2:90 வக்கிரகம் , அனுக்கிரகம் என்றால் என்ன?

அன்Fபுஸஹும்   என்பதற்கு  தங்களை -மனசாட்சியை -ஆன்(த்)மாக்களை  என்றும் 


இஷ்தரவ்  என்பதற்கு விற்றார்கள் -  வாங்கிக்கொண்டார்கள்  -ஈட்டிக் கொண்டது  என்றும்

Fபபாஃஊ   என்பதற்கு எனவே ஆளானார்கள். ஆகவே -ஆளாகிவிட்டார்கள் உள்ளாகி விட்டார்கள். சார்ந்தார்கள்   திரும்பினார்கள்,  என்றும் 

பஃக்யன் என்பதற்கு பொறாமை-  காழ்ப்புணர்ச்சி (ப்பட்டு  - கொண்டு) - வக்கிரகமாக என்றும் மொழி பெயர்த்துள்ளார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/12/290.html




கிரஹம் என்பது வட மொழிச் சொல்.  தமிழை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரால் ஹ வை மட்டும் வக்கிரப்படுத்தி(பின் தள்ளி) விட்டு கிரகம் என்று  பயன்படுத்தி வருகிறார்கள். காரணம் பகுத்தறிவு பகலவன்கள் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ் தலைவர்கள் குடும்பங்களில்  குடி கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றான ஜோதிடம் தான்.


கோல்கள் (கிரகங்கள்) பின்னோக்கி செல்வதில்லை.  இது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம்.

சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன 36:40. 

குர்ஆன் கூறும் இந்த உண்மைக்கு வக்கிரமானதே (எதிரானதே) வக்கிர நிலை என்பது 

ஜோதிட கொள்கையில்  ஒரு கிரகம் பின்னோக்கி செல்வதை குறிக்கிறது. 

ஜோதிட கொள்கைப்படி ஒரு கிரகம்  வானவெளியில் சில சமயங்களில் பின்புறமாகச்  (reverse). சுற்றும்

உதரணமாக செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் எப்போது ஓடு பாதையில் 90 டிகிரிகளுக் குள்ளேயே தங்கள் சுழற்சியை மேற்கொள்ளும். 


தன்னுடைய சுற்றும் வேகம் அந்த விதிக்கப்பட்ட 90 டிகிரிகளைக் கடக்கக்கூடிய நிலைமை ஏற்படுமானால், அது தன்னுடைய வேகத்தைக் குறைத்து ஏற்படப்போகும் இடை வெளியைச் சரி செய்ய பின்புறமாகச் சுழலத் துவங்கும்.

பிறகு தொடரும் கிரகங்கள் அந்தச் சுழற்சி இடைவெளிக்குள் வந்த பிறகு மீண்டும் முன்புறமாகச் சுழலத் துவங்கும். அந்தப் பின்சுற்றல்தான் வக்கிரம் எனப்படும்.

அனுக்கிரகம்  என்பது இந்து மத கொள்கைப்படி கடவுளின் ஐந்து தொழில்களில் ஒன்று.


எனவே குர்ஆனுக்கு எதிரான சோதிடக் கலையில் அதன் கொள்கையில் உள்ள வக்கிரகம், அனுக்கிரகம்  போன்ற பிறமத  சோதிட சொற்களை குர்ஆன் தர்ஜமாக்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.



Fபழல்
அருள் -  அருட்கொடை -கிருபை -கருணை - அனுக்கிரகம் என்றும் அவரவர் அறிந்த தமிழில்  மொழி பெயர்த்துள்ளார்கள். இது போன்றவற்றை ஆய்வுடன் படியுங்கள். அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்.

 


بِئْسَمَا اشْتَرَوْا بِهِ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا بِمَا أَنزَلَ اللَّـهُ بَغْيًا أَن يُنَزِّلَ اللَّـهُ مِن فَضْلِهِ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ فَبَاءُوا بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍ ۚ وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُّهِينٌ ﴿٩٠﴾


بِئْسَمَا - பிஃஸமா
கெட்டது எது   - மிகவும் கெட்டதாகிவிட்டது - அது கெட்டது -மிக மிக மட்டமானது - தீயது

اشْتَرَوْا -  இஷ்தரவ்  

விற்றார்கள் -  வாங்கிக்கொண்டார்கள்  -ஈட்டிக் கொண்டது 

بِهِ பிஹி
அதற்கு(ப் பகரமாக) - அதை


أَنفُسَهُمْ -அன்Fபுஸஹும்
 தங்களை -தங்கள் (மனசாட்சியை - ஆ(ன்)த்மாக்களை 

 اَنْ -அன்
அல்லது

أَن يَكْفُرُوا அ(ன்)ய்யக்Fபுரூ  
அல்லது நிராகரித்து - புறந்தள்ளி 

بِمَا أَنزَلَ - பிமா அன்Zஸல
அருளியதில் -  அருளியதை - எதை இறக்கினான் - இறக்கியதற்குப் பகரம் - 

اللَّـهُ - அழ்ழாஹ் 

بَغْيًا பஃக்யன்
பொறாமை-  காழ்ப்புணர்ச்சி (ப்பட்டு  - கொண்டு) - வக்கிரகமாக


أَن يُنَزِّلَ அ(ன்)ய்யுனZஸில 
அருளியதை - இறக்குவதை -

اللَّـهُ அழ்ழாஹ் 

مِن மின்
இருந்து


فَضْلِ -Fபழ்லி
அருள் -  அருட்கொடை -கிருபை - கருணை - அனுக்கிரகம்
هِ -ஹி
தன் - அவன்

 مِنْ فَضْلِهٖ -மின் Fபழ்லிஹி 
அவன் அருளியதில் - அருளியதற்காக - 




عَلَىٰ - ஃஅலா 
மீது

مَن - மன்
எவர்

يَشَاءُ - யஷாஃஉ 
நாடுகிறான்

مِنْ மின்
இருந்து
عِبَادِ - ஃஇபாதி
هِ -ஹி
தன் - அவன்

عِبَادِهِ - ஃஇபாதிஹி
 தன் (அவன்)அடியார்கள்


 مِنْ عِبَادِهٖமின்ஃஇபாதிஹி 
தன் அடியார்களில் - 
-------------------

فَبَاءُوا Fபபாஃஊ 
 எனவே ஆளானார்கள். ஆகவே சார்ந்தார்கள் -ஆளாகிவிட்டார்கள்

 بِغَضَبٍ - பிகழபின் 
கோபத்திற்கு -கோபத்தில் - சினத்திற்கு



عَلَىٰ - அலா 
மேல்

غَضَبٍ ஃகழபின் 
கோபம்

وَلِلْكَافِرِينَ - வலில் காFபிரீன 
 நிராகரிப்பாளர்களுக்கு

عَذَابٌ - ஃஅராபுன் 
வேதனை - தண்டனை
مُّهِينٌ -முஹீ(னு)ன்
இழிவு தரக்கூடியது

தமிழ் நடையில் மொழிப்பெயர்ப்புகள் :

அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனை இருக்கிறது. -(PJதொண்டி)

 

தன் அடியார்களுள், தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காகக் காழ்ப்புணர்ச்சி கொண்டு, அல்லாஹ் அருளியதையே மறுதலித்துத் தங்கள் மனசாட்சியை விற்று, அவர்கள் ஈட்டிக் கொண்டது மிக மிக மட்டமானதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு உள்ளாகி விட்டார்கள். (இத்தகைய) இறைமறுப்பாளர்களுக்கு இழிவான தண்டனை உண்டு. - அதிரை ஜமீல்)



அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளில் இருந்து இறக்குவதைப் பொறாமைப்பட்டு அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நிராகரித்து அவர்கள் தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது ( மிகக் ) கெட்டது.

கோபத்திற்கு மேல் கோபத்தில் அவர்கள் சார்ந்தார்கள். 

நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரக்கூடிய வேதனையுண்டு (கடையநல்லுாரார்)


அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட் கொடையை இறக்கியதை பொறாமை கொண்டு நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்றுவிட்டது மிகவும் கெட்டதாகிவிட்டது, இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு. K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)



தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு. - ஜான் டிரஸ்ட் 




(இந்த குர்ஆனை தங்கள்மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன்னுடைய கிருபையை இறக்கி வைத்ததைப் பற்றிப் பொறாமைக் கொண்டு, அல்லாஹ் இறக்கி வைத்த இதையே நிராகரிப்பதன் மூலமாய் அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்துவிட்டார்கள். ஆதலால் அந்நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)



 

எதனைக்கொண்டு அவர்கள் மன ஆறுதல் பெறுகின்றார்களோ அது எத்துணைக் கெட்டது! (அதாவது) அல்லாஹ் இறக்கியருளிய வழிகாட்டலை அவர்கள் நிராகரிப்பது தன் அடியார்களில் தான் நாடுகின்ற ஒருவர் மீது தனது கருணையை (வஹி மற்றும் தூதுத்துவத்தை) அல்லாஹ் இறக்கியருளுவது குறித்துக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதனை அவர்கள் நிராகரிப்பது எவ்வளவு கெட்டது! ஆகவே (இப்போது) அவர்கள் கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். மேலும் இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இழிவுமிக்க தண்டனை உண்டு.- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


 

(இந்தக் குர் ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர் மீது தன்னுடைய பேரருளிலிருந்து இறக்கி வைத்ததற்காகப் பொறாமை கொண்டு அல்லாஹ் இறக்கிய (இ)தையே நிராகரிப்பதன் மூலம் எதற்கு பகரமாக தங்களை விற்று விட்டார்களோ அது (மிகக்) கெட்டது, அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குமேல் கோபத்திற்குரியவர்களாகத் திரும்பினார்கள், நிராகரிப்போர்களுக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு.-(அல்-மதீனா அல்-முனவ்வரா)










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு