பெயர் கூறி அழைத்து ஸலாம் சொல்வது மரியாதையா? அவ மரியாதையா?
ஸலாஹுத்தீனே! ஸைபுத்தீனே! சதீதுத்தீனே! காஜாவே! அலாவுதீனே! என்று அழைத்து ஸலாம் சொல்லலாமா?
அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களை யா முஹம்மத் (ஏ முஹம்மதே! - ஓ முஹம்மதே!) என்று அழைப்பதை அல்லாஹ் அனுமதித்து உள்ளானா?
தாங்கள் அறியாத நிலையில் தங்கள் அமல்கள் அழிந்து விட வேண்டும்
https://mdfazlulilahi.blogspot.com/2020/12/blog-post_13.html
----------
மவுலிது பற்றி நாம் எழுதியதற்கு எதிராக வந்துள்ள விமர்சனத்தை முதலில் பார்ப்போம்.
முதல் பைத்து எது என்று கூட தெரியாமல் மவ்லிதை விமர்சிப்பவரே!
சுப்ஹான மவ்லிதின் முதல் பைத்து அஸ்ஸலாமு அலைக்க ஸைனல் அன்பியாயி என்பது தான்.
அதனால்தான் சவால் விட்டவர் அஸ்ஸலாமு அலைக்க .. என்பதிலிருந்து சவால் விட்டார்.
நீங்களோ யானபீஸா பைத்தை முதல் பைத்து என்று அரைகுறையாக விளங்கிய எழுதி உள்ளீர்கள்.
இது மவ்லிது ஆதரவாளரிடமிருந்து வந்துள்ள விமர்சனம்.
மவ்லிது ஆதரவாளரர்களான அப்பாவி மக்கள் மவ்லிது பற்றி சரியாக விளங்கவில்லை என்ற நமது குற்றச்சாட்டை மேற்கண்ட விமர்சனம் உறுதிபடுத்தி உள்ளது.
யானா... பீ.... ஸா....லா ... மா..லைக்கும் என்ற ராகத்தில் பாடப்படும் பைத்தே முதல் பைத் என்பதற்கு மவ்லிது கிதாபுகளும் மவ்லிது மவ்லவிகள் வெளியிட்ட புத்தகங்களுமே ஆதாரமாக உள்ளன.
இருந்தாலும் அப்பாவி மக்களால் முதல் பைத்து என்று விளங்கி வைக்கப்பட்டுள்ள , அவர்கள் சவால் விட்ட ஸலாம் பைத்தில் இருந்தே பார்ப்போம்.
اَلسَّلاَمُ عَلَيْكَ احمد يا محمد
اَلسَّلاَمُ عَلَيْكَ طاها يا محمد
அஸ்ஸலாமு அலைக்க அஹ்மது யா முஹம்மது
அஸ்ஸலாமு அலைக்க தாஹா யா முஹம்மத்
என்று ஸலாம் பைத்திலும்
யா ஹபீபி யா முஹம்மத்
யா முஅய்யத் யா முஹம்மத் என்று யானா... பீ.... ஸா....லா ... மா..லைக்கும் பைத்திலும் உள்ளது.
யா முஹம்மத் என்றால் என்ன அர்த்தம்?
ஓ முஹம்மது - ஏ முஹம்மதே! என்று அர்த்தம்.
இந்த மவுலிதுகளைத்தான் மரியாதையுடன் நபிகள் புகழ்பாடி ஸலாம் சொல்கின்றன என்று ஜ.உ.சாவின் மூத்த உலமாக்ககளும் கூறி வருகிறார்கள்.
யா முஹம்மத் ஓ முஹம்மதே! ஏ முஹம்மதே! என்பதுதான் நபியை மரியாதையுடன் புகழும் முறையா? ஸலாம் சொல்லும் வழியா? இது புகழா? இகழா?
புகழ் என்றால்,
யா ஸலாஹுத்தீன் ஏ ஸலாஹுத்தீனே!)
யா ஸைபுத்தீன் (ஏ ஸைபுத்தீனே!)
யா சதீதுத்தீன் ஏ (சதீதுத்தீனே!)
யா காஜா (ஏ காஜாவே!)
யா அலாவுதீன் (ஏ அலாவுதீனே!) என்று மவுலிது உலமாக்கள் பெயரைக் கூறி கூப்பிட்டு ஸலாம் சொல்லிப் பாருங்கள். முகம் கருத்து விடும். அவர்கள் முகத்திலேயே இது புகழா? இகழா? என்ற பதில் வெளிப்பட்டு விடும்.
இவர்களை பெயர் சொல்லி அழைத்தால் மரியாதை இல்லாத தரம் தாழ்ந்த செயல். பெயரைச் சொல்லி அழைப்பது புகழ் கிடையாது என்பார்கள்.
பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது வேறு, பெயரைக் கேட்டால் பதில் சொல்வது வேறு. ஜ.உ.சாவின் தலைவர் பெயர் என்ன என்று கேட்டால் காஜா என்று சொல்லலாம். கூப்பிடும் போது யா காஜா - ஏ காஜாவே என்று கூப்பிடக் கூடாது என்று வியாக்கியானம் பேசுவார்கள்.
இறைத் துாதரை மட்டும் இவர்கள் ஏ முஹம்மதே என்ற பொருள்பட யா முஹம்மத் என்று மரியாதை இல்லாமல் தரம் தாழ்ந்து அழைப்பார்கள். அதை புகழ் பா என்றும் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களை யா முஹம்மத் என்று அழைப்பதை அல் குர்ஆன் மூலம் அல்லாஹ் ஹரமாக்கி (தடை செய்து) உள்ளான்.
லா தஜ்அலுா துஆ அர்ரசூலி பைனகும் க துஆஇ பஃழிகும் பஃழா
لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! (24:63) என்று குர்ஆனில் அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான்.
அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக மவுலிது மூலம் யா முஹம்மத் - ஏ முஹம்மதே என்று அழைப்பது அல்லஹ்வுடன் மோதும் செயலா இல்லையா? அறிவுள்ளவர்களே சிந்திப்பார்கள்.
மவுலிதின் ஸலாம் பைத்து மற்றும் யானபீ.. பைத்து மூலம் நபிக்கு . ஸலாம் தானே சொல்கிறோம். ஸலாம் சொல்வது வணக்கம் தானே! என்கிறார்கள்.
ஸலாம் சொல்வதும் வணக்கம் தான் மாற்றுக் கருத்து இல்லை. ஒருவருக்கு ஸலாம் சொல்வது என்றால் இயல்பாக எப்படி சொல்வோம்?
ஒரு தடவை சொல்வோம். கவனிக்கவில்லை என்றால் இரண்டாவது தடவை சொல்வோம். பதில் வரவில்லை என்றால் மூன்றாவது முறையும் சொல்வோம். ஒரே நேரத்தில் ஒருவருக்கு 33 தடவை ஸலாம் சொல்வோமா?
ஒரே இடத்தில் இருந்து கொண்டு 34 தடவை யும் பிறகு 4 தடவையும் நபிக்கு ஸலாம் சொல்வதை வணக்கம் என்று சொல்லும் உலமாக்களைப் பார்த்து.
அமைப்புகளுக்கு தலைவரே அஸ்ஸலாமு அலைக்கும்
உலமாக்களுக்கும் தலைரே அஸ்ஸலாமு அலைக்கும்
திருவியில் இமாமாக இருந்தவரே அஸ்ஸலாமு அலைக்கும்
கடைத் தெருப் பள்ளியில் இமாமாக இருந்தவரே அஸ்ஸலாமு அலைக்கும்
பெரிய பள்ளி கதீபே அஸ்ஸலாமு அலைக்கும்
சென்டு போட்டு இருப்பவரே அஸ்ஸலாமு அலைக்கும்
ஸ்பிரே அடித்து மணமாக இருப்பவரே அஸ்ஸலாமு அலைக்கும்
அழகாக இருப்பவரே அஸ்ஸலாமு அலைக்கும்
இப்படியாக ஒரே நேரத்தில் 38 தடவை 38 விதமாகப் புகழ்ந்து ஸலாம் சொன்னால்.
மவுலிது உலமாக்களும் அவர்களது ஆதாவாளர்களும் 38 தடவையும் புன்முறுவலுடன் பதில் ஸலாம் சொல்வார்களா? என்னடா கிண்டலா பண்ணுகிறாய் என்று எரிந்து விழுவார்களா?
இப்படி ஸலாம் சொல்பவர்களை பார்த்து லுாசு, பைத்தியம், கிறுக்கன் என்று கூறி அடித்து விரட்டுவார்களா?
அஸ்ஸலாமு அலைக்க ஸைனல் அன்பியாயி என்றும்
யானா... பீ.... ஸா....லா ... மா..லைக்கும் என்றும் எப்படி சப்தம் போட்டும் ராகத்துடனும் ஸலாம் சொல்கிறார்களோ அது போல் இவர்களிடம் போய் சப்தங்களை உயர்த்தியும் ராகத்துடனும் ஸலாம் சொன்னால் என்ன சொல்வார்கள்?
மரியாதை என்பார்களா? அவ மரியாதை என்பார்களா?
சப்தம் இடுவது பற்றி அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்?
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் நபியிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! என்கிறான்.
அப்படி சப்தம் இட்டால் என்ன நடக்கும்? அதையும் அல்லாஹ்வே சொல்லி உள்ளான்.
நீங்கள் அறியாத நிலையில்
உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
தாங்கள் அறியாத நிலையில் தங்கள் அமல்கள் அழிந்து விட வேண்டும்
நபியுடைய கட்டளைக்கு மாறுசெய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.(24:63) இதுவும் அல்லாஹ்வின் எச்சரிக்கை தான்.
அல்லாஹ்வின்
தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள்வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ்
பரிசுத்தப்படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது.
(நபியே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில்
அதிகமானோர் விளங்காதவர்கள்.
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே
இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே! -
(நபியே!) எவர்கள் (நீங்கள் வசித்திருக்கும்) அறைக்கு முன்பாக நின்று கொண்டு உங்களை(க் கூச்சலிட்டு)ச் சப்தமிட்டு அழைக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களே! - ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்
Comments