இரண்டு தலை கதைகள் புராணங்களில் உண்டு இஸ்லாத்தில் உண்டா?
ஒரே தலைமை என்பது சரி, ஒருவரே தலைவர் என்பது சரி இல்லை என்பது யாருடைய உளரல்?
பீ.ஜே. என்பவரின் இன்றைய எதிர்ப்பாளர்கள் நாம் அவர்களது ஜமாஅத்திற்கு எதிராக பீ.ஜே.யை ஆதரிப்பதாகக் கூறுகிறார்கள்.
பீ.ஜே.யின் ஆதரவாளர்களோ நாம் பீ.ஜே.யை கண்மூடித்தனமாக எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள்.
நாம் பீ.ஜே.யை கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் மாட்டோம். எதிர்க்கவும் மாட்டோம்.
கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதுமான செயலை செய்தால் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல்லை பொய்ப்படுத்திய பாவியாக ஆகி விடுவோம்.
1988 அக்டோபரில் கோட்டாறில் கமாலுத்தீன் மதனி வீட்டில் சாப்பிட்டு விட்டு ஜாக் பைலா தயாரிக்கும் கூட்டம் நடைபெற்றது.
கிளைகள் அமைத்து செயலாளர், பொருளாளர் என வார்டுகள் வாரியாகவும் பொறுப்புகள் கொடுத்தால்தான் அமைப்பை எளிதில் வளர்க்க முடியும் என்றேன்.
அப்பொழுது ரஹ்மதுல்லாஹ் இம்தாதி இவர் அரிசியல்வாதி அரசியல் கட்சி மாதிரி ஆலோசனை கூறுகிறார் என்றார்.
பீ.ஜே. சொன்னார் இஸ்லாத்தைப் பொறுத்தவரை தலைவர் மட்டும்தான். அமீர் (தலைவர்) விரும்பினால் பொருளாதாரத்தை யாரிடமாவது கொடுத்து வைத்தால் அவர் பொருளாளர்.
அது என்ன செயலாளர்? எல்லாரும்தான் செயல்படப் போகிறோம் அப்படிப் பார்த்தால் எல்லாருமே செயலாளர்கள் தான். நமக்கு பைலா குர்ஆன் ஹதீஸ்கள் தான்.
இயக்கத்தின் பை-லா, செயலாளர், பொருளாளர், ஷுரா, உறுப்பினர்கள் சேர்த்தல் போன்ற இவை யாவும் அரசு அங்கீகாரத்திற்காக ரிஜிஸ்ட்டர் பண்ண எழுதப்படும் போலி வார்த்தைகள் தான்.
இரண்டு தலைகள் மூன்று தலைகள் என்பதெல்லாம் புராணங்களில் உண்டு இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாத்தில் ஒற்றை தலைமைதான் என்று கூறினார்.
பின்னாளில் ஜாக்கில் நுழைந்தவர்களுக்கு பதவி ஆசை வந்தது. அமைப்பு வளர ஆர்வமுடன் செயல்பட உறுப்பினர் முறை அவசியம் என்று வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்று விளங்கி எஸ்.கே.யை அமீராக ஏற்றுக் கொண்டால் போதும். ஜாக்கில் உறுப்பினராக ஆக வேண்டியதில்லை. ஜாக் என்பது நிர்வாக வசதிக்காகத்தான் என்று அவர்களுக்கு பதில் கூறினார் பதவி கிடைக்காதவர்கள் ஜாக்கை விட்டும் போய் விட்டார்கள்.
1994 ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சியில் நடந்த ஜாக் பிரதிநிதிகள் மாநாட்டிலும் இதை வலியுறுத்தி கர்ஜனை செய்தார் பீ.ஜே. சாகும் வரை எனக்கு கமாலுத்தீன் மதனி தான் தலைவர் அமீர் என்றும் பிரகடனப்படுத்தினார்.
ரஹ்மத் அறக்கட்டளையின் புகாரி முதல் பாகம் மொழி பெயர்ப்பு பணியில் உள்ளதால் மாநாட்டுக்கு வர முடியாது என்றேன். அமீர் வர வேண்டும் என்று கட்டளை இட்டார். அமீருக்கு கட்டுப்பட்டு வந்து விட்டேன் என்றும் பீ.ஜே. பேசினார்.
அதே ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஜாக் ஷுராவிலிருந்து பீ.ஜே. ராஜினாமா செய்தார். ஜாக்கிலிருந்தே ராஜினாமா செய்த மாதிரியான மாயையை பீ.ஜே. ஏற்படுத்தினார்.
அதற்குப் பிறகு 15-01-1995 அன்று திருச்சி ஸலபி நகர் பள்ளியில் நடந்த ஜாக் கூட்டத்தில் கலந்து கொண்ட பீ.ஜே. என்ன செய்தார்?
யார் தலையை வெட்டுவோம் என்று பிர்தவ்ஸி பேசினார் என்பதை பின்னர் பார்ப்போம்.
ராஜினாமா நாடகத்துக்குப் பிறகும் த.மு.மு.க. ஆரம்பித்தப் பிறகும் நடந்த பொதுக் கூட்டங்களிலும் 27-08-1996, 26-03-1997, 01-05-1997 ஆகிய தேதிகளில் நடந்த அந்தரங்க கூட்டங்களிலும் பீ.ஜே. என்னத்தைப் பேசினாலும் கடைசியில் என்ன சொன்னார்?
அமீர் கமாலுத்தீன் மதனி தான். ஒரே தலைமைதான், கடைசி வரை ஒருவரேதான் தலைவர் என்றுதான் சொன்னார்.
இந்த இடத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்க திர்மிதியில் (2916) இடம் பெற்றுள்ள ஹதீஸை உங்கள் நினைவுக்கு கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும்
ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஓர் ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஓர் ஆதிக்கம் உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் அடிப்படையில் பார்க்கும்பொழுது ஒரே தலைமை என்று சொன்னவை யாவும் பீ.ஜே. மலக்கின் ஆதிக்கத்தில் இருந்தபொழுது சொன்னவை.
மலக்கின் ஆதிக்கம் நல்லதையே துாண்டும். உண்மையை உண்மையாக ஆக்கும். உள்ளதை உள்ளபடி அறியவும் புரியவும் வைத்து சொல்லவும் வைக்கும்.
அதே ஹதீஸில் உள்ளபடி பீ.ஜே. என்பவரிடம் ஷைத்தானுடைய ஆதிக்கம் மிகைத்து நிற்க்கும்பொழுது ஷய்த்தானாக மாறி ஷைத்தானுடைய வேலையான உண்மையை பொய்யாக்குவதும் கெட்டதை துாண்டி விடுவதுமான வேலைகளை செய்தார், செய்து கொண்டும் இருக்கிறார்.
குண்டு வெடிப்பு வழக்குகளிலிருந்து முழுமையாக தப்பிக்க காஞ்சி சங்கராச்சாரியாரின் தயவு தேவை என சங்கராச்சாரியாரியாருடன் கள்ளத் தொடர்பு கொண்டார் பீ.ஜே.
அவரின் கள்ளத் தொடர்புகளையெல்லாம் நாம் அடையாளம் காட்டியபொழுது இயக்க வெறியில் அன்று நம்மைப் பொய்ப்படுத்தியவர்கள் தான் இன்று டபுள் டோரான் என்று பீ.ஜே.யை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கராச்சாரியாரியாருடனான ரகசிய சந்திப்புக்குப் பிறகுதான். 1999 மார்ச் அல்முபீன் இதழில் 56 பக்கங்களில் அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு என்று எழுதினார்.
ஆட்சித் தலைமை வெறுந் தலைமை என பிரித்தார். இஸ்லாத்தில் இல்லாத கூட்டுத் தலைமை என்ற குண்டாமட்டித் தலைமைகளை முஸ்லிம்களிடம் திணித்தார்.
ஒரே தலைமை என்பது சரி, ஒருவரே தலைவர் என்பது சரி இல்லை என்று உளர ஆரம்பித்தார். இந்த உளரலைத்தான் இன்றைய பிரிவினவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் உளரித் திரிகிறார்கள்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல், மூன்று முறைக்கு மேல் தொடராக தலைமைப் பதவியில் இருக்கக் கூடாது. என்பது எங்கு இருந்து வந்தது?
பீ.ஜே.பி.யில் இருந்து வந்ததுதான். பீ.ஜே.பி.யில்தான் அத்வானி போன்றவர்களுக்கு மூத்த தலைவர்கள் பதவி கொடுத்தார்கள்.
அதைப் பின் பற்றி ஷைத்தானின் ஆதிக்கத்திலிருந்த பீ.ஜே.யின் மூளையில் உருவானது. மேற்கண்ட சட்டங்கள்.
பீ.ஜே. இருந்த அமைப்புகளில் ஷைத்தானின் இந்த ஆதிக்கமும், தாக்கமும் அவர் பிரிந்து சென்ற பின்பும் இன்றும் இருக்கத்தான் செய்கிறது.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல், மூன்று முறைக்கு மேல் தொடராக தலைமைப் பதவியில் இருக்கக் கூடாது என்ற பைலாவுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் தாருங்கள் பார்ப்போம்.
மலக்கின் ஆதிக்கத்தில் இருந்தபொழுது பீ.ஜே. சொன்னாரே அரசு அங்கீகாரத்திற்காக ரிஜிஸ்ட்டர் பண்ண எழுதப்படும் போலி வார்த்தைகள் தான் இயக்க பைலாக்கள் என்று அதுதான் உண்மை.
முஸ்லிம்களுக்கு பைலா குர்ஆன் ஹதீஸ்கள்தான். முஸ்லிம்களுக்கு அழகிய முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்கள்தான்.
K.T.ராகவன் போன்ற பீ.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ரகசியமாக சந்தித்தவர்கள் அல்ல. பீ.ஜே.யுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்கள் அல்ல.
நபி(ஸல்) அவர்கள் கடைசி வரை அவர்கள்தான் தலைவராக இருந்தார்கள். நபிவழியைப் பின் பற்றினால் மறுமையில் நபியுடன் இருக்கலாம்.
நபிவழியைப் பின் பற்றாமல் நாசகாரர்களின் வழியை யார் பின்பற்றி அவர்களுடன்தான் மறுமையில் இருக்க வேண்டியது இருக்கும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக ஆமீன்.
Comments