த.மு.மு.க.வின் அரசியல் பிரிவாக மு.லீக் என முடிவு செய்யப்பட்டதா?

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலும் போச்சு கேள்விபட்டிருப்பீர்கள். டீ குடித்துக் கொண்டு பேசியவன்  பேச்சு விடிஞ்சாலும் போச்சு கேள்விபட்டிருக்கிறீர்களா? 
2006 சட்டமன்ற தேர்தலின் போது நடந்தது என்ன என்பது பற்றி 2006லேயே மக்கள் மன்றத்தில் வைத்து விட்டோம்.  அதை மீண்டும் வெளியிட வேண்டிய சூழலை சில சகோதரர்கள் ஏற்படுத்தினார்கள் அதனால் அதன் ஒரு பகுதியை சமீபத்தில் வெளியிட்டோம். த.மு.மு..வின் அரசியல் விங் மு.லீக் என முடிவு செய்யப்பட்ட மற்றும் வெளியிடப்படாத செய்தியை வெளியிட வேண்டிய கால கட்டம்  உருவாகி விட்டது.



நான் எழுதுவதை பொய் என்று மறுப்பவர்கள் சத்தியம் செய்து மறுக்கட்டும். இப்படித்தான் எல்லாரும் சொல்வார்கள். நான் அப்படி சொல்ல மாட்டேன். பொய் சொன்னால் அல்லாஹ்விடமிருந்து என்ன உண்டகுமோ அது உண்டாகட்டும் என்று கூறியே மறுக்க வேண்டும் என்பேன். இதுதான் என் நிலைப்பாடு என்பதை நினைவுபடுத்திக் கொண்டு விஷயத்திற்கு வருகிறேன்.

.மு.மு..வின் அரசியல் விங்காக மு.லீக்கை பயன்படுத்துவோம் என்று பேசி முடித்துள்ளோம். மு.லீக்கை மேலும் வளர்க்க நீங்கள்தான் பொருத்தமான ஆள்https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_91.html

யு.ஏ.இ. காயிதே மில்லத் பேரவை முன்னாள் தலைவரும் ராஜகிரி கல்லூரி தாளாளருமான தாவூத் பாட்சா அவர்கள் வீட்டில் வைத்து மு.லீக் தலைவர் காதர் மைதீனிடம் பேசி முடித்து விட்டோம். 

நீங்கள் புறப்பட்டு வாருங்கள் என்று த.மு.மு.. சார்பில் பேசிய 2006ல் பொதுச் செயலாளராக இருந்த அண்ணன் ஹைதர் அலி என்னிடம் சொன்னார். உடனே புறப்பட்டு சென்றோம்.

J.S. ரிபாஈ தலைமையில் த.மு.மு..வினர் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்கள். மேலப்பாளையத்தில் சுன்னத் ஜமாஅத்தார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடனான சந்திப்புக்கள் நடந்தன. 

மறுநாள் J.S. ரிபாஈயுடன் நெல்லையிலிருந்து சென்னை சென்றேன். .மு.மு.. தலைமை அலுவலகத்தில் வைத்து தலைமையினர் நம்மிடம் சொன்னது.

மு.லீக் ஆபீஸுக்கு போய் வேட்பாளர் விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுங்கள். அதற்குரிய கட்டணத்தையும் கட்டுங்கள். உங்களுக்கு வேட்பாளர் நேர்கணல் என்பது வெறும் பார்மால்டிதான்.

மு.லீக் கேட்ட தொகுதிகளில் பாளையங்கோட்டை தொகுதி இருக்கவில்லை. மு.லீக்குக்கு கொடுக்கப்பட்ட தொகுதி இராமநாதபுரமும் அரவாக்குறிச்சியும்தான். த.மு.மு.க.வின் தனிப்பட்ட செல்வாக்கினாலும் முயற்சியாலும்தான் தி.மு.க. வெற்றி பெற்ற இந்த தொகுதி வாங்கப்பட்டது.

பாளையங்கோட்டை தொகுதியை இலாஹிக்கு என்று பேசிதான் கலைஞர் அவர்களிடம் நாங்கள் (த.மு.மு.க.) வாங்கியுள்ளோம். 

கலைஞர் அவர்களும் தேர்தலில் போட்டியிடாத த.மு.மு.க. கூறும் வேட்பாளர் இலாஹி தான் பாளையங்கோட்டைக்கு என்று மு.லீக் தலைவர் காதர் மைதீனிடம்  மு.லீக் பொதுச் செயலாளர் டாக்டர் செய்யது சத்தார் முன்னிலையில்  கூறித்தான்  கொடுத்துள்ளார்.

தேர்தல் முடிவு இன்றைய சூழலில் கூட்டணி ஆட்சிதான் வர வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள். ஆகவே மு.லீக்குக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டால் அதை நீங்கள் விரும்பக் கூடாது. 

அமைச்சர் பொறுப்புக்கு பொறுத்தமானவர் தகுதியானவர் ராஜகிரி தாவூத் பாஷா தான். நீங்கள் மு.லீக் கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும். அதற்காகத்தான் உங்களுக்கு சீட். த.மு.மு..வின் அரசியல் விங்காக மு.லீக் இருக்கும்.

நீங்கள் மு.லீக்கில் எப்படி செயல்பட்டவர் என்பது எங்களுக்கும் தெரியும் மு.லீக்கில் உள்ளவர்களுக்கு கூடுதலாகவே தெரியும். இருந்தாலும் பார்மால்டிக்காக நீங்கள் மு.லீக்கில் ஆற்றிய பணிகள் பற்றி எழுதி கொண்டு போங்கள் என்றார்கள்.

.மு.மு.. தலைமையகத்தில் உள்ள கம்யூட்டரிலேயே நான் மு.லீக்கில் ஆற்றிய பணிகள் குறித்து டைப் செய்து பிரிண்ட் எடுத்து கொண்டு மு.லீக் அலுவலகம் போனேன்

மு.லீக் அலுவலகத்தில் உள்ளவர்கள் கண்களில் அனல் பறக்கக் கண்டேன். ஹாமித் பக்ரி கைதை கண்டித்து மு.லீக் மேடையில் பேச என்னிடம் பத்தாயிரம் ரூபாய் வாங்கிய மு.லீக். மாநில பேச்சாளர் மு.லீக்குகாக வாங்கிய சீட்டை கேட்டு வந்துள்ளது போல் என்னிடம் சீறினார்.

மு.லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மைதீன் த.மு.மு.க. தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியது. த.மு.மு.க.வின் அரசியல் பிரிவாக மு.லீக்கை த.மு.மு.க. தலைவர்கள் ஏற்றுக் கொண்டது. 

அந்த பேச்சு வார்த்தைகளின் போது பாளைத் தொகுதி வேட்பாளர் பஸ்லுல் இலாஹி என்பதை த.மு.மு.க. தரப்பில் கூறியது. அதை மு.லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மைதீன். ஏற்றுக் கொண்டது. .

த.மு.மு.க.தான் பஸ்லுல் இலாஹிக்கா பாளைத் தொகுதியை தி.மு.க.விடம் பெற்றது என்ற உண்மையை கட்சியிலுள்ள மற்றவர்களுக்கு சொல்லாமல் காதர் மைதீன் மறைத்து விட்டார். 

மு.லீக் சார்பில் தான் தான் 3 சீட் வாங்கியது போலவும். அதை  இலாஹி மூலம் த.மு.மு.க. உரிமை கொண்டாடுவது போலவும் மாயை ஏற்படுத்தி விட்டார்.

இதனால் என்னுடன் நட்பில் இருந்த மு.லீக் நண்பர்கள் என்னை எதிரியாகப் பாவித்து கடுமையாகப் பேசினார்கள். நான் அவர்களிடம் காதர் மைதீன் த.மு.மு.க. தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியது. 

மு.லீக்கை த.மு.மு.க.வின் அரசியல் பிரிவு என்பதற்கு ஒப்புக் கொண்டது. இலாஹிக்கு  பாளைத் தொகுதி என்று வாக்குறுதி அளித்து தொகுதியை பெற்றது பற்றி சொன்னேன்.

அதற்கு மு.லீ்க் தலைவர் காதர் மைதீன் சொன்ன பதில் என்ன தெரியுமா? சும்மா டீ குடித்துக் கொண்டு பேசிய பேச்செல்லாம் ஒரு பேச்சாக ஒப்பந்தமாக ஆகுமா? என்பதுதான். 

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலும் போச்சு என்பார்கள். காதர் மைதீன் டீ குடித்துக் கொண்டு பேசினாலே அந்த நிலைதானா?

அப்படியானால் என்னிடம் ஏன் வேட்பாளர் விருப்ப மனுவை வாங்கினார்கள். விருப்ப மனுவுக்கான பணத்தைப் பெற்றார்கள். நேர்காணல் நடத்தினார்கள். 

டீ குடித்த போதை தெளியாமல்தான் காதர் மைதீன் ஸாஹிபிடம் என்னிடம் நேர்காணல் நடத்தினாரா? கேளுங்கள் என்றேன்.  
  
கலைஞர் அவர்கள் த.மு.மு.க. கூறும் வேட்பாளர்தான் பாளையங்கோட்டைக்கு என்று கூறி காதர் மைதீனிடம் தொகுதி கொடுக்கும் போது உடன் இருந்த மு.லீக்கின் அன்றைய மாநில பொதுச் செயலாளர் டாக்டர் செய்யது சத்தார் காதர் மைதீன் போக்கை கண்டித்து மு.லீக்கிலிருந்து ராஜினாமா செய்து விட்டார். 

இந்த உண்மைகளை விளக்கி . யு.ஏ.இ. காயிதே மில்லத் பேரவை முன்னாள் தலைவர்  கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சா டி.வி.யில் பேசினார். இதுவெல்லாம் 2006லேயே சொல்லப்பட்டு விட்டவைதான்.

இதையெல்லாம் தெரிந்திருந்தும் துபை வந்த பாக்கரும் நக்கல் அடித்துப் பேசினார். சுன்னத் ஜமாஅத் என்ற போலி லட்டர் பேடுகளில் அவர் அன்று இருந்த கட்சியினர் கள்ள பேக்ஸ்கள் அனுப்பி மகிழ்ந்தனர்.


MLA தேர்தலில் நிற்கப் போகிறோம் என்றதும் சிங்கப்பூரிலிருந்தெல்லாம் நான் யார் என்று தெரியாத செல்வந்தர்கள் போன் போட்டு நீங்கள் எங்கள் MLA என்றார்கள். துபையில் உள்ள பணக்காரர்களும் அழைத்துப் பேசினார்கள். ஒரு பணக்காரர் இன்னொரு பணக்காரரிடம் அழைத்துச் செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. 

மு.லீக்கர்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு பணக்காரர் மட்டும். இலாஹி முதலில் மு.லீக்கில் சீட் வாங்கட்டும். அதன் பிறகு பார்ப்போம் என்றதாக தொடர்பு கொண்டு பேசிய பணக்காரர் சொன்னார்.

அப்பொழுது துபை வந்திருந்த டாக்டர் அக்பர் கவுஸர் லேணா தமிழ்வாணனுடன் நான் வேலை செய்யும் பைசல் ஓட்டலுக்கு வந்து என்னை சந்தித்தார். அவர் போன்ற பலரும். காதர் மைதீனை நம்பி போகாதீர்கள் என்று மணிக்கணக்கில் உபதேசம் செய்தார்கள். நான் த.மு.மு.க.வை நம்பி போகிறேன் என்றேன்.

சென்னை செல்லும்பொழுது நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்து சந்தித்த உளவுத் துறை அதிகாரி. மாமா நீங்க ஏன் மு.லீக்கில் போய் சீட் கேட்கிறீர்கள். நீங்கள் சென்னை செல்வது வேஸ்ட். 

மு.லீக்கில் உள்ள LKS  மீரானுக்கும் சீட் கிடையாது. பேட்டை கோதர் மைதீனுக்கு என்று தி.மு.க. தலைமையிடம் மு.லீக் சொல்லி உள்ளதாக தகவல் உள்ளது. LKS  மீரான் பெரிய கூட்டத்துடன் சென்னை போயுள்ளார். எனவே மு.லீக்கை நம்பி நீங்கள் போகாதீர்கள் என்றார். 

நான் நடந்த விபரங்களைக் கூறி த.மு.மு.க.வை நம்பி போகிறேன் என்றேன்.


சென்னையில் பாக்கரால் பிரபலமான Y.K. மேன்சனில்தான் J.S. ரிபாயியுடன் தங்கி இருந்தேன் துபை. காயிதே மில்லத் பேரவையிலிருந்து பேசிய ஒருவர் என் பெயரை சொல்லாதீர்கள். அப்துர்றஹ்மான் தான் துரை முருகன் மூலம் கெடுதல் செய்து விட்டார். காதர் மைதீனும் துணை போய் விட்டார் என்றார்.

2009ல் மு.லீக் சார்பில் நான் வேலுார் தொகுதியில் ஏணி சின்னத்தில் நிற்கப் போகிறேன் என்று காதர் மைதீன் பேட்டி அளித்தார். அது எல்லா ஊடகங்களிலும் வந்தது. 

யார் வழியாக எந்த துரை முருகன் மூலம் கெடுதல் செய்யப்பட்டு 2006ல் பாளைத் தொகுதியை திரும்பப் பெற வைத்தார்களோ. அதே துரை முருகன் மூலம் வேலுார் தொகுதி காதர் மைதீன் அவர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு அப்துர்றஹ்மான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. 

2009ல் அப்துல்றஹ்மான் நின்றார் வென்றார். 2014ல்  திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தனது மகனுக்கு சீட் கேட்க, அதை விட்டுத் தர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மறுக்க, ஆரம்பமே ரணகளமானது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான கார் மீது திமுகவினரே தாக்குதல் நடத்திய சம்பவம் கூட நடந்தது. https://tamil.oneindia.com/news/tamilnadu/why-did-muslim-league-lost-vellore-lse-201376.html ல் வந்தது

துரைமுருகன் உள்ளிட்ட உள்ளூர் திமுகவினர் முஸ்லீம் லீக் கட்சிக்கு இந்த தேர்தலில் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கே எம் காதர்மொய்தீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.https://audioboom.com/posts/2301491-

2019ல் எல்லாரும் எம்பியாக 2014ல் யாரை துரை முருகன் ஆதரித்ததாக மு.லீக் குற்றச்சாட்டு கூறியதோ அவர்கள் மூலமே தேர்தல் தடையானது. 


ஒப்பந்தத்தை முறையாகப் பேணி வாழுங்கள். ஏனெனில், ஒப்பந்தம் குறித்து நீங்கள் விசாரணை செய்யப்பட்டே தீருவீர்கள்! 


உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.17:34
கெடுதல் செய்பவர்கள் வாக்குறுதி அளித்து ஏமாற்றுபவர்கள் மறுமையில் மட்டுமல்ல இம்மையிலும் கணக்கு தீர்க்கப்படும் என்பதே வரலாறாக உள்ளது.

எமது கூற்றை பொய் என கூறி மறுக்க எண்ணுபவர்கள் அல்லாஹ்வின் சாபத்தை கேட்டே மறுக்க வேண்டும்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு