1947ல் ஏற்றப்பட்ட கொடி பிரச்சனையும் மேலப்பாளையம் துப்பாக்கி சூடுகளும்.



இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1947லில் முதல் துப்பாக்கி சூடு நடந்த இடம் மேலப்பாளையம் ஜின்னா மைதானம் அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் (இன்றைய ஆஸ்பத்திரி) ரோடுதான். 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் மேலப்பாளையம் ஜின்னா திடல் அருகில் உள்ள அதே (ஆஸ்பத்திரி)  காயிதே மில்லத் ரோட்டில்தான் துப்பாக்கி சூடு நடந்தது. வரலாறுகளை அல்லாஹ்வும் அவனது துாதரும் சொல்லிக் காட்டியது படிப்பினைகளுக்காகத்தான். ஆகவே வரலாறுகளை படிப்பினைகளுடன் பார்க்க வேண்டும். மேம்போக்காகவோ உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவோ பார்க்கவும் கூடாது சொல்லவும் கூடாது.
தி.கவிலிருந்து உருவான திமு.க, ம.தி.மு.க. போன்ற கட்சிக் கொடிகள் மட்டுமல்ல பல கூறாக உள்ள எல்லா தி.க.க்கள் கொடிகள் நிறங்களும் கறுப்பு சிகப்புதான். அதன் அமைப்பில் உள்ள மாற்றங்களை கூர்ந்து கவனித்துதான் எந்தக் கட்சி கொடி என முடிவுக்கு வர முடியும். அதுவே கரை வேட்டியாக இருந்தால் ரொம்பவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதுபோலத்தான் அ.தி.மு.க, அ.ம.மு.க கொடிகள் நிலை.

TNTJ கொடியின் கலர்களும் துப்புரவு தொழிலாளிகளான அருந்ததியினர் கொடியின் கலர்களும் ஒன்றுதான். அக்ரம்கானின் IJP (..க) கட்சியிலிருந்த (TNTJ) கொடியை உருவாக்கிய மேலப்பாளையவாசிகளான மசூது போன்றவர்கள் அந்தக் கொடியுடன் வேனில் சென்றார்கள். அப்பொழுது எங்கள் கொடியை எப்படி பயன்படுத்தலாம் என்று அருந்ததியினரால் மறிக்கப்பட்டார்கள். அக்ரம்கான் தலையிட்டு சரி செய்தார். பிறகு அருந்ததியினர் கொடியை தலைகீழாக மாற்றினார்கள். அதுதான் அக்ரம்கானிடமிருந்து வாங்கப்பட்ட இன்றைய ததஜ கொடி.

1947ல் மேலப்பாளையத்தில் ஏற்றப்பட்டது மு.லீக் கொடியா? பாகிஸ்தான் கொடியா? என்ற விளக்கத்துடன் ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது. அதை ஒட்டி நடந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடுகளும் நடந்தன. மேலப்பாளையத்தைச் சார்ந்த 11 பேர் மீது குண்டுகள் பாய்ந்தன.  இந்த வரலாற்று சம்பவத்தை முஸ்லிம்களின் நண்பன் என்று சொல்லப்பட்ட எந்த முதல்வரும் சட்டமன்றத்தில் சொன்னது இல்லை.

முஸ்லிம்களின் எதிரியாக காட்டப்பட்ட எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபொழுதுதான் இந்த வரலாற்றை சட்ட மன்றத்தில் சொல்லிக் காட்டினார். மு.லீக் கொடியா? பாகிஸ்தான் கொடியா? என்ற விளக்கம் அளித்தவர்களே மேலப்பாளையத்தைச் சார்ந்த 11 பேர் ஏன் சுடப்பட்டார்கள் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மு.லீக் கொடியா? பாகிஸ்தான் கொடியா? என்று வித்தியாசம் தெரியாதவர்கள் இன்றும் இருப்பது போலவே காங்ரஸ் கொடிக்கும் தேசிய கொடிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படியானால் அன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?

இன்று இருப்பது போல்தான் அன்றும் மைக் மாவீரர்கள் இருந்தார்கள். அவர்கள் தான் சிந்தனையை துாண்டாமல் உணர்ச்சிகளை துாண்டி விட்டு துப்பாக்கி சூடுகளுக்கு காரணமாக இருந்தார்கள். துப்பாக்கி சூடு நடந்ததும் கதவை பூட்டி வீட்டில் இருந்து கொண்டார்கள்.

1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதைக் கண்டித்து வி.பி. சிங் தலைமையில் கூடியவர்கள் டிசம்பர் 10 ஆம் தேதி இந்திய அளவில் கடை அடைப்பு போராட்டம் அறிவித்து இருந்தார்கள். 

மேலப்பாளையத்திலிருந்த மைக் மாவீரர்கள் தங்கள் இருப்பிடத்தைக் காட்ட 7 ஆம் தேதியே கடை அடைப்பு போராட்டம் ஊர்வலம் என அறிவித்தார்கள். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு இரண்டு சிறுவர்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள். 25 பேர் காயம் அடைந்தார்கள்.


சுயநலமிக்க மடத்தனமான மைக் மாவீரர்கள் துாண்டுதலால் போர்க்களமானது மேலப்பாளையம். 

ஜின்னா திடல் அருகில் காயிதே மில்லத் ரோட்டில் இருந்த பத்திர பதிவு அலுவலம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 

மேலப்பாளையம் தலைமை தபால் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. மேலப்பாளையம் மக்களுக்கு சப்ளை செய்ய வந்த குடி நீர் வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தீணை அணைக்க வந்த தீ அணைக்கும் படை வண்டியும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு மைக் மாவீரர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களே உதவினார்கள். துபை எவர்ஸைன் அதிபர் தேவி பட்டணம் பாரூக் கொடுத்த பணத்தை மு.லீக் சார்பில் ஸமது சாகிப் வந்து கொடுத்தார். இதனால் ஏற்பட்ட வழக்குகள் முடியும் வரை அல்லாஹ்வின் அருளுக்குரியவரே கடைசி வரை உதவி வழக்கை முடித்து வைத்தார்.

கொண்டை ஷாகுல் போன்றவர்கள் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் ஏராளம். தொண்டை தொழிலாளிகளான மைக் மாவீரர்கள் பற்றி முன்பு எழுதி உள்ளது இது போன்ற அனுபவத்தால்தான்.

பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்த பத்திரங்கள் எல்லாம் யாருடையது? மேலப்பாளையம் ஊருக்குள் இருந்த பத்திர பதிவு அலுவலகத்தை ஊருக்கு வெளியில் கொண்டு போய் விட்டார்கள். பிறகு போராடி அம்பை ரோட்டுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

உண்மைகளைச் சொல்லி சிந்தனையை துாண்டாமல் உணர்ச்சிகளை துாண்டி விட்டு குளிர் காயும் தொண்டை தொழிலாளிகளான மைக் மாவீரர்கள் விஷயத்தில் சமுதாயம் என்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதற்காகவே இந்தப் பதிவு.

தீவிரவாதத்தை துாண்டும் எவனாக இருந்தாலும். தீவிரவாதத்தில் ஈடுபடும் எவனாக இருந்தாலும் அடிதடியே தீர்வு என அலையும் எவனாக இருந்தாலும் அவன்கள் மீது யா  அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக! ஆமீன். யா  அல்லாஹ் அவன்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

குறிப்பு ; -  இது வரலாற்று சம்பவம் என்பதால் பலர் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சுட்டிக் காட்டி உள்ளார்கள். ஊர்வலம் நேராக  post office யை attack  பண்ணிவிட்டு குறிச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது.சில பெரியவர்கள் வேண்டாம் என்றும் பிறகு  policeல் compliant பண்ணுவோம் வாருங்கள் என்றார்கள் .police என்ன  நினைத்தது என்றால் police stationனை attack  பண்ண வருகிறார்கள் என்று நினைத்து சூடு நடத்தினார்கள் போன்ற தகவல்களை சுட்டிக் காட்டி உள்ளார்கள். 

சார்பதிவாளர் அலுவலகம் சம்பந்தமாகவும் மாற்று கருத்து கூறி உள்ளார்கள். 

பாதிக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியலை எனக்கு த.மு.சா. காஜா மைதீன் அவர்கள்  முதலில் அனுப்பினார்கள். அதன் பிறகு முன்னாள் நகர் மன்ற தலைவர் M.A.S. அபுபக்கர் ஸாஹிபு  V.S.T. ஷம்சுல் ஆலம் Ex MLA போன்றவர்கள் அனுப்பி தந்தார்கள். மேலப்பாளையத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளால் அரசியல் ஆசான் என்று அழைக்கப்பட்ட செ.கா.மு.யூசுப் அவர்கள் அவ்வப் போது போனில் தகவல் சொன்னார்கள். 1992லேயே எனக்கு கிடைத்த ஆதார தகவல்களை JPG பைலாக இணைத்துள்ளேன். 

இந்த பதிவின் நோக்கம் பொறுப்புள்ள ஒரு தலைமையின் கீழ் செயல்படாமல் தான் தோன்றிகளின் பின்னால் சென்றதால் ஏற்பட்ட விளைவுகளை சுட்டிக் காட்டுவதே.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.