23 தன்னுடைய சகோதரியை விட மிகப் பெரியதாக என்ற தர்ஜமா உலமாக்கள் யார்? யார்? (எளிய வழி பாகம் -9)
புனித குர்ஆன் தமிழிலே வந்த பிறகு அரபு மொழியில் ஓதுவதால் என்ன நன்மை? - நல்லுார் தமிழ் விரும்பி.
திருஷ்டாந்தத்திலிருந்து என்ற சமஸ்கிருதம் கலந்த தமிழ் எத்தனை பேருக்குத் தெரியும்?
https://mdfazlulilahi.blogspot.com/2021/03/23-9.html
அகர வரிசையில் 23ஆவதாக வந்துள்ள அஃகீ (என் சகோதரர்)
அஃகீக (உம் சகோதரர்)
அஃகூஹு (அவரது சகோதரர்)
என்ற பெயர்ச் சொல் வார்த்தைகள். 30 விதமாக 102 இடங்களில் மீண்டும் மீண்டும் குர்ஆனில் வந்துள்ளன.
102 இடங்களில் உள்ள வார்த்தைகளில் 94ஆவதாக உள்ள வார்த்தை 43:48. வசனத்தில் உள்ளது. அதற்கு மொழி பெயர்ப்பாக உள்ள தமிழ் தர்ஜமாக்களில் இருந்து மூன்றை எழுத்து வடிவில் சுருக்கமாகவும். JPG பைலாகவும் உங்கள் முன் வைத்துள்ளேன்.
குறிப்பாக, உம்மாவுடன் உம்ரா சென்று விட்டு போகின்ற வழியில் துபை வந்த டாக்டர், அப்ஸலுல் உலமா என சூட்கேஸ் நிறைய சர்ட்பிகேட் வைத்துள்ள உலமாவின் கவனத்திற்கு.
ஏற்கனவே 8 மொழி பெயர்ப்புகள் வந்த நிலையில் 2002ல் ஒன்பதாவது மொழி பெயர்ப்பாக பீ.ஜே. மொழி பெயர்ப்பு வரவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டும் குற்றச்சாட்டுக்கள் கூறியும் பீ.ஜே. தர்ஜமாவை விமர்சித்த உலமாவே!
இணைப்பில் உள்ளவைகளில் பீ.ஜே. தர்ஜமா மட்டுமே 2002 பதிப்பு. மற்ற மூன்றும் 2018ல் வெளியான தர்ஜமாக்கள் தான்.
உங்களை மாதிரி உலமாக்களால் மொழி பெயர்க்கப்பட்டவைதான். அதில் உள்ள திருஷ்டாந்தத்திலிருந்து என்ற சமஸ்கிருதம் கலந்த தமிழ் எத்தனை பேருக்குத் தெரியும்? என்று கேட்கவில்லை.
பெட்டி நிறைய ஸனதுகள் வைத்துள்ள உங்களுக்கே தெரியாதபோது அப்பாவி மக்களுக்கு எப்படித் தெரியும்?
உம்மாவுடன் உம்ரா வந்து நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஊர் போய் ஆதாரங்கள் அனுப்புவதாக சொல்லி விட்டுப் போனீர்கள்.
ஆண்டுகள் பல போய் விட்டன. உங்கள் உம்மாவும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். உங்கள் ஆதாரம்தான் வந்து சேர மாட்டேன்கிறது.
மேலும் திருஷ்டாந்தத்திலிருந்து அது தனது சகோதரியை பார்க்கிணும் பெரியதாக....
அது தன்னுடைய சகோதரியை (தன் போன்றதை) விட மிகப் பெரியதாக....
அது அதன் சகோதரியை விட பெரியதாக.... இப்படியாக
وَمَا نُرِيْهِمْ مِّنْ اٰيَةٍ اِلَّا هِىَ اَكْبَرُ مِنْ اُخْتِهَا
என்ற வசனத்திற்கு மொழி பெயர்த்துள்ளார்கள்.
இதில் உஃக்திஹா என்பது முஅன்னதாக எதை நோக்கி மீள்கிறது?
اٰيَةٍ
ஆயதின் என்பதை நோக்கி மீள்கிறது. 7 ஆண்டுகள் படித்தவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரபு கல்லுாரியில் பேராசிரியராகவும் இருக்கும் உங்களுக்குத் தெரியாதது அல்ல. ஆயத் பெண்பால் என்பது. அந்த அடிப்படையில்
எந்தச் சான்றை நாம் அவர்களுக்குக் காட்டினாலும் அதற்கு முன் சென்றதை விட அது பெரியதாகவே இருந்தது.
என்ற மொழி பெயர்ப்பே சரியானது.
இது பேரறிஞர் பீ.ஜே. அவர்கள் 2002ல் செய்த மொழி பெயர்ப்பு. இனியாவது உங்கள் அறிவுக் கண் திறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.
தமிழ் தர்ஜமாக்கள் வந்த பிறகு அரபு மூல மொழியில் குர்ஆன் ஓதுவதால் என்ன நன்மை? என்ற கேள்விக்கு இதிலும் பதில் உள்ளது.
எந்த ஒன்றும் மூல மொழியில் பாதுகாப்பாக இருந்தால்தான் இந்த மாதிரி தவறுகளை களை எடுக்க முடியும்.
எந்த ஒரு தூதரையும் அவர் தமது
சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்
அரபு மொழிக்கு என்று எந்த தனிச் சிறப்பும் கிடையாது. எல்லா மொழிகளிலும் துாதர்கள் வந்துள்ளார்கள் அவர்களுக்கு அந்த அந்த மொழிகளில்தான் வேதங்கள் அருளப்பட்டன .
குர்ஆன் வசனங்களின் அரபு உச்சரிப்புகளை சரியாகத் தெரிய, புரிய மதிமுகம் தொலைக் காட்சியில் குர்ஆனை எளிதில் ஓதிட என்ற தலைப்பில் ஒளிபரப்பான பாகம்-07 ஐக் காண லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.youtube.com/watch?v=7RkVKqXaXwM
23 | اَخٌ | அஃகுன் (4) | 1.சகோதரன். 4:12,23, 12:59. 77. |
اَخَا | அஃகா (4) | 2.சகோதரர். 46:21. |
اَخَانَا | அஃகானா (2) | 3. எங்கள் சகோதரரை 12:63, 65. |
اَخَاہُ | அஃகாஹு(7) | 4. இவரது சகோதரர் 7:111. 26:36. தமது சகோதரரை 12:69, 76. அவரது சகோதரர் 19:53. 23:45. 25:35. |
اَخَاهُمْ | அஃகாஹும் (8) | 5.அவர்களின் சகோதரர் 7:65,73,85. 11:61,84. 27:45. 29:36.அவர்களது சகோதரர் 11:50. |
اَخُوْكَ | அஃகூக (2) | 6. உனது சகோதரன். உமது சகோதரர் 20:42. |
اَخُوْهُ | அஃகூஹு (1) | 7. அவரது சகோதரர் 12:8. |
اَخُوْهُمْ | அஃகூஹும் (4) | 8. அவர்களின் சகோதரர் 26:106, 124,142,161. |
اَخِىْ | அஃகீ (7) | 9. என் சகோதரர் 5:25. 31. 20:30. தம் சகோதரர் 7:151. எனது சகோதரர்.12:90. 28:34. 38:23. |
اَخِيْكَ | அஃகீக (1) | 10. உம் சகோதரர் 28:35. |
اَخِيْهِ | அஃகீஹி (15) | 11. அவனது சகோதரன் 2:178. தன் சகோதரரை தனது சகோதரரின் 5:31. தமது சகோதரரின் 7:150. தமது சகோதரனின் 12:70. 49:12. தனது சகோதரனை 70:12, 80:34. தம் சகோதரர் 7:142. அவரது சகோதரர் 10:87. 12:76(2) ,87,89. இவரது சகோதரர் 12:64. |
اَخَوَيْكُمْ | அஃகவைகும் (1) | 12. உங்கள் சகோதரர்களுக்கிடையே 49:10. |
اخوان | இஃக்வான (2) | 13. உடன்பிறப்புக்கள் 17:27. சகோதரர்கள் 50:13, |
اِخْوَانًا | இஃக்வானன் (2) | 14. சகோதரர்களாக 3:103. 15:47. |
اِخْوَانُكُمْ | இஃக்வானுகும்(6) | 15. உங்கள் சகோதரர்கள்.2:220. 9:11,23,24. 24:61. 33:5. |
اِخْوَانِنَا | இஃக்வானினா(1) | 16. எங்கள் சகோதரர்களை 59:10. |
اِخْوَانِهِمْ | இஃக்வானிஹிம்(7) | 17. தம் சகோதரர்களை 3:156,168. அவர்களது சகோதரர்களிலும் 6:87. தமது சகோதரர்களை 7:202. தமது சகோதரர்களுக்கு 33:18. தமது சகோதரர்களாக 58:22. தங்கள் உடன்பிறப்புகளிடம் 59:11. |
اِخْوَانِهِنَّ | இஃக்வானிஹின்ன(4) | 18. கணவர்களின் சகோதரர்கள், 24:31. தங்கள் சகோதரர்கள், 24:31. அவர்களின் சகோதரர்கள், 33:55. அவர்களது சகோதரர்களின் 33:55. |
اِخْوَةٌ | இஃக்வதுன்(4) | 19. சகோதரர்கள் 4:11, 12:58. 49:10. உடன் பிறப்புக்கள் 4:176. |
اِخْوَتِكَ | இஃக்வதிக(1) | 20. உனது சகோதரர்கள் 12:5. |
اِخْوَتِهٖۤ | இஃக்வதிஹி(1) | 21. அவரது சகோதரர்களிடம் 12:7. |
اِخْوَتِىْ | இஃக்வதீ(1) | 22. என் சகோதரர்களுக்கு12:100. |
اُخْتٌ | உஃக்துன்(1) | 23. சகோதரி 4:12,23,176. சகோதரியே! 19:28. |
اُخْتٌ | உஃக்துன்(4) | 24. சகோதரி 4:12,23,176. சகோதரியே! 19:28. |
اُخْتُكَ | உஃக்துக(1) | 25. உமது சகோதரி 20:40. |
اُخْتِهٖ | உஃக்திஹி(1) | 26.அவரது (மூஸாவின்) சகோதரியிடம் 28:11. |
اُخْتَهَا | உஃக்தஹா(2) | 27. தம் சகோதர (சமுதாயத்தை) 7:38. முன் சென்றதை விட 43:48. |
اُخْتَيْنِ | உஃக்தய்னி(1) | 28. இரு சகோதரிகளை 4:23. |
اَخَوٰتُكُمْ | அஃகவாதுகும்(3) | 29. உங்கள் சகோதரிகள் 4:23(2) 24:61. |
اِخْوَانِهِنَّ | இஃக்வானிஹின்ன(4) | 30. கணவர்களின் சகோதரர்கள், 24:31. சகோதரர்களின் 24:31. அவர்களின் சகோதரர்கள்,33:55. அவர்களது சகோதரர்களின் 33:55. |
Comments