ஈமானுக்கு வேட்டு வைக்கும் வீடியோ செய்திகள் ஆதாரங்களாகுமா? கதற வேண்டியவனிடம் கதற மாட்டீர்களா?

யா அல்லாஹ் அரசியலுக்காக மாட்டிறைச்சி பெயராலும் ஜெய்ராம் போன்ற மத கோஷங்கள் பெயராலும் முஸ்லிம்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்த ஒவ்வொருவன் மீதும் அவன்களை துாண்டி விட்டு பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் உன் பிடியை இறுக்குவாயாக! அவர்கள் அத்தனை பேர் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்! என்று வல்லவன் அல்லாஹ்வை வேண்டிக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் மனமுருகி எதிரிகளுக்கு துஆச் செய்து விட்டு அடுத்த வசனத்தைப் படியுங்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/05/blog-post_28.html

அமைதி அளிக்கக் கூடிய  பாதுகாப்பு அல்லது பீதி ஏற்படுத்தக் கூடிய பயம் பற்றிய  ஏதாவது ஒரு செய்தி அவர்களுக்கு வந்து (கிடைத்து) விட்டால்  உடனே அவர்கள் அதை பொது மக்களிடம் பரப்ப ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அவ்வாறு செய்யாமல் அதனைத் தூதரிடமோ, தங்களில் அதிகாரம் உள்ள அதிகாரிகளிடமோ பொறுப்புள்ள தலைவர்களிடமோ மட்டும் தான் தெரிவிக்க வேண்டும்.

அவர்களிடம் மட்டும் தெரிவித்தால் அதை ஊகித்து - சிந்தித்து - நுணுகி ஆராயும் திறமை டைய அவர்கள் அச்செய்தியின் உண்மைத் தன்மையை, நிலையை நன்கு அறிந்து கொள்வார்கள்.  நன்கு விசாரித்து அறியும் அவர்கள் குந்த நடவடிக்கைகளை எடுத்து தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் குறைவானவர்களான மிகச் சிலரைத் தவிர மற்றவர்களா நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றி ருப்பீர்கள்.

இது அல் குர்அன் 4:83 வசன கருத்தின் மொழி பெயர்ப்பாகும்.

சமுதாயத்திற்கு  நன்மை செய்கிறோம் என்ற நல் எண்ணத்தில் பீதிகளை ஏற்படுத்தும் செய்திகளை பரப்புவதை கடமை என கருதி பலர் செய்து வருகின்றனர். செய்திடகத்துறையையும் அரசியலையும் தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் பரபரப்புக்காக பல செய்திகளை சொல்கிறார்கள். வீடியோ ஆதாரத்துடன் என்றவுடன் இந்த செய்திகளை பரப்பும் வேலையை முஸ்லிம்களாகிய நாம் செய்யக் கூடாது என்று இந்த வசனம் கடுமையாக எச்சரிக்கின்றது. அது  ஷைத்தானை பின்பற்றும் செயல் என்கிறது.

கெட்ட பெண்ணின் ஜனாஸாவை தொழ வைக்க பள்ளிக்கு கொண்டு போக முடியவில்லை பாருங்கள் என்று இரண்டுவித வீடியோக்களை வாட்ஸப்களில் வேகமாகவும் திரும்பத் திரும்பவும் பரப்பிக் கொண்டே இருந்தார்கள். கடைசியில் அது பாகிஸ்தான், மற்றும் எகிப்து சினிமா பட காட்சி என்று நிரூபணம் ஆனது.

ஈமானுக்கு ஆபத்தான இந்த மாதிரி செய்திகள் நிறைய வருகின்றன. ஒரு மனிதன் இறந்த பிறகு செய்யப்படும் வேதனைகள் வாழும் மனிதர்கள் அறியும் வண்ணம் நடக்காது என்பது நபி மொழி. இந்த நபி மொழிக்கு. மாற்றமான பொய்யான கபுர் வேதனை செய்திகளை படத்துடன் கண்டதும் பரப்புவது ஈமானுக்கு ஆபத்தானதா இல்லையா?. நபி(ஸல்) அவர்களின் சொல்லை பொய்ப்படுத்தும் செயல் நிச்சயமாக ஈமானுக்கு ஆபத்தானதுதான்.

அது போல் இதோ இந்தோனேசியா தீவுகளில் விசித்திர குள்ளர்களாஜுஜ் ஜுஜ் என  20 ஆண்டுகளுக்கு முன் வீடியோ வந்தது. அது போல் மிகச் சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன் கத்தரிக்காய் அளவுடைய யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரை போன்ற ஒருவர் இரான் மலைபகுதியில் பிடிபட்டார் இதோ வீடியோ ஆதாரம் என்று பரப்பினார்கள். இன்னும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆலிம்கள் என்ற போர்வையில் உள்ள சில அரைகுறைகள் ஆம் குர்ஆனில் உள்ளதுதான் என்று கூறி அதை உண்மைப்படுத்தினார்கள். யஃஜூஜ்மஃஜூஜ் குர்ஆனில் உள்ளதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குர்ஆனில் என்ன சொல்லி உள்ளது?

யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தார் ஏறி வராத அளவுக்கு உயரமாகவும், துளையிட முடியாத அளவுக்கு வலுவாகவும் அந்தச் சுவர் அமைந்துள்ளது. (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) அதனைக் கடந்து வர முடியாது. அதனைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது" என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் (18:97) உறுதிபடுத்தி உள்ளான்.

அப்படி இருக்க  அல்லாஹ்வின் சொல்லுக்கு மாற்றமான இந்தச் செய்தியை, அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பி வந்து விட்ட மாதிரியானதை, வீடியோ ஆதாரம் என்ற ஒரே காரணத்துக்காக நம்பி பரப்புவது அல்லாஹ்வை பலஹீனனாக காட்டும் ஈமானுக்கு ஆபத்தான செயலா இல்லையா? இதை அறியாமல் மிக வேகமாக பரப்பியவர்கள் அனைவரும்  யார்? முஸ்லிம்கள் அல்லவா?

ஒரு பகுதியில் பிரச்சனையா? பதட்டமான சூழ்நிலையா? செய்தி கிடைத்தால் அதை தகுதிவாய்ந்த தலைவர்களான பொறுப்புதாரிகளிடமும் ஆய்வு செய்வோரிடமும் தான் கூற வேண்டும். பொது வெளியில் பரப்பக் கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை. 

அங்கே அப்படி இங்கே இப்படி போன்ற செய்திகளைப் பரப்புவதால் நாளைக்கு வர வேண்டிய முசீபத்தான கலவரங்கள் இன்றைக்கே வந்து விடும். சமுதாயமும் பீதிக்குள்ளாகி கவலையில் ஆழ்ந்து நிம்மதியை இழந்து விடும். சமீபத்திய இலங்கை சம்பவம் ஒரு உதராணம்.

இலங்கை போல் மிகப் பெரிய பாதுகாப்பின்மையான பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும்போது அதை கூட்டிக் குறைத்தோ மறைத்தோ,  பரப்புவதும் தவறாகும். இது போன்ற செய்திகள் கிடைக்கப் பெற்றால் வழி நடத்தும் தலைவர்களின் கவனத்துக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். நாமாகப் பரப்பக்கூடாது என்பதைத்தான் அல் குர்அன் 4:83 வசனம் கூறுகின்றது.
 

கேள்விப்பட்டதை எல்லாம் பொதுமக்களிடம் பரப்பி குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. தகுதியான தலைவர்களின் பொறுப்புதாரிகளின் கவனத்துக்கு மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று கூறும் இந்த வசனம் (4:83). அருளப்பட்ட வரலாறு.

நபி (ஸல்) அவர்கள் போர்களுக்குப் படைகளை அனுப்புவார்கள். அப்படைகள் போரில் வெற்றியையோ, தோல்வியையோ அடைந்தால் அவற்றைப் பற்றிய விபரத்தை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் முன்னரே நயவஞ்சகர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பிவிடுவர். இவ்வாறு அவர்கள் செய்ததின் நோக்கம்.  உண்மை விசுவாசிகளின் உள்ளங்களை பலவீனப்படுத்துவதுதான் அவர்களின் இக்கேவலமான செயலை உண்மை விசுவாசிகளுக்குத் தெரிவிப்பதுதான் இந்த வசனம் இறக்கப்பட்டதன் நோக்கமாகும்.

நமது சமுதாயம் உயிரை பணயம் வைத்து வெற்றி பெறச் செய்த கட்சிகளில் வை.கோ மட்டும் தான் வட நாட்டு கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். அதனால்தான் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதை முஸ்லிம்களுக்கு எத்தி வைக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

நமது செயல்கள் செய்திகளை பரப்புவது மட்டுமே என்ற நிலையில் மட்டும் தான் உள்ளது. செய்திகளை அறிந்ததும் அல்லாஹ்விடம் மன்றாடி வேண்டினோமா? அல்லாஹ்விடம் மன்றாடுங்கள் என்று சமுதாயத்தாரிடம் வேண்டுகோள்தான் வைத்தோமா? உணர்ச்சியை துாண்டக் கூடிய வெறும் செய்தியாகத்தான் பரப்பிக் கொண்டிருக்கிறோம். 

பிரேசில், கனடா போன்ற நாடுகளில் நடந்தவைகளை கலந்து அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் சொல்லி உள்ளது போல் பாதிப்புகளை சொல்லி அல்லாஹ்விடம் மன்றாடி விட்டு மக்களையும் அல்லாஹ்விடம் மன்றாடும்படி துாண்டுங்கள். 

அவன் சர்வ வல்லமை உள்ளவன். அவன் பிடி இறுகி விட்டால் சொல்லவும் வேண்டுமா? கடைசி பத்தில் கதற வேண்டியவனிடம் கதறுங்கள். அவன் எதிரிகளை பதறி அடித்து ஓட வேண்டிய விதத்தில் ஓட வைப்பான் இதுதான் அல்லாஹ்வை நம்பி ஈமான் கொண்டுள்ளவர்கள் செயலாகும்.. கயவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.

சும்மா உணர்வுகளை துாண்டி விட்டு மீண்டும் அடுத்த தலைமுறை இளைஞர்களை சிறைவாசிகளாக ஆக்கி விடாதீர்கள். கடல் கடந்த நாடுகளின் சிறைகளிலும் இருட்டறைகளிலும் கிடக்கும் சிறைவாசிகள் உருவாக காரணமானவர்கள் பற்றி ஏற்கனவே எழுதி உள்ளேன். கதற வேண்டியவனிடம் கதறுங்கள். பதறுகளை நம்பி ஏமாறாதீர்கள்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.