ஷிர்க் எதில் உள்ளது ? மவ்லுாதின் மூலத்திலா? மவுலுாதின் மொழி பெயர்ப்பிலா?
பிமன்ஃஹல்லல்ஹரம் என்பதற்கு ஹரமில் (மதினாவில்) அடங்கி இருக்கிறாரே அவரிடம் (நபியிடம்) என்ற மொழி பெயர்ப்பு சரியா? என்று மவ்லுாது சம்பந்தமாக கேள்விகளும் விமர்சனங்களும் வந்துள்ளன.
https://mdfazlulilahi.blogspot.com/2020/12/blog-post.html
வஅன் முத்இஹிம் பிதப்ஹின் அளீம்
பெரிய (ஆடாக) அறுத்து உணவு தந்தவர்களுக்கும்.
வமன் கலா தஆமஹும் வஹுவல் பிரியாணி வல் முத்இமீன லகும் பிதீபி கரன்புல்
கிராம்பு வாசனையுடன் பிரியாணி ஆக்கி தந்தவர்களுக்கும் சோபனம் உண்டாகட்டும்
வல் முளீபி அத்ய பின்னிஅமி
சுவையான உணவு பொருட்களை விருந்தாக சமைப்பவர்களுக்கு அருள் கிடைக்கட்டும்.
வமன்ஸகாஹும் கஃஹ்வதல் கரமி
சூடான காபி தந்தவர்களுக்கும்
வல் முத்இமில் மித்ரார்
தொடர்ந்து விருந்தளிப்பவர்களுக்கு அருள் கிடைக்கட்டும்.
இப்படி மவுலிது பைத்தில் உள்ளதையே நாம் சுட்டிக் காட்டி 30 ஆண்டுகளுக்கு முன் இணைப்பில் உள்ள நோட்டீஸ் போட்டு உள்ளோம்.
இன்றுள்ளவர்களாக இருந்தால், பருத்திப் பால், உளுந்தம் பால்,கிரில்டு சிக்கன் தந்தவர்களுக்கும் அருள் கிடைக்கட்டும் என்று எழுதி இருப்பார்கள்.
சுப்ஹான மவ்லிதின் முதல் பைத்தான யானே ... பீ.... ஸா.... லா...மா...லைக்கும் என்ற ராகத்தில் பாடப்படும் பைத்திலும் மூன்றாம் பைத்திலும் உள்ள அல்லாஹ்வின் கலாமுடன் மோதும் ஷிர்க்கான வார்த்தைகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி இருந்தோம்.
அதை ஒட்டி வந்துள்ள விமர்சனங்கள் தான் தலைப்பில் உள்ளவை.
பிமன்ஃஹல்லல்ஹரம் என்பதற்கு புனிதமிக்க ஹரம் ஷரீபில் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் என்ற மொழி பெயர்ப்பு இலக்கணப்படி தவறு.
பிமன் என்பதில் உள்ள ப வுக்கு மூலமாக அல்லது காரணமாக அல்லது துணையாக வைத்து என்றே அரபு இலக்கணப்படி மொழி பெயர்ப்பு வர வேண்டும்.
நபியின் மூலமாக அல்லது அவரின் காரணமாக அல்லது அவரை துணையாக அதாவது வஸீலாவாக வைத்து.
பாவத்தில் திளைத்து இருப்பவனே தவ்பாச் செய் என்றே அரபு இலக்கணப்படி பொருள் வரும் என்கிறார் விமர்சகர்.
(வஸீலாகவாக வேண்டினாலும் அதுவும் தவறுதான். வஸீலா என்பது அமல்களைக் கொண்டு தான். ஆட்களை கொண்டு என்பதும் குர்ஆனுடன் (5:35.) மோதி போர் செய்யும் நிலை தான்.
இது 1986 கோட்டாறு முனாழாராவில் நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்று. காயல்பட்டிணம் ஸாஹிப் தம்பி, கடையநல்லுார் கலந்தர் மஸ்தான், ஷப்பீர் அலி என எல்லாரிடமும் அவர்களது மாணவர்களான மஹ்ழரிகளே கேள்வியாகக் கேட்டு உறுதி செய்து விட்ட ஒன்று. தேவைப்பட்டால் அதையும் தனித் தலைப்பாக விளக்குவோம் இன்ஷாஅல்லாஹ்)
பாவ மன்னிப்புக் கேள், அருளை எதிர் பார் என்பதெல்லாம் அல்லாஹ்விடத்தில் தான்.
யார் மூலமாக? என்றால் பிமன்ஃஹல்லல்ஹரம். ஹரம் ஷரீபில் பொற் பாதம் பதித்து விட்டாரே அவர் மூலமாக என்ற மொழி பெயர்ப்பே சரி.
நீங்கள் விமர்சிப்பது அரபு மொழியில் உள்ள மவ்லிது அரபு மூலத்தையா? தமிழில் உள்ள மொழி பெயர்ப்பையா?
மொழி பெயர்த்தவர்கள் மூளை ஷிர்க்கில் மூழ்கி திளைத்ததாக இருக்கலாம். அரபியில் எழுதியவர் எண்ணம் எப்படி இருந்தது உங்களுக்குத் தெரியுமா?
அவர் எண்ணத்தை ஏன் தோண்டித் துருவி ஷிர்க் முத்திரை குத்துகிறீர்கள் என்றும் விமர்சகர் கூறி உள்ளார்.
ஏற்கனவே மூபிகா பற்றி நமது மொழி பெயர்ப்பு தவறு என்று வாதிட்டார்கள். அவர்களுக்கு, ஜ.உ.சாவின் மவ்லிது ஆதரவாளரால் மொழி பெயர்த்து, ஜ.உ.சாவின் மூத்த மவுலவிகளின் அங்கீகாரத்துடன் வந்த புத்தகத்தையே ஆதாரப் பதிலாகப் போட்டு இருந்தோம். அதை நினைவூட்டிக் கொள்கிறோம்.
இலக்கணப்படி தான் மொழி பெயர்ப்பு வர வேண்டும் என்பதற்கு ஏற்கனவே, மொழி முந்தையதா? இலக்கணம் முந்தையதா?
இருந்தாலும் சிறிய விளக்கம் தருகிறோம்.
சொன்னார் என்பது இறந்த காலம்.
சொல்கிறார், சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது நிகழ் காலம்.
சொல்வார் என்பது வருங்காலம் . இதுதான் இலக்கணம்.
ஏதாவது ஒரு ஹதீஸை சொல்லும்போது அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்பது தான் இலக்கணப்படி சரியானதாகும்.
இன்றைய பேச்சாளர்களில் பிரபலமானவர்களே. ரசூலுல்லாஹ் சொன்னதை சொல்லும்போது, அல்லாஹ்வின் துாதர் அவர்கள் சொல்வார்கள் என்று வருங்கால வினையாக சொல்லிக் காட்டுகிறார்கள்.
சொல்வார்கள் என்பது இலக்கணப்படி வருங்காலச் செயலாக இருந்தாலும். பேச்சாளர்கள் எண்ணப்படி - கொள்கைப்படி கடந்த காலச் சொல்லாகவே பொருள் கொள்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் பேச்சு வழக்கில் நமக்கு என்றால் இணைந்த சொல். எங்களுக்கு என்றால் பிரிவினைச் சொல்.
மற்ற நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் எங்களுக்கு என்பது இணைந்த சொல்லாக உள்ளது. ஆக பேச்சு வழக்கு, கொள்கை அடிப்படையிலேயே எண்ணங்கள் இருக்கும்.
மவ்லுாதை அரபியில் எழுதியவர் கொள்கைப்படி அவரது எண்ணம் இருந்தது. இதற்கு பிமன்ஃஹல்லல்ஹரத்திற்கு முன் பின் உள்ள பைத்துகளே ஆதாரங்களாக உள்ளன. ஆக மவ்லுாதை எழுதியவரின் அந்த மூலக் கொள்கையே விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஓடி வாருங்கள் ஒரு கோடி பரிசு என்று அறிவித்தவர்கள் ஓடி விட்டார்கள்.
மவ்லுாதில் ஷிர்க் இருக்கிறது என்று நிரூபிப்பதில் இருந்து பின்வாங்கி விட்டார்கள்.
இதுதுான் மவ்லிது ஆதரவாளர்களால் பரவலாக பரபரப்பாக பரப்பப்படுகிறது.
இந்த நிலையில், பின்வாங்கி விட்டார்களா?
பின்னால் வாங்கி விட்டார்களா? என்பதை அல்லாஹ்வே அறிவான். என்றாலும்,
எனது அனுபவம் என்னிடம் பின்னால் வாங்கியவர் பின்னால் வாங்கி விட்டார் என்றே என்னை நம்பச் சொல்கிறது.
மவ்லிதை விமர்சித்த லுஹா அவர்கள் மவுலுாது ஓதப் போன இடத்தில்,
விடலைப் பிள்ளைகளிடம் கடலை போட்டது.
தஞ்சாவூர் பெண்கள் லட்சணமாக இருப்பார்கள், பார்க்க ரொம்ப அழகாக இருப்பார்கள் என்றது
மதரஸா மாணவன் மொட்டை அடித்தும் சைட் அடிப்பான் அந்த பிகரைப் பார் என்பான் என்று லுஹா பேசி உள்ளது. லுஹாவுடைய அனுபவமாகும்.
Comments