சுப்ஹான மவ்லிதில் இணை வைத்தல் இல்லையா? புனித குர்ஆனுடன் போர் தொடுக்கும் வார்த்தைகள் இல்லையா?
கூலிக்கு மாரடிப்பவர்களுக்காக கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் கொள்கையை விட்டுக் கொடுப்பதும் அந்தரங்கத்தில் விலை போய் பின் வாங்குவதும் சகஜமே.
மவ்லிது பற்றி விவாதிக்க அரபு கல்லுாரியில் படிக்காத நாம் அழைத்த போது பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடியது ம.உ.சாவும் ஜா.உ.சாவும் தான்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/11/blog-post_25.html
அந்த ம.உ.சா, ஜா.உ.சாக்களில் இருந்து விலகி வேலை வாய்ப்பு அடிப்படையில் எங்களிடம் வேலைக்கு வந்தவர்தான் லுஹா.
பிறகு, மவ்லிது ஓதக் கூடியவர்களிடம் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்று திரும்பவும் வேலை வாய்ப்பு அடிப்படையில் வேலைக்குப் போனார்.
திரும்பவும் வேலை வாய்ப்பு அடிப்படையில் எங்களிடம் வேலைக்கு வந்தார்.
அந்த லுஹாக் கூட்டம் ம.உ.சா, ஜா.உ.சாவுகளின் சவாலை ஏற்காமல் பின் வாங்கி, சுப்ஹான மவ்லிதில் இணை வைத்தல் இருக்கிறது என்று நிரூபிக்க வராமல். சுப்ஹான மவ்லிது இறைவணக்கமாகுமா? என தலைப்பை மாற்றி உள்ளது அவர்களின் பலஹீனமாகும். அதனால் சுப்ஹான மவ்லிதில் இணை வைத்தல் இல்லை என்று ஆகி விடாது.
இணைப்பில் உள்ள ஓதுவோம் வாருங்கள். மகத்துவமிக்க மவ்லுாதுகளின் பலாபலன்கள் என்ற தலைப்பிலான வெளியீடு. கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் துணை இன்றி 30 ஆண்டுகளுக்கு முன் நாம் வெளியிட்டது.
சமீபத்தில் கூட அன்த கப்பாருல் கதாயா வுக்கு என்ன அர்த்தம் என்று பல சு.ஜ.மவுலவிகளிடம் கேட்டோம் அவர்கள் அனைவருமே பதில் சொல்லாமல் நழுவி விட்டார்கள்.
மவ்லிதில் ஷிர்க்கா? இல்லையா? என்பதை அறிய தாய் மொழியில் மொழி பெயர்த்தால் பாமர மக்கள் புரிந்து கொள்வார்கள்.
கூலிக்கு மாரடிப்பவர்கள் நிலையும் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் நிலையும் தான் மாறி மாறி வரும்.
யானே... பீ ... ஸா ... லா... மா... லைக்கும் என்ற ராகத்தில் பாடப்படும் பைத் யாநாபீ ஸலாம் அலைக்கும் என்பது.. அந்த பைத்தில் நபி(ஸல்)அவர்களை நோக்கி என்ன சொல்கிறார்கள்?
அன்த கப்பாருல்கதாயா
اَنْتَ- அன்த
நீங்கள்
غَفَّارُ - கப்பாரு
மன்னிப்பவர்
الْخَطَايَا- அல் கதாயா
பாவங்கள்
அன்த கப்பாருல் கதாயா
நீங்கள் தான் (தப்புத் ) தவறுகளை - பாவத்தை மன்னிக்கக் கூடியவர்கள்
இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,
وَالذُّنُوْبِ -வத்துனுாபில்
பாவங்கள்
الْمُوْبِقَاتِ-மூபிகாதி
அழித்து விடக் கூடிய
வத்துனுாபில் மூபிகாத்
அழித்து விடக் கூடிய பாவங்களையும் நீங்கள் தான் மன்னிப்பீர்கள்.
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ
அன்த சத்தாருல் மஸாவி
(நாங்கள் செய்த தப்புத்) தவறுகளையெல்லாம் (மக்கள் கண்ணில் இருந்து) மறைப்பதும் நீங்கள் தான்
வமூகீலுல் அஸராதி
கஷ்டங்களை எல்லாம் புரட்டக் கூடியவர் மாற்றக் கூடியவர்
யா வலியல் ஹஸனாதி
நன்மைகளுக்கெல்லாம் பொறுப்பாளரே
யா ரபீ அத் தரஜாதி
அந்தஸ்துகளையெல்லாம் உயர்த்தக் கூடியரே
كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ
கப்பிரூ அன்னீ துனுாபீ
கப்பிரூ - பிராயச்சித்தமாக இருங்கள்
அன்னீ - எனக்கு
துனுாபீ - என் பாவங்களுக்கு
என் பாவங்களுக்கு பரிகாரம் -பிராய சித்தம் தாருங்கள்
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
வஃபுலீ அன் ஸய்யிஆதி
வஃபுலீ - என்னை மன்னித்துவிடுங்கள்
அன் - இருந்து
ஸய்யிஆதி - பாவங்கள் - கெட்டது
கெட்டதற்காக என்னை மன்னியுங்கள்
என் தவறுகளையெல்லாம் மன்னித்து விடுங்கள்
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!
என்று நபி(ஸல்) அவர்களை நோக்கி துஆ கேட்கப்படுகிறது - பிரார்த்திக்கப்படுகிறது.
அல்லாஹ்வை நோக்கி கேட்க வேண்டிய இந்த துஆவை - பிரார்த்தனையை நபி(ஸல்) அவர்களை நோக்கி யா நபீ என்று அழைத்துக் கேட்பது ஷிர்க்கா? இல்லையா?
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? என்று கேட்பது யார்? நாம் அல்ல. அல்லாஹ் தான் கேட்கிறான். 3:135
சுப்ஹான மவ்லிதின் யா நபீ பைத்தில் உள்ள மேற்கண்ட வார்த்தைகள் புனித குர்ஆனுடன் அதாவது அல்லாஹ்வுடன் போர் தொடுக்கும் வார்த்தைகளா? இல்லையா?
உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் மன்னித்து விட்டேன் என்று அல்குர்ஆன் 48:2ல் அல்லாஹ் கூறுவது யாரை நோக்கி?
எந்த நபியை நோக்கி மவ்லுாதில் பிரார்த்திக்கிறார்களோ அந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களை நோக்கித்தான். உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் மன்னித்தவன் அல்லாஹ் என்று சொல்லிக் காட்டி உள்ளான்
பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் தான் மன்னிப்பான். அவன் தான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (39:53) அல்லாஹ் கூறி உள்ளான் யாரைப் பார்த்து கூறி உள்ளான்?
தமக்கு எதிராக வரம்பு மீறி (பாவம் செய்து) விட்ட எனது அடியார்களே! என்று அழைத்துக் கூறி உள்ளான். அது மட்டுமா? அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! என்றும் கூறி உள்ளான்..39:53.
யா நபீ பைத்தில் உள்ள நாம் சுட்டிக் காட்டிய வார்த்தைகள் குர்ஆன் வசனங்களுக்கு முரணா இல்லையா?
சிந்திக்கும் மக்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டுவான்.
ஷிர்க்கு வழியில் வரவை தேடிடும் கிறுக்கு உலகமடா
Comments
இணைக்கவும்..