கொள்ளை அடிக்க,வழிப்பறி செய்ய சென்றவர்களா நபிகள் நாயகம்?

சொத்துக்களை துறந்து விட்டு வந்தவர்கள் கொள்ளை அடிக்க வேண்டும் வழிப்பறி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்று இருப்பார்களா?

போர்கள் என்று சொன்னாலே அதற்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. போர் என்பது தெரியாத ஒரு வார்த்தையா? என்று பலர் நினைக்கலாம். தெரிந்த வார்த்தைதான். இருந்தாலும், தவறான விளக்கம் மக்கள் மத்தியிலே விதைக்கப் பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது அதற்கான சரியான, முறையான, தெளிவான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்தவர்கள் நினைவூட்டி கொள்ள வேண்டும். 

போர் என்று சொன்னால் அது ஒன்றும் பெரிய மாயை கிடையாது. இரண்டு பேர் அடித்துக் கொள்கிறார்கள் இல்லையா. அந்த சண்டையின் விரிவாக்கம் தான் போர். இரண்டு பேர் அடித்துக் கொண்டால் சண்டை என்கிறோம். இரண்டு கட்சியினர் அல்லது இரண்டு அணியினர் அடித்துக் கொண்டால் கோஷ்டி மோதல் என்போம். இரண்டு ஊர்க்காரர்கள் அல்லது இரண்டு சமுதாயத்தினர் அடித்துக் கொண்டால் கலவரம் என்போம். 

எல்லாமே மோதல்கள்தான் சண்டைகள்தான். சம்பவங்களுக்கு தக்கவாறு பெயர்ச் சொல் மாறுகிறது அவ்வளவுதான். பெயர்ச் சொல்லுக்கு தக்கவாறு அதன் கனம் தாக்கம் கூடுகிறது.


இவற்றை யாராலும் இல்லாமல் ஆக்கி விட முடியாது. ஆதம்(அலை) காலத்திலிருந்து ஹாபில் காபிலிடம் துவங்கி இன்று வரை எங்கு பார்த்தாலும் நியாயம் அநியாயம் என்ற பெயரால் சண்டைகள், போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நடந்து கொண்டுதான் இருக்கும்.


இரண்டு தனி மனிதனுடைய சிந்தனை ஒன்றுபடாமல் சண்டையிட்டு அடித்துக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் ரோட்டில் கட்டி புரள்கிறார்கள். ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன் பிறப்பில் பிரிவு வந்தாலும் பின்பு உறவு வரும். இப்படி பாவலர்கள் பாட்டுக்கள் இயற்றலாம். பாடகர்கள் பாடலாம் ரசிகர்கள் ரசிக்கலாம். நிதர்சனம் என்ன? உண்மை நிலை என்ன?


ஒரு தாயிடம் பால் அருந்தியவர்கள். சிறிய அல்ல மிகச் சிறிய ஒரு துண்டு இடத்திற்காக, மிக மிக அற்ப பிரச்சனைக்காக சாகும் வரை அடித்துக் கொள்கிறார்கள். எப்படி அடித்துக் கொள்கிறார்கள். சாதாரண அடிதடியா? கைகலப்பா? மம்மட்டியால் கோடாரியால் கத்தியால் அரிவாளால் கையில் என்ன இருந்ததோ, என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு தகுதிக்கு தக்கவாறு தாக்கிக் கொள்கிறார்கள்.


மம்மட்டியால் அண்ணன் தம்பியை வெட்டினான். கோடாரியால் தம்பி அண்ணனை வெட்டினான். சதக் சதக் என குத்தினான். பட்டப் பகலில் பன்னிரண்டு மணிக்கு படு கொலை. இப்படி இதிலும் எதிகை மோனையில் சிறப்பு செய்திகள். அதை வெளியிடுவதற்கென்றே ஊடகத்துறை துவங்கிய அந்தக் காலத்திலிருந்து தனி இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. தனிப் பிரிவுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதன் பரிணாம வளர்ச்சிதான் போர் செய்திகளை ஒளிபரப்ப என உலக அளவில் உள்ள தனிச் சேனல்கள்.


ஆக பெற்றோரும் பிள்ளைகளுமாக, கணவன் மனைவியாக, அண்ணன் தம்பிகளாக, கட்சிகளில் கூட ஒரே கட்சியினராக, குருவும் சிஷ்யருமாக, ஆசிரியரும் மாணவருமாக எப்படி இருந்தாலும். இரு வேறு சிந்தனைகள் என வந்து விட்டால் அங்கே சண்டை வந்து விடுகிறது. அதுவே இரு நாட்டு தலைவர்களாக இருந்தால். அந்த சண்டைக்குப் பெயர் போர் என்றும் யுத்தம் என்றும் ஆகி விடுகிறது. தகுதிக்குத் தக்கவாறு அதன் பாதிப்புகளும் இழப்புகளும் இருக்கும்.


போர் என்று சொன்னாலே ஏனைய எல்லா போர்ச் சம்பவங்களையும் நாம் எடுத்து பார்க்க வேண்டும். இறைவனின் இறுதித் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் நடத்திய போர்களையும் எடுத்து பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் ரசூல்(ஸல்) அவர்கள் நடத்திய போர்களை போர்கள் என்றே சொல்ல முடியாது. அதில் நடைமுறையில் இருந்த இருக்கின்ற போர்களின் தாக்கமும் வலுவும் வெறித் தன்மையும் வீரியமும் இழப்புகளும் இருக்காது.


போர் என்று சொன்னாலும் சண்டை என்று சொன்னாலும் இரண்டு தரப்பில் ஏதாவது ஒரு பக்கத்தில் நியாயம் இருக்கும். இரண்டு பக்கமும். அநியாயமோ இரண்டு பக்கமுமே நியாயமோ இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது.


இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் என்று எடுத்துக் கொண்டால் எந்த ஒரு ஆசைக்காகவும் பேராசைக்காகவும் போர்கள் நடந்தது கிடையாது. நாட்டை கைப்பற்ற வேண்டும். பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும். அல்லது பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை கைப்பற்ற வேண்டும். இந்த மாதிரி எதுவுமே எந்த சம்பவமுமே கிடையாது.


நடந்தவைகளெல்லாம் தம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு சம்பவங்கள்தான் நடந்தது. நாம் சும்மா தனித்து இருந்து கொண்டு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். சும்மா தனித்து இருக்கும் நாம் யாரையும் போய் தாக்குவோமா? அதே நேரத்தில் நான்கு பேர் நம்மை தாக்க வருகிறார்கள் என்றால். சும்மா இருப்போமா?
தாக்க வந்த நான்கு பேரில் ஒருவரையாவது எதிர் கொள்ளாமல் இருக்க மாட்டோம். பதிலுக்கு தாக்காமல் இருந்தாலும் நம்மை காக்க தடுக்காமல் இருக்க மாட்டோம். இதனால் ஒருவர் இறந்து விட்டார் என வைத்துக் கொள்வோம். இந்த சம்பவத்தால் நீதி மன்றங்களுக்கு போனாலும் என்ன தீர்ப்பு கிடைக்கும்.


நான்கு பேர் என்னை வெட்ட வந்தார்கள். நான் தடுத்து போராடினேன். தற்காத்துக் கொள்ள நடந்த சண்டையில் போராட்டத்தில் ஒருவர் இறந்து விட்டார் என்று ஆதாரத்துடன் சொன்னால் கோர்ட் என்ன தீர்ப்பு அளிக்கும்நீ குற்றவாளி இல்லை எனவே தண்டனை இல்லை என்றுதான் கோர்ட் தீர்ப்பு சொல்லும்.


தற்காப்புக்காகத்தான் ஒருவன் நம்மால் கொல்லப்பட்டான் என்றால் குற்றம் இல்லை என்பதுதான் உலக சட்டமும். எனவே உலக சட்டத்திலேயே தண்டனை கிடையாது. ஆனால் தக்க சான்றுகளுடன் சந்தர்ப்ப சாட்சியங்களுடன் நிருபிக்க வேண்டும்.

  
மக்காவில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருந்தார்கள். மக்காவில் இருந்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான முஸ்லிம்களை அழித்து விட திட்டமிட்டு முயற்சித்தார்கள். சித்தரவதை செய்தார்கள். கொண்ட கொள்கைக்காக கொலை செய்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள். கொடுமை தாங்க முடியாமல் அங்கிருந்து இடம் பெயர்ந்து முஸ்லிம்கள் மதீனா போனார்கள். அப்படி போன முஸ்லிம்களை போனால்  போகட்டும் என விட்டு விட்டார்களா? இல்லை. அங்கேயும் போய் அவர்களை காலி பண்ணி விட வேண்டும். ஒழித்து கட்டி விட வேண்டும் என்று முயற்சித்தார்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.


நாம் விளங்கும் வார்த்தையில் சொல்வது என்றால் பத்ரு போருக்கான வேலைகளை ஏற்பாடுகளை மக்காவாசிகள் செய்தார்கள். அந்தக் காலத்தில் மக்காவாசிகள் போன்றோர் ஒரு போர் செய்வது என்றால் அரை ஆண்டோ ஒரு ஆண்டோ முன்னாடியே பொருளாதாரங்களை சேகரிக்க வேண்டும். சேகரித்ததை செலவு செய்யாமல் சேமிக்க வேண்டும்.


ஆட்சி (அரசு) முறை உள்ள இடங்களில்தான் போர் வீரர்களையும் அதற்கான தளவாடங்களையும் தயாராக வைத்து இருப்பார்கள். ஆட்சி முறை அல்லாதவர்கள் ஒரு மாதம் போர் செய்ய வேண்டும் எனில் அதற்கான உணவு, மருத்துவ வசதி என அனைத்து தேவைகளையும் சேகரித்து விட்டுத்தான் போருக்கு போக முடியும். அப்படிப்பட்ட சேகரிப்பு பணிகளில் போருக்கான பணிகளில் மக்காவாசிகள் ஈடுபட்டார்கள்.

அப்பொழுதுதான் போரை எப்படியாவது முறியடித்து விட வேண்டும் என்று இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் திட்டமிடுகிறார்கள். போரை தடுத்து விட வேண்டும் என்று. போர் நடைபெறாமல் இருக்க திட்டமிட்டு செயல்பாட்டை ஆக்கிக் கொண்டார்கள். அறிவுபு் பூர்வமான – ஹிக்மத்தான அந்த செயல்பாட்டை சரியாக சொல்லத் தெரியாதவர்கள் சொன்னதன் விளைவு என்ன ஆனது தெரியுமா?


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் சென்று கொள்ளை அடித்தார்கள் என்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது. வழிப்பறி செய்தார்கள் என்ற தப்பான எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களால் பேரறிஞர் பெரிய ஆய்வாளர் என்று நம்பப்படுபவர்களில் பிரபலமானவர்கள் இப்படித்தான் இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். சில சம்பவங்களை மட்டும் அப்படியே பார்த்தால் சொன்னால் அப்படித்தான் தோன்றும்.


ஒரு சில சம்பவங்களை அந்த சம்பவங்களோடு தொடர்புடைய நிகழ்வுடன் சேர்த்து பார்க்க வேண்டும். அப்படி அவர்கள் பார்க்கவில்லை. அதன் காரணத்தால் மக்காவாசிகளின் பொருளாதாரத்தை இறைத் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கொள்ளை அடித்தார்கள். மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை தடுத்து இறைத் துாதர் முஹம்மது(ஸல்) வழிப்பறி செய்தார்கள் என்று விளங்கி வைத்து தீர்ப்புகளும் கூறி இருக்கிறார்கள்.


ரசூல்(ஸல்) அவர்கள் தங்களுக்கு மக்காவாசிகள் செய்த அநீதிகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டும். பிராயசித்தம் தேட வேண்டும் என்று விரும்பினார்கள். அநீதி இழைக்கப்பட்ட நாம், இழந்ததை மீட்க வேண்டும். இதுதான், இழந்ததை மீட்க வேண்டும் என்பதுதான் பிரச்சனைகளின் ஆரம்பம். சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் சண்டைக்கு போனதெல்லாம். வந்தது அதனால் சண்டைக்கு போனார்கள் என்று. ரசூல்(ஸல்) அவர்கள் வலியவும் போனார்கள்.


மக்காவில் உள்ள சொத்துக்களெல்லாம் நம்முடைய சொத்துக்கள்தான். இதை லேசில் விடக் கூடாது என்று போனார்கள். இதற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். என 13 வருஷம் காத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் கணக்கு தீர்க்க வேண்டும் என்றுதான் மக்காவில் ஸபுர் பண்ணினார்கள். வழி மறித்து கொள்ளை அடித்தார்கள் என்றெல்லாம் எழுதியும் மேடைகளில் பேசியும் உள்ளார்கள். ஸல்மான் ருஷ்டி போன்றவர்கள்.


ஸல்மான் ருஷ்டி சாத்தானிக் வெர்ஸஸில் என்ன எழுதி உள்ளான். வியாபாரிகளை, பயணிகளை வழி மறித்து முஹம்மது கொள்ளை அடித்தார் என்று. அதே கருத்தை சொல்லக் கூடியவர்களை ஸல்மான் ருஷ்டி போன்றவர்கள் என்றுதான் சொல்ல முடியும். மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் தவறாக சித்தரித்தரித்துள்ளார்கள். அதையே நபிகள் நாயகம் வீர வரலாறு என்ற பெயரில் இந்த அவதுாறுகளை அறியாமையால் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


மக்காவாசிகள் வழி மறிக்கப்பட்டதன் அடிப்படையில் ஜிஹாதுக்காக கொள்ளை அடிக்கலாம். வழிப்பறி செய்லாம் என்று பத்வாக்களும்-தீர்ப்புகளும் வழங்கி இருக்கிறார்கள். இந்த பத்வாக்களால் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களும் அவர்களின் இளைஞர்களும்தான். அந்த தீர்ப்புகளின் தாக்கம் அன்று ஆப்கனில் துவங்கி இன்று ஏமன் வரை முஸ்லிம்களை பாதித்து உள்ளது.


இப்படி பத்வா வழங்கியவர்கள் யார்? முஸ்லிம் வேடமிட்டு முஸ்லிம்களிடம் ஊடுருவியுள்ள யூதக் கைக் கூலிகள். இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகளை இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களிடம் ஊடுருவ செய்பவர்கள். அதற்காக இஸ்ரேல் உளவுத்துறை இடமும் அமெரிக்க உளவுத் துறையிடமும் பணம் பெற்றுக் கொண்டிருப்பவர்கள்.


உண்மையில் என்ன நிலை. இதை விட பல்லாயிரம் மடங்கு சொத்துக்களை மக்காவில் இழந்து விட்டு. அல்ல அல்ல துறந்து விட்டு வந்தவர்கள்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அவரது தோழர்களும். அப்படிப்பட்டவர்கள், சொத்துக்களை துறந்து விட்டு வந்தவர்கள். கொள்ளை அடிக்க வேண்டும். வழிப்பறி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்று இருப்பார்களா? சிந்திக்க தவறி விட்டார்கள்.


மக்காவில் முஸ்லிம்கள் விட்டு வந்த சொத்துக்களையும் சோ்த்துக் கொண்டுதான் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டார்கள். முஸ்லிம்கள் விட்டு வந்த சொத்துக்களைக் கொண்டே முஸ்லிம்களை அழிப்பதற்காக வருகிறார்கள். அப்பொழுதுதான் அதையெல்லாம் முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.

தொடரும் இன்ஷாஅல்லாஹ்

முஸ்லிம்கள் நடத்தியது போர்களா? போராட்டங்களா? பாகம் 7


நன்றி மக்கள் உரிமை
முந்தைய தலைப்பு

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு