ஷேக் இக்பால்மதனியும் அவர்களின் நட்பும் -MS. ரஹ்மத்துல்லாஹ் நாச்சியார்கோவில்
ஷேக் அவர்களின் நட்பு 2000 ஆம் ஆண்டு முதல் எனக்கு கிடைத்தது
நான் பர்துபையில் இப்ராஹிம் கலீல் மஸ்ஜித் அருகில் தங்கியிருந்தேன்.
அந்த மஸ்ஜிதில் வாரந்தோரும் ஷேக் இக்பால் மதனியையும் ஷேக் அப்துஸ்ஸமத் மதனியையும் வைத்து தமிழ் பயான்கள் அல்லாஹ்வின் நாட்டத்தால் 2010ஆம் ஆண்டுவரையில் நடத்தினேன் இந்த பத்தாண்டுகள் ஷேக் அவர்களின் அனுமதியின் பெயரில் ஒரு தமிழ் லைப்ரரியும் வட்டியில்லா கடனுதவியும் நடத்திவந்தேன் அல்ஹம்துலில்லாஹ் .
இந்த லைப்ரரியில் பெரும்பாலும் பிஜே பயான் கேசட்டுகளை வைத்திருந்தேன். பிஜே ஸகாத் விசயத்தில் ஒரு புதியதொரு கொள்கையை கூறியபோது லைப்ரரி நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது . மஸ்ஜித் நிர்வாகம் நெருக்கடி தந்தது.
அப்போது ஷேக் இக்பால் மதனி அவர்களிடம் இதைப்பற்றி கூறினேன்.
ஷேக் அவர்கள் அந்த ஸக்காத் சிடி ஆடியோக்களை மட்டும் எடுத்துவிடு என்று கூறிவிட்டு DAR AL BER SOSAITY நிர்வாகத்திடம் பேசி லைப்ரரி நடத்த அனுமதி வாங்கித் தந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் TNTJ விற்கு துபை அவ்க்காஃப் மூலமாக என்னென்ன தேவைகள் இருந்ததோ அத்தனை வேலைகளையும் செய்து தந்தேன்
TNTJ வால் தஃவா பனிகளை துபையில் லீகலாக செய்ய முடியாது.
இஸ்லாஹி சென்டர்தான் செய்யமுடியும் எனவே இஸ்லாஹி சென்டருடன் இணைந்து முதன் முதலில் பர்துபையில் ஹாமின் இப்ராஹிமை பேசவைத்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்தினோம்.
2005 ல் பிஜேவும் பாக்கரும் துபையில் பேசமுடியாமல் அவ்காஃப் நெருக்கடியால் தினறியபோது, பர்துபையில் ஒரு பாக்கிஸ்தானிப் பள்ளியில் பிஜேவை பேசவைத்தேன்.
அதன்பிறகு அல்தாஃபியை வைத்து அல்கூஸ் அல்மனார் குர்ஆன் சென்டரில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியை நடத்தினோம்.
இவை அனைத்துமே ஷேக் அவர்கள் ஒத்துழைப்பில் நடந்த காரியங்களாகும் .
இன்று பிஜே வைத்திருக்கும் பெரும்பாலான கித்தாபுகள் ஷேக் இக்பால் மதனி அவர்கள் தந்ததாகும். சங்கரன்பந்தல் சுன்னத்ஜமாத் பள்ளியில் சத்தமில்லாமல் பனிபுரிந்து வந்த பிஜே அவர்களுக்கு ஷேக் அவர்களின் சூரா இக்ஃலாஸ் தப்ஸீர்தான் தவ்ஹீத் எனும் அறிவுக்கண்ணை திறந்தது.
இதை நான் சொல்லவில்லை
அபுதாபி மர்கஸ்ஸில் மவ்லவி ஹாமித்பக்கிரி பற்றி பிஜே பேசும்போது அந்த உரையில் அவரே கூறிய வார்த்தைகுளாகும் இது. ஷேக் அவருடனான தொடர்பு பிஜே அவர்களை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டியது.
இன்னும் 1975 முதல் ஏகத்துவம் தமிழகத்தில் எழுச்சிபெற வித்திட்டவர் ஷேக் இக்பால்மதனி அவர்கள்.
இவரின் ஆதரவோடுதான் அந்நஜாத்திலும் புரட்சிமின்னலிலும் பிஜே அவர்கள் ஆசீரியராக பனியாற்றினார்.
ஆனால் இப்போது நிலை தலைகீழ் ஆகிவிட்டது. ஏகத்துவத்தை தமிழகத்தில் அடையாளபடுத்தியர் பற்றி
ஏகத்துவ வாதிகளுக்கு அடையாலமே தெறியவில்லை
(நமது கருத்து, அவர்கள் ஏகத்துவ வாதிகளாக இருந்தால்தானே அடையாளம் தெரிவார்கள். அவர்கள் இயக்கவாதிகள் அல்லவா)
தன்னை அடையாளப் படுத்திய மனிதரை பிஜேவும் வெளியில் அடையாளப்படுத்தவில்லை. அதை அவர் விரும்பவுமில்லை.
ஆனால் எவ்வளவுதான் விரோதம் குரோதம் இருந்தாலும் சம்மந்தப்பட்ட மனிதர் மவுத்தாகிவிட்டால் அனைத்தையும் மறந்து மண்ணித்து ஜனாஸாவில் கலந்து கொள்வது இஸ்லாம் நமக்கு காட்டித்தந்த வழியாகும்
இதைகூட செய்யாத கல்னெஞ்சக்காரராகிவிட்டார் சகோதரர் பிஜே
அதுமட்டுமல்லாமல் தவ்ஹீதின் பெயரால் இயக்கங்கள் நடத்தும் எந்த தலைவர்களும் இவரின் மவுத் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது இவர்களின் மார்க்க பற்றின் அளவை நன்றாக எடுத்து காட்டுகிறது.
அல்லாஹ் அறிஞர்களை கைப்பற்றுவதின் ஊடாக மார்க்க கல்வியை எடுத்துவிடுகிறான்.
ஷேக் அவர்கள் இறக்கின்ற நாள் வரையிலும் தினமும் என்னுடன் உரையாடக்கூடியவராக இருந்தார்கள் .
அல்லாஹ் இந்த மூத்த நல்லறிஞருடனான நட்பை எனக்கு தந்தமைக்கு அவனை நான் புகழ்கின்றேன்.
ஷேக் அவர்களின் நட்பு மறுமையிலும் கிடைக்கவும், அவரை நல்லோர்களுடன் வல்ல ரஹ்மான் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், ஷேக்கின் மஃபிரத்துக்காக கவலையுடன் துஆ செய்கின்றேன்.
அன்புடன்
MS. ரஹ்மத்துல்லாஹ்
நாச்சியார்கோவில்
Comments