மூபிகா பற்றி நாம் எழுதியது பொய்யா?

மூபிகா பற்றி நாம் எழுதியது உண்மை அல்ல  பொய் என்பது மூபிகா ஆதரவாளர்கள் நிலை.  மூபிகா பற்றி நாம் தெளிவாக தெரிந்தே விளங்கியே எழுதி உள்ளோம்.  அது மட்டுமல்ல மூபிகா பற்றி நாம் எழுதியது உண்மை என்பதற்கு  மூபிகா ஆதரவாளர்களிடமிருந்தே  ஆதாரத்தை தருவோம் இன்ஷாஅல்லாஹ்.  



இப்பொழுது  ரசூலுல்லாஹ்வை புகழப்படுவதாக சொல்லப்படும் சுப்ஹான மவ்லுாதின் 3வது  பைத்தான ல்லூ அலாகைரில் இபாத்தில் உள்ளதைப்  பார்ப்போம். 


இதில் மவுலுாதை எழுதியவர்  என்ன  சொல்கிறார்?  யா மன்தமாதா வஜ்தரம் என்கிறார்.   இதற்கு என்ன அர்த்தம்?


இதற்கு எமது மொழி பெயர்ப்பை தரவில்லை. TJM ஸலாஹுத்தீன் ரியாஜி, A.E. முஹம்மது அப்துர் றஹ்மான் போன்ற ஜ.உ.சாவினரின் அங்கீகாரம் பெற்ற, மவ்லிது ஓதக் கூடியவர்கள் செய்துள்ள  மொழி பெயர்ப்புகளையே  தருகிறோம் .  

يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்து விட்டவனே!

துன்புறுத்தி கொள்ளையடித்தவனே!

அக்கிரமம் செய்து பாவம் செய்தவனே 

குற்றமும் பாவமும் செய்து விட்டவனே! என்று மவ்லிதை எழுதியவர் மக்களை கூப்பிடுகிறார். கூப்பிட்டு என்ன சொல்கிறார்.

تُبْ -துப்  

மனந்திரும்பு -  பாவ  மன்னிப்புக் கேள்


وَاعْتَرِفْ - வஃதரிFப்

(உன் குற்றத்தை) ஒப்புக்கொள்

وَارْجُ الْكَرَمْ -வர்ஜுல்கரம்

கொடைத்த தன்மையை எதிர் பார் - அருளை எதிர் பார் -  தாராள மனப்பான்மையை எதிர் பார்த்துக் கொள். 


وَلُذْ - வலு(ர்)து 

சரண் அடைந்து விடு 

புகலிடம் தேடிக் கொள்

என்று கூறி விட்டு  இவ்வளவையும் யாரிடம்  எதிர் பார்க்கச் சொல்கிறார்? வார்த்தைகளைப் பார்த்தால்  அல்லாஹ்விடம் என்று எண்ணுவீர்கள். அப்படித்தானே!


 யாரிடம்  எதிர் பார்க்க வேண்டும் என்கிறார்?  அவரே கூறுகிறார் பாருங்கள்.

بِمَنْ حَلَّ الْحَرَمْ பிமன்ஃஹல்லல்ஹரம்

புனிதமிக்க ஹரம் ஷரீபில் பொன்னடி பதித்த பூமான் நபியிடம்

(மதினா) ஹரமில் அடங்கி இருக்கிறாரே அவரிடம்.

 ஹரமில் (மதீனாவில்) தங்கியுள்ளாரே அவரிடம் கேள்!   என்று உதேசிக்கிறார். இந்த உபதேசம் அரபியில்  உள்ளதால்  பாமரர்கள் புரியாமல் உள்ளார்கள். 

இதை  தாய் மொழியில்  சொன்னால்  இது தான் ரசூலுல்லாஹ்வை புகழும் முறையா?   

என்னடா அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதை ரசூலுல்லாஹ்விடம்  கேட்கச் சொல்கிறாய்  என்று அறிவுள்ளவர்கள் நிச்சயமாக கேள்வி கேட்டிருப்பார்கள். 

ஓரளவு  குர்ஆனை  படித்தவர்கள் என்றால், அல்குர்ஆன் 72 : 21,22 வசனங்களை சுட்டிக் காட்டி. 


நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை" என்றும் கூறுவீராக! 

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் (நபியே நீர்) கூறுவீராக! இப்படி அல்லாஹ் கூறி உள்ளானே என்று கேள்வி கேட்டிருப்பார்கள்.


அந்த மொழி பெயர்ப்பு சரி இல்லை. இந்த மொழி பெயர்ப்பு சரி இல்லை என்று சமாளித்தால் இதோ அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்ப்பை பாருங்கள். 


நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய ஒரு சிறிதும் சக்தியற்றவன்" என்றும் (நபியே நீர்) கூறுங்கள்.

நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன். என்றும் (நபியே நீர்) கூறுங்கள். என்று ஆதாரங்களை எடுத்துக் கூறி இருப்பார்கள்.


பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்! புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள் என்று ஷிர்க் - இணை வைக்கத் துாண்டியவர். அடுத்து சொல்வது என்ன?  

வ நுாறுஹு அம்மல் பிலாத் என்கிறார் 

அவர்களின் பேரொளி உலகில் வியாபித்து இருக்கிறது.

நபி அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது என்கிறார். 

அல்லாஹ் குர்ஆனில் என்ன சொல்லி உள்ளான்?  

اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ

அல்லாஹு நுாருஸ்ஸமாவாதி வல் அர்ழி 

அல்லாஹ் தான் வானங்களுக்கும்  பூமிக்கும் ஒளியாவான் என்கிறான். 

ஆக மவுலிதை எழுதியவரும்  அதை சரி ஆதரிப்பவர்களும் ஷிர்க்கு மட்டும் வைக்கவில்லை  அல்லாஹ்வின் கலாமின் (குர்ஆனின்) கருத்துக்களுக்கு நேர்  எதிராகவும்  மவ்லிது மூலம் போர் செய்து கொண்டு இருக்கிறார்கள். 


சாதராண மனிதனின் சொல்லுக்கு எதிராக ஏதாவது  சொன்னாலே அற்ப மனிதன் சும்மா விட மாட்டான், 


அல்லாஹ்வின் சொல்லுக்கு நேர்  எதிராக எழுதி  போர் செய்பவனை  அல்லாஹ்  சும்மா விடுவானா?

மூபிகா பற்றி நாம்  மொழி பெயர்த்தது சரிதான் என்பதற்குரிய ஆதாரம் இணைப்பில் உள்ளது.





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு