#பிறந்ததினத்தை_எதிர்த்த_நபிக்கே_பிறந்த_தினக்_கொண்டாட்டமா_?
உலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான்.
நல்லது எது? தீயது எது? என்பதை அந்த நபிமார்கள் மூலமாக பிரித்துக் காட்டினான். இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நாம் நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட திருமறைக் குர்ஆனைத் தந்ததுடன் அதற்கு விளக்கமாக வாழ்ந்தும் காட்டினார்கள்.
நபியவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, நம்மை எப்படி வாழும் படி சொன்னார்களோ அந்த அடிப்படையில் தான் நாம் வாழ வேண்டும்.
நபியவர்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக நாம் வாழ்ந்தால் நாளை மறுமையில் தோழ்விதான் மிஞ்சும் என்று இறைவன் தனது அருள் மறையில் குறிப்பிடுகிறான்.
இந்தத் தூதர் எதனை (மார்க்கமாக) தந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் – 59:07
நபியவர்கள் இஸ்லாம் என்ற எதனை நமக்குக் காட்டித் தந்தார்களோ அதனைத் தான் நாமும் மார்க்கம் என்று பின்பற்ற வேண்டுமோ தவிர நாமாக மார்க்கத்தை உருவாக்கக் கூடாது.
செய்திகளில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.வழிகளில் மிகவும் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் கெட்டதாகும்.ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்
நூல் : முஸ்லிம் 1435
மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை யாராவது மார்க்கம் என்று எடுத்து நடந்தால் அது நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் மிகவும் தெளிவாக உணர்த்துவதுடன்,அப்படி மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நடை முறைப் படுத்துவது மறுமையில் நரகத்தில் சேர்க்கும் என்பதையும் மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்துகிறது
Comments