Posts

Showing posts from October, 2015

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை. வாட்ஸப்

.... * 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். * (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) * 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். * (ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.) * 3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது. * (சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) * 4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.... * (எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.) * 5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே... * (நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.) * 6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.... * (மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.) ------------------------- இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...! ► ஒரு மில்லி செக

சான்றோரின் பாட சாலை, செய்தி 30

சகோ. பாருக் உமரி செய்தி >>>   பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சான்றோரின் பாட சாலை, செய்தி 30 ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று. எண்: 1475 நூல்: அஸ்ஸுஹ்து, ஆசிரியர்: இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ். 1475 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا سَيَّارٌ حَدَّثَنَا جَعْفَرٌ حَدَّثَنَا أَبُو كَعْبٍ الْأَزْدِيُّ قَالَ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ الْمُؤْمِنُ فِي الدُّنْيَا كَالْغَرِيبِ لَا يَجْزَعُ مِنْ ذُلِّهَا وَلَا يَأْنَسُ فِي عِزِّهَا لِلنَّاسِ حَالٌ وَلَهُ حَالٌ وَجِّهُوا هَذِهِ الْفُضُولَ حَيْثُ وَجَّهَهَا اللَّهُ عَزَّ وَجَلُّ (30) துன்யாவில் – உலகில் வாழுகின்ற முஃமின் - நம்பிக்கையாளர் பரதேசியைப் போன்று – அந்நிய ஊரில் வசிப்பவரைப் போன்று இருப்பார். அதில் தனக்கு நிகழும் இழிநிலையைக் கண்டு பதட்டம் அடைந்து விடமாட்டார். அதில் தனக்குள்ள கண்ணியத்தை கண்டு நிம்மதியும் அடையமாட்டார். (பொதுவாக) மக்களுக்கு ஒரு நிலை உண்டு. அவருக்கு ஒரு (வித்தியாசமான) நிலை உண்டு. இந்த செல்வங்களை திருப்பிவிடுங்கள் அல்லாஹ் அவற்றை எங

நியாயமற்ற உளறல்களுக்கு நியாயமான பதில்கள்

Image
உளறல் : 1. அறிமுகவுரையாற்றிய அறிமுகமற்றவரிடம் சில கேள்விகள் ! பதில் : அறிமுகம் இல்லாதவர்  என்று சொல்லும் நீ - தலைவர் இனாயத்துல்லாஹ் சவூதிப்பிறை துணைத்தலைவர் நான் - என்று எழுதியதன் மூலம் நான் வடிகட்டிய பொய்யன் என்பதை நிரூபித்துள்ள்ளாய் .  தக்வா பள்ளியின் துணைத் தலைவர் என்று உனக்கே அறிமுகமாகி இருக்கையில் மற்றவருக்கு அவரைத் தெரியாதோ ? உளறல் : 2. மொட்டை நோட்டீஸ் போட நாங்கள் ஒன்னும் பொட்டை இல்லை. பதில் :  மொட்டை நோட்டீஸ் என்பதன் பொருள் பொருளற்ற நோட்டீஸ் எழுதும்  போது மஸ்ஜிதுர் ரஹ்மான்  பெயரை போட துணிவில்லாமல் வார்டு பெயரை பயன்படுத்தி  அதன் பின் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள் ? என்பதுதான். நாங்கள்  கண்ணுள்ளவர்கள்தான் . நீங்கள்தான் இதைக் கூட புரிந்து கொள்ளாத மூளையற்ற மூடர்கள் . உளறல் : 3. தவ்ஹீத் ஜமாத் ஒருநபரைப் பற்றி பேசிட்டா உடனே பார்த்தீர்களா? இவர்கள் இப்படித்தான் தனிநபரை விமர்சனம் செய்வார்கள் னு சொல்றது நேற்று நீ  வார்த்தைக்கு வார்த்தை சம்சுல் லுஹா அவர்களைப் பற்றி தானே பேசின இது தனிநபரை சாராதா? ஏன்டா உனக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? பதில் :  தனி நப

மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்- கீழை ஜமீல் காகா

மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க. நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கி

சிந்திக்கவும் ... ஆயுத,சரசுவதி பூசைகள் அறிவுக்கும் ,அறிவியலுக்கும் பொருந்துமா??- o.s. ibrahim

Image
🏾கல்விக்கு கடவுள் சரசுவதி உள்ள நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை ... 🏾அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம் உள்ள நாடுகளில் சரசுவதி பூசையும் இல்லை ,ஆயுத பூசையும் இல்லை ... 🏾காகிதத்தில் மலம் துடைக்கும் நாடுகளில் தற்குறிகள் இல்லை .. 🏾காகிதத்தை கடவுளாக (சரசுவதி) வணங்கும் நம் நாட்டில் 40%பேர் எழுதபடிக்கத் தெரியாதவர்கள் . 🏾வாகனங்களுக்கு வாழை மரம் கட்டி வழிபடும் நம் நாட்டில் ,வாகன விபத்துகளில் உயிரிழந்தோர் அதிகம் ஏன்? 🏾வாகனத்தில் வாழைமரம் கட்டுபவர்கள், விமானத்தில் கட்டுவதில்லை ஏன்? 🏾ஆயுத பூசை கொண்டாடப்படும் நம் நாட்டில் ,வேலையில்லா திண்டாட்டம் ஏன்?? 🏾வளம்பெறவே பூசை எனில் மருத்துவமனையில் கொண்டாடப்படுவது,நோய்கள் பெருகி நோயாளிகள் அதிகம் வருவதற்கா?? 🏾காவல் நிலையங்களில் பூசை,குற்றங்கள் பெருகுவதற்கா?? 🏾அரசு அலுவலகங்களில் எதற்காக ? லஞ்சம் பெருகுவதற்கா?? 🏾மதுக்கடைகளில் (டாஸ்மாக் )பூசை,குடிகாரர்களை அதிகரிப்பதற்கா??? (திட்டுபவர்கள் திட்டினாலும் ,சுடும்  உண்மைகள் தொடரும்)91 9940963838

அல்லாஹ்வின் தூதரை அன்பின் தூதராக முன்னிறுத்துவோம் !

இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம், என்று பொருள்! ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் என்றால் முரடர்கள், வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என உலகம் முழுதும் உள்ள யூத சியோனிச பார்ப்பன ஊடகங்களால் பரப்பப்பட்டு   இந்த மார்க்கம் வன்முறை மார்க்கம் எனும் அவப் பெயர் சுமந்து நிற்பதற்கு நாமும் ஒரு காரணம் !  ஆம்!  சிலுவைபோர்களிலும்,   இரண்டு உலகப் போரிலும், ஜப்பானிலும், வியட்நாமிலும் இராக்கிலும் ஆப்கானிலும் பலகோடி மக்களை கொன்று குவித்த கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் ஏசுவை முன்னிறுத்தி தங்கள் மதத்தை அன்பின் மதமாக உருவகப்படுத்த முடியுமென்றால், பர்மாவிலும் இலங்கையிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த  பவுத்த பேரினவாதிகளால் புத்தரை வைத்து அமைதியின் மதமாக உறவாகப் படுத்த முடியும் என்றால் தான் பாதுகாப்பு நடவடிக்கைக்காக மட்டுமே நடத்திய போர்களில் எண்ணிச் சொல்லிவிடும் அளவுக்கே உயிர்சேதம்   எனும் அளவுக்கு  வன்முறை தவிர்த்த   நன்முறையாளரை தன்னையும் தன தோழர்களையும் துன்புறுத்திய,  கொலை செய்த, ஊர் துறக்கச் செய்த கொடியவர்களை வெற்றி கொண்டு  மக்காவில்  கத்தியின்றி ரத்தமின்றி வெற்றி வீரராக நுழைந்த போது கூட நான் எப்பட

மறுமை நாள்

கோடி கேள்வி வரும் Google விடைதராது. வாடும் உள்ளங்கள் Whatsup உதவாது. ஓடி ஒழிய முடியாது Onlineல் மலக்குமார்கள் தேடிய பாவ புண்ணியம் தெளிவாக play ஆகும். அவரவர் நன்மைகளை அடுத்தவர்க்கு share பண்ணார் தவறுகள் செய்தவர்கள் தன்னைத் தானே like பண்ணார் செட் செட்டாய் நிற்பார்கள் ஷெல்பி எடுக்க யாருமில்லை கூட்டாய் செய்த பாவம் கொடும் சூட்டில் tag ஆகும். Fake ID உருவாக்கி Facebookல் செய்த பாவம் வேறார்க்கும் விளங்காதிருக்க VPNல் செய்த பாவம் யார் யார் போடோக்களை இணைத்து edit செய்த பாவம் வேரோடு வெளியே வரும் வெட்கித்து தலை குனிவார் சட்டிங்கில் செய்த பாவம் செட்டிங்கில் கிளியராகும் இஷ்டத்துக்கு பார்த்ததெல்லாம் History கிளியராகும் மோசப் படம் பார்த்தவற்றை Dashboardல் அழித்திடலாம் ஆனாலும் மறுமையிலே சீனெல்லாம் வெளியே வரும். மீடியா என்ற பெயரில் மிதிக்கப்பட்ட மானங்கள் வீடியோ ஒழித்தெடுத்து விளம்பரம் தேடியவை கூடிய கூட்டங்களில் குதறிய அவதூறுகள் சாடயும் குறைவின்றி சாட்சியுடன் வந்து நிற்கும் தவறுகள் செய்தோர் தண்டனை கிடைக்கு முன்னே அவற்றினை விடுவோம் அல்லாஹ்விடம் அழுவோம் மறுமையின் மைதானத்தில் மன்றாட்ட

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!) நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….! (நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! ) சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில் பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ” முன் வரவேண்டும்” என்றார். சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். “நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன் என்று

எம் எஸ்சும் தடம்புரண்ட ஜும்ஆ உரையும். பாகம் 2

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.                      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்  ஜலீல்மதனி அவர்கள் காலமாகிவிட்டார்கள் திரும்ப வரமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் எதெற்கெடுத்தாலும் சகோதரர் ஜலீல் மதனியை சொல்லுகிறீர்களே அவர்களால் உருவாக்கப்பட்ட நிர்வாகம்தான் இன்றுவரை உள்ளது தெரியுமா? சிலர்கள் ஜாக்கிற்கு சென்றதினால் ஜலீல்மதனி சுகவீனப்பட்டிருக்கும் நேரத்தில் மஸ்ஜித் முபாரக் பொதுக்குழு கூடி சில மாற்றங்கள் செய்யப்பட்டன.  வேறொன்றும் இல்லை.அந்தமாதிரி நிர்வாகிகள் உங்களிடத்தில் இருக்கிறார்களா?இல்லையே! தற்போது உங்களிடத்தில் இருப்பவர் களிடம் எந்த  பொறுப்பிலும் இல்லாதவர்கள் தான் சொந்த இலாபத் திற்காகத்தான் பள்ளியில் கிடந்தார்கள்.ஜலீல் மதனி காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றுவரை இருக்கின்றது. ஜலீல்மதனி காலத்தில் மாதத்திற்கு ஒரு ஜும்ஆ நீங்கள் யாரை காபிர்,முஷ்ரிக் என்று சொல்லுகிறீர்களோ அந்த ஜாக்கைச் சார்ந்தவர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள்.அந்த ஒன்றுதான் இப்போது மாற்றம் செய்யப் பட்டுள்ளது.மற்றபடி அவர் கனவை நினைவாக்கும் விதமாக பக்கத்திலுள்ள இடத்தை வாங்கி கட்டியிருக்கிற

சமுதாய அமைப்பு3

இறைத்துாதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களிடம் வந்த தோழர் ஒருவர் . அல்லாஹ் வின் துாதரே நான் பல பகுதிகளுக்கு போனேன் போகும்போது ஒரு இடத்தில் அழகான சுவையான நீரூற்று ஒன்று இருக்கிறது . அதற்கு அருகில் அழகான மரம் செடி கொடிகள் இருக்கின்றன . அந்த நீரூற்றை குடித்துக் கொண்டும் இலைகளை சாப்பிட்டுக் கொண்டும் அங்கேயே வாழ்க்கையை கழித்து விடலாம் என்று எண்ணுகிறேன் . இதன் மூலம் முழுமையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியும் . முழு நேரமும் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டு இருக்க முடியும் . தவறுகளில் ஈடுபட வாய்ப்புகள் இல்லை . பொய் சொல்ல வேண்டிய நிலை இருக்காது .  ஹராமானது கலந்து விடும் என்ற பயம் இல்லை . வேறு எந்த தவறுகளிலும் ஹராம்களிலும் ஈடுபட வாய்ப்புகள் இல்லை . எனவே முழுமையாக நல்ல செயல்களை மட்டுமே நான் செய்ய முடியும் . என்ற அடிப்படையில் தோழர் கேட்டார் .  அதற்கு அல்லாஹ்வின் துாதர் நான் யூத மார்க்கத்தை கொண்டு வரவில்லை . கிறிஸ்தவ மார்க்கத்தை கொண்டு வரவில்லை . வெள்ளை வெளேர் என்ற தெளிவான துாய்மையான இஸ்லாமிய மார