்குப் பெயர்தான் ஜியாரத். கபுருக்கு ஜியாரத்
செய்கிறோம் என்றால் கபுருக்கு போய் விட்டு வருகிறோம் என்று அர்த்தம். இந்த சரியான
அர்த்தம் என்ன ஆயிற்று.
.
ஜியாரத் என்ற
வார்த்தை அரபியில் இருந்ததாலே இது ஒரு வணக்கமாக ஆகி விட்டது. இது ஒரு
சடங்காக ஆகி விட்டது.
இறந்தவருக்கு கபுரில்
போய் 2ஆம் நாள் 3 ஆம் நாள் 40ஆம் நாள் ஜியாரத் செய்வது. மக்களால் நல்லடியார்கள்
என்று நம்பப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள கபுர் கபுராக போய் ஜியாரத் செய்வது.
கேட்டால் ரசூல்(ஸல்) அவர்கள்தான்
ஜியாரத்துக்கு அணுமதி கொடுத்து உள்ளார்களே என்பார்கள். இப்படிச் சொல்லி அதை ஒரு சடங்காக. மார்க்கத்தில் ஒரு
வணக்கமாக ஆக்கி விட்டார்கள். இப்பொழுது ஒரு போராட்டமாகவும்
ஆக்கி விட்டார்கள்.
இதற்கெல்லாம் காரணம்
ஜியாரத் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் போனதுதான். அதற்கு அர்த்தம்
மட்டும் தெரிந்து இருந்தால். அல்லாமாக்கள் போர்வையில்
அனர்த்தம் செய்பவர்களின் சட்டையைப் மக்கள் பிடித்து இருப்பார்கள்.
இதற்கு இதுதானே அர்த்தம் என்று அவர்களுக்கு புரிய வேண்டிய விதத்தில் மக்களே புரிய வைத்து இருப்பார்கள். அர்த்தம் தெரியாததாலே என்ன ஆயிற்று. பெரிய ஒரு
வழி கேட்டிற்கு அர்த்தம் தெரியாதது ஒரு காரணம் ஆயிற்று.
அல்லாஹ்வுடைய துாதர்(ஸல்) அவர்கள்
அணுமதித்தது ஜியாரத்துல் குபூர். பல பேர்
அடங்கப்பட்டுள்ள இடத்திற்குத்தான் அரபியில் குபூர் என்று சொல்லப்படும். கபுர் என்றால் ஒருமை. குபூர் என்றால்
பன்மை. நாம் நடை
முறையில் கபரஸ்தான் என்கிறோம். பல பேர்
அடக்கப்பட்டுள்ள இடத்திற்கு நீங்கள் செல்வதை நான் தடுத்து இருந்தேன். இப்பொழுது நான்
அதை அணுமதிக்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் இருக்கிறது. (அறிவிப்பவர் புரைதா(ரலி)
நூல் : முஸ்லிம் 3995)
நூல் : முஸ்லிம் 3995)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ
الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ أَبُو بَكْرٍ عَنْ
أَبِي سِنَانٍ و قَالَ ابْنُ الْمُثَنَّى عَنْ ضِرَارِ بْنِ مُرَّةَ عَنْ
مُحَارِبٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ
عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا
ضِرَارُ بْنُ مُرَّةَ أَبُو سِنَانٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ
الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ وَنَهَيْتُكُمْ عَنْ
النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ فَاشْرَبُوا فِي الْأَسْقِيَةِ كُلِّهَا وَلَا
تَشْرَبُوا مُسْكِرًا و حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا
الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ
ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ كُنْتُ نَهَيْتُكُمْ فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ أَبِي سِنَانٍ
رواه مسلم
இதற்கு என்ன
அர்த்தம் எல்லாரும்
இறந்தால் அடக்கம்
செய்யக் கூடிய
அந்த அடக்க ஸ்தலங்களுக்கு நீங்கள்
யார் வேண்டும்
என்றாலும் போகலாம். ஆண்களாயினும் பெண்களாயினும் கப்று ஸியாரத் செய்யக்கூடாது என நபி
(ஸல்) அவர்கள் முதலில் தடுத்து இருந்தார்கள். குறிப்பாக இந்த விஷயத்தில்
பெண்களுக்கு கடுமையான தடையை விதித்திருந்தார்கள். பின்னர் இருவருக்கும்
அனுமதியளித்தார்கள்.
இதிலிருந்து நமக்கு என்ன விளங்குகிறது. அந்த கபரஸ்தானுக்கு நாம் போக தடை இல்லை. போவதற்கு தடை
இல்லை என்றுதான் சொல்லப்படுகிறதே தவிர. குறிப்பிட்ட இன்ன
நாளில் போக வேண்டும் என்ற எந்த ஏவலும் அதில் இல்லை. போனால் இத்தனை
மடங்கு நன்மை என்ற விபரமும் அதில் இல்லை. இதையெல்லாம் விளங்காமல்
என்ன செய்கிறார்கள்?
கட்டாயமாக ஆக்கப்பட்டிருக்கிற
தொழுகையை தொழாமல் இருப்பார்கள். அவர்களை குறை சொல்ல மாட்டார்கள். நோன்பு நோற்காமல் இருப்பார்கள். வசதி இருந்தும் ஹஜ்ஜுக்கு போகாமல் இருப்பார்கள். ஜகாத் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். இந்த மாதிரி கடமையான அமல்களை செய்யாவிட்டாலும் கூட எதுவும் கேட்க மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
இந்த கபுர்
ஜியாரத்துக்கு யாராவது ஒருவர் செல்லாமல் இருந்தால். அவர் ஏதோ
இந்த உலகிலும் மறு உலகிலும் மிகப் பெரிய நன்மை தரக் கூடிய அமலை செய்யாதவர் போல பார்ப்பார்கள்.
ஏன் ஜியாரத்துக்கு வரவில்லை, போகவில்லை என்று கேட்பார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில் ஜியாரத்துக்கு எல்லாரும் போகும்போது ஒருவர் வரவில்லை என்றால். அவர் மார்க்கத்துக்கு புறம்பான செயலை செய்து விட்டவர் போல் அவரைப் பார்ப்பார்கள்.
ஏன் ஜியாரத்துக்கு வரவில்லை, போகவில்லை என்று கேட்பார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில் ஜியாரத்துக்கு எல்லாரும் போகும்போது ஒருவர் வரவில்லை என்றால். அவர் மார்க்கத்துக்கு புறம்பான செயலை செய்து விட்டவர் போல் அவரைப் பார்ப்பார்கள்.
இந்த அளவுக்கு
ஜியாரத் என்பது மிகப் பெரிய ஒரு நன்மையான காரியம் போல் ஏற்படுத்தி விட்டார்கள். இதற்கெல்லாம் மூல காரணம். அந்த வார்த்தையின்
அர்த்தத்தை நாம் விளங்காததுதான் காரணம். அல்லாஹ்வுடைய துாதர்(ஸல்) அவர்கள்
அணுமதித்தது ஜியாரத்துல் குபூர். பலரையும் அடக்கம்
செய்யக் கூடிய அடக்கத் தலங்களுக்கு செல்வதற்கு தடை இல்லை என்று. தடையை நீக்கி
விட்டார்கள் அல்லாஹ்வுடைய துாதர்(ஸல்) அவர்கள்.
அதை ஆதாரமாகக்
காட்டிக் கொண்டு எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள். தனியாக ஒரு மனிதரை அடக்கம் செய்கிறார்கள். அல்லாஹ்வுடைய துாதர்(ஸல்)
அவர்கள் தடுத்த அளவுக்கு மேல் உயர்த்துகிறார்கள். அல்லாஹ்வுடைய துாதர்(ஸல்)
அவர்கள் தடை செய்த கபுருக்கு மேல் பூசி கட்டிடம் கட்டுகிறார்கள். தனியான ஒரு கபுருக்கு சென்று வருவதை ஜியாரத்து என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது ஒரு சாராருக்கு எதிரான போராட்டமாகவும் ஆக்கி விட்டார்கள்.
இவ்வளவு பெரிய
வித்தியாசத்துக்கு காரணம். ஒரு வார்த்தையை
அதன் மூல மொழியிலிருந்து சரியாக விளங்காமல் போனதுதான். அதனால் ஏற்பட்ட
விளைவு இது. இப்படிப்பட்ட
விளைவு எல்லாவற்றிலும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால். முதலில் அர்த்தம்
தெரிய வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக.
Comments