மாமழை பணி முடிந்தது மாமறை பணி துவங்கியது என அறிவித்த செங்கிஸ்கான் மறைந்தார்
பகைமை பாராட்டாத பண்பாளர் மறைந்தார். மனம் விட்டு மன்னிப்பு கேட்க தயங்காத மாண்பாளர். ஊருக்கு மட்டுமே உபதேசிகளாக இருப்பவர்கள் மத்தியில் தனக்கும் உபதேசித்து தன்னைத் தானே திருத்திக் கொண்டவர்.
மாமழை பணி முடிந்தது மாமறை பணி துவங்கியது என அறிவித்தவர் மட்டுமல்ல செயல்படுத்தியவர் செங்கிஸ்கான். அவர் மறைந்தாலும் அவரது கருத்துக்கள் என்றென்றும் உயிர் வாழும்.
விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் !
விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!
விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!
கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்த சென்னையா இது ?
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது?
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது?
மனசாட்சி கொண்ட மனிதர்களை கண்டோம் வெள்ளத்தில்
மனசாட்சியற்ற மனிதர்களை கண்டோம் புத்தாண்டில் !
மனசாட்சியற்ற மனிதர்களை கண்டோம் புத்தாண்டில் !
அறிவுக்கு பொருத்தமில்லாத,
பொருளாதார விரயம் செய்கின்ற
இந்திய கலாசாரத்திற்கு சம்மந்தமில்லாத
ஆண்டுக் கொண்டாட்டம் கும்மாளங்களில் இருந்து
எங்களைக் காத்த இறைவனுக்கே புகழனைத்தும்!
பொருளாதார விரயம் செய்கின்ற
இந்திய கலாசாரத்திற்கு சம்மந்தமில்லாத
ஆண்டுக் கொண்டாட்டம் கும்மாளங்களில் இருந்து
எங்களைக் காத்த இறைவனுக்கே புகழனைத்தும்!
முஸ்லிமல்லாத சகோதார்களே சிந்தியுங்கள் !
உங்களை வெள்ளத்தில் இருந்து காத்த
உங்களின் பசிக்கு உணவளித்த
உங்களுக்கு நிவாரப் பொருட்களை வழங்கிய
உங்களின் வீதிகளில் தூய்மைப்பணி செய்த
எந்த முஸ்லிமையும் இந்தப் புத்தாண்டு
கொண்டாட்டங்களில் பார்க்க முடியாது !
ஏன் எனில்
பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையே
படைத்தவன் எங்களுக்கு கொண்டாட்டமாக
ஆக்கியுள்ளதை எங்களின் இரு பெருநாளிலும்
நீங்கள் கண்கூடாகக் காணலாம் !
உங்களை வெள்ளத்தில் இருந்து காத்த
உங்களின் பசிக்கு உணவளித்த
உங்களுக்கு நிவாரப் பொருட்களை வழங்கிய
உங்களின் வீதிகளில் தூய்மைப்பணி செய்த
எந்த முஸ்லிமையும் இந்தப் புத்தாண்டு
கொண்டாட்டங்களில் பார்க்க முடியாது !
ஏன் எனில்
பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையே
படைத்தவன் எங்களுக்கு கொண்டாட்டமாக
ஆக்கியுள்ளதை எங்களின் இரு பெருநாளிலும்
நீங்கள் கண்கூடாகக் காணலாம் !
குடிப்பதும் வெடிப்பதும் குத்தாட்டம் போடுவதும்
பண்டிகைகள் இல்லை!அதனால் எந்தப் பயனுமில்லை !
பண்டிகைகள் இல்லை!அதனால் எந்தப் பயனுமில்லை !
இல்லாதவர்க்கு வழங்குதலும்
இறைவனை வணங்குதலுமே
இஸ்லாம் கூறும் பண்டிகைகள் !
இறைவனை வணங்குதலுமே
இஸ்லாம் கூறும் பண்டிகைகள் !
-செங்கிஸ்கான்
இஸ்லாமிய நெறிகளை விட இயக்க வெறி மிகைக்க வேண்டாம்- செங்கிஸ்கான்
அவர் கடவுள் இல்லை. கட்சித் தலைவர்." இந்தக் கருத்துக்கு செங்கிஸ்கான் அவர்களின் பதில்
தமிழ்
பேசுவோரிடம் இஸ்லாமிய அழைப்பு பணியை தீவிரமாக்கியதில் முன்னிலை வகித்த
மதிப்பிற்குரிய சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
இஸ்லாமிய அறிஞர்
சிறந்த பேச்சாளர்
பண்பட்ட எழுத்தாளர்
இஸ்லாமை எல்லோருக்கும் கொண்டு சென்றவர்
இவரின் இறப்பு இவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே பேரீழப்பாகும்.
இறைவா!
இவரின் கப்ரு,மறுமை வாழ்வு சிறக்க அருள் புரிவாயாக!
இவரை உன் நல்லாடியார்களில் இணைப்பாயாக!
இவரின் குடும்பத்தாருக்கு பொறுமையையும், பாதுகாப்பையும் வழங்குவாயாக!
சிறந்த பேச்சாளர்
பண்பட்ட எழுத்தாளர்
இஸ்லாமை எல்லோருக்கும் கொண்டு சென்றவர்
இவரின் இறப்பு இவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே பேரீழப்பாகும்.
இறைவா!
இவரின் கப்ரு,மறுமை வாழ்வு சிறக்க அருள் புரிவாயாக!
இவரை உன் நல்லாடியார்களில் இணைப்பாயாக!
இவரின் குடும்பத்தாருக்கு பொறுமையையும், பாதுகாப்பையும் வழங்குவாயாக!
அழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக்
கொண்டான்!!
புரட்சிகர பேச்சாலும், ஆற்றல்
மிகு எழுத்தாழும், சத்திய இஸ்லாமிய கருத்துக்களை எட்டுத் திக்கும்
எடுத்துரைத்த இஸ்லாமிய அழைப்பாளர் செங்கிஸ்கான் அவர்கள் இன்று (21-ரபீவுல்
அவ்வல்-1437) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணி
அளவில் சென்னையில் வைத்து திடீர் மாரடைப்பால் அவர் வஃபாத்தானார் -
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம்
இளயாங்குடியிலுள்ள புதூரில் பிறந்தார். இரண்டு ஆண் மக்களுக்கு தந்தையான அவருக்கு
வயது 45.
கடந்த 2 வருடங்களில் மட்டும் சுமார் 20,000 க்கும்
மேற்பட்ட அல்குர்ஆனை பிரதிகளை பிறமத சகோதரர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு காரணமாக
இருந்தவர். இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பற்றிய கருத்துக்களை உலக அரங்கில்
எடுத்துச் சென்றவர். மதங்களைக் கடந்த அவரது நட்பு வட்டாரம் மகத்தானது. அவரது மறுமை
வாழ்வு சிறக்க துஆச் செய்வோம். அவர் விட்டுச் சென்ற வீரியமிகு இஸ்லாமிய அழைப்புப்
பணியை நாம் தொடர்வோம் - இன்ஷா அல்லாஹ்.
அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை, சென்னை
ராயப் பேட்டை பள்ளிவாயில் கபுர்ஸ்தானில், அஸர்
தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலும் தொடர்புக்கு : 702772722
எனது ஆருயிர் நண்பரின் மரணத்தை
மணம் நம்ப மறுக்கிறது!
அல்லாஹ் விதித்த மரணம் உண்மையாகி விட்டது!!
அல்லாஹ் விதித்த மரணம் உண்மையாகி விட்டது!!
இன்ஷாஅல்லாஹ் சகோதரர் செங்கிஸ்கான் ஜணாஸா நாளை மாலை நான்கு மணிக்கு சென்னை இராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும் .
நண்பரின் கபுர் மற்றும் மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்யுங்கள் சகோதரர்களே!
91 9487770692 M.S. Rahmadullah
Comments
இவ்வுலக நல்லமல்கள் யாவும்
இறைவனால் முற்றுமுழுவதுமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜன்னதுல்
பிர்தௌஸ் என்னும் உயர்வான
சுவர்க்கத்தை எல்லாம் வல்ல அல்லாஹ்
அவருக்கு வழங்கிட வேண்டுமென
பிரார்த்திப்போம்.