32-39 சிறை பிடித்து கைதியாக்கினானா? அழைத்துச் சென்றானா? ( பாகம் -13)
அரபு மொழி எழுத்துக்களில் உள்ள
ث ج ح خ د ذ ز س ش ص ض ط ظ ع غ ف ق ها
ஆகிய எழுத்துக்களுக்கு நிகரான (சமமான) உச்சரிப்பு உடைய எழுத்துக்கள் தமிழில் கிடையாது. அதனால் வட மொழி எழுத்துக்களையோ, நெருக்கமான உச்சரிப்பு உடைய எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.
https://mdfazlulilahi.blogspot.com/2021/03/32-39-13.html
ஜீம் க்கு ஜ, ஸீம் க்கு ஸ, ஷீம் க்கு ஷ என வட மொழி சொற்களையும் ஸேக்கு Z ஃபேக்கு F என ஆங்கிலம் கலந்தும் ஃ வையும் பயன்படுத்தி வருகிறோம்.
محمد
(ஸல்) அவர்கள் பெயரில் உள்ள
ح
வுக்கும்
د
வுக்கும் சமமான (நிகரான) உச்சரிப்பு தமிழில் கிடையாது. ஆகவே ஹ என்ற வட மொழி எழுத்தையும் த என்ற நெருக்கமான தமிழ் எழுத்தையும் கலந்து முஹம்மது என பயன்படுத்துகிறோம். ஹ வட மொழி என்பதால் வட மொழி எதிர்ப்பாளர்கள் முகம்மது என்று எழுதி வருகிறார்கள்.
இப்படி எழுதுபவர்கள் தங்கள் அரசியல் கட்சி தலைவர் பெயர்கள் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் அல்லது நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக வட மொழி எழுத்துக்களை பயன்படுத்தி வருவதையும் பார்க்கிறோம்.
MOHAMED என்று எழுதக் கூடாது. அது யூத நஸ்ரானிக் கொள்கை. Muhammad அல்லது Muhammadh என்றே எழுத வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். MO என்பது மொ ஆகும் MU என்பதே மு ஆகும் என்கிறார்கள்.
MOON இதை மோன் என்று படிக்கிறார்களா? மூன் என்று படிக்கிறார்களா? MONDAY என்பதை மன்டேய் என்று படிக்கிறார்களா? மொன்டேய் என்று படிக்கிறார்களா?
ஆங்கிலத்தில் AL என்பதை அல் என்று படிக்கிறோம். ஆல் என்பதற்கு பிற மொழி அறிவுப்படி AAL என்றுதான் எழுதத் தோன்றும். ஆங்கில முறைப்படி ALL என்பதே ஆல் ஆகும்.
ஆதிலா என்பதை AADILA என்றுதான் நமக்கு எழுத தோன்றும். ஆங்கில இலக்கணம் இதை ஏற்காது. அ வுக்கு A யும் , ஆவுக்கு (இரண்டு) A A என்பது ஆங்கிலத்தில் கிடையாது. இதை ஆங்கில மொழி அறிவு உள்ளவர்களே புரிவார்கள்.
OFFICE இதை தமிழ்நாட்டு தமிழர்கள் ஆபீஸ் என்று சொல்கிறார்கள். மற்ற நாட்டு தமிழர்களும் மளையாளிகளும் ஓபீஸ் என்பார்கள். எப்படிச் சொன்னாளும் இரு சாராரும் கொள்ளும் பொருள் ஒன்றுதான்.
ஆபீஸ் என்பவர்கள் அலுவலகம் என்றும் ஓபீஸ் என்பவர்கள் ஒலுவலகம் என்றா பொருள் கொள்கிறார்கள்? சிந்திக்க வேண்டும்.
அரபுகளில் கூட ஜும்ஆ என்பதை எகிப்திய அரபுகள் கூட கும்ஆ என்பார்கள். வலல்ழால்லீன் என்பதை உருது, பார்ஸிகளில் பெரும்பாலானவர்கள் வலல்Zஸால்லீன் என்று Z உச்சரிப்புடன் ஓதுவார்கள்.
அரபு மொழிக்கும் பிற மொழிகளுக்குமான உச்சரிப்பு சம்பந்தமாகவும் விரிவான விளக்கம் மதிமுகம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. எனவேதான் https://www.youtube.com/watch?v=6fhRBk7cH0c என்ற அந்த லிங்கையும் இணைத்து தொடராக வெளியிட்டு வருகிறோம்.
உதட்டை மட்டும் பார்ப்பவன் அல்ல அல்லாஹ். உள்ளத்தையும் பார்ப்பவன். அதனால்தான் ஏழு முறைகளில் குர்ஆன் ஓதுவதை அங்கீகரித்துள்ளான்.
18:31. 76:13. 83:23. 36:56. 83:35. ஆகிய வசனங்களில் உள்ள “அராயிகி” என்பதற்கு இருக்கைகள், கட்டில்கள் என்று அறிஞர் பீ.ஜே. மொழி பெயர்த்துள்ளார்கள். மற்றவர்கள் ஆசனங்கள் மஞ்சங்கள் சாய்வாசனங்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
20:31. ல் உள்ள “அZஸ்றீ” க்கு (ஹாரூன் மூலம்) என்னைப் பலப்படுத்து! என்று அறிஞர் பீ.ஜே. மொழி பெயர்த்துள்ளார்கள். மற்றவர்கள்,
(ஹாரூனைக் கொண்டு)
என் முதுகை வலுப்படுத்துவாயாக!
என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை.
என் கையை வலுப்படுத்துவாயாக!
என் பலத்தை உறுதிப்படுத்தி வைப்பாயாக!
8:67, 8:70. ஆகிய வசனங்களில் சிறைப்பிடித்தல் கைதிகள் என பொருள்கள் தரும் ஃஅஸ்ரா
اَسْرٰى
என்ற அதே வடிவ எழுத்துக்களே 17:1ல் இடம் பெற்றுள்ளன. இங்கே தனது அடியாரை (முஹம்மது (ஸல்) அவர்களை) சிறைப்பிடித்தவன் என்றோ கைதியாக்கியவன் என்றோ பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தனம் ஆகி விடும்.
இங்கே 17:1ல் என்ன பொருள் கொள்கிறோம்? அழைத்துச் சென்றவன் என்று பொருள் கொள்கிறோம். இது போல்தான் இடத்துக்கு தக்கவாறு சிந்தித்து சிறந்த பொருத்தமான பொருள் கொள்ள வேண்டும். இது எல்லா மொழிகளிலும் உள்ளது தான்.
இதில் இடம் பெற்றுள்ள தவுZஸ்ஸுஹும் அZஸ்ஸ(ன்) இது மFப்வூல் முதலக் கைச் சார்ந்தது. இது பற்றி அறிஞர் PJ அளித்த விளக்கத்தை முன்பு வெளியிட்டு இருக்கிறோம். மறந்து விட்டவர்கள். அவரவர் அருகில் உள்ள அறிஞர் குழுவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/watch?v=6fhRBk7cH0c
|
32. |
ٱلْأَرَآئِكِ |
அராயிகி (5) |
கட்டிலில் 36:56. கட்டில்கள் 83:35. |
33. | إِرَمَ | இரம (1) |
34. | ـَٔازَرَهُۥ | ஆZஸறஹு(1) | 1.அதைப் பலப்படுத்துகிறது. 48:29. |
| أَزْرِى | அZஸ்றீ(1) | 2.என்னைப் பலப்படுத்து! 20:31. |
| 35 | ءَازَرَ | ஆZஸற(1) | 1. ஆZஸர் |
| 36 | تَؤُزُّهُمْ | தவுZஸ்ஸுஹும்(1) | 1. அவர்களை தூண்டி விடுவதற்காக 19:83. |
| أَزًّۭا | அZஸ்ஸ(ன்) (1) | 2. ஒரேயடியாக 19:83. |
| 37 | أَزِفَتِ | அZஸிFபதி (1) | 1.நெருங்கி விட்டது! 53:57. |
| ءَازِفَةِ | ஆZஸிFபதி (2) | 2. சீக்கிரம் வரவிருக்கும் 40:17. நெருங்க வேண்டியது 53:57. |
| 38 | تَاْسِرُوْنَ | தஃஸிரூன (1) | 1. சிறைப் பிடித்தீர்கள். 33:26 |
| أَسِيرًا | ஃஅஸீரன்(1) | 2.சிறைப்பட்டவருக்கும் 76:8. |
| أَسْرَىٰ | ஃஅஸ்ரா(2) | 3.சிறைப்பிடித்தல் 8:67. கைதிகள் 8:70. |
| أُسَٰرَىٰ | ஃஉஸாரா(1) | 4.கைதிகளாக 2:85. |
| 39. | أَسْرَهُمْ | அஸ்ரஹும் (1) | அவர்களின் அமைப்பை 76:28. |

Comments