ஆய்வுகள் பல விதம் இது ஒரு விதம். தமிழில் உள்ள மூன்று எழுத்து ஆய்வு

தி.மு.க. வின் முதல் முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா 1969இல் இறந்தார். அப்பொழுது தி.மு.க.  வின் மூன்றாவது முதல்  அமைச்சராக ஆன கருணாநிதி ஆல் இண்டியா ரேடியோவில் மூன்றெழுத்து கவிதை உரையாற்றினார்.  அந்த மூன்றெழுத்துக் கவிதை நீண்ட நெடிய காலம் பிரபலமாக இருந்தது. அதையும் இப்பொழுது வாட்ஸப்பில்  வெளியாகி உள்ளதையும்  உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம். 


மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு-அதில்
முத்தமிழ் மணமுண்டு
மூவேந்தர்,முக்கொடி,முக்கனி-என
மும்முரசு ஆர்த்தவர் தமிழர்
அவர் வாழ்ந்த -தமிழ்
வாழ்வுக்கு மூன்றெழுத்து-அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம்
அன்புக்கு மூன்றெழுத்து-அந்த
அன்புக்கு துனைநிற்கும்
அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையில்எழும்
காதலுக்கு மூன்றெழுத்து
காதலர்கள் போற்றி நின்ற கடும்
வீரமோ மூன்றெழுத்து
வீரம் விளைக்கின்றகளம் மூன்றெழுத்து
களம் சென்று காண்கின்ற
வெற்றிக்கு மூன்றெழுத்து-வெற்றிக்கு
ஊக்குவின்ற அமைதிமிகு
அண்ணா மூன்றெழுத்து 


கீழே 2016இல் வாட்ஸப்பில் வந்தது

நம்ம மொழி செம்மொழி..!!
"அம்மா".. மூன்றெழுத்து..!!
"அப்பா".. மூன்றெழுத்து..!!
"தம்பி"..  மூன்றெழுத்து..!!
"தங்கை".. மூன்றெழுத்து..!!
"மகன்".. மூன்றெழுத்து..!!
"மகள்".. மூன்றெழுத்து..!!
"காதலி".. மூன்றெழுத்து..!!
"மனைவி".. மூன்றெழுத்து..!!
"தாத்தா".. மூன்றெழுத்து..!!
"பாட்டி".. மூன்றெழுத்து..!!
"பேரன்"..மூன்றெழுத்து..!!
"பேத்தி".. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
"உறவு".. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!
"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!
"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!
இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!
"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!
"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!
"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!
"வாழ்க".. "தமிழ்"...!! Forward as received

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு