கோவை ரஹ்மதுல்லாஹ் கேட்டபடி விவாதத் தலைப்புகளை வெளியிட்டார் சகோதரர் பீ.ஜே.

 அல்லாஹ்வின் திருப்பெயரால் ……


بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ

"உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது." (திருக்குர்ஆன் 21:18)


அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு..,

பீ.ஜைனுல் ஆபிதீனின் அறிவிப்பு.

கோவை ரஹ்மத்துல்லாஹ் அவரது காதல் கல்யாணம் குறித்து நான் அவதூறு கூறியதாகவும், இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் சவால் விட்டிருந்தார். அந்த விவாத அழைப்பில் அந்த ஒரு விஷயம் மட்டுமின்றி என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தார்.


நான் பல அவதூறுகளை இட்டுக்கட்டிச் சொல்வதாகப் பேசி இருந்தார். எனவே காதல் கல்யாணம் பற்றி மட்டுமல்ல, இருவரும் ஒருவருக்கு எதிராக மற்றவர் சொன்ன பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் குறித்த அனைத்தையும் விவாதிக்கத் தயார் என்று நான் நேற்று குறிப்பிட்டு இருந்தேன்.


அவர் தரப்பில் உள்ள தலைப்புகளை அவர் குறிப்பிடட்டும்! அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். என் தரப்பில் உள்ள தலைப்புகளை நான் குறிப்பிடுகிறேன் என்றும் கூறினேன்.


விவாதம் நடைபெறும் இடம் பேர்ணாம்பட் ஜம்இய்யத்துஸ் ஸலஃபிய்யா என்றும், அவர்களை நடுவர்களாக்கிக் கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதையும் நான் ஏற்றுக் கொண்டேன். விவாத ஒப்பந்தம் இம்மாதம் 20 ஆம் தேதி என்றும், அன்று காலை பத்து மணிக்கு நான் அங்கே விவாத ஒப்பந்தம் செய்ய தயாராகக் காத்திருப்பேன் என்றும் சொல்லி இருந்தேன்.


இந்நிலையில் 12/03/2021 அன்று முகநூல் நேரலையில் கோவை ரஹ்மத்துல்லாஹ், தான் விவாதம் செய்யத் தயார் என்று கூறி அவர் தரப்பில் உள்ள தலைப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். எனது தலைப்புக்களை நான் சொல்லுமாறு கேட்டுள்ளார்.


தன் தரப்பில் பேசவேண்டிய எந்தத் தலைப்பையும் அவர் சேர்க்கலாம் என்று நான் முன்பே சொல்லி விட்டேன். எனவே அவர் சொல்லும் தலைப்புகளை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். என் தரப்பில் உள்ள தலைப்புகள் என்ன என்று நான் விவாத அறைகூவலில் பொதுவாகச் சொல்லிவிட்டேன். அவர் கேட்பதால் அவற்றைப் பட்டியல் வடிவிலும் வெளியிடுகிறேன்.

என் சார்பில் மொத்தம் ஏழு தலைப்புகள் உள்ளன. அவற்றின் விபரத்தைக் கீழே தந்துள்ளேன்:

1- மாநில நிர்வாகத்தின் மீது பீஜே பொருளாதார மோசடி குறித்து அபாண்டமான பழியைச் சுமத்தினார் என்ற ரஹ்மத்துல்லாஹ்வின் குற்றச்சாட்டுக்கள்!


அனாதை இல்ல நிதியில் பல கோடி ரூபாய் மோசடி, 
முதியோர் இல்ல நிதியில் மோசடி, 

நிர்வாகச் செலவும் இதர செலவும் மூன்றரைக் கோடி என்று மோசடி, 

பீஜே பொறுப்பில் கொடுத்து வைத்திருந்த பல கோடி ரூபாய்களைக் கணக்கில் காட்டாமல் மோசடி, 

கஜா புயல் நிவாரண நிதியில் மோசடி, 

மதுரை சிறுவர் இல்லம், இருமேனி சிறுமியர் இல்லம் ஆகியவற்றுக்காக பல லட்சங்கள் கணக்கு காட்டிய மோசடி, 

இடத்துக்கு ஒரு பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முயன்றது உள்ளிட்டவை இதில் அடங்கும்.


எனிமி சொத்துக்கு வருடம் மூன்று லட்சம் வாடகை கொடுப்பதாகத் துணிந்து பொய் சொன்னது, 

அனாதைகள் பெயரில் வசூல் செய்த பணத்தில் ஒரு கோடி ரூபாயில் திருச்சியில் மதரஸா கட்டிய மோசடி, 

வேலூர், குடியாத்தம், தூத்துக்குடி பள்ளிவாசலுக்கு வாங்கிய இடத்தை விற்பனை செய்த மோசடி ஆகியவையும் இதில் அடங்கும்.


2- ததஜ மாநில நிர்வாகிகள் சிலர் மீது பீஜே சுமத்திய குற்றச்சாட்டு அபாண்டமானது என்று ரஹ்மத்துல்லாஹ் பேசியது குறித்தது!


ஷம்சுல்லுஹா நீலப்படம் பார்த்தார், 

எம்.எஸ். சுலைமான் மத்ரஸா மாணவியைக் காதலித்ததால் மத்ரஸாவில் இருந்து நீக்கப்பட்டார், அந்தப் பெண்ணுடன்தான் வாழ்கிறார், 

அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி இன்னொருவரின் மனைவியை இழுத்துக் கொண்டு ஓடி அந்தப் பெண்ணுடன்தான் தற்போதும் வாழ்ந்து வருகிறார், 

அஷ்ரஃபுதீன் பிர்தவ்ஸி அன்னியப் பெண்களிடம் தனித்து இருந்து நிரூபிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டார், 

கலீல் ரசூல் தனலட்சுமி என்ற வேலைக்காரப் பெண்ணை சீரழித்ததற்காக கைது செய்யப்பட்டார், 

சையத் இப்ராஹீம் மாநில தலைமையில் புளூ ஃபிலிம் பார்த்தார் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இதில் அடங்கும்.

3- எனக்கு எதிரான நடவடிக்கை குறித்தது

ஆடியோ குறித்து ததஜ செய்த கள்ளத் தனங்கள், பொய்கள் முரண்பாடுகள், செட்டிங் வேலைகள் இதில் அடங்கும்.

4- ரஹ்மத்துல்லாஹ் துணிந்து பொய் சொல்பவர், மார்க்கத்தை வளைப்பவர், மார்க்கம் சொல்லத் தகுதியற்றவர்!

ஈஸா நபி குறித்தும், 
சஹாபாக்கள் குறித்தும், 
அல்லாஹ் எதனால் முஹம்மது நபியை நபியாக ஆக்கினான் என்பது குறித்தும், பெருநாள் தொழுகை கடமையில்லை என்பது குறித்தும், 
எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாகாது என்பது குறித்தும்,
பொருளாதாரத்திற்கு கணக்கு காட்டுவது மார்க்கத்துக்கு எதிரானது என்பது குறித்தும் 
ரஹ்மத்துல்லாஹ் பேசியவைகளும், அவர் சொன்ன பொய்களும் இதில் அடங்கும்.


ஃபித்யா என்பது மாற்றப்பட்ட சட்டம் என்று தெரிந்தும், 
நோன்பு நோற்க இயலாதவர்கள் ஃபித்யா பணம் ஒரு மாதத்துக்கு இவ்வளவு என்று மக்களிடம் சொல்லி மார்க்கத்தை வளைத்து அதில் கமிஷன் வாங்கியது, 

வசூல் குறித்து பயான் பண்ணியதால் வசூலில் பங்கு கேட்டு வாங்கியது, 

வசூலில் கமிஷன் வாங்கவில்லை என்று துணிந்து பொய் சொன்னது, 

தகுதியற்ற மாடுகள் குர்பானி கொடுப்பது பற்றி ரஹ்மத்துல்லாஹ்விடம் சொன்னபோது அதைக் கண்டு கொள்ள வேண்டாம் எனக் கூறி மார்க்கத்தை வளைத்தது உள்ளிட்டவை இதில் அடங்கும்.


'தமுமுகவைச் சார்ந்த ஹைதர் அலி அவர்கள் ஜவாஹிருல்லாஹ் பற்றி என்னிடம் அழுது முறையிட்டார், 

அதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது, மறுத்தால் வெளியிடுவேன்' என்று அல்லாஹ்வை முன்னிருத்தி ரஹ்மத்துல்லாஹ் பொய் சொன்னது, 

எந்த ஆதாரமும் ஆடியோவும் இல்லாத நிலையில் ஆடியோ உள்ளது என்று அல்லாஹ்வின் பெயரால் பொய் சத்தியம் செய்ததும் இதில் அடங்கும்.

5- ஜமாஅத் செல்வாக்கை தனது ஆதாயத்துக்காக ரஹ்மத்துல்லாஹ் பயன்படுத்தியது, ஜமாஅத் விதியை அப்பட்டமாக மீறியது

குறிப்பிட்ட மசாலாவை ஃபித்ராவில் கொடுக்க வேண்டும் என கீழ்மட்ட நிர்வாகிகளை நிர்பந்தம் செய்து பன்மடங்கு லாபம் வைத்து இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தது, 

மாநில நிர்வாகிகள் எந்த நிறுவனத்துக்காகவும் யாரிடமும் முதலீடு சேர்க்கக் கூடாது என்ற விதியை மீறி முதலீடு திரட்டியது, 

அதிலும் கமிஷன் அடித்தது, சட்ட விரோதமான தொழிலை மாநில நிர்வாகிகள் செய்யக்கூடாது என்ற விதியை மீறி கள்ளத் தனமாக அம்பர் வியாபாரம் செய்து நம்பிக்கை துரோகம் செய்தது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

6- பள்ளிவாசல்களில் பிரச்சனையை ஏற்படுத்தி பள்ளிகளை பீஜே பூட்டினார் என்று ரஹ்மத்துல்லாஹ் பேசியது,

துளசியாப்பட்டிணம், பொறையார், கோவில்பட்டி, கொடிக்கால் பாளையம், பாண்டிச்சேரி, பூந்தமல்லி ஆகிய ஊர்களில் உள்ள மர்கஸ்களில் மார்க்கத்துக்கு விரோதமாக ததஜ நடந்துவிட்டு பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றியது, தில்லுமுல்லுகள் செய்தது, இயக்க அலுவலகம் என்று மடைமாற்றி பள்ளிவாசலை பூட்டியது ஆகியவை அடங்கும்.

7- ரஹ்மத்துல்லாஹ் காதல் கல்யாணம் குறித்து,
ரஹ்மத்துல்லாஹ் ஒரு மாணவியைக் காதலித்து அவரைக் கர்ப்பமாக்கி பின்னர் பாக்கர் மூலம் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக பீஜே கூறினார் என்பதற்குத்தான் ரஹ்மத்துல்லாஹ் விவாத அழைப்பு கொடுத்தார். அதை அவர் தனது பட்டியலில் குறிப்பிட மறந்துவிட்டார். ஆனாலும் அதைக் குறித்து விவாதிக்க வேண்டும். நான் அப்படிச் சொன்னேனா? வேறு யாரும் சொன்னார்களா என்பது குறித்த விஷயங்கள் இதில் அடங்கும்.

முன்னரே நான் சொன்னபடி அவரும் ஏற்றுக்கொண்டபடி 20-3-2021 அன்று காலை பத்து மணிக்கு பேர்ணாம்பட் ஜம்இய்யதுஸ் ஸலஃபிய்யா அலுவலகத்தில் அவருக்காகக் காத்திருப்பேன். அவர் சொல்லும் பட்டியலையும் நான் சொல்லும் பட்டியலையும் இணைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். இன்ஷா அல்லாஹ்!

என் தரப்பில் மூன்று பேர், அவர் தரப்பில் மூன்று பேர், ஜம்இய்ய்யதுஸ் ஸலஃபியா நடுவர்கள் சார்பில் இருவர் ஆகியோர் மட்டும் போதும்.
இங்த ஒப்பந்த நிகழ்வுக்கு நம் சார்பில் வெளியூர் ஆட்கள் வர வேண்டாம்.

விவாத ஒழுங்குகள், பார்வையாளர் எண்ணிக்கை உள்ளிட்டவை விவாத ஒப்பந்தத்தில் முடிவுசெய்து அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!

இந்த விவாதம் மூலம் மக்களுக்கு உண்மை வெளிப்பட அல்லாஹ் அருள் புரிவானாக!

அன்புடன்,
பீ.ஜைனுல் ஆபிதீன் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு