2:91 அல் ஃஹஃக் உண்மை -மெய் - சத்தியம்
முஸத்திஃகன்
சொல்லப்பட்டது- - கூறப்பட்டது
هُمْ - ஹும் அவர்கள்
بِمَۤا - பிமா
எதை(க் கொண்டு) - அதை - எதை? காரணத்தினால் - எனவே - ஆகவே (போன்ற துணைச் சொல்)
أَنزَلَ - அன்Zஸல
இறக்கினான் - இறங்கு - (அருளினான்)
عَلٰى - அலா
மீது – மேலே -க்கு (போன்ற துணைச் சொல்)
نَا - நா ( துணை (ச் சொல்) எழுத்து)
எங்கள்
لِمَا- லிமா
எதை? - அதை - ஒன்றை - ஏன் - எப்பொழுது (போன்ற துணைச் சொல்)
مع - மஅ
هُمْ - ஹும்
அவர்கள்
அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!'' என்று அவர்களிடம்
கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப்
பிறகு உள்ளதை (திருக்குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை
உண்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு
முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!
- (PJதொண்டி)
அல்லாஹ் (இறுதியாக)
அருளிய(குர்ஆன்)தன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களுக்குச்
சொல்லப்பட்டால், "(இதற்கு முன்னர்) எங்களுக்கு அருளப் பட்டதைத்தான் நாங்கள்
நம்புவோம்" என்று கூறுகிறார்கள். அதற்குப் பின்னர் அருளப் பட்டதை ஏற்க
மறுக்கின்றனர். ஆனால், இறுதி மறையான இந்தக் குர்ஆன், அவர்களிடம் இருப்பதையும் உண்மைப் படுத்துகிறது. "நீங்கள் மெய்யான
நம்பிக்கையாளர்கள் எனில், இதற்கு முன்னர் அனுப்பப் பட்ட அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?" என்று (நபியே!) அவர்களிடம் கேட்பீராக! - (அதிரை ஜமீல்)
அல்லாஹ் இறக்கியதை நம்புங்கள்” என்று அவர்களுக்கு கூறப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீது தான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை
நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ (குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர்கேட்பீராக. -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
"அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. "நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக. -ஜான் டிரஸ்ட்
"அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்"
என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவை(யான வேதங்)களை
(மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறி அவைகளைத் தவிர உள்ள இ(ந்)த(க்குர்ஆ)னை
நிராகரித்து விடுகின்றார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற
உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக்) கேளுங்கள்:
"(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில்
தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?"-
( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
“அல்லாஹ் இறக்கியருளியதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக்
கூறப்பட்டால் “எங்களுக்கு (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு) எது இறக்கி அருளப்பட்டிருக்கிறதோ
அதன் மீது மட்டும்தான் நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அதைத்
தவிர மற்றதை அவர்கள் நிராகரிக்கின்றார்கள். உண்மையில், அது சத்தியமானதாகவும் (முன்னரே)
அவர்களிடம் இருந்த அறிவுரைகளை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது! அவர்களைக்
கேளும்: “உங்களுக்கு அருளப்பட்டவற்றின் மீது நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாய்
இருந்தால், இதற்கு முன் (இஸ்ராயீல் வம்சத்திலிருந்தே தோன்றிய) அல்லாஹ்வின் தூதர்களை
நீங்கள் ஏன் கொலை செய்து கொண்டிருந்தீர்கள்?” - (இஸ்லாமிய
நிறுவனம் டிரஸ்ட் -IFT)
மேலும், “அல்லாஹ் இறக்கிவைத்த இவ்வேதத்தை
நீங்கள் விசுவாசங் கொள்ளுங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்ட
(தவ்ராத்)தை விசுவாசிப்போம்” எனக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னால் உள்ள (குர் ஆன்
வேதத்தை நிராகரித்தும் விடுகின்றார்கள். (ஆனால்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்தக்கூடியதாக
இருக்கும் நிலையில் இதுவே சத்தியமானதாகும், (நபியே!! அவர்களிடம்.) “நீங்கள் விசுவாசங்கொண்டோராக
இருந்தால் அல்லாஹ்வின் நபிமார்களை இதற்குமுன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?” என்று
நீர் கேட்பீராக! -(அல்-மதீனா
அல்-முனவ்வரா)
Comments