இஸ்லாமிய விரோதிகளுக்கு எதிரான செய்தி என்ற பெயரால் இஸ்லாத்திற்கு விரோதமாக செயல்படலாமா?


கொல்கத்தா ராஜா பஜாரில் உள்ள மதரசாவில் படித்து வரும் 63 குழந்தைகளை போலீசார் கைது பண்ணி இருக்கிறார்கள். இங்கு தீவிரவாதி பயிற்சி கொடுப்பதாக தகவலாம். பத்திரிக்கைகாரர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதை உடனே அதிகம் பகிரவும். இப்படி ஒரு பொய்ச் செய்தி வீடியோ ஆதாரத்துடன் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

ஜார்க்கண்ட் மற்றும்  கொல்கத்தாவிலிருந்து 70 மாணவர்களை தவறான முறையில்  எவ்வித ID ஆதாரமும் இல்லாது  ஆந்திராவில் உள்ள தெலுங்கானாவுக்கு கடத்தி  கொண்டு போனார்கள். அப்போது ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீஸால் பிடிக்கப்பட்டார்கள். அந்த சம்பவம் தான் இது. https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post.html

முறையற்ற வழியில் கடத்தி கொண்டு செல்லப்பட்ட இந்த மாணவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்கள். 

இது நடந்து நாலு  ஆண்டுகள் ஆகிறது. 2015ல் நடந்ததை இப்போது கல்கத்தாவில் நடந்தது என்று எவனோ ஒரு பொய்யன் உண்டு பண்ணி எழுதி உள்ளான். மம்தா பானர்ஜி ஆட்சி இருக்கும் மாநிலம் என்று அறியாமல் இந்த பொய்யை முஸ்லிம்களும்  பரப்பி வருகின்றனர்

இஸ்லாமிய விரோதிகளுக்கு எதிரான செய்தி என்ற பெயரால் பொய்ச் செய்தி போடுவது கேட்டதையும் பார்த்ததையும் அப்படியே பரப்புவது இஸ்லாத்திற்கு விரோதமான செயலா இல்லையா? 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு