2:77 அன்னல்ழாஹ , வமா

இந்த வசனத்தில்   அன்னல்ழாஹ  என்பதில் உள்ள அன்ன  தஃகீத்  சொல்  ஆகும். இதற்கு

ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி 


குத்புதீன் அஹ்மத் பாகவி

அப்துர் ரவூஃப் பாகவி ஆகியவர்களும்  

ரஹ்மத் அறக்கட்டளையில் அ. முஹம்மது கான் பாகவி தலைமையிலான  அறிஞர்கள் குழுவும்  மொழி பெயர்க்கவில்லை. 


வமா என்பதில் உள்ள வாவுக்கு  இன்னும்  மேலும் போன்ற வார்த்தைகாளை யாரும்  மொழி பெயர்க்கவில்லை.


أَوَلَا يَعْلَمُونَ أَنَّ اللَّـهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ﴿٧٧﴾

أَوَلَا يَعْلَمُونَ - - அவலா யஃலமூன 
அறிய மாட்டார்களா



 أَنَّ اللَّهَ - அன்னல்ழாஹ 
 அல்லாஹ்

يَعْلَمُ - யஃலமு 
அறிகிறான்  - நன்கறிவான்

مَا மா 
எது

يُسِرُّونَ யுஸிர்ரூன 
இரகசியமாகப் பேசுகிறார்கள்

وَمَا - வமா 
 எது

يُعْلِنُونَ யுஃலினுான
பகிரங்கப்படுத்துகிறார்கள்

மொழிப்பெயர்ப்புகள் :


அவர்கள் மறைப்பதையும், வெளிப் படுத்துவதையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிய மாட்டார்களா? - (PJதொண்டி)

 

அவர்கள் மறைத்து வைப்பதையும் வெளிப்படுத்துவதையும் திண்ணமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? -  (அதிரை ஜமீல்)

 

அவர்கள் மறைத்துக் கொள்வதையும் பகிரங்கப்படுத்து வதையும் அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா?  - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா? - ஜான் டிரஸ்ட் 




அவர்கள் இரகசியமாக பேசுவதையும் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை ( அவர்கள் ) அறிய மாட்டார்களா ? -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)

அவர்கள் மறைத்துக் கொள்கின்றவற்றையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான் என்பதை அவர்கள் அறியவில்லையா? -  (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் மறைத்துவைப்பதையும், அவர்கள் பகிரங்கமாக்குவதையும் நன்கறிவான் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா? - (அல்-மதீனா அல்-முனவ்வரா)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு