கோவை முதல் மேலப்பாளையம் வரையிலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் உண்மைக் குற்றவாளிகளா?
காவல்துறையினர் குற்றவாளிகள் என்று எண்ணக் கூடியவர்களை பிடித்துச் சென்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கருணை நபியின் அறிவுரை என்ன? கைதிகள் விஷயத்தில் கீழுள்ளவர்கள் தவறு செய்தாலும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படி நடக்க வேண்டும்? ஆட்சியாளர்களுக்கு பொறுப்பான ஆட்சியாளர் நபி ( ஸல் ) காட்டி உள்ள வழிமுறை என்ன? நீதி நபி ( ஸல் ) வழி காட்டுதல்படி அப்பாவிகளை ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும். மேலும் விபரங்கள் அறிய தொடரை படியுங்கள். ஸஅது இப்னு முஆது (ர லி ) அவர்கள் மேலும் சொன்னார்கள். ”நீங்கள் விரும்பிய இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல லாம். அப்படிப்பட்ட உடலால் ஆன உதவியும் அன்சாரிகளின் புறத்திலிருந்து உண்டு. நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ள லாம். நீங்கள் விரும்பியவன் உறவை துண்டித்துக் கொள்ளலாம். ஆகவே எங்களிடம் கருத்துக்கள் கேட்க வேண்டாம். நீங்கள் கட்டளை இடுங்கள். நாங்கள் கட்டுப்படுவதற்கு தயாராக இருக்கிறோம். நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்க...