தலைக்கு உரியவரா? உடலுக்கு உரியவரா?
விஞ்ஞான முன்னேற்றத்தில் ஒருவரின் இதயம், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், குடல், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கண் கருவிழி, தோல், இதயவால்வுகள், இரத்தக்குழாய்கள் போன்றவை இன்னொருவருக்கு பொருத்தப்படுகிறது.
விபத்தில் தலையை இழந்தவர் உடலையும் ,
உடலை இழந்தவர் தலையையும்
விஞ்ஞான முன்னேற்றத்தால் இணைத்து விட்டால் அவர் யாராக கருதப்படுவார்??
தலைக்கு உரியவராகவா?
உடலுக்கு உரியவராகவா?
போன்ற கேள்விகள் வந்தபொழுது பேசப்பட்டது இந்த உரை .
இதில் இடம் பெற்றுள்ள உரைக்கு தகுந்தவாறான ஹஜரத் பாத்திஹா ஓதி வரதட்சணை வாங்கும் ஒரிஜினல் காட்சிகள், சந்திர மண்டலம், சூரியன் சந்திரன், மனித மண்டை,மூளை போன்ற பொருத்தமான காட்சிகளை கம்யூட்டர் இல்லாமல் சாதாரணமான முறையில் அன்றே இணைத்தது நாம்தான்.
TVக்களிலெல்லாம் முதலில் வீடியோ செய்து விட்டு பிறகு பொருத்தமான காட்சிகளை இணைப்பார்கள்.
உலகிலேயே முதன் முதலாக பேச்சாளர் பேசிக் கொண்டிருக்போதே பேச்சாளர் பாபரி மஸ்ஜித் என்றால் பாபரி மஸ்ஜிதையும் கஃபா என்றால் கஃபாவையும் கம்யூட்டர் உதவியுடன் ஸபாட் லைவ் மிக்ஸிங் செய்ய வைத்து வெற்றி கண்டது நாம்தான். 1995 திரு குர்ஆன் மாநாடு தடா எதிர்ப்பு பேரணியில் இந்த ஸபாட் லைவ் மிக்ஸிங் செய்து காட்டினோம் அல்ஹம்துலில்லாஹ்.
நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும் ( நமது மேனுவல்மிக்ஸிங்குடன்) காண கிளிக் செய்யுங்கள்.
Comments