தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை பூனைகள் வரப்போகிறதோ வரட்டும்.
ஜ.உ.சா. அரசியல் கட்சியாக மாறிவருகிறதோ?- S.முஹம்மது அலி ஹஜ்ரத்
பூனைகள் எலிகளைத்தேடியே அலையட்டும். நாம் புலிகளையும் சிங்கங்களையும் வேட்டையாட தொடர்ந்து களமாடுவோம்
சொந்த வசூலுக்காக ஜமாஅத்துல் உலமா பதவிகளை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்ற இந்த பதில் யாருடையதோ?
Melapalayam News குரூப்பில் வந்தது.
[23/11, 5:47 pm] மேலப்பாளையம் மஜ்லிஸுல்
உலமா செயலாளர் ஆஷிக்இலாஹி: அவர்கள் அனுப்பிய பார்வேடு மெஸேஜ்
கண்ணியமிக்க தமிழ்
மாநில ஜமாஅத்துல் உலமா சபை உறுப்பினர்களின் மேலான கவனத்திற்கு
السلام عليكم ورحمة الله وبركاته
தற்போது தமிழகத்திலுள்ள வட்டார மாவட்ட நகர
மாநகர நம் சபையின் தேர்தல்களும் தேர்வுகளும் பல மாவட்டங்களில்
நடைபெற்றுவருகிறது.அல்ஹம்து லில்லாஹ்.
நீண்ட காலமாக சபையாக
செயல் பட்ட நம் சபை சமீப காலமாக அரசியல் கட்சியாக மாறிவருகிறதோ? என்ற அச்சம் மூத்த
ஆலிம்கள் முதல் இளம் ஆலிம்கள் வரை உள்ள அனைவரிடமும் இருந்து வருகிறது.
அதற்கு சாட்சி வெளி
மாநிலங்களுக்கு நம் சபை செய்கிற உதவியாகம்.
இந்திய அளவிலுள்ள தேசிய
அரசியல் கட்சிகள் அவைகளை செய்தால் பரவாயில்லை.
தமிழ் மாநில ஜமாஅத்துல்
உலமா சபை என்று பெயர் வைக்கப்பட்ட நம் சபை
சபையிலுள்ள
ஆயிரக்கணக்கான உலமாக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்
பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் மத்திய அரசும் மாநில அரசும்
செய்ய வேண்டிய வேலையை குறிப்பிட்ட மாநிலத்திற்குட்பட்ட நம் சபை எல்லை கடந்து உதவி
செய்வது வேதனை அளிக்கிறது.
சபை என்பது வேறு கட்சி
என்பது வேறு.
ஜமாஅத்துல் உலமா சபை
சபையாக இருக்கும் வரைதான் மக்களிடமும்
அதற்கு மரியாதை
உண்டு.சபையில் பிளவு ஏற்படவும் வாய்ப்பிருக்காது.
கட்சியாக மாறிவிட்டால்
சபைக்கு சமுதாயத்தில் நிச்சயமாக மதிப்பு இருக்காது.
எனவே தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களிடம் ஓட்டு போட்டு அவர்களை தேர்ந்தெடுக்கும் நீங்கள் சில வாக்குறுதிகளை
வைக்க கேட்டுக்கொள்கிறேன்.
(1) உங்களை தேர்வு
செய்வதால் சமுதாயத்திற்கு என்ன பயன்.
(2) பொருளாதாரத்தில்
பின் தங்கிய நம் மாநிலத்திலுள்ள உலமாக்களுக்கு என்ன பயன்.
(3) பள்ளிவாசலில்
பணிபுறகிற சபையில் பொருப்பிலில்லாத அப்பாவி ஆலிம்கள் திடீரென நீக்கப்பட்டால்
அல்லது பாதிக்கப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை உங்களால் எடுக்க முடியுமா? என்ற
இது கேள்விகளை முன்
வைத்து அதற்கு அவர் மனதார சம்மதித்தால் அவரை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவன்.
S.முஹம்மது அலி ஹஜ்ரத்
செயலாளர் கடலூர் மாவட்ட
ஜமாஅத்துல் உலமா சபை.
----------------
இதற்கு பதில் அளித்து வந்துள்ளது.
[23/11, 6:29 pm] மேலப்பாளையம் Drஅபுல்ஹசன்: அவர்கள் அனுப்பிய பார்வேடு மெஸேஜ்
அலி மௌலவி அவர்கள் தாம் முன் வைக்கும் கேள்விகள் அனைத்தையும் தன்னை நோக்கியே கேட்டுக்கொள்ளட்டும்.
அவருக்கு சில
கேள்விகள்.
1) கடலூர் மாவட்ட
செயலாளர் பொறுப்பிலிருந்த இவர் மேற்கண்ட அனைத்தையும் செய்தாரா?
2) மாவட்டக்
கூட்டங்களுக்கே இவர் வருவதில்லை. மாவட்டச் செயலாளர் இல்லாமலேயே பல கூட்டங்கள்
நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகிகள் புலம்பித்
தீர்க்கிறார்கள். இதற்கு அலி மௌலவியின் பதில் என்ன?
3) மாநில செயற்குழுவில்
அங்கம் வகிக்கும் இவர் ஒரு செயற்குழுவிற்கு கூட இதுவரை வந்ததில்லையே ஏன்?
4) சென்னை
புதுப்பேட்டையில் இவர் இமாமாக இருந்த போது என்ன குற்றச்சாட்டின் பெயரில்
நீக்கப்பட்டார் என்பதை சொல்வாரா?
5) புதுப்பேட்டை இமாமத்
பணியிலிருந்து இவர் நீக்கப்படவிருக்கிறார் என்ற நிலை வந்தபோது சென்னை மாவட்ட
ஜமாஅத்துல் உலமா ஓடோடி வந்து உதவியதா இல்லையா?
6) பிறகு சமரச முயற்சி
தோற்று இவர் நீக்கப்பட்ட போது மாவட்ட ஜமாஅத்துல் உலமாவிடம் தகவல் கூட சொல்லாமல்
ஊருக்கு ஓடினாரே ஏன்?
7) வேலூரில் நடந்த
மாநிலப்பொதுக்குழுவில் கருத்துச்சொல்கிறேன் என்ற பெயரில் இவர் எழுந்து 15 நிமிடம்
பயான் செய்தாரே அப்போது கடலூர் மாவட்ட ஆலிம்கள் பலரும் எரிச்சலடைந்து இவரை
கேலிபேசியதை அலி மௌலவி அறிவாரா?
சொந்த வசூலுக்காக
ஜமாஅத்துல் உலமா பதவிகளை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை உலமாக்கள் புரிந்து
வைத்துருக்கின்றனர்.
எனவே வசூல் விரும்பிகள்
இப்போதைய மாநில நிர்வாகத்தின் வீரியம் நிறைந்த செயல்பாடுகளைக் கண்டு பதறுவது
புரிகிறது. இவர் ஏன் பதறுகிறார்.?
“ஜமாஅத்துல் உலமா
உடையும்” என்ற வார்த்தை இவரின் மனதில் நெளியும் தீய எண்ணங்களை வெளிப்படுத்தி
விட்டது.
இதோ
லால்பேட்டையிலிருந்து அலி மௌலவி என்ற பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. தேர்தல்
நெருங்க நெருங்க இன்னும் எத்தனை பூனைகள் வரப்போகிறதோ வரட்டும்.
அல்லாஹ் நம்
தாய்ச்சபையாம் ஜமாஅத்துல் உலமா சபையை பூனைகளிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும்
பாம்பு, பல்லிகளிடமிருந்தும் பாதுகாப்பாப்பான்.
நம் முன்னோர்களான மூத்த
ஆலிம்களின் துஆவோடு நாம் முன்பைவிட வேகமாக பணியாற்றுவோம்.
பூனைகள் எலிகளைத்தேடியே
அலையட்டும். நாம் புலிகளையும் சிங்கங்களையும் வேட்டையாட தொடர்ந்து களமாடுவோம்.
Comments