'அலெக்ஸாண்டர் வழி நடப்போம்' என்பது சரியா?

அண்ணல்நபி(ஸல்) வழி நடக்க வேண்டியவர்கள். 'அலெக்ஸாண்டர் வழி நடப்போம்' என்கிறார்கள்.


ஹிட்லரின் பின்னால் ஒன்றும் கிடையாது. பிரிட்டிஷ் பின்னால் எதுவுமே இல்லை. போர்ச்கீஸியர்களுக்கு பின்னாலும் ஒன்றும் கிடையாது. இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இஸ்லாம் இருக்கிறது. அபுபக்கர் சித்தீக்(ரலி) அவர்களை உமர்(ரலி) அவர்களை ஹை லைட் பண்ணினால் இஸ்லாம் ஹை லைட் ஆகி விடும். இஸ்லாம் ஹை லைட்டானால் உலகில் எல்லாவற்றுக்கும் வயிற்றில் புளி கரைத்து விடும்.


ஆகவே சப்பை கட்டு கட்ட வேண்டும். எந்த வரலாற்றிலும் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போர்களை அதாவது அறப் போர்களை. தற்காப்பு போர்களை விரிவுபடுத்தி எழுதி விடக் கூடாது. இது விளக்கி விடப்படக் கூடாது. உலகத்தில் இருக்கக் கூடிய எந்தக் கல்லுாரியிலும் பாடத் திட்டத்தில் கூட இவர்கள் பெயர்கள் இடம் பெற்று விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.


எல்லா பாடத் திட்டங்களிலும் முதல் இடத்தில் இடம் பெறுவதற்கு தகுதியானவர்கள் இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான்.  அவர்கள் காலத்தில் நடந்த அறப் போர்கள்தான் எல்லா பாடத் திட்டங்களிலும் முதல் இடத்தில் இடம் பெறுவதற்கு தகுதியானது. எந்தக் கல்லுாரியின் பாடத் திட்டத்தில் இது இருக்கிறது. எங்கேயும் இல்லை. இதுவெல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றால் எதற்காக?


அலெக்ஸாண்டரை முதல் இடத்தில் வைத்து இருப்பார்கள். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் அலெக்ஸாண்டர் படம்தான் முதல் பக்கத்தில் இருக்கும். அலெக்ஸாண்டர் என்ன செய்தார்

அநியாயத்தை எதிர்த்து போரிட்டாரா? போரில் பெண்களை கொல்லக் கூடாது என்று சொன்னாரா? மத போதகர்களை கொல்லக் கூடாது என்று போதித்தாரா? குழந்தைகளை கொல்லாமல் இறக்கம் காட்டுங்கள் என்றாரா? கொள்ளை அடிக்கக் கூடாது என்று சொன்னாரா? என்ன சொன்னார் என்ன செய்தார். எதற்கு வரலாற்றில் முதல் இடம் கொடுக்கிறீர்கள்? என்றால் பதில்  அலெக்ஸாண்டர் அவ்வளவுதான்.


இப்படிப்பட்டவர்களை வரலற்றில் எப்படி புகழ்ந்து இருப்பார்கள் தெரியுமா? அவர்கள் தங்கள் தகப்பனார்கள் போருக்கு போகும்போது சொல்வார்களாம். உலகம் முழுவதையும் நீங்கள் பிடித்து விடாதீர்கள் என்று. ஏன் என்றால்  நாங்களும் போரிட்டு பிடிப்பதற்கு விட்டு வையுங்கள் என்று. இது சிறந்த ஒரு சித்தாந்தமா? தத்துவமா

இதை வரலாற்றிலே பதிய வைத்து இருக்கின்றார்கள். இதில் என்ன தத்துவம் இருக்கின்றது. உலகம் முழுவதும் ஒருவன் ஆட்சி செய்வதால் என்ன நன்மை. தனித் தனியாக ஆட்சி செய்வதால் என்ன தீமைஒருவன் ஆட்சி செய்வதாக இருந்தால் அங்கு உள்ள மக்களின் விருப்பப்படிதான் ஆட்சி அமைக்க வேண்டும்.


மிகப் பெரிய கேவலம் என்ன தெரியுமா? இப்பொழுது முஸ்லிம் அமைப்பினர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட. தங்களுக்கு முன் மாதிரியாக அலெக்ஸாண்டரைக் கூறுகிறார்கள். அண்ணல்நபி(ஸல்) வழி நடக்க வேண்டியவர்கள். 'அலெக்ஸாண்டர் வழி நடப்போம்' என்கிறார்கள். அலெக்ஸாண்டரைப் போல் படை எடுப்போம் என்கிறார்கள். அதற்கும் அல்லாஹு அக்பர் கோஷம் போடக் கூடியவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள்.


மக்களின் விருப்பப்பத்திற்கு மாறாக அவர்களை கட்டுப்படுத்தியவர்கள். கொத்தடிமையாக்கியவர்கள். விரும்பும் பெண்களை கற்பழித்தவர்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ராணுவங்களை மேய விட்டவர்கள். வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம் பிடிக்கிறார்கள் என்றால் இது யாருடைய தவறு

அவர்களுடைய தவறு அல்ல. அவர்கள் ஹைலைட் பண்ணியதை பிரம்மாண்டப்படுத்தி பாடமாக கொண்டு வந்துள்ளதை படித்துக் கொண்டிருக்கிறவர்களுடைய தவறுதான்.


தகுதியற்ற அவர்களைப் பற்றி மேடைகளில் பேசி பின்பற்ற தகுதிவாய்ந்தவர்கள் போல் பிரபலப்படுத்துகின்றவர்களின் தவறுதான்

அதைப் படித்துக் கொடுக்கின்ற முஸ்லிம்களும்களுடைய தவறும்தான். முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம்

முஸ்லிம்களும்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய கல்லுாரிகளிலாவது முஸ்லிம்கள் பாட திட்டமாக கொண்டு வந்து இருக்க வேண்டும். செய்தோமா? அது பற்றி கொஞ்சமாவது சிந்தித்தோமா?


நமக்குள் சண்டை போடவே நமக்கு நேரம் காணாதே. எங்கே இருந்து இதை சிந்திக்க? இனியாவது சிந்திக்க வேண்டும். செயல்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய கல்லுாரிகளில் இறைத்துாதருடைய அறப் போர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்


நெப்போலியனாக இருக்கட்டும். அலெக்ஸாண்டராக இருக்கட்டும். ஹிட்லராக இருக்கட்டும் பிரிட்டிஷ்ஷில் இருந்த பெரிய பெரிய தளபதிகளாகட்டும் இவர்களெல்லாம் சாதாரணமாக கொடி பிடித்து சென்ற ஒரு ஸஹாபிக்கு சமமாக முடியுமா? அவர்களுடைய அந்த இடத்தை இவர்கள் அடைய முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதையெல்லாம் மறந்த நிலையில் இருக்கிறோம்.


இது ஒரு புறம் இருக்க முகலாயர் இதை மட்டும் பெரிதாகப் போடுவார்கள். ஏன் அவர்கள் வந்து இந்தியாவை பிடித்து விட்டார்களாம். இந்த வரலாற்றில் கொரிப்பதற்கும் மெல்லுவதற்கு எதுவும் (அவுலும்) கிடைக்கவில்லை என்று சொன்னால் இதையும் இரட்டடிப்பு செய்து இருப்பார்கள்

இதிலும் முஸ்லிம்களை குறை காணக் கூடிய அளவில்தான் வரலாறுகளை. பதிவு செய்து வைத்துள்ளார்கள். இந்த மாதிரி நிறைய இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது நீண்டு கொண்டே போகும்.


உலக வரலாற்றிலே இறைவனின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் அநியாயத்தை எதிர்த்து நடந்த அறப் போர்கள்தான் வரலாற்றிலே முக்கியத்துவப்படுத்த வேண்டும். முன்னிலை படுத்தப்பட வேண்டும். பாடத்திட்டத்திலே இடம் பெற வேண்டும். இடம் பெற வேண்டுமானால் அதற்கு நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.


எதற்காக நீங்கள் அலெக்ஸாண்டரை போடுகிறீர்கள்? எதற்காக நீங்கள் நெப்போலியனை போடுகிறீர்கள்? இதையெல்லாம் விட்டு விடுங்கள். இவர்கள் வேறு நாட்டுக்காரர்கள். நம்ம நாட்டுக்கார ஆள் அசோகர் பின்னாளில் மனம் திருந்தினார். அதற்கு முன்னால் என்ன செய்தார்? ரத்த ஆறு ஓட வைத்தார். அதற்குப் பெயர் கலிங்கத்துப் போர். இது இறைவனின் துாதர் (ஸல்) அவர்கள் காலத்திற்கு பின்னால் நடந்ததா? இல்லை அதற்கு முன்னால்தான் நடந்தது.


அந்தக் காலத்திலும் அவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டார்கள். சாதாரணமாக ஒரு இடத்தில் நடந்த கலிங்கத்துப் போரில் ரத்த ஆறு ஓடியது. ஆனால் பத்ருப் போர் என்கிறோமே அதில் ரத்த ஆறு ஓடவில்லை. உஹதுப் போரில் ரத்த ஆறு ஓடவில்லை. மக்கா வெற்றியின் போதும் ரத்த ஆறு ஓடவில்லை ஏன்?


மனிதர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இறைவனின் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அசோகர் அவரே வந்து இவ்வளவு ரத்தத்தை பார்த்து விட்டு வெறுத்துப் போய். இனிமேல் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று மனம் திருந்தி புத்த மதத்தில் போய் சேர்ந்து விட்டார்

அவர் இருந்த மதத்தில் இருந்தால் இது முடியாது. அவர் இருந்த மதத்தில் இருந்தால் இது இன்னும் தொடரும். ஆகவே அவர் புத்த மதத்துக்கு போனார்புத்த மதத்துக்கு போனால் ஆட்சி இருக்குமா? ஆட்சி போய் விட்டது. அன்பே கடவுள் என அங்கே போய் விடுகிறேன் என்றுதான் அவர் போனார்.


அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி முறையை கற்றுக் கொடுத்தார்கள். போர் முறையை கற்றுக் கொடுத்தார்கள். அநியாயமாக கொல்லக் கூடாது என்ற கட்டுக் கோப்பு உடைய போர்ப்படைத் தளபதிகளை வீரர்களை உருவாக்கிச் சென்றார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்க. மற்றவர்களை வரலாற்றில் போட்டு அழகு பார்க்கக் கூடிய உலக வரலாறு இந்திய வரலாறு ஏன் இஸ்லாமிய ஆட்சியாளர்களை போடவில்லை. சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


முஸ்லிம்களுக்கே இந்த வரலாறு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. மறுக்கப்பட்டிருக்கிறது. மாறாக கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்த செய்திகளை உலகளாவிய அளவில் நாம் கொண்டு போக எப்படி முடியும். அதற்காக நாம் என்ன முயற்சி செய்து இருக்கிறோம்.


தற்காப்புக்காக நடத்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் குறைந்த பட்சம் குறை கூறாமல் இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்திருக்கிறார்கள். இஸ்லாமிய போர்கள் என்றும். முஹம்மது நபி(ஸல்) வாளால் இஸ்லாத்தை பரப்பினார்கள் என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள்.


காந்திஜி சொன்னாராம் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால். நகத்தையும் பற்களையும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று. இதற்கு பதில் கூறுவது போல் ஒரு கவிஞர் சொல்கிறார். காட்டுமிராண்டியிடம் எதைப் பயன்படுத்துவது? காட்டுமிராண்டியிடம் எதைப் பயன்படுத்தி என்ன பயன்

மனிதன் ஒரு தவறு செய்ய வேண்டும் என்று எண்ணி விடுவானேயானால். மனிதன் மிருகம் ஆகி விடுவான். மிருகமாக ஆகி விட்ட மனிதன் முன்னால் எந்த ஆயுதமும் நிற்காது. ஏர்வாடி காஜா மைதீன் கொலை இதற்கு சாட்சியாக உள்ளது.


நாடு பிடிக்க வேண்டும் என்ற கொள்கையோ, சர்வாதிகாரம் என்ற தலைக் கணமோ, ஆணவமோ இதெல்லாம் ஏறி விட்டது என்றால் ஆட்சி இருந்தாலும் ஐ.நா. சபை இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. பண்ணாது என்ற உலக நடப்பை நம் காலத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

முந்தைய தலைப்பு



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு