இந்திய தேசியகீதம் தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பு
தேசிய கீதமும் திடீர் தேச பக்த வேஷமும்!
புதன்கிழமை, 02 December 2015 18:29 பதிந்தது: இந்நேரம் பகுதி: அரசியல்
இரு நாட்களுக்கு முன் மும்பையில் ஒரு திரைப்படக் கொட்டகையில் பொழுது
போக்கிற்குச் சென்ற ஒரு குடும்பம் அங்குத் திரைப்படம் தொடங்கும் முன் "ஜன
கன மன" என்ற இந்திய தேசீய கீதம் இசைக்கப் பட்டபோது எழுந்து நிற்கவில்லை
எனக்குற்றம் சாட்டப் பட்டுக் கொட்டகையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகச்
செய்தி வெளியானது.
அக்குடும்பம் ஒரு முஸ்லிம் குடும்பம் என்று கூடுதல் தகவல் வந்ததும்
ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுதுவோருக்குத் "திடீர் தேசபக்தி"
ஊற்றெடுத்து, வழக்கம்போல் இந்திய முஸ்லிம் சமூகத்தையே தேசபக்தியற்றவர்கள்
எனவும் பாகிஸ்தான் விசுவாசிகள் எனவும் எழுதித் தம் அரிப்பைச் சொறிந்து
விட்டுள்ளனர்.
"ஜன கன மன அதி நாயக ஜெயஹே" எனத் தொடங்கும் வங்க மொழிப் பாடல், வங்கக் கவி
ரவீந்திரநாத் தாகூரால் எழுதப் பட்டது. ஐந்து பத்திகளைக் கொண்ட அப்பாடலின்
முதல் பத்தியே இப்போதைய தேசீய கீதம். இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த ஐந்தாம்
ஜார்ஜ் மன்னர் 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று கல்கத்தாவுக்கு வருகை
தந்த போது அவரை வரவேற்று அடிமை இந்தியர் எழுதிய பாடல் என ஒரு குற்றச்
சாட்டு உண்டு. கவி ரவீந்திரநாத் தாகூர் அதை மறுத்திருந்தார்.
முழுப்பாடலையும் படித்தால் குற்றசாட்டு உண்மையா அல்லது தாகூரின் மறுப்பு
உண்மையா என விளங்கும்.
அப்பாடலின் முதல் பத்தியின் தமிழ் வடிவமும் ஏகதேச மொழிபெயர்ப்பும் கீழே:-
ஐன கன மன அதிநாயக ஜயஹே
*(மக்களின் இதயங்களில் பெருமையாக வீற்றிருக்கும் உயர்ந்த தலைவனே நீ வாழ்க)
பாரத பாக்ய விதாதா
*(பாரத நாட்டின் தலைவிதியை நீ எழுதுகிறாய்)
பஞ்சாப ஸிந்து குஜராத்த மராட்டா திராபிட உத்கல பங்கா
*(பஞ்சாப், சிந்து, குஜராத்,மகாராசுட்டிரா, திராவிடம்(தென்னிந்தியா),
உத்கல்(ஒடிசா), பங்கா(வங்காளம்) எல்லாம் சேர்ந்து)
விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா
*(விந்தியமலை, இமயமலைகளில் அலைகள் பரப்பியபடி ஓடும் யமுனையும் கங்கையும்)
தப சுப நாமே ஜாகே
*(உன் புனிதப்பெயரைச் சொல்லியே துயிலெழுகின்றன)
தப சுப ஆஸிஸ மாங்கே
*(உனக்காக புனித அருள் வேண்டுகின்றன-இந்த வரி இப்பாடல் இறைவனைப்
போற்றுகிறது என்று கூறும் சிலரை தோலுரிக்கிறது)
காஹே தப ஜெய காதா
*(உன் வெற்றியையே போற்றவும் பாடவும் செய்கின்றன)
ஜன கன மங்கள தாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா
*(மக்களின் இதயங்களின் வீற்றிருக்கும் நீயே அவர்களுக்கு நற்குணங்களைப்
பகிர்த்தளித்தவனே! நீதான் பாரதத்தின் விதியை எழுதுபவன்)
முழுப்பாடலின் வங்க மொழி முழுப் பாடலின் ஆங்கில ஒலி பெயர்ப்பும் ஏகதேச
ஆங்கில மொழி பெயர்ப்பும் கீழே:-
Jano gano mono odhinayoko jayo he,bharoto bhaggo bidhata
Punjabo sindhu gujrat maratha,dravid utkolo bongo
Bindho himacholo jomuna ganga,uchchholo jalodhitarongo
Tabo shubho naame jage, tabo shubho ashish mage
Gahe tabo jayo gatha
Jano gano mongolo dayoko jayo he,bharoto bhaggo bidhata
Jayo he jayo he jayo he Jayo jayo jayo jayo he.
Ahoroho tabo aahoban procharito, shuni tabo udaro bani
Hindu bouddho shikh joino parosik,musolmaan khrishtani
Purobo poshchimo aase, tabo singhasono pashe
Premohar hoy gatha
Jano gano oikko bidhayako jayo he,bharoto bhaggo bidhata
Jayo he jayo he jayo he Jayo jayo jayo jayo he.
Patono obhyudoyo bondhuro pantha,jugo jugo dhabito jatri
He chirosarothi, tabo ratho chakre, mukhoritho patho dinoratri
Daruno biplobo majhe,tobo shongkhodhoni baaje
Shonkoto dukkho trata
Jano gano patho porichayoko joyo he, bharoto bhaggo bidhata
Jayo he jayo he jayo he Jayo jayo jayo jayo he.
Ghoro timiro ghono nibiro nishithe, pirito murchhito deshe
Jagroto chhilo tabo abicholo mongolo, natonayone animeshe
Duhshopne aatongke, rokkha korile ongke
Snehomoyi tumi maata
Jano gano duhkho trayoko jayo he, bharoto bhaggo bidhata
Jayo he jayo he jayo he Jayo jayo jayo jayo he.
Ratri probhatilo udilo robichchhobi, purbo udoyo giri bhaale
Gahe bihongomo punno somirono, nabo jibono rosho dhaale
Tabo korunaruno raage, nidrito bharoto jage
Tabo charone nato matha
Jayo jayo jayo he, Jayo rajeshworo bharoto bhaggo bidhata
Jayo he jayo he jayo he Jayo jayo jayo jayo he.
Translation
Oh! the ruler of the minds of people, Victory be to You,
Dispenser of the destiny of India!
Punjab, Sindh, Gujarat, Maharashtra,
Dravid (South India), Odisha, and Bengal,
The Vindhya, the Himalayas, the Yamuna, the Ganges,
And the oceans with foaming waves all around.
Wake up listening to Your auspicious name,
Ask for Your auspicious blessings,
And sing to Your glorious victory.
Oh! You who impart well being to the people,
Victory be to You, dispenser of the destiny of India!
Victory, victory, victory to You!
Your call is announced continuously,
We heed Your gracious call
The Hindus, Buddhists, Sikhs, Jains, Parsees,
Muslims, and Christians,
The East and the West come together,
To the side of Your throne
And weave the garland of love.
Oh! You who bring in the unity of the people!
Victory be to You, dispenser of the destiny of India!
Victory, victory, victory to You!
The way of life is somber as it moves through ups and downs,
But we, the pilgrims, have followed it through ages.
Oh! Eternal Charioteer, the wheels of your chariot
Echo day and night in the path
In the midst of fierce revolution,
Your conch shell sounds.
You save us from fear and misery.
Oh! You who guide the people through torturous path,
Victory be to You, dispenser of the destiny of India!
Victory, victory, victory to You!
During the bleakest of nights,
When the whole country was sick and in swoon
Wakeful remained Your incessant blessings,
Through Your lowered but winkless eyes
Through nightmares and fears,
You protected us on Your lap,
Oh Loving Mother!
Oh! You who have removed the misery of the people,
Victory be to You, dispenser of the destiny of India!
Victory, victory, victory to You!
The night is over, and the Sun has risen
over the hills of the eastern horizon.
The birds are singing, and a gentle auspicious breeze
Is pouring the elixir of new life.
By the halo of Your compassion,
India that was asleep is now waking
On your feet we now lay our heads
Oh! Victory, victory, victory to you, the Supreme King,
Victory be to You, dispenser of the destiny of India!
Victory, victory, victory to You!
இந்தப் பாடலுக்கு தாகூர் ஆங்கிலத்தில் தந்த பெயர் MORNING SONG என்பதே!
அரசு மற்றும் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளின் போதும் சுதந்திர தினம்,
குடியரசு தினம் போன்ற அரசுமுறைக் கொண்டாட்டங்களின் போதும் கொடியேற்ற
நிகழ்ச்சிகளின் போதும் காலை வேளையிலேயே தேசிய கீதம் இசைக்கப் படுவது
வழக்கம். அத்தகைய ஒரு பாடலை, பொழுது போக்கும் இடமான திரைப்படக்
கொட்டகையில் மாலை மயங்கிய நேரத்தில் ஒலிக்க விட்டது தவறில்லையா?
தேசீய கீதம் இசைக்கப் படும்போது எழுந்து நின்றாக வேண்டும் என எந்தச் சட்ட
விதியும் இல்லாத போது, முஸ்லிம் குடும்பம் என்ற ஒரே காரணத்துக்காக
அவர்களை அவமதித்து வெளியேற்றியது இனஒதுக்கலும் மத துவேசமும் அல்லாமல்
வேறென்ன?
முழு தேசிய கீதம் 52 வினாடிகள் இசைக்கப்பட வேண்டும். வருமானத்துக்கு
மீறிய வகையில் சொத்துக் குவிப்புச் செய்ததற்காகத் தண்டிக்கப் பட்டுச்
சிறை சென்று, "குமாரசாமிக் கணக்கால்" விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும்
தமிழக முதல்வராகப் பதவியேற்ற போது தேசிய கீதம் வெட்டிக் குறைக்கப் பட்டு
22 வினாடிகள் மட்டுமே இசைக்கப் பட்டது. அப்போது, இந்தத் திடீர் தேச
பக்தர்கள் "நவதுவாரத்தை"யும் பொத்திக் கொண்டு மவுனம் காத்தார்கள். தேசிய
கீதத்தை ஜெயலலிதா அவமதித்து விட்டார் எனக் கூப்பாடு போடவில்லை. ஏனெனில்
ஜெயலலிதா இந்து உயர்சாதி..
ஆர் எஸ் எஸ்/ பா ஜ க ஆளான ராம் நாயக் வாஜ்பாய் மந்திரி சபையில் எண்ணெய்
மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக இருந்தவர்.
தற்போது உ பி மாநில ஆளுனர். அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், புதிதாக 20
அமைச்சர்களை நியமித்தபோது, அமைச்சர்கள் பதவியேற்பு விழா முடிந்தவுடன்,
தேசீய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, தேசீய கீதத்தை நிறுத்துமாறு,
கவர்னர் ராம் நாயக் உத்தரவிட்டார். "நாட்டின், முதல் துணைப் பிரதமர்
சர்தார் படேலின் பிறந்த தினமான இன்று, தேசிய ஒருமைப்பாடு தினமாக,
கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை
அனைவரும் ஏற்க வேண்டும்" என, கவர்னர் ராம் நாயக் கூறினார்.
உடனடியாக, தேசிய கீதம் நிறுத்தப்பட்டு, ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இசைக்கப் பட்ட தேசிய கீதத்தை இடையில் ராம் நாயக் நிறுத்திய போது தேச
பக்தி பொங்கவில்லை. ஏனெனில் ராம் நாயக் முஸ்லிம் இல்லையே !..
சிங்கம் 2 திரைப்படம் சூர்யா நடித்தது. அதில் ஒரு காட்சியில்,
பள்ளிக்கூடத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் இப்போதைய வடிவிலான முழு
தேசிய கீதமும் இசைக்கப் படும் காட்சி ஒன்று உண்டு. அத்திரைப்படத்தைப்
பார்த்துக் கொண்டிருந்த இந்து முஸ்லிம் கிருத்துவர் உட்பட, இன்று
பொங்கும் திடீர் தேச பக்தர்கள் உட்பட - யாராவது எழுந்து நின்றார்களா?
அப்படி எந்தச் செய்தியும் இல்லை. தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க
வேண்டும் என்றால், அக்காட்சி வரும்போது ஏன் எழுந்து நிற்கவில்லை. அது
சினிமா என ஓர் ஓட்டைக் காரணம் சொன்னால், அக்காரணம் சினிமாக்
கொட்டகைக்கும் பொருந்தாதா?
தேசிய கீதம் பாடும்போது அதற்கு இடையூறு விளைவிப்பதோ பாடுவோரைத் தடுப்பதோ
சட்டப்படி குற்றம். இவ்வாறுதான் அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது.
எழுந்து நிற்காதது குற்றமன்று.
மதுரை வழக்கறிஞர் ஆர் பாண்டி மகாராஜா, "திரைப் படக்கொட்டகைகளில் தேசிய
கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நிற்பதில்லை என்பதால் அது
இசைக்கப்படுவதை நிறுத்த" உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில்
வழக்குத் தொடுத்திருந்தார். மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்
ஆர் சுதாகர் மற்றும் வி எம் வேலுமணி ஆகியோர் இவ்வாண்டு செப்டம்பர் 15 ஆம்
நாள் வழங்கிய தீர்ப்பில், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைச் சுட்டிக்
காட்டி , திரைப்படக் கொட்டகைகளில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கத்
தேவையில்லை எனக்கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
சட்டப்படி தேசிய கீதம் பாடியாக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால்
தேசிய கீதம் பாடும்போது இடையூறு செய்யும் வண்ணம் கூவுவதோ கூச்சல் போடுவதோ
சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.
முஸ்லிம்களை அவமதிக்க, இழிவு செய்ய எங்கேயாவது ஏதாவது ஒரு சப்பைக் காரணம்
கிடைக்காதா எனத் தேடி அலைபவர்களுக்கு, வாய்ப்புக் கொடுக்கும் வண்ணம்
நடந்து கொள்வதை முஸ்லிம்களும் தவிர்க்க வேண்டும். திரைப்படக்
கொட்டகைக்குக் குடும்பத்துடன் போய்த் திரைப்படம் பார்க்கும் முஸ்லிம்கள்,
அது போன்ற பொதுவான இடங்களில் தங்களது மத அடிப்படை நம்பிக்கைக்கு ஊறு
விளைவிக்காத செயல்களில் பிறருடன் ஒத்துப் போவதில் அவர்களுக்கு என்ன
பிரச்சனை?
- நச்சினார்க்கினியன்
- Forwarded message ----------
From: Mohamed Meera Labbai <maraickan@gmail.com>
Date: 2015-12-06 12:48 GMT+05:30
Subject: Fwd: தேசியகீதம் மொழிபெயர்ப்பு
From: Mohamed Meera Labbai <maraickan@gmail.com>
Date: 2015-12-06 12:48 GMT+05:30
Subject: Fwd: தேசியகீதம் மொழிபெயர்ப்பு
Comments