2021 தினசரி மற்றும் மாத காலண்டர்கள் குர்ஆன் ஹதீஸ்களுடன் கூடியது இலவசமாக வரப் பெற்றோம்.

 இணைப்பில் உள்ள  குர்ஆன் ஹதீஸ்களுடன் கூடிய  2021 தினசரி  மற்றும் மாத  காலண்டர்களை இலவசமாக வழங்கிய 

 
நெல்லை மாவட்ட தேசிய தவ்ஹீது கூட்டமைப்பு NTF
மேலப்பாளையம் தவ்ஹீத் பேரவை 
திருநெல்வேலி டவுண்  தவ்ஹீத் பேரவை 
நெல்லை பேட்டை தவ்ஹீத் பேரவை  ஆகியவர்களுக்கு நன்றி










காலண்டரில் இடம் பெற்றுள்ள குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள்.

அவனே  காலைப்  பொழுதை ஏற்படுத்துபவன்இரவை அமைதிக் களமாகவும்,  சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான்இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

அல்குர்ஆன் 6:96

 

 

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும்சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான்தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான்அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

அல்குர்ஆன் 10:5

 

 

 

வானங்களையும்பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவைஇதுவே நேரான வழி. (புனிதமானஅம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!

அல்குர்ஆன் 9.36

 

சூரியனும்சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

அல்குர்ஆன் 55:5

 

இரவையும்பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம்உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும்ஆண்டுகளின் எண்ணிக்கையையும்காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம்ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.

அல்குர்ஆன் 17:12

 

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.

திரு குர்ஆன் 6:108

 

ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான்நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான்என் கையிலே ஆட்சியுள்ளதுஇரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : புகாரி 4826

 

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.

நூல் : அஹ்மத் 9171

 

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 4137


காலத்தை ஏசாதீர்கள்.
6181. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில் தான் இரவுபகல் (இயக்கம்) உள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.203
Book : 78


6182. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
திராட்சையை ('கண்ணியமானது' எனும் பொருள் கொண்ட) 'அல்கர்ம்' என்று பெயரிட்டழைக்காதீர்கள். 'மோசமான காலமே!' என்று (காலத்தை ஏசிக்) கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 

பாடம் : 1 காலத்தை ஏசுவதற்கு வந்துள்ள தடை.

காலத்தை திட்ட வேண்டாம்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் Book : 40   No: 4519



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்;காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). நானே இரவு பகலை மாறி மாறி வரச்செய்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் Book : 40   No: 4520



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்; "காலத்தின் கைசேதமே!" என்று அவன் கூறுகிறான். ஆகவே, உங்களில் ஒருவர் "காலத்தின் கைசேதமே!" என்று கூற வேண்டாம். ஏனெனில், நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன். (பூமியைச் சுழலவிடாமல் நிறுத்திவிடுவேன்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் Book : 40   No: 4521


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் "காலத்தின் கைசேதமே!" என்று கூற வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் Book : 40   No: 4522


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் Book : 40   No: 452





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு