31. அரபு மொழி குழப்பமான மொழியா? மண்ணின் மைந்தன், எங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் வீட்டுப் பிள்ளை. பாகம்12

அர்ழு , அர்ழ, அர்ழி  போன்று பூமி என்ற பொருள் தரும்  சொல் மட்டுமே  9 விதமாக குர்ஆனில்   462 இடங்களில்  மீண்டும் மீண்டும் வந்துள்ளன.  


இது வரையிலான 31 வார்த்தைகள் தான் குர்ஆனின் 2358 இடங்களில்  திரும்பத்   திரும்ப வந்துள்ளன. 31 வார்த்தைகளுக்கான தமிழை தெரிவதன் மூலம் குர்ஆனின்   2358 இடங்களில்  பொருளை  புரிகிறீர்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/03/31.html






தேர்தல் நேரத்தில் உள்ளோம். கடந்த காலங்களில் 1967ல் இருந்து  எங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் வீட்டுப் பிள்ளை என்பது தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 


1989க்குப் பிறகு  மண்ணின் மைந்தன்  என்பது தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


நாம் காண உள்ள  பூமி(அர்ழு)க்கு புவி, பார்(உலகு), பூ(உலகு),   அகிலம், அண்டம்,  வையம், வையகம், தலம், தரை, மண், நிலம் என 60க்கும் மேற்பட்ட பெயர்களை சமஸ்கிருதமும் கலந்து   தமிழாக   பயன்படுத்தி வந்திருக்கிறோம்  தமிழர்களாகிய நாம். 

எல்லா இடங்களிலும் தரை என்றோ பூமி என்றோ கூற மாட்டோம்.  இடத்துக்கு தக்கவாறு மண், நிலம், (திருத்) தலம்  என்று பயன்படுத்துவோம்.


ஓட்டுக் கேட்பவர்கள் மண்ணின் மைந்தன்  என்று சொல்லும்போது பூமிக்குப் பிறந்த பிள்ளை என்று நேரடி பொருள் கொள்ள மாட்டோம். 


வெளியூர் ஆள் இல்லை. உள்ளூர்க்காரர். சொந்த ஊர்க்காரர் என்று சிந்தனை அடிப்படையில்  பொருளை ஆய்ந்து விளங்கி புரிந்து கொள்வோம். 

 

அந்த மாதிரி தான் குர்ஆனில் உள்ள வார்த்தைகளை இடத்துக்கு தக்கவாறு பொருளை விளங்கி புரிந்து  கொள்ள வேண்டும்,  என்பதற்காகவே மேற்கண்ட விளக்கம்.

ضَرْبًا

 ழர்பன் - அடிப்பது

 فِى الْاَرْضِ

Fபில் அர்ழி -பூமியில்

2:273ல் உள்ள ழர்பன் Fபில் அர்ழி க்கு    தரையில் (பூமியில்)   அடிக்கவும் என்று நேரடியாக மொழி பெயர்க்க  முடியுமா?  

அறிவுடன் ஆய்ந்து சிந்தித்தால் பூமியில் பயணம் என்பதே இந்த இடத்தில் பொருத்தமான சரியான மொழி பெயர்ப்பாகும்.  


இதை அரபு மொழிக்கு வெளியில்  நின்று பார்க்கும்போது அரபு மொழி  குழப்பமான  மொழி போல் தோன்றும்.  எல்லா மொழிகளிலும்  இதுபோல்  இருக்கிறது. நமக்குத் தெரியாது.  நமது தாய்த் தமிழில்  கூட எடுத்துக் காட்டு கூற முடியும்.

மழை அடிக்கிறது. 

வெயில் அடிக்கிறது.

காற்று  அடிக்கிறது.

பனி அடிக்கிறது.

இதை தமிழ் மொழிக்கு வெளியில்  நின்று பார்க்கும்போது தமிழ் மொழி  குழப்பமான  மொழி போல் தோன்றும். 

இரு மொழியும் விளங்கிய மொழி பெயர்ப்பாளர்கள். மழை பொழிகிறது.  வெயில் விழுகிறது. காற்று   வீசுகிறது என்று  ஆய்வுடன் மொழி பெயர்ப்பார்கள்.

ضَرَبُوْا فِى الْاَرْضِ 

3:156ல் உள்ள ழரபூ Fபில் அர்ழி க்கு நேரடி மொழி பெயர்ப்பு என்ன? அவர்கள் தரையில் அடித்தார்கள் என்பதுதான். 

இந்த இடத்தில் பொருத்தமான சரியான மொழி பெயர்ப்பு என்ன?   பயணம் மேற்கொண்ட.என்பதுதான். 


 4:101,5:106  ஆகிய வசனங்களில் உள்ள 

 ضَرَبْتُمْ فِى الْاَرْضِ 

ழரப்தும் Fபில் அர்ழி என்பதற்கு  நீங்கள் தரையில் அடித்துள்ளீர்கள்  என்ற நேரடி பொருள் கொள்ள முடியுமா?  முடியாது. 


நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும்போது என்பதுதான் அறிவுடன் கூடிய ஆய்வு  ரீதியாக சரியானது.  இந்த அடிப்படையில் இனி வருபவைகளை உங்கள் சிந்தனைக்கு, அறிவுடன் கூடிய ஆய்வுத் திறனுக்கு விட்டு விடுகிறோம்.  


31:34  ல் உள்ள 

 بِاَىِّ اَرْضٍ

பிஅய்யி அர்ழின் என்பதற்கு  எந்தப் பூமியில் இறப்போம் என்ற மொழி பெயர்ப்புகள்  சரியா? எங்கே  (மரணிப்போம்) என்ற மொழி பெயர்ப்பு சரியா?


17:37க்கு பூமியைப் பிளந்துவிட முடியாதுமலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாதுபோன்ற மொழி பெயர்ப்புகள்  சரியா? 


பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!266 என்ற மொழி பெயர்ப்பு சரியா?


13:17ல்    மனிதர்களுக்குப் பயன் தருவது பூமியில் தங்கி விடுகிறதுஎன்ற மொழி   பெயர்ப்புகள்  பொருத்தமானதா?

நிலத்தில்  தங்கி விடுகிறது என்ற மொழி பெயர்ப்பு  பொருத்தமானதா?


13:31.ல்  பூமியைத் துண்டு துண்டாக்கினாலும்,   என்ற  மொழி பெயர்ப்புகள் பொருத்தமானதா?

  

நிலப்பரப்பு துண்டு துண்டாக்கப்பட்டாலும்என்ற மொழி பெயர்ப்பு  பொருத்தமானதா?


2:205.  பூமியில் கலகத்தை உண்டாக்கவே  என்ற  மொழி பெயர்ப்புகள் பொருத்தமானதா?

இம்மண்ணில் குழப்பம் விளைவிக்கவும்,  என்ற மொழி பெயர்ப்பு  பொருத்தமானதாஃ


12:9. பூமியில் எங்கேனும் -  ஒரு நாட்டில்  எறிந்து விடுங்கள், போன்ற  மொழி   பெயர்ப்புகள் பொருத்தமானதா?

ஏதாவது நிலப்பரப்பில் அவரை வீசி எறிந்து விடுங்கள்!  என்ற மொழி பெயர்ப்பு  பொருத்தமானதா?


ஆய்ந்து  சிந்தித்து  பொருத்தமான பொருளை  விளங்கி புரிந்து கொள்வோம்.

புளு கலரில் ஹை லைட் செய்து இரண்டாவதாக உள்ளவை பீ.ஜே.யின் மொழி பெயர்ப்பாகும்.

மதிமுகம்  தொலைக் காட்சியில்  ஒளிபரப்பான குர்ஆனை எளிதில்  பாகம்-10 ஐக் காண    லிங்கை கிளிக் செய்யவும்.  

 


https://www.youtube.com/watch?v=LQdGVSlCy6I 

31

 ٱلْأَرْضُஅர்ழு (34) 

1.பூமி 2:61,251, 3:133. 4:42,97,  9:25,118. 10:24. 11:44,107,108, 14:48. 17:44. 19:90. 22:63. 23:71,84.  

 30:25. 36:33,36. 39:10,67,69.  44:29. 50:4, 44. 56:4, 69:14. 73:14. 84:3. 89:21. 99:1,2.

நிலப்பரப்பு  13:31. .

 


ٱلْأَرْضَஅர் (86)  

2.பூமி(யை) 2:22,255. 9:36. 13:3,41. 15:19. 18:47. 20:53. 

 21:44,105. 22:5. 27:61. 30:9. 35:9. 41:9,39. 43:10. 50:7. 51:48. 55:10. 67:15. 77:25, 78:6,79:30.80:26.


பூமி(யையும்) 2:164. 6:1,73,79.7:54.10:3. 11:7. 14:19,32. 15:85. 16:3. 17:99.  20:4. 21:16. 25:59.27:60. 29:44,61. 30:8. 31:25. 32:4.36:81. 38:27. 39:5,38.43:9. 44:38. 45:22. 46:3,33. 50:38. 52:36. 57:4. 64:3.

பூமியும் 21:30. 35:41.  

பூமி(யில்)5:21. 14:14.17:37,104. 34:9. 54:12. 67:16. 71:19,

(இப்)பூமி(யிலேயே) 12:80.

(இப்)பூமி(யை)39:74.40:64. 

பூமி(க்கு) 7:100. 

பூமிக்குள் 28:81. 29:40. 

பூமி(க்கும்)19:40.

பூமி 7:128. 16:45,65. 29:63. 30:19,24,50. 45:5. 57:17. 

நிலத்தை 2:71.




ٱلْأَرْضِஅர்ழி (331) 

3.  பூமி 5:17,18,120 16:15, 26:24. 32:5. 37:5. 38:10,66. 43:85. 44:7. 78:37. 88:20. 

பூமி(யில்) 2:11,27,29,30, 36,60, 168,255,267,273,284,3:29,109,129,137,3:156. 4:97,101,131(2) 132, 4:171. 5:26. 5:32(2) ,33,36,64,97,106. 6:6,11,35,38,71,116,165. 7:10,24,56,74(2),85, 7:127,129,146,168. 8:26,63,67,73. 9:2,74,14,23. 10:54,68,78,83,99,11:6,20,64,85,116.  12:21,56,73,109. 13:4,18,25,33. 14:2,8, 15:39, 16:13,36,49, 17:4,37,90,95, 18:7,84,94. 20:6. 21:71. 22:18,41,46,64,65. 23:18,79,112. 24:55,57. 25:63. 26:7,152,183.  27:48,62,69,87.  28:4. 28:5, 6, 19,39,77,83. 29:20,36,39.  30:3,9,42. 31:10,18,20,27. 34:1,2,14. 35:39,40,43,44. 38:26. 38:28. 39:21,47. 40:21(2)  26,29,75, 82(2) 41:15. 42:4,5,11.,27,31,42,53. 43:60. 45:13. 46,20,32. 47:10,22.  53:31. 57:4.  58:7. 61:1,  62:1,10. 64:1.  65:12. 67:24. 70:14. 71:17,26.  72:10,12. 73:20.


பூமி(யிலும்)2:33,116. 3:5,83, 4:126. 4:170. 6:3,12. 7:187. 10:18,55,61,66,101. 11:123. 12:105. 13:15. 16:52,73,77. 17:55, 18:26.  19:93. 21:4,19. 22:70. 24:41,64. 25:6. 27:25,65. 29:22,52.  30:18,26. 31:26.  34:9,22. 35:38,44. 39:68. 43:84. 45:3,37.  49:16,18. 51:20, 55:29. 57:1. 59:1,24. 64:4. 


பூமி(யின்) 2:107. 3:180,189. 5:40. 6:59,75. 7:137,158,185. 9:116. 10:24. 12:55. 14:26. 18:45. 24:42. 25:2. 39:44.,63. 42:12,49. 43:82. 45:27,36. 48:4,7,14.51:23. 55:33. 57:2,5,10,21. 63:7. 85:9. 86:12.  91:6. 

பூமி(யையும்) 2:117, 164, 3:190. 6:14,101, 10:6. 12:101. 14:10. 18:51. 21:56. 30:22. 35:1. 38:27. 39:46. 40:57. 42:11,29.

பூமி(யை)5:31. 17:103. 32:27.

பூமி(க்கும்) 2:164. 13:16. 17:102. 18:14. 19:65. 24:35. 33:72. 41:11.

பூமி(க்கு)21:81.  

பூமி(க்குள்) 32:10.

பூமி(யும்) 3:191. 

பூமி(யிலிருந்தும்)7:96. 10:31. 11:61.  27:64. 34:24. 35:3.

பூமி(யிலிருந்து)17:76. 21:21. 27:82. 30:25. 53:32. 

பூமி(யிலோ)14:38. 21:31. 27:75. 31:16.  34:3. 57:22.

(வேறு) பூமி (யாகவும்) 14:48.

இம்மண்ணில் 2:205.

உலகில் 5:33.

உலகை 9:38.

உலக வாழ்வை 7:176.

நிலத்தில் 13:17. 

 எங்கே  31:34.



 أَرْضًۭا  அர்ழன்  (2) 

4.  நிலப்பரப்பில்  12:9. 
பூமிக்கும் 33:27. 
 


 أَرْضِكُمْ அர்ழிகும்  (3) 

5.  உங்கள் பூமி(யிலிருந்து) 7:110. 26:35.
உங்களது பூமி(யிலிருந்து) 20:63


  أَرْضِنَآ  அர்ழினா  (3) 

6.  எங்கள் மண்(ணிலிருந்து) 14:13.
எங்கள் பூமி(யிலிருந்து) 20:57. 
எங்களின் பூமி(யிலிருந்து)28:57. 


أَرْضَهُمْ அர்ழஹும்  (1) 

7.  அவர்களது பூமி(க்கும்)  33:27.


 أَرْضِى அர்ழீ  (1) 

8.   எனது பூமி  29:56.


  அர்ழீ  (1) 

9.   எனது பூமி  29:56.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு