2:81 தீ தோழர்கள் அல்லது நெருப்புத் தோழர்கள்.
வஹாதத் என்பதில் வாவு இடம் பெற்றுள்ளது. வாவு க்கு இன்னும் அல்லது மேலும் என்று மொழி பெயர்த்தாக வேண்டும் என்பார்கள் அரபு கல்லுாரிகளில் படித்தவர்களும் படித்துக் கொடுக்கும் உஸ்தாதுகளான உலமாக்களும். இந்த வசனத்தில் உள்ள வாவு க்கு
https://mdfazlulilahi.blogspot.com/2020/11/281.html
1.ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி
2. உமர் ஷரீப்
3. ஜான் டிரஸ்ட்
4. பஷாரத்,
7. மலிவு பதிப்பு
10. K.S.ரஹ்மதுல்லாஹ்
இம்தாதி,
11. அல்-மதீனா அல்-முனவ்வரா)
அவ்வாறில்லை! யாராக இருந்தாலும் தீமை செய்து, அவர்களின்
குற்றம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளுமானால் அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள்
நிரந்தரமாக இருப்பார்கள்.- (PJதொண்டி)
(உண்மை) அவ்வாறன்று! தீமையைச் சம்பாதித்து, தீமைகளிலேயே உழன்று வாழ்வோர் நரகவாசிகளே. அவர்கள் அதில்
என்றென்றும் வீழ்ந்து கிடப்பர். - (அதிரை ஜமீல்)
அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து
கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்
- ஜான் டிரஸ்ட்
அவ்வாறன்று! எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து,
அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராய் இருப்பினும்) நரகவாசிகளே!
அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
அப்படியல்ல, எவர்கள் தீமையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்களோ,
மேலும் தம்முடைய பாவங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில்
அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
ஆம்! எவர் தீமையைச் சம்பாதித்துக்கொண்டிருந்து, அவருடைய குற்றம் அவரைச் சூழ்ந்துகொண்டதோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.-(அல்-மதீனா அல்-முனவ்வரா)
Comments