2:79 (1)கேடு ஏற்படட்டுமாக - கேடுதான் - கேடு உள்ளது இவற்றில் எது சரி?( 2)பீ.ஜே. மொழி பெயர்க்காமல் விட்டவை சரியா?

முகநுாலில் பதிவிடாமல் சம்பந்தப்பட்ட அறிஞர்களிடம் தெரிவிக்கலாமே  என்பது  Ameer Amsa போன்றவர்களின் எண்ணம். இந்த எண்ணத்தின் நோக்கம் நல்ல நோக்கம்தான். நல்ல நோக்கத்திற்குரிய நற்கூலியை அல்லாஹ் நல்குவானாக ஆமீன்.  

https://mdfazlulilahi.blogspot.com/2020/11/279-1-2.html

குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமானது அல்ல. அது ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் வழி காட்ட வந்த வேதம். எனவே அது பற்றிய கருத்து வேறுபாடுகளில் எது சரி என்பதை. மனித சமுதாயம் அனைத்தும் அறியும் வண்ணமே எழுத வேண்டும். மார்க்கத்தை மறைக்கக் கூடாது. 




தவறாக விளங்கியும்  புரிந்தும் புரியாதவர்களாகவும்  உள்ள நிறைய ஸனது (சர்ட்பிகே)ட்கள்  வைத்துள்ளவர்களுக்கு,  மக்களால் அறிஞர்கள் என்று நம்பப்படுபவர்களுக்கு  பல முறை சுட்டிக் காட்டி விட்டோம். அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்வதாக இல்லை  என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  

ஆகவே  இவர்களை நம்பி ஏமாறாதீர்கள். அவர்கள் எல்லா தர்ஜமாக்களையும் படித்து விட்டு விமர்சனம் செய்யவில்லை. காழ்ப்புணர்ச்சியிலேயே பேசி உள்ளார்கள். 

நீங்கள் குர்ஆன் மொழி பெயர்ப்புகளை ஆய்வுடன் படியுங்கள். உண்மைகளை அறிவீர்கள். அல்லாஹ்வால்  அருள்  செய்யப்படுவீர்கள். பொய்யர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்வான்.


இந்த வசனத்தின் முதல் வார்த்தையான  Fபவய்லுன் என்பதில் உள்ள Fப வுக்கு  ஆகவே -எனவே  என்று மொழி பெயர்த்தாக வேண்டும். யாருமே பெயர்க்காமல் விட்டதில்லை.  பீ.ஜே. மட்டுமே மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார். இது  நிறைய ஸனது (சர்ட்பிகே)ட்கள்  வைத்துள்ளவர்களின் குற்றச்சாட்டு.  

1.ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி 

2.ஜான் டிரஸ்ட்

3.உமர் ஷரீப்

4.றஹ்மத்

5.இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

6.அதிரை ஜமீல்

7.K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி

8.அல்-மதீனா அல்-முனவ்வரா ஆகியவர்ளும்  இந்த வசனத்தில் உள்ள Fபவய்லுன் என்பதில் உள்ள Fப வுக்கு  ஆகவே -எனவே  என்று மொழி  பெயர்க்கவில்லை. 


---------------------

து(ஸு)ம்ம  என்பதற்கும்  பின்னர்  பின்பு  பின்னும் - பிறகு மொழி பெயர்த்தாக வேண்டும் என்று கூறி  அதே மாதிரி குற்றச்சாட்டு கூறி உள்ளார்கள்.  

ஆ.கா. அப்துல்   ஹமீத் பாகவி,  
பஷாரத்
றஹ்மத்,
அதிரை ஜமீல் ஆகியவர்ளும்   இந்த வசனத்தில் உள்ள து(ஸு)ம்ம வுக்கு  மொழி  பெயர்க்கவில்லை. 

-----------------

 வவய்லுன்   என்பதில்   வாவு  உள்ளது  இதற்கு  இன்னும் - மேலும்     என்று   மொழி     பெயர்த்தாக  வேண்டும் என்று கூறி  பீ.ஜே. மீது அதே மாதிரி  குற்றச்சாட்டு கூறி உள்ளார்கள். 

1.ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி 

2.ஜான் டிரஸ்ட்

3.உமர் ஷரீப்

4.றஹ்மத்

5. பஷாரத்

6.அதிரை ஜமீல்

7.K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி

8.அல்-மதீனா அல்-முனவ்வரா ஆகியவர்ளும்   இந்த வசனத்தில் உள்ள  வாவுக்கு  மொழி  பெயர்க்கவில்லை. 

 
எல்லா மொழி பெயர்ப்பாளர்களுமே  எது சிறந்த தமிழ் நடை என்று அவர்கள்  ஆய்வில்  விளங்கினார்களோ அதன்படியே  மொழி பெயர்க்காமலும் விட்டுள்ளார்கள். பீ.ஜே. தான் மொழி பெயர்க்காமல் விட்டதன் காரணத்தை  பகிரங்கமாகக் தெளிவுபடுத்தினார்.   மற்றவர்கள்  பகிரங்கமாகக் கூறவில்லை. 

---------------

 வய்ல்  என்று அல்லாஹ் கூறும்  வார்த்தை  இந்த வசனத்தில் 3 இடங்களில் இடம்   பெற்றுள்ளது.   இதற்கு கேடு ஏற்படட்டுமாக - நாசம்  ஏற்படுமாக என்று மொழி பெயர்த்து உள்ளார்கள். ஏற்படட்டுமாக - ஏற்படுமாக போன்ற  வார்த்தைகள் வேண்டுகோள் வைப்பது போல் உள்ள வார்த்தை. அதாவது பிரார்த்தனை  வார்த்தை. 

சொல்பவன் அல்லாஹ் அவன் யாரிடம் வேண்டுகோள்  பிரார்த்தனை  வைக்கப் போகிறான்?  ஆகவே   கேடு தான் , கேடு உள்ளது  என்று  தீர்ப்பாக உள்ள  மொழி பெயர்ப்புகளே சரியானது.




فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَـٰذَا مِنْ عِندِ اللَّـهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ ﴿٧٩﴾

فَوَيْلٌ - Fபவய்லுன் 
கேடுதான் - நாசம் தான்

لِّلَّذِينَ லில்(லரீ)தீன 
எவர்களுக்கு (அவர்களுக்கு -இருவருக்கும் )

يَكْتُبُونَ யக்துபூன 
எழுதுகிறார்கள்

الْكِتَابَ அல்பிதாப 
புத்தகத்தை

بِأَيْدِي -பிஅய்தீ 
கையால் - கையில்

هِمْ-ஹிம்
தம் - அவர்கள்- தங்கள்

بِأَيْدِيهِمْ - பிஅய்தீ ஹிம்  
தங்கள் கரங்களால்

ثُمَّ - து(ஸு)ம்ம   

பின்னர் பின்பு  பின்னும் - பிறகு


يَقُولُونَ யகூலுான
கூறுகிறார்கள்

هَـٰذَا ஹாதா
இது

مِنْ மின் 
இருந்து

عِندِ اللَّـهِ - ஃஇன்தில்லாஹி 
அல்லாஹ்விடம்

لِيَشْتَرُوا லியஷ்தரூ
அவர்கள் வாங்குவதற்காக

بِهِ -  பிஹி 
அதைக் கொண்டு

ثَمَنًا த(ஸ)மனன் 
கிரயத்தை

قَلِيلًا - ஃகலீலன்
சொற்பம் -கொஞ்சம் -அற்பம்

فَوَيْلٌ - Fபவய்லுன்  
கேடுதான்

لَّهُم லஹும் 
அவர்களுக்கு

مِّمَّا மின்ம்மா 
எதன் காரணமாக

كَتَبَتْ - கதபத்
எழுதிய

أَيْدِيهِمْ -  அய்தீ ஹிம்  
அவர்களின் கரங்கள்

وَوَيْلٌ -  வவய்லுன் 
 கேடுதான்

لَّهُم லஹும் 
அவர்களுக்கு

مِّمَّا - மின்ம்மா  
எதன் காரணமாக

يَكْسِبُونَ யக்ஸிபூன
சம்பாதிக்கிறார்கள்

தமிழ் நடையில் மொழிப்பெயர்ப்புகள்  : 


தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு445 விற்பதற்காக "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது" என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது - (PJதொண்டி)



அற்ப வருவாய்க்காகத் தம் கரங்களால் ஒரு புத்தகத்தை எழுதி வைத்துக் கொண்டு, "இஃது அல்லாஹ்விடமிருந்து வந்தது" என்று கூறுகிறார்களே, அவர்களுக்குக் கேடுதான்! எழுதிய கரங்கள் அவர்களுடையனவன்றோ! அதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! அதிலிருந்து வருவாய் அடைந்தார்களே! அதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! -  (அதிரை ஜமீல்)



தங்கள் கரங்களால் ( கற்பனையாக ) புத்தகத்தை எழுதிபிறகு அதைக் கொண்டு சொற்பக் கிரயத்தை வாங்குவதற்காக " இது அல்லாஹ்விடமிருந்து (வந்த வேதம் )" என்று கூறுபவர்களுக்குக் கேடுதான்! 

(அதை) அவர்களின் கரங்கள் எழுதியதினாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் சம்பாதிப்பதினாலும் அவர்களுக்குக் கேடுதான்  -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! -  ஜான் டிரஸ்ட்

 

எவர்கள் தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையடைவதற்காக "இது அல்லாஹ் விடமிருந்து வந்ததுதான்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்!- ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்

 

சொற்ப விலைக்கு விற்று, சிறிது இலாபம் பெறுவதற்காக தம் கைகளாலேயே ஒரு (சட்ட) நூலை எழுதிப் பின்னர், “இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதுஎன்று (மக்களை நோக்கிக்) கூறுவோர்க்குக் கேடுதான்! எனவே, அவர்களுடைய கைகள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். மேலும் (அதனைக் கொண்டு) அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்! - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

ஆகவே., தங்கள் கரங்களால் நூலை எழுதி, பின்னர் அதை அற்பக்கிரயத்திற்கு விற்பதற்காகஇது அல்லாஹ்விடமிருந்து வந்ததுஎன்றும் கூறுகின்றார்களே, அத்தகையோருக்கு கேடுதான்; ஆகவே (அதை) அவர்களுடைய கரங்கள் எழுதியதனால் அவர்களுக்குக் கேடுதான்! மேலும், அவர்கள் (அதன்மூலம்) சம்பாதிப்பதனால் அவர்களுக்குக் கேடுதான். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)


அது மட்டுமல்ல. அவர்கள் தாமே புத்தகங்களை எழுதி வைத்துக் கொண்டு, அவை யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று சொல்லி, அதிலிருந்து சிறிது ஆதாயங்களைத் தேடிக் கொள்கின்றனர். இவ்வாறு எழுதுபவர்களுக்கும் அதை விற்று பணம் காசு சம்பாதிப்பவர்களுக்கும் மிகவும் கேடுதான்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு