துரு பிடித்த வாள்களையா துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வைத்து இருந்தார்கள்?
நிர்ப்பந்தத்தில் நடந்த அந்தப் பத்ருப் போர் வேண்டும் என்று அன்சாரிகளும் விரும்பவில்லை . முஹாஜிர்களும் விரும்பவில்லை . ஏன் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது ( ஸல் ) அவர்கள் கூட அந்த ஏற்பாட்டில் , அந்த எண்ணத்தில் போகவில்லை . போர் வராமல் தடுப்பதற்காக எப்படி எட்டு முயற்சிகளை செய்தார்களோ அது போல் . பத்தோடு பதினொன்றாக அத்தோடு ஒன்றாக என்பார்களே அது போல் . எட்டு முயற்சிகளுக்குப் பிறகு ஒன்பதாவதாக சென்ற அந்த போர் தடுப்பு முயற்சி போராக ஆகி விட்டது. அந்த வரலாறை நாம் தெளிவாக நினைவு கொள்ள வேண்டும் . அதற்கு முன்னால் மதீனாவிலே ரசூல் ( ஸல் ) அவர்கள் ஆட்சியாளராக இருந்த அந்த பகுதியிலே வாழ்ந்த யூதர்களோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள் . இதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . இறைத்துாதர் ( ஸல் ) அவர்கள் காலத்தில் நடந்த போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே என்பதை இந்த பின்னணிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம் . தற்காப்புக்காக செய்த செயல்களை போர் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. எதிர்த்துப் போராடினார்கள். அதாவது போராட்டங்கள் செய்தார்கள் என்றே சொல்ல முடியும். ரசூல் ( ஸல் ) அவர்கள் தனது தோழர்கள