உள்ளதை உள்ளபடி அறிந்துள்ளோமா?
எல்லா உயிரினங்களுக்கும் ஐந்தறிவு உள்ளது.
மனிதனுக்கு மட்டும் ஆறறிவு உள்ளது. அந்த ஆறாவது அறிவு பகுத்தறிவு என்று எல்லாரும்
சொல்கிறார்கள். ஆகவே நாமும் சொல்கிறோம்.
ஐந்து அறிவுகளை அறிய அதாவது ஐந்து விஷயங்களை தெரிய உணர எதன் மூலமெல்லாம் அறிந்து புரிந்து தெரிந்து கொள்வோமோ அந்த உறுப்புகளுக்கு புலன்கள் என்று பெயர்.
மனிதனுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. அதுபோல் எல்லா உயிரினங்களுக்கும்
ஐந்து புலன்கள் இருக்கின்றன. என்று எல்லாரும்
சொல்கிறார்கள். ஆகவே நாமும் சொல்கிறோம். இதுதான் எல்லார் நிலையாகவும் உள்ளது. https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_25.html
அறிவதனால் அது அறிவு எனப்பட்டது. எண்ணி இடுவது
ஈடு. சுடுவது சூடு என்பது போல அறிவது அறிவு. அதாவது அறிவதற்குப்
பெயர்தான் அறிவு. உள்ளபடியே எல்லா உயிரினங்களுக்கும் ஐந்து அறிவுகள்
இருக்கின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.
ஓர் அறிவு உடைய உயிரினம் இருக்கிறது. ஈரறிவு உடைய உயிரினங்கள் இருக்கின்றன. மூன்றறிவு உடைய உயிரினம், நான்கு அறிவு உடைய உயிரினம், ஐந்தறிவு உடைய உயிரினம் என்றுதான் இருக்கின்றன.
ஒரு உயிர் எப்படியெல்லாம் தன்னைச் சுற்றியுள்ளவைகளை அறிகின்றதோ அதை வைத்துதான் அந்த உயிர் எத்தனை அறிவுகள் கொண்டது
என்று அறியப்படுகின்றது.
ஒரு அறிவு உடைய உயிர்கள் என்றால் அவை தொடுவதன், படுவதன்
மூலம் மட்டுமே அறியும்.
அதவாது அது அதன் உடலால் தட்பம்,
வெட்பம், வன்மை,
மென்மை ஆகியவைகளை தொடுதல், படுதல் – பட்டுணர்வு என்ற ஒரு அறிவினால் மட்டுமே உலகத்தை அறியும்.
பட்டுணர்வு என்ற தொடுதல் உணர்வோடு நாவினால் பலவிதச் சுவைகளையும் அறியக் கூடியவை இரண்டு அறிவு உடையவை.
தொடு உணர்வு,
அறுசுவை அறிதலுடன் முகர்ந்து மோப்பம் பிடித்து
அறியும் தன்மையையும் கொண்டவை மூன்றறிவு
உடையவை.
மேற்சொன்ன மூன்று அறிவுகளுடன் கண்ணால்
பார்த்து அறியும் தன்மையும் சேர்ந்தால் அவை நான்கு அறிவு உடையவை.
காதால் கேட்டு அறியும் அறிவையும்
பெற்றால் அவை ஐந்தறிவு உடையவை.
ஒண்ணாவது அறிவு கண்ணால் பார்த்து அறியும் அறிவு. 2வது அறிவு காதால் கேட்டு அறியும் அறிவு 3வது அறிவு மூக்கால் முகர்ந்து அறியும் அறிவு. 4வது அறிவு நாக்கால் சுவைத்து அறியும் அறிவு. 5.வது அறிவு தொட்டு உணரும் அறிவு. ஆகிய
ஐந்தறிவுடன் பகுத்தறிவு
இருந்தால் அவன் மனிதன் என்கிறார்கள். இவை சரியா என்பதை பின்னர் பார்ப்போம்
Comments