2:86 இதில் இடம் பெற்றுள்ள புதிய வார்த்தைகள். முந்தைய வசனங்களில் இடம் பெற்றுள்ள ஒத்த வார்த்தைகள்

திரு குர்ஆன் சூரத்துல் பகராவின்  வார்த்தைக்கு வார்த்தை பார்த்து வரும் நாம். 

யுஃகFப்FFபு,  அன்ஹுமு ஆகிய இரு வார்த்தைகளை இந்த வசனத்தில் புதிதாக காண்கிறோம்.   

https://mdfazlulilahi.blogspot.com/2020/12/286.html

மற்றவை  முந்தைய வசனங்களில் இடம் பெற்றுள்ளவை அல்லது அவற்றுக்கு ஒத்த வார்த்தைகள் தான். 



அந்த ஒத்த வார்த்தைகள் முன்பு  இடம் பெற்றுள்ள வசன எண்களையும் பலரது விருப்பப்படி  வார்த்தைக்கு வார்த்தையுடன்  தந்துள்ளோம். 


உலாயிக  என்று  இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இந்த வார்த்தை  உலாயிக  (2:5.)   Fபஉலாயிக  2:81என்று  இடம் பெற்றுள்ளது போல் மற்ற வார்த்தைகளும் இடம் பெற்று இருக்கும். 


இங்கே என்ன  அர்த்தம் தருகிறது.  மற்ற இடங்களில்  முன் பின் வார்த்தைகளை, எழுத்துக்களைக் கொண்டு என்ன  அர்த்தம் தந்துள்ளது  என்று ஆய்வுடன் படியுங்கள் அழ்ழாஹ்வின்  அருளைப் பெறுங்கள்.




أُولَـٰئِكَ உலாயிக  
அவர்களே -இவர்கள்(தான் -தாம்) அவர்கள் (தான்)இத்தகையர்கள்(தான்  

2:5, 2:16, 2:27., 2:39., 2:82. 2:86. உலாயிக  2:5, Fஉலாயிக 2:81,



الَّذِينَ - ல்லதீ(ரீ)ன   
எவர்கள்- அவர்கள்  சிலர்

2:3.  2:14. 2:16. 2:25. 2:26. 2:27. 2:46. 2:59. 2:65. 2:76. 2:86. ல்லதீ(ரீ)ன  2:4.   2:9. 2:21. 2:39, 2:62. 2:82, இன்னல்லதீ(ரீ)ன    2:6. 2:62.

 

اشْتَرَوُا - அஷ்தரஉ 


விலைக்கு)  வாங்கிக்கொண்டார்கள்  - வாங்கினார்கள்

2:16


الَّذِينَ اشْتَرَوُا - ல்லதீ(ரீ)னஷ்தரஉ 

(விலைக்கு) வாங்கிக்கொண்டார்களே அவர்கள் (யார் வாங்கினார்கள்)



الْحَيَاةَ الْحَيٰوةَ- அல் ஹயாத
வாழ்க்கையை Fபில் ஹயாதி 2:85.


الدُّنْيَا - அத்துன்யா
 இவ்வுலகம் 2:85.


الْحَيَاةَ الدُّنْيَا - அல் ஹயாதத்துன்யா
இவ்வுலக வாழ்க்கை

بِالْآخِرَةِ பில் ஆகிறதி 
மறுமைக்குப் பதிலாக (பகரமாக)-  மறு வாழ்வில் 
பில் ஆகிறதி 2:4

فَلَا - Fபலா
எனவே -ஆகவே -ஆதலால் 
2:22. 2:38. 2:86.   Fபலா 2:44. 2:76

 يُخَفَّفُ -  யுஃகFப்FFபு 
 இலேசாக்க - எளிதாக்க (ப்படாது) -

عَنْهُمُ - அன்ஹுமு
அவர்களை விட்டு -இவர்களுக்கு

الْعَذَابُ - அல் ஃஅராபு

வேதனை - சித்திரவதை - (தண்டனை) அல் ஃஅராபி  2:49. 2:85.


وَلَ  - வலா

வேண்டாம் - இல்லை –மாட்டார்கள் –மாட்டாது -அல்ல

2:35. 2:38. 2:41. 2:42. 2:48. 2:62 2:68. 2:71. 2:84. வலா 2:77.

 هُمْ -  ஹும்

அவர்கள்

 2:4, 2:6. 2:7. 2:8. 2:9, 2:10. 2:11. 2:12. 2:13. 2:15. 2:16. 2:17, 2:18. 2:19. 2:20. 2:25. 2:31. 2:33. 2:38. 2:39. 2:46. 2:48. 2:57. 2:59. 2:60. 2:61. 2:62. 2:65 2:75. 2:76. 2:78. 2:79. 2:81. 2:82. 2:85. 


وَلَا هُمْ يُنصَرُونَ - வலாஹும் யுன்ஸரூ(ன)ன்.
அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள் (அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்)


أُولَـٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ ۖ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنصَرُونَ ﴿٨٦﴾ 

மொழிப்பெயர்ப்பு :


அவர்களே மறுமையை1 விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். -(PJதொண்டி)



உங்களில் இவ்வாறு செயற்படுகிறவர்கள் மறுமை வாழ்க்கையை விடுத்து, இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள். ஆகவே, அவர்களுக்குத் தண்டனை குறைக்கப் படவே மாட்டாது; அவர்கள் எவ்வித உதவியும் செய்யப்பட மாட்டார்கள்  -  (அதிரை ஜமீல்)


அவர்கள் (தான்) மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை வாங்கியவர்கள் எனவே அவர்களைவிட்டு வேதனை இலேசாக்கப்படாது இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள் (2:86)



மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். - ஜான் டிரஸ்ட் 


இத்தகையவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். ஆதலால் அவர்களுக்கு (கொடுக்கப்படும்) வேதனை ஒரு சிறிதும் இலேசாக்கப்பட மாட்டாது. அவர்கள் யாதொரு உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.  -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


மறுமை வாழ்வை விற்று, இம்மை வாழ்வைக் கொள்வினை செய்து கொண்டவர்கள் இவர்கள்தாம்! ஆகவே, இவர்களுக்குச் சிறிதளவும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது. மேலும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது. -  (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு