கடந்த ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினத்தை சவுதி அரேபியா அரசு தவறுதலாக அறிவித்ததா?

கண்ணால் பார்த்தியா? பைனா குழரில் பார்த்தியா? சாட்டிலைட்டில் பார்த்தியா?  -----------------------------------------------------------------------------------------------------
நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ யாராவது பிறையை கண்ணால் பார்த்தார்களா? சவூதி போல் இன்று பெருநாள்  கொண்டாடிய வளைகுடா நாடுகளிலாவது யாராவது பிறையை கண்ணால் பார்த்தார்களா? நான் விசாரித்த அளவில் வளைகுடா நாடுகளில் எந்த நாட்டிலும் பிறை கண்ணால் பார்த்ததாக தெரியவில்லை. சவூதி அறிவிப்பை ஒட்டியே ஷியாக்களை தவிர  எல்லா வளைகுடா  நாடுகளிலும் பெருநாள் அறிவித்து உள்ளார்கள்.  இது தான் நான் அறிந்த உண்மை. உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் என்று நாம் வளைகுடா நாடுகளில் உள்ள பலருக்கு அனுப்பி இருந்தோம். அவர்களில் சிலர் தந்த பதிலை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_5.html 

சவூதியில் அதற்கென்று ஏற்படுத்தி உள்ள கமிட்டியின் அறிவிப்புபடியே இன்று பெருநாள்

 Innaiku than pirai theriyum ulagam pura moonsighting website iruku. Ana Saudi solli Richa. Namma onnum panna mudiyathu


உண்மை தான் யாரும் பிறை பார்க்கவில்லை

ஒமானில் இன்று பெருநாள் இல்லை.
[04/06, 3:49 pm] ஒமான் ஷியா
[04/06, 3:51 pm] குறைந்த அளவில் மட்டுமே
[04/06, 3:53 pm] இரண்டு விழுக்காடுக்கு கூடுதல் இல்லை


[04/06, 2:21 pm] நான் ஹஜ்ஜுக்கு சென்ற சமயம் முதலில் பிறையை பார்த்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த சவூது அரசு பின்பு பார்த்தாக சொன்னவர் நம்பகத்தன்மை அற்றவர் என்று தன் அறிவுப்பை திருப்பி எடுத்தது. ஆதலால் ஹஜ்ஜுக்கு போன அனைவருக்கும் அரஃபா என்று என ஒரே குழப்பம் அரஃபா ஒரு நாள் முன்புதான் அதிகாரப்பூர்வ அறுவிப்பை சவூதி அறுவித்தது. அவர்கள் பிறைபார்த்தாக அறிவித்ததையும் வாபச் வாங்கியதையும் காலம் சென்ற செங்கிச்கான் Screen short எடுத்து வைத்துருந்தார் இதை இங்கு குறிப்பிடக்காரணம். சவுதி தன் தவரை மரைத்து என்றைக்கும் பொய் சென்னதில்லை. தவரு என்று தெரிந்தபோதும் மானம் அவமானம் என்று பார்காமல் தன் அறிவிப்பை திருப்பி வாங்கியவர்கள் ஆதலால் அவர்கள் விசயத்தில் சந்தேகப்படத்தேவையில்லை உது தான் என் கருத்து.

[04/06, 2:25 pm]  தமிழ் நாட்டுப்பிறை தமிழனுக்கு என்ற இச்லாத்துக்கு எதிரான சைத்தானிய  தத்துவத்தை முழங்கு பவர்களுக்கு தலைவழியாக இருப்பது சவுதி பிறை ஆதலால் அவர்கள் எப்படியாவது சவுதி தவராக பிறை அறிவிப்பு செய்கிறது என்று நிரூபிக்க படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்

[04/06, 2:31 pm] இளங்கைக்கு அருகில் இருந்தாலும் ராமேசுவரத்தில் இருப்பவர்கள் இது வேர நாடு என்பதால் அதை ஏற்க்ககூடாது. அதேபோல தேங்காய்பட்டணம் கேரளா அருகில் இருந்தாலும் அது வேரமாநிலம் ஆதலால் அதை ஏற்க்ககூடாது தமிழகத்தில் பார்கும் பிறைதான் தமிழ்நாட்டு தமுழருக்குறியது என்று க்ஷைத்தானிய போதனையை போதிப்பவர்கள் நாங்கள் இருப்பது நபிவழி முறை என்று புருகுவதுதான் வேடிக்கை

[04/06, 2:33 pm]  தமிழகப்பிறை தமிழருக்கு என்பதற்க்கு சஹீகான அல்ல லஹீபான 1ஹதீதையாவது இதைபின்பற்றச்சொல்லும் மடையர்கள் யாராவது காட்டச்சொல்லூங்கள. பார்போம்

[04/06, 2:54 pm]  நான் சவுதி பிறையை பின்பற்றச்சொல்ல வரவில்லை. தமிழன் பிறை இசுலாமிய அடிப்படைக்கே எதிரானது இதை மட்டும் தெளிவாக கூறிக்கொள்கிறேன்


04/06, 2:15 pm] துபாய் அரசு இரவு 8.55 மணிக்கு அறிவித்தன
[04/06, 2:20 pm] சவுதி யில் பிறை பார்த்தாக வாட்ஸ் ஆப்பிள்  வந்த செய்தி அடிப்படையில் பெருநாள் ..காலேஜ் டைம்ஸ் செய்திளையும் அப்படித்தானே சொல்கின்றன ..செய்திகளில் பார்த்ததாகவே வருகின்றன ..

பிறை தேட வேண்டிய நாளில் அவர்கள் பத்திரிக்கையில் யாராவது பிறை பார்த்தால் அருகில் உள்ள அரசு துறை சார்ந்த ஆட்களிடமோ அல்லது காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது அதன் அடிப்படையில் யாராவது ஒருவர் பார்த்து இருக்கலாம்

 😢 இதுவரை யாரும் பார்க்க வில்லை ... ஆனால் மஸ்கட்டில் எப்போதும் தனித்து விளங்கும் பிறையை கண்டால் மாத்திரம் பெருநாள் அறிவிப்பு

குவைத்தில் பொதுவாக சவுதி என்ன செய்கிறதோ அதைத் தான் பின்பற்றுவார்கள். பிறை தென்பட வாய்ப்பில்லை முப்பதாக பூர்த்தி செய்யபடலாம் என்று தான் முந்தாநாள் வரை சொன்னார்கள். பின் என்ன நடந்ததோ பெருநாள் என்ற அறிவிப்பு சவூதியில் இருந்து. அல்லாஹு ஆலம்

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலை வளைகுடாவில்  கிடையாது. அதனால் மாவட்டப் பிறை மாநிலப் பிறை அவரவர் பகுதிப் பிறை  என்பது வளைகுடா நாடுகளில் கிடையாது. கண்ணால் பார்த்தியா? பைனா குழரில் பார்த்தியா? சாட்டிலைட்டில் பார்த்தியா?  என்ற கேள்விகளும் கிடையாது. சவூதியை விட சின்ன நாடான இந்தியாவில் 3,4,5 என மூன்று நாட்கள் பெருநாள் கொண்டாடப்பட்டது.  இந்தியாவை விட பரப்பளவில் பெரிய நாடான (நன்கு கவனிக்க வேண்டும் மக்கள் தொகையில் அல்ல பரப்பளவில் பெரிய நாடான)  சவூதி முழுவதும் ஒரே நாள்தான் பெருநாள். கொண்டாடப்பட்டது.

பிறை கமிட்டி முடிவை சவூதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.  அரசாங்கம்  தான் முடிவை அறிவிக்கும். சவூதி  எங்கள் பிறை முடிவை எந்த நாடும்  பின் பற்ற வேண்டாம் என்று கூறி விட்ட போதிலும். பெரும்பாலான வளைகுடா நாடுகள் சவூதி அறிவிப்பை ஏற்றுக் கொள்கின்றன.

இந்தியாவில் உள்ள திருநெல்வேலியில் பஜ்ர் ஐந்தரை மணிக்கு என்றால்  அதே இந்தியாவில் உள்ள கொல்கத்தாவில் மூணரை மணிக்கு பஜ்ர்  வக்து வந்து விடும்.  அதே மாதிரிதான் சவூதியின் ஒரு பாடருக்கும் இன்னொரு பாடருக்கும் தொழுகை நேரம் மட்டும்  மணிக் கணக்கில் வித்தியாசப்படும். பெருநாள் வித்தியாசப்படாது.  சவூதி முழுவதும் ஒரே நாள்தான் பெருநாள் .
-------------------------------------------------------

கடந்த ஈதுல் ஃபித்ர் பெருநாள் (4.6.2019) தினத்தை சவுதி அரேபியா அரசு தவறுதலாக அறிவித்ததா? என்ற கேள்விக்கு வந்துள்ள பதில்.

கடந்த ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினத்தை சவுதி அரேபியா அரசு தவறுதலாக அறிவித்ததாக பரவி வரும் செய்தியை யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

*சூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின் படி அமைந்துள்ளன (55:5, 6:96).*

*சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5).* 

இதன் அடிப்படையில் ஷவ்வால் முதல் நாள் செவ்வாய்க் கிழமை (04-06-2019) என்பதுதான் சரியானதாகும். 

வல்ல அல்லாஹ் விதியாக்கிய காலண்டரான சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவித்தன *(2:189).*

எனவே அல்குர்ஆனின் கூற்றுப்படி சந்திரனின்  (பிறை) படித்தரங்களே நமக்குத் தேதிகள் ஆகும். அல்லாஹ் விதியாக்கிய ஒரு நாளுக்குரிய தேதியை மாற்றிட எந்த முல்லாவுக்கும், எந்த அரசாங்கத்திற்கும், எவருக்கும் உரிமையில்லை.

நமது ஊர் டவுண் காஜியின் பிறை அறிவிப்பும், சவுதி அரசாங்கத்தின் பிறை அறிவிப்பும் கிட்டத்தட்ட ஒரே தரத்தில் அமைந்தவையே. 

காஜி பிறை பார்க்கப்பட்டாலும் அறிவிக்கமாட்டார். சவுதிக்கு அமாவாசையில் பிறை தெரியும் - அவ்வளவுதான்

இவர்களின் பிறை அறிவிப்பை ஏற்று கொண்டாடும் முல்லாக்களுக்கும் பிறைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. பிறைகள் குறித்த அடிப்படை ஞானம்கூட மேற்படி ஆலிம்..! களுக்கு இருப்பதாகக் தெரியவில்லை.

எனவேதான் அவர்கள் அனைவரும் கட்டிடத்திற்குள் அமர்ந்து கொண்டு 29-வது நாள் மஃரிபு வேளையில் சாமானியன் பிறை பார்த்த தகவலுக்காகக் காத்திருப்பார்கள்.

எனவே *துல்லியமான ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றிட முன்வாருங்கள். இதுபோன்ற மன சஞ்சலங்களைத் தவிர்த்து உறுதியான வகையில் சரியான தினத்தை உங்கள் அமல்களைச் செய்யலாம்...!!* 

எது எப்படியோ ஆட்சித் தலைமையால் தான் ஒரே நாளில் பெருநாள் என கொண்டு வர முடியும் என்பதை வளைகுடா நாடுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு