2:89 உதவியா? வெற்றியா? தீர்ப்பா? முடிவா? திறப்பா?
துணை எழுத்தே இல்லாத திரு குறள் எது?
துணை எழுத்துக்கள் அதிகமாக உள்ள திரு குறள் எது?
இது போன்ற கேள்வி பதில் போட்டியில் முதல் பரிசுப் பெற்றாள். முஸ்லிம் பெண்.
அதே முஸ்லிம் பெண்ணிடம் திரு குர்ஆனிலிருந்து கேள்வி கேட்டார்கள். அப்பொழுது அந்த முஸ்லிம் பெண் பேந்தப் பேந்தப் முழித்தாள்.
இதுதான் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் நிலையாக உள்ளது.
https://mdfazlulilahi.blogspot.com/2020/12/289.html
நாம் பார்க்க உள்ள வசனம் 2:89. இது துணை(இடை)ச் சொற்கள் அதிகமாக இடம் பெற்றுள்ள வசனங்களில் ஒன்றாகும்.
இதில் வலம்மா, Fபலம்மா, லிமா, மா, மின், மஃஅ, வகானுா, ஃஅல, அல்லதீ(ரீ)ன, பிஹி, போன்ற துணை(இடை)ச் சொற்களும் Fப என்ற தனி எழுத்தும் இடம் பெற்றுள்ளன.
இவை இடத்துக்கு தக்கவாறு பொருள் தரும்.
இந்த வசனத்தில் உள்ள Fபவுக்கு
எனவே - ஆகவே- இவ்வாறு - இப்படி - இத்தகைய -
என்று அவரவர் ஆய்வுபடி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.
எல்லா இடங்களிலும் இவையே பொருள் என்பது அல்ல. முன்னால் உள்ள வாசகத்தைப் பொருத்து இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் வரும். அது போல் தான் துணை(இடை)ச் சொற்களுக்கும் பொருள் வரும்.
-----------
இந்த வசனத்தில் இரண்டு இடங்களில் ஃஅலா என்பது இடம் பெற்றுள்ளது. ஃஅலா என்பதற்கு
மீது - மேலே
என்றே பெரும்பாலான இடங்களில் மொழி பெயர்ப்பு செய்து இருப்பார்கள்.
இந்த வசனத்தின் இறுதியில் உள்ள ஃஅலல் காFபிரீன என்பதில் உள்ள ஃஅலா என்பதற்கு மீது என்று வழக்கம் போல் மொழி பெயர்த்துள்ளார்கள்.
அதே ஃஅலா இந்த வசனத்தின் இடையில் உள்ள ஃஅலல்லதீ(ரீ)ன கFபரூ என்பதிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த இடத்தில் உள்ள ஃஅலா என்பதற்கு வழக்கம் போல் மீது என்று பெரும்பாலானவர்கள் மொழி பெயர்க்கவில்லை.
எதிராக -
என்றே மொழி பெயர்த்துள்ளார்கள்.
முன்னால் உள்ள வாசகத்தைப் பொருத்து இடத்துக்கு தக்கவாறு பல பொருள்கள் ஃஅலா வுக்கும் அது போன்ற துணை சொற்களுக்கும் வரும்.
இது போன்றவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
--------------- ----
அல்லாஹ்விடமிருந்து
ஒரு வெற்றி
فَعَسَى اللّٰهُ اَنْ يَّاْتِىَ بِالْفَتْحِ -
Fபஃஅஸழ்ழாஹு அ(ன்)ய்யஃதிய பில் Fபத்ஹி
அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்; 5:52.
சமீபத்திய வெற்றி
نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَـتْحٌ قَرِيْبٌ -
நஸ்ருன் மினழ்ழாஹி வFபத்ஹுன் ஃகரீ(புன்)ப்
அல்லாஹ்விடமிருந்து
உதவியும், அருகில் உள்ள வெற்றியுமாகும்.
மேற்கண்ட 4:141. 5:52. 48:1, 18, 27. 61:13 ஆகிய வசனங்களில் உள்ளபடி வெற்றி என்று மொழி பெயர்த்துள்ளதாக கூறுகிறார்கள்.
Fபத்ஹு என்கிற வார்த்தைக்கு வெற்றி என்பது மட்டும் பொருள் அல்ல.
Fபத்ஹு என்ற மூல(வேர்)ச் சொல்லிலிருந்து வந்துள்ள வார்த்தைகள் குர்ஆனில் சுமார் 33 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவை
உதவி, தீர்ப்பு, முடிவு, திறப்பு
ஆகிய பொருள்களிலும் வந்துள்ளன.
யஸ்தFப்திஹுன என்பது போல் உள்ளது தான் 14:15.ல் இடம் பெற்றுள்ள
وَاسْتَفْتَحُوْا -வஸ்தFப்தஹு என்பதும்.
14:15.ல் உள்ள வஸ்தFப்தஹு என்பதற்கு உதவியை (நாடினார்கள் -கோரினார்கள்- தேடினார்கள்) என்று மற்றவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள்.
பீ.ஜே. அவர்கள் அந்த இடத்துக்கு பொருத்தமாக
(தூதர்கள்) வெற்றி பெற்றனர்.
என்று மொழி பெயர்த்துள்ளார்.
வெற்றி என்பது சுருக்கமான, குறுகிய, குறிப்பிட்ட பொருள் தரும் சொல்.
உதவி என்பது பரந்து விரிந்த பொருள் தரக் கூடிய பொதுவான சொல்.
அதனுள் வெற்றி அடக்கம்.
2:89ல் கூறப்பட்டுள்ள காபிர்களுக்கு எதிராக உதவி என்பது இருந்தால் தானே வெற்றி என்பது கிடைக்கும். ஆகவே இந்த இடத்தில்,
மறுப்போருக்கு (காபிர்களுக்கு) எதிராக உதவி தேடி வந்தனர்.
என்ற மொழி பெயர்ப்பே பொருத்தமானதாகும்
இந்த வசனத்தில் உள்ள வலம்மா, வகானுா ஆகிய இரண்டிலுமாக 2 வாவுகள் உள்ளன.
சிலர் இரண்டுக்கும் சிலர் ஒன்றுக்கு மட்டும் மேலும் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி, அதிரை ஜமீல், ஜான் டிரஸ்ட், K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, உமர் ஷரீப் போன்றவர்கள் இந்த வசனத்தில் உள்ள இரண்டு வாவுகளுக்கும் P,ஜைனுல் ஆபிதீன் உலவி மாதிரி மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்.
இனி குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை
மறுத்தார்கள் - நிராகரித்தார்கள் - (அவ நம்பிக்கை)
عَلَى الَّذِينَ كَفَرُوا -ஃஅலல்லதீ(ரீ)ன கFபரூ
فَ - Fப
எனவே - ஆகவே- இவ்வாறு(செய்த) - இத்தகைய
ஏகஇறைவனை) மறுப்போருக்கு எதிராக அவர்கள் இதற்கு முன்
உதவி தேடி வந்தனர். அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து
அவர்களுக்கு வந்தபோது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது25 அவர்களிடம்
வந்தபோது, அதை (ஏற்க) மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது.6
- (PJதொண்டி)
https://www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-explanations/25-muhamathu-nabiyai-patri
அவர்களிடம் உள்ள முன்மறையை
உறுதிப் படுத்தக் கூடிய(இந்தக் குர்ஆன் என்ற) இறைமறை அவர்களுக்கு
அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதற்கு முன் இறை மறுப்பாளர்களை வெற்றி கொள்வதற்காக இதை
(அருளுமாறு அல்லாஹ்விடம் யூதர்கள்) வேண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வேண்டிக்
கொண்ட இறைமறை அவர்களிடம் வந்த போது, அறிந்தே அதை ஏற்க
மறுத்தனர். இவ்வாறு மறுத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி விட்டது. (அதிரை ஜமீல்)
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது! - ஜான் டிரஸ்ட்
அவர்களிடம் இருக்ககூடிய
வேதத்தை மெய்ப்படுத்தக் கூடிய (குர்ஆன் ஆகிய இந்த) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்தக்குர்ஆன் வருவ)தற்கு
முன் காஃபிர்களை வெற்றி பெற (இந்தக்குர்ஆனைக் கொண்டே) உதவி தேடிக்
கொண்டிருந்தார்கள். அவர்கள் அறிந்து வைத்திருந்த (இந்தக்குர்ஆன்) அவர்களிடம் வந்தபோது அதை
அவர்கள் நிராகரித்துவிட்டனர், நிராகரிப்போர் மீது
அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது
அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கின்றது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு
எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை
செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த
இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, அந்த நிராகரிப்பவர்களின்
மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக! - ஆ.கா. அப்துல்
ஹமீத் பாகவி ,காரைக்கால்)
மேலும், அல்லாஹ்விடமிருந்து வேதம் அவர்களிடம் வந்தபோது (அதனுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்?) அதுவோ, அவர்களிடம் இருந்த வேதத்தை உறுதிப்படுத்துகின்றது. மேலும், (அது வருவதற்கு) முன்பு அவர்களே, நிராகரிப்பாளர்களுக்கு எதிராகத் தங்களுக்கு வெற்றியும் உதவியும் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அறிந்துகொண்ட ஒன்று அவர்களிடம் வந்தபோது அதனை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். அத்தகைய நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
மேலும், அவர்களிடமுள்ள (வேதத்தை உண்மைப்படுத்தக்கூடிய (குர் ஆன் எனும்) வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, இதற்குமுன் நிராகரிப்போருக்கு எதிராகத் தங்களுக்கு வெற்றியை (அல்லாஹ்விடம்) அவர்கள் தேடிக்கொண்டுமிருந்தனர், பின்னர் அவர்கள் நன்கறிந்திருந்த இவ்வேதமானது அவர்களிடம் வந்தபோது அதை அவர்கள் நிராகரித்து விட்டனர், ஆகவே, நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. -அல்-மதீனா அல்-முனவ்வரா
Comments