2:83 இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொல்லும் மொழி பெயர்ப்புகளும்
ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை இணைக்கக் கூடிய வாவுகள் இடம் பெற்ற வசனங்களில் ஒன்றாக இந்த 2:83 வசனம் உள்ளது. இதில் 9 வாவுகள் இடம் பெற்றுள்ளன.
https://mdfazlulilahi.blogspot.com/2020/11/283.html
و
வாவு இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்றாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை, பெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில் ம் என்ற பொருள் தரும். இதற்கு உம்மைப் பொருள் என்பார்கள்.
ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி, தாருஸ்ஸலாம் ரியாத் 9க்கு 8 மொழி பெயர்க்கவில்லை .
பஷாரத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT), அதிரை ஜமீல், அல்-மதீனா அல்-முனவ்வரா 9க்கு 7மொழி பெயர்க்கவில்லை.
E.M. அப்துர் ரஹ்மான் நூரிய்யி, ஸலாமத், ஜான் டிரஸ்ட், மலிவு, திரீயெம் 9க்கு 6 மொழி பெயர்க்கவில்லை.
ஒருவர் மொழி பெயர்த்த வாவுக்கு இன்னாருவர் மொழி பெயர்க்கவில்லை.
தமிழ் நடையில் இந்த இடத்தில் இன்னும் என்பது அவசியமில்லை என்று கருதும்போது அவரவர் ஆய்வுக்கு தக்கவாறு மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்.
நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; பொற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஸகாத்தை கொடுங்கள் என்று இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுங்கள் பிறகு உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் இந்த உறுதிமொழியிலிருந்து) திரும்பிவிட்டீர்கள். நீங்களோ புறக்கணிப்பவர்கள் -K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்
இன்னும், நாம் இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர வேறு
எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது; பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும்
ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகுறப்
பேசுங்கள். மேலும் தொழுகையை முறைப்படிக் கடைப்பிடித்து ஒழுகுங்கள்; ஸக்காத்தையும் கணக்கிட்டுச் செலுத்தி விடுங்கள்" என்று
உறுதிமொழி பெற்றோம் (என்பதையும் நினைத்துப் பாருங்கள்). ஆனால், (அந்த உறுதி
மொழியிலிருந்து) உங்களி(ன் முன்னோர்களி)ல் சிலரைத் தவிர அனைவரும் மாறி
விட்டார்கள். இப்போது நீங்களும் புறக்கணிப்பவர்களாகவே இருக்கின்றீர்கள். - (அதிரை ஜமீல்)
இன்னும் (நினைவு
கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும்
நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,
மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்;
மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து
வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும்
உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே
இருக்கின்றீர்கள். - ஜான்
டிரஸ்ட்
மேலும்,
(நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர
(வேறொன்றையும்) வணங்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,
ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய
வார்த்தை சொல்லுங்கள்). தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்து (மார்க்க வரி) கொடுத்து
வாருங்கள்" என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும்
புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கின்றீர்கள்.
-(ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
இன்னும்
நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் இவ்வாறு உறுதியான வாக்குமூலம் வாங்கியதை நினைத்துப்
பாருங்கள்; “அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வழிபடாதீர்கள்; (உங்களுடைய) பெற்றோர்கள்,
உறவினர்கள், அநாதைகள், மிஸ்கீன் (வறியவர்)கள் ஆகியோருடன் நற்பண்போடு நடந்து கொள்ளுங்கள்;
மனிதர்களிடம் நல்லனவற்றைப் பேசுங்கள். மேலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். ஜகாத் கொடுத்து
வாருங்கள்.” ஆனால் உங்களில் சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் (அந்த வாக்குறுதியைப்) புறக்கணித்து
விட்டீர்கள். இப்பொழுதும்கூட (அதனைப்) புறக்கணித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
-IFT)
மேலும்,
இஸ்ராயீலின் மக்களிடம் “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு எதனையும்) வணங்காதீர்கள்; பெற்றோர்களுக்கும்,
உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்; இன்னும் மனிதர்களுக்கு
அழகானதைச் சொல்லுங்கள; தொழுகையையும் நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்” என்று
நாம் வாக்குறுதி வாங்கியதையும் (நினைத்துப்பாருங்கள்), பின்னர், உங்களில் சொற்பமானவர்களைத்
தவிர நீங்கள் புறக்கணித்தவர்களாக முகம் திருப்பி(மாறி)விட்டீர்கள்.-(அல்-மதீனா அல்-முனவ்வரா)
Comments