அபாயா (புர்கா) அபாயம்
அபாயா - அபாயம்!
நவநாகரீகம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில் எதற்குமே ஓர் வரையறை இல்லாமல் போய்விட்டது. இஸ்லாமியப் பெண்களின் தேசிய உடையாகவே இந்த "#அபாயா " பார்க்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் ஒழுங்கான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த #அபாயா வின் கடைசி #அரவு திரிபடைந்து #ம் என்று மாற்றம் பெற்று #அபாயம் எனும் கட்டத்தை வந்தடைந்துள்ளது.
இன்று உலக சந்தையில் வண்ண வண்ண நிறங்களில், விதவிதமான அலங்கார வேளைப்பாடுகளுடன், வித்தியாசமான அமைப்புகளில், விலைகூடிய அபாயாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதிலும் இடத்துக்குத் தகுந்தாற்போல் ...
வெவ்வேறு நிகழ்வுகளுக்கு வேண்டிய படித்தரத்தில்...
திருமணங்களுக்கு....
வேறு விழாக்களுக்கு....
உறவினர் வீடுகளுக்கு...
கடைத்தெருவிற்கு...
வைத்தியசாலைக்கு...
மரண வீடுகளுக்கு...
அடுத்தவீட்டுக்கு....
இப்படி எத்தனையோ விதமாக!!!
(நல்ல வேளை வீட்டுக்குள் அணியும் அபாயா இன்னும் வடிவமைக்கப்பட வில்லை)

இதன் விலைகளை பார்த்தே எத்தனையோ தந்தையர், சகோதரர்கள், கணவர்கள் கதிகலங்கிய நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
சிலவகை அபாயாக்கள் உடலோடு ஒட்டி, உடலின் அமைப்புகளை, அளவுகளை அப்படியே துகிலுரித்துக் காட்டுகின்றன. ஆடையணிந்தும் நிர்வாணமான இந்நிலை ஆசையைத் தூண்டி, ஆபாசத்தைப் பிரதிபலிக்கின்றது.
கண்ணியமாண ஆண்களை முகஞ்சுழிக்கச் செய்கிறது.
பேணுதலான பெண்களை அவமானப்படுத்துகின்றது.
கண்ணியமாண ஆண்களை முகஞ்சுழிக்கச் செய்கிறது.
பேணுதலான பெண்களை அவமானப்படுத்துகின்றது.
குறிப்பிட்ட ஒருசில மணி நேரத்துக்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை கொடுத்து வாங்கி அலுமாரியில் அழகாய் மாட்டிவைக்கும் போது..அந்தப் பணத்தை உழைக்க எவ்வளவு கஷ்டங்களை கடந்து வரவேண்டும் என்ற சிந்தனை வருவதில்லையா பெண்களே!
அவ்வாறான அபாயாக்களை அணிந்தாலும்...
கையைத் தூக்க முடியாது..
கழுத்தை அசைக்க முடியாது..
தலையை திருப்ப முடியாது..
வசதியாக அமர முடியாது..
வேகமாய் நடக்க முடியாது..
குழந்தைகளின் இயக்கங்களுக்கு அசைந்து கொடுக்க முடியாது...
மொத்தத்தில் சுயமாய் இயங்க முடியாது!!
எப்போது வீட்டுக்குப் போய் இதை கழட்டிப்போடுவதோ.... என்கிற மனநிலை..
இவ்வளவு செலவழித்து இப்படியான ஒரு நிலைமையை உருவாக்க வேண்டுமா
திரும்பும் பக்கங்களில் எல்லாம் பாவங்களை தேடிக்கொள்வது போதாதென்று,
பணம் செலவழித்து வேறு பாவங்களை விலைக்கு வாங்க வேண்டுமா
சிந்திக்க மாட்டீர்களா சகோதர, சகோதரிகளே!

கண்கவர் டிசைன்களில் அதியுயர் விலையுள்ள அபாயாக்களை அணிந்து வெளிப்பகட்டு காட்டுவது தான் இஸ்லாமியப் பண்பாடா
இது தான் இஸ்லாம் சொல்லும் ஆடையா
இல்லவே இல்லை❗️
இப்படி அபாயா அணியுமாறு இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை.
இது தான் இஸ்லாம் சொல்லும் ஆடையா
இல்லவே இல்லை❗️
இப்படி அபாயா அணியுமாறு இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை.
"இஸ்லாமிய உடை என்பது ஒரு பெண் தன் அவ்ரத்தை ( முகம், மணிக்கட்டு தவிர்ந்த பகுதி) அந்நிய ஆண்களுக்கு தெரியாமல் முழுவதுமாக மறைத்தலாகும். இந்த மறைத்தல் முறையில் உடலின் அமைப்பு வெளியில் தெரியாதவாறு உடை கவர்ச்சியற்றதாகவும்..
கனதியாகவும்..
தளர்வாகவும்...
ஒரு முறை பார்ப்பவர்களை மீண்டுமொரு முறை பார்க்கத்தூண்டாதவாறும் ...
அமைதல் வேண்டும்.
வீண்விரயம் இருக்கக் கூடாது.
பார்ப்பவர்கள் கண்ணியமாக பார்வையை தாழ்த்திக் கொள்வது போல் ஆடை இருக்க வேண்டும்.
இது தான் இஸ்லாம் சொல்லித்தந்த ஹிஜாப் முறை!

ஆனால் இன்று.....
இப்போதுள்ள ஆடைகளிலேயே மிகவும் கவர்ச்சியானதாக "அபாயா" தான் முன்னனியில் நிற்கின்றது. சாதாரணமாக, அலங்காரங்களற்ற ஒரு அபாயாவைத் தேடி வாங்குவதென்பது இன்று மிகப்பெரிய சாவலாகவே உள்ளது. இதற்கு அவ்வாடையை
▪️வடிவமைப்பவர்கள்...
▪️விற்பனை செய்பவர்கள்...
▪️அதை விரும்பி வாங்குபவர்கள்...
▪️வாங்குவதற்கு பணம் கொடுப்பவர்கள்...
▪️அனுமதிப்பவர்கள்...
▪️அதை அணிபவர்கள்...
▪️அணிந்து செல்வதை ரசிப்பவர்கள்..
என அனைவரும் அள்ளாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.
அவனது கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக வேண்டும்.
அள்ளாஹ் எமக்குத் தந்துள்ள பிரித்தறியும் சக்தியை பயன்படுத்த வேண்டும். நாளை மறுமையில் அவன் தந்த அத்தனைக்கும் கணக்குக் காட்டவேண்டும்.

# e media network
Comments