வரலாற்றில் ஒரு புதிய ஏடு. ஸமா (வானம்) பிறந்தது, மாண்புமிகு நமது முதல்வரின் முதல் அறிக்கை

முஸ்லிம்கள் ஷம்ஸ் (சூரியன்) என்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் வைக்கிறார்கள். கமர் (சந்திரன்என்றும் பெயர் வைக்கிறார்கள்.  கமருத்தீன், கமருஸ்ஸமான் போன்று ஆண்களுக்கும் கமருன்னிஸா என்று பெண்களுக்கும் பெயர் வைக்கிறார்கள். நுஜும், நஜ்மா (நட்சத்திரம்நஜ்முன்னிஸா என்று பெண்களுக்கு பெயர் வைக்கிறார்கள்.


ஷம்ஸ்சூரியன், கமர் - சந்திரன், நுஜும் - நட்சத்திரம் என்றும் அவற்றை இணைத்தும் பெயர்கள் வைத்தார்கள்.  ஆனால் அவை இருக்கும் இடம் போன்று காட்சி தரும் ஸமா- வானம் என்று  தமிழகத்தில்  பெரும்பாலானவர்கள்  பெயர்  வைப்பதில்லை.


இந்த நிலையில் நேற்றுப் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு ஸமாவானம் என ஒரு முஸ்லிம் குடும்பத்தார் பெயர் வைத்துள்ளார்கள். இது  பலருக்கு புதுமையாகத் தோன்றலாம்


பொதுவாகத் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்பொழுது ஏதாவது ஒன்றை ஒவ்வொருவரும் விரும்புவார்கள். குடும்பத்தில் உள்ள மூதாதையர்கள் பெயராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு எழுத்தில் ஆரம்பமாகும் பெயர்களை விரும்புவார்கள். வரலாற்றில் புகழ் பெற்றவர்கள், பெயர் பெற்றவர்கள் பெயர்களையும் விரும்பி வைப்பார்கள்.


மிகச் சிலர் பிறந்தபோது உள்ள ஒரு வரலாற்று நிகழ்வைக் கூறும் பெயரை வைப்பார்கள். அப்படி வைக்கப்பட்ட பெயர்களில் ஒன்றுதான் ஸமாவானம். 112 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெய்த பெரு மழையின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


கடுமையான மழை, கொடுமையான மழை, கொடூர மழை என என்ன பெயர் சொன்னாலும். இது பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்த மழை. கல்வித் தந்தை என தங்களுக்குத் தாங்களே பெயர் வைத்துக் கொண்டவர்கள். கல்விச் சேவை என்ற பெயரால் ஏறி, குளங்களை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதை அடையாளம் காட்டிய மழை.


பொது இடங்களையும் போக்கு வரத்து இடங்களையும் ஆக்கிரமித்து வீடு கட்டிய பொதுமக்களுக்கு சரியான பாடம் புகட்டிய மழைஇந்த அநியாயங்களைப் தட்டிக் கேட்காமல் பார்த்து  கொண்டு இருந்தவர்களுக்கும்  படிப்பினை வழங்கிய மழை


சென்னை பூமி காய்ந்து விட்டது. இனி எவ்வளவு ஆழத்துக்கு போர் போட்டாலும் தண்ணீர் வராது என்ற நிலையை புரட்டிப் போட்டு புரட்சி செய்த மழைஎல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாம் என்றால் என்ன என புரிய வைத்த மழை.


டிசம்பர் மாதம் வந்து விட்டால் பஸ், ரயில், மற்றும் விமான நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு. கோயில், குளங்களுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு. முஸ்லிம் தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாதுகாப்பு. கோயில் கோபுரங்களுக்கு ஹெலிகாப்டரில் வான்வழி  பாதுகாப்பு என்றுதான் செய்திகள் வெளியிடுவார்கள்அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் கைகளை கட்டிப் போட்ட மழை இது


அது மட்டுமன்றி உண்மைகளை எழுத நிர்ப்பந்தித்த மழை. இவ்வளவு நிர்ப்பந்தத்திலும் அவர்கள் மனம் உண்மைகளை எழுத விடவில்லை. இஸ்லாமியப் பணி. இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் செய்த பணி. இப்படி உண்மைகளை எழுதினால் அது இஸ்லாத்திற்கு பெருமை சேர்த்து விடும். பொது மக்களின் மனம் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடும். அதனால். மீடியாக்கள் அனைத்தும் மிக கவனமான வார்த்தைகளைக் கையாண்டன.


மீடியாக்கள் நிலைதான் இப்படி என்றால் பயணாளிகளிடமும் இந்த தாக்கத்தைக் கண்டோம். கர்ப்பிணி தாய்க்கு உதவியவர்  யூனுஸ் என்ற முஸ்லிம் வாலிபர். எனவே பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்ற ஆண் பெயரை வைத்தார்கள். இப்படி நன்றி உள்ள உள்ளங்களைக் கொண்ட பயணாளிகளைக் கண்டோம்.


முஸ்லிம்களை பாராட்ட வேண்டிய விஷயத்தில் பாராட்டுவோம் என்று மீடியா பாணியில் சொன்ன பயணாளிகளையும் கண்டோம். பாராட்ட வேண்டிய விஷயத்தில் பாராட்டுவோம் என்றால் என்ன? விமர்சிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன என்ற வார்த்தை அதில் தொக்கி நிற்கிறது.


முஸ்லிம் களப்பணியாளர்கள் அளித்த பேட்டிகளைக் கண்டோம். அது எப்படி இருந்தது.


உங்கள் கைகளால் நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை விரும்புகிறான். (அல்குர்ஆன் 2;195) 


நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7;56) 

நற்பணி ஆற்றுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 22;77) 

போன்ற குர்ஆன் ஆயத்துக்களைச் சொல்லிக் காட்டினார்களா?

இறைவனின் இறுதி துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் இருந்தார்கள். (புகாரீ1008)


ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும். 

நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும். இடையூறு அளிப்பவைகளை பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும். அனைத்து நற்செயல்களும் தர்மமாகும். 

தேவை உடையவர்களுக்கும்  பலவீனமானவர்களுக்கும் உதவி செய்யுங்கள். என்றெல்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். 

ஆகவே குர்ஆன் ஹதீஸ்கள் காட்டிய வழியில் களப்பணி ஆற்றினோம் என்று கூறினார்களா? அதுதான்  இல்லை.


முஸ்லிம்களின் மனித நேயப் பணி, மதங்களைக் கடந்த மனித நேயப் பணி. மதத்துக்கு அப்பாற்பட்டது மனிதம்

இஸ்லாமிய மதம் இது போன்ற பணிகளை செய்யக் கூடாது என்று சொல்வது போலவும். அதனால் முஸ்லிம்கள் மதத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு. இஸ்லாத்தை புறந் தள்ளி விட்டு. பணிகள் செய்தது போலவும் சிந்தித்து செய்திகளை வெளியிட்டு மீடியாக்கள் மகிழ்ந்ததை அறிவீர்கள்.


மீடியாக்களின் அந்த சிந்தனைகளை அப்படியே  முஸ்லிம் களப்பணியாளர்களைக் கொண்டும் பிரதிபலிக்க மீடியாக்கள் முயற்சி செய்தன. அந்த முயற்சியில் மீடியாக்கள் வெற்றியும் பெற்றன. மீடியாக்கள் சூழ்ச்சிகளை அறியாத களப் பணியாளர்களும் சொன்னார்கள். இது மனித நேயப் பணி. மதங்களை கடந்த பணி. மதத்துக்கு அப்பாற்பட்ட பணி என்று. இதைக் கண்டித்து.
என்று  விமர்சனம் எழுதி இருந்தோம்.


இங்கே நாம் சுட்டிக் காட்ட விரும்புவது. மழை சம்பந்தமாக மாண்புமிகு நமது முதல்வரின் முதல் அறிக்கை நமக்கு மன நிறைவை தந்தது. டிசம்பர் வந்து விட்டாலே தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்று மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு மகிழ்ந்தன. அதைவிட பெரிய கொடுமை. வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட வார்த்தை. முஸ்லிம்களின் நண்பர் என நம்பப்படுபவர். முதல்வராக இருந்தபொழுது டிசம்பரில் முஸ்லிம்கள் பற்றி கூறி வார்த்தை ராடிகல் குரூப் என்பதாகும்.


இன்றைய முதல்வர் ஆங்கிலத்தில் அதிகமாக பேட்டி அளிக்கக் கூடியவர். தமிழை உயிர் மூச்சாகக் கொண்டவர் என்று சொல்லிக் கொல்லும் அன்றைய முதல்வர். முஸ்லிம்களை ராடிகல் குரூப் (தீவிரவாத குரூப்) என்று ஆங்கிலத்தில் சொல்லி. உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆங்கில பத்திரிக்கைகளில் செய்தி வர வைத்தார். இந்த டிசம்பரில் என்ன நடந்தது.

அரசு நிறுவனங்களை மிஞ்சும் விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மக்களுக்காக நிவாரண பணிகள் ஆற்றி வருகின்றன. இஸ்லாமிய அமைப்புகளையும் அதன் தொண்டர்களையும் பொறுத்தவரை யாருடைய பாராட்டையும் எதிர்பார்த்து அறப்பணிகளை செய்வதில்லை. தங்களைப் படைத்த இறைவனுக்கு அஞ்சியும் அவனிடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்துமே முஸ்லிம்கள் மீட்பு பணிகள் உட்பட அனைத்து நல்லறங்களையும் செய்கின்றனர். இப்படி ஒரு அறிக்கையை மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டார்கள்.

நிச்சயமாக (அல்லாஹ்வை) அஞ்சி நல்லறங்கள் செய்வோருடன்தான் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 16;128, 29;69)  என்ற திருமறை வசனங்களை அந்த அம்மையார் படித்து விட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்களோ என்னவோ தெரியாது.

இது மிகப் பெரிய ஒரு நற்சான்று. ஜெ.ஜெயலலிதா ஒரு நடிகையாக இருந்திருக்கலாம். இன்று முதல்வர். அரசின் சார்பாக முதல்வர் என்ற இடத்தில் அரசின் ஆவணத்தில் முஸ்லிம்களைப் பற்றி பதிவு செய்துள்ள செய்திக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ராடிகல் குரூப் என சொல்லப்பட்போது அன்று புண்பட்ட நெஞ்சங்களில் ஒன்று எமது நெஞ்சமும்தான். ஆகவே இந்த விஷயத்தில் அவரை நன்றி பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிக்கை வெளியான பின்தான் சிலர் அல்லாஹ்வுக்காக செய்தோம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதுவரை மீடியாக்கள் சொல்லிக் கொடுத்ததையே கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆக வரலாற்றை புரட்டிப் போட்ட மழை. ராடிகல் குரூப் என்ற அறிக்கை வெளிவந்த முதல்வர் அலுவலகத்தில் இருந்து.  தங்களைப் படைத்த அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனிடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து முஸ்லிம்கள் நல்லறங்களையும் செய்கின்றனர் என்று நற்சான்று வர வைத்த மழை.

இந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், மழை வானத்தில் இருந்து வருவதால் ஸமா- வானம் என்ற இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதுஅந்தக் குழந்தை மீது அல்லாஹ்வின் அருள் மழை பொழியட்டுமாக. 




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு