மீலாது விழா ” ஹராம்” _கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்! அவர்களின் எச்சரிக்கை!
தலைவர்களின் நினைவு தினங்களும் தலைவர்களின் அறிக்கைகளும் !
நபி [ஸல்] பிறந்த நாள் !
இயேசு பிறந்த நாள் !
பெரியார் நினைவு நாள்!
எம்ஜிஆர் நினைவு நாள்!
காலையில் இருந்து எல்லாத் தொலக்காட்சிகளிலும் இந்தத் தலைவர்களை பற்றிய செய்திகளும், தலைவர்கள் குறித்த தலைவர்கள் அறிக்கையும் நிரம்பி வழிகின்றன!
இப்படி ஒவ்வொரு தலைவர் பிறந்ததற்கும் இறந்ததற்கும் இருக்கும் தலைவர்கள் அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்தால் 365 நாளும் இதே வேலைதான் செய்து கொண்டிருக்க வேண்டும் !
இந்தத் தலைவர்களின் கொளகைகளை மறந்து விட்டு கொண்டாட்டங்களால் என்ன பயன்? இந்தத் தலைவர்கள் கொடுக்கும் அறிக்கையை எத்தனை மக்கள் படிக்கிறார்கள் கேட்கிறார்கள்!
தாங்களும் இந்தப் பட்டியலில் வரவேண்டும் எனும் நப்பாசையால் தான் இவர்கள் அவர்களை நினைவு கூறுகின்றார்கள்! அதனால்தான் தனக்குத்தானே பிறந்த நாளும் கொண்டாடுகின்றனர்!
அனுதினமும் நினைக்க வேண்டிய தலைவர்களை
ஆண்டுக்கொருமுறை நினைவு கூர்ந்து விட்டு
அவர்களின் கொள்கைகளை மறந்து விடுவது
என்பது மறக்கப்பட வேண்டிய ஒன்று !
-செங்கிஸ்கான்
சவுதி அரேபிய தலைநகர் ரியாதில் உள்ள இமாம் துருக்கி பின் அப்துல்லாஹ் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா (பிரசங்கத்தில்) கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க் உரையில் “மீலாது விழா” வை இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டு மீலாது விழா கொண்டாடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
நபிகளார் ஸல். அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே முழுமை பெற்ற இஸ்லாமிய மார்க்கத்தில் மீலாது விழா என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.
‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக!(3:31) என்ற அல்லாஹ்வின் வசனத்தைக் கூறி விளக்கம் அளித்தார்.
Comments