ஷரீஅத் அட்வகேட்டிற்கு(?) சரமாரி கேள்விகள். பீ.ஜே.5ஆவது உரை


நான் கேட்கவில்லை இமாம்கள் கேட்கிறார்கள், ஷரீஅத் அட்வகேட் ஸைபுத்தீன்  ரஷாதி  என்று  போஸ்ட்டா் அடித்து ஒட்டி இருக்கிறார்கள். அட்வகேட்  மாதிரி பேச  வேண்டாமா? பீ.ஜே. காட்டமான கேள்வி.

அஸ்ஸலாமு அலைக்கும். அன்புள்ள சகோதரர்களே! விவாதம் வந்து ஒரு அமர்வு முடிகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறது. இவ்வளவு (40 நிமிட) நேரத்திலேயும் ஒரு ஆதாரத்தைக் காட்டவில்லை. இஜ்மாஃ என்பது ஆதாரம்தான் என்பதற்கு எந்த வசனத்தை வைத்து சொன்னீர்கள். அல்லது எந்த ஹதீஸை வைத்து சொன்னீர்கள். அது நீங்கள் சொன்ன அந்த இஜ்மாஃவைத்தான் அது சொல்லுது என்பதற்கு என்ன ஆதாரம்.

ஆதாரங்களைக் கொண்டு நிறுவாமல் நீங்கள் அப்படித்தான் சொன்னீர்கள், நீங்கள் சொன்னீர்கள் என்பதுதான் பதிலாக இருக்கிறது. நீங்கள் கவனிக்க வேண்டும். அடுத்து வந்து நான் முன்னாடி சொன்னதை மாற்றிக் கொண்டேன் என்று சொல்லும்போது. அப்ப கால வரையரை சொல்லுங்கள். நீங்க தஃவா களத்திலே இருக்கும்போது தான் அதை சொன்னீர்கள் என்றார். http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/4.html 

அப்ப நீங்க துர்ருல் முக்தார்லே மாரஜஅ அன்ஹு அபுஹனீபா என்று போடுங்கள். அபு ஹனீபா சொல்லி விட்டு மாறியவை என்று. ஒரு அறநுாறு(600) இருக்கிறது நான் தேடிய வகையிலே. அபு ஹனீபா சொல்லி விட்டு மாறினது. அவருக்கு  (அபு ஹனீபாவுக்கு) என்ன கால வரையரை கொடுத்தீர்கள். அவரு (அபு ஹனீபா) தஃவா களத்திலேதான் ரண்டையும் சொன்னாரு.

தஃவா களத்திலே இருக்கும் போதுதான் ரண்டையும் சொன்னாரு. ஷாபி இமாமுக்கு கதீமு ஜதீது என்று இருக்கிறது. முதலில் சொன்னதையெல்லாம் மாற்றினார் என்று சொல்லி. அதுக்கு என்ன கால வரை. அவரும் தஃவா களத்திலேதான் ரண்டையுமே சொல்றாரு. அப்படியென்றால் இதெல்லாம் வேண்டும் என்று திசை திருப்புவதாகும் வாதம் இல்லாததினாலே, நிறுவுவதற்கு வழி இல்லாததினாலே, ஒரே பீடி பீடி திருப்பி திருப்பி சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அப்ப ஹோமோ செக்ஸுக்காக மதரஸா பூட்டப்பட்ட விஷயங்களையெல்லாம் வரிசையாக எடுத்து விடலாமா?  என்ன என்கிறேன். ஆதாரத்தோடு சொல்லுவேன் அவ்வளவையும். இதெல்லாம் தேவையற்றது. அதாவது திருப்பி திருப்பி சொல்வதினாலே. சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் என்று சொல்லுவது.

அதை விட்டு விடுங்கள் இதெல்லாம் உங்கள் வாதத்தை நிறுவாது. இதெல்லாம் உங்கள் வாதத்தை நிறுவதற்கு உதவவே உதவாது. நல்ல விளங்கிக் கொள்ளுங்கள். இஜ்மாவை நிரூபித்தீா்களா என்றுதான் மக்கள் பார்ப்பார்கள். அடுத்து என்ன?

அடுத்து என்ன செய்கிறார்கள் என்று கேட்டால். இப்ப நாளு(4) இமாம் விஷயத்தை நான் சொன்னேன். அஹ்மது இமாம் சொன்னதற்கு ஆதாரம் தா என்று கேட்டீர்கள். சரி ஓ.கே. மீதி மூணு (3)க்கு எங்கே பதில். மீதி மூணு (3)க்கு? அபு ஹனீபா இமாம் இஜ்மாஃ ஸஹாபி உடைய இஜ்மாவை மீறினார் என்று நான் சொன்னேன் இல்லையா? 

எதுக்கு முதலில் பதில் சொல்லணும். பீடியை விட, அந்நஜாத்தில் எழுதியதை விட, நேற்று சொன்னாரு என்று சொல்வதை விட எதுக்கு பதில் சொல்லணும் எதுக்கு நேரம் தேவை.

ஆஹா அபுஹனீபாவே இஜ்மாவை மீறிட்டார் என்று சொல்கிறார்களே என்று கொதித்து பதறி அதற்கு அல்லவா ஆன்சர் பண்ணணும். அதுக்கு பதிலைக் காணோம். ஷாபி இமாம் சொன்னதைக் கேட்டேன். ஷாபி இமாம் சொன்னது தெரிந்திருக்கிறது. அது (ஷாபி இமாம் சொன்னதை) கேட்கவில்லை. அஹ்மது இமாம் சொன்னதை எதுக்கு கேட்கிறார்கள் என்று கேட்டால். அவர் சம்பந்தமா ரண்டு ரியாயத்து இருக்கிறது. அவரு அறவே மறுத்தார் என்கிற மாதிரி ரிவாயத்து இருக்கிறது. அவர் சொன்னாரு (என்றும் ரிவாயத்து இருக்கிறது) அதுக்குதான் கேட்குறாக.

இருந்தாலும் நான் சொன்னதற்குள்ள ஆதாரம் நிறைய வைத்திருக்கிறேன். இருந்தாலும் ஒன்று கொடுக்கிறேன் சபையோர் தெரியும்படியாக. இன்னும் நிறைய இருக்கு எந்த எந்த நுால்களிலெல்லாம் அவா் சொல்லி இருக்கிறார் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. 

நான் என்ன கேட்கிறேன் என்றால், மாலிக் இமாம் சொன்னதற்கு என்ன பதில்? அபு ஹனீபா இமாம் சொன்னதற்கு பதில் எங்கே? ஷாபி இமாமுக்கு பதில் எங்கே? ஹன்பலி இமாமுக்கு இந்தா (இதோ) பேப்பரை கொடுத்தாகி விட்டது. 

மீதி உள்ளதற்கு நீங்கள் ஏன் ஆதாரம் கேட்கவில்லை. தெரியுது நம்ம தவறுலே இருக்கிறோம். இதை வந்து நிலை நாட்ட இயலாது. நம்ம சொல்லக் கூடிய இஜ்மாஃ வந்து உம்மத்துடைய இஜ்மாஃ கிடையாது. அப்படி யாருக்கும் அந்த கருத்து இல்லை. பல கருத்தில்தான் இருந்திருக்கிறார்கள். நல்ல விளங்குகிறது. நல்ல புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து என்ன என்று கேட்டால். அப்புறம் கேட்கிறார்கள். எப்படித் தெரியும்? என்று கேட்கிறார்கள் என்று. உதாரணமாக சொல்கிறோம் உமா் ரலியல்லாஹு ஆட்சி காலம். அவர்கள் ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள். கொண்டு வந்தார்கள் என்றால் அந்த மதீனாவிலே இருக்கிற மக்களுக்குத் தெரியும். சுற்று வட்டாரத்திலே இருக்கிற சில ஊர்களுக்குத் தெரியும். கொஞ்சம் லேட்டாத் தெரியும். பாரசீகம் வரைக்கும் போய் விட்டதா? அங்கே வரைக்கும் ஸஹாபாக்கள்தான் ஆளுமையில் இருக்கிறார்கள்.

இங்கே இருந்து உள்ள செய்தி உமர் சொன்னார். இதையே மேட்டராக கொண்டு போய் எல்லாரும் சோ்த்துக் கொண்டு இருப்பார்களா? எல்லாருக்கும் போய் சென்றடைந்தால்தான். சென்றடைந்தது என்று ஒரு அறிவிப்பைக் காட்டி அது காதில் விழுந்து அவர் ஏற்றுக் கொண்டார் என்று காட்டினால்தானே அது இஜ்மாஃ என்று வரும்.

உமா் ரலியல்லாஹு காலத்திலே மதீனாவிலே உள்ள யாரும் ஆட்சேபனை செய்யவில்லை என்றால் மதீனாவில் மட்டும்தான் இருந்தார்களா? அந்த நாடு பெரிய சாம்ராஜ்யம் இல்லையா? இந்தியாவுக்கு நிகரான (அல்ல அதை விட கூடுதலான மிகப் பெரிய) ஒரு நிலப்பரப்பில் இருந்து கொண்டு அந்த நுாற்றாண்டை கற்பனை பண்ணி பாருங்கள்.

இந்த திருச்சியிலே இருந்து சொல்லக் கூடிய ஒரு சொல்ல. உ..பி. வரைக்கும் போகுமா அந்தக் காலத்திலே. தொலை பேசி இருந்ததா? பேக்ஸ் இருந்ததா? இண்டர்நெட் இருந்ததா? எந்த விதமான சாதனங்களும் இல்லாமல். இப்படி ஒரு மஸாயில் தீர்ப்பளித்தார்கள் என்பது போய் சேருமா?

முடிவு எடுத்து சட்டம் ஆக்கினார் என்றால், அந்த சம்பவம் ஒரு  கேஸ் வரும்போது சட்டம் ஆக்கி இருப்பார்கள். முடிந்து போய் விட்டது கதை. அதற்குப் பிறகு சோ்ந்து இருந்தது என்றால் எதிர்த்தார்களா? எதிர்க்கவில்லையா என்பது தெரியும் என்று நான் கேட்கவில்லை. என்று ஷாபி இமாம் கேட்கிறார். அதை நான் வழி மொழிகிறேன்.

என்று ஹன்பலி இமாம் கேட்கிறார். எப்படிப்பா உனக்குத்  தெரியும் எல்லாரும் சோ்ந்து என்று எப்படி சொல்லுவாய். எங்கெங்கேயோ யார் யாரெல்லாமோ இருந்திருக்கிறார்கள். எல்லாரும் அதை ஒத்துக் கொண்டார்கள். ஏற்றுக் கொண்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும். 

அப்படி கேட்டால் இதெல்லாம் ஒரு கேள்வியா? மக்களிடம் சொன்னார்கள் எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள் என்றால் மதீனா மட்டும்தான் உலகமா?
ரசூலுல்லாஹ் உடைய ஸஹாபாக்கள் மதினாவில் மட்டும்தான் இருந்தார்களா? வேறு எங்கேயுமே ஸஹாபாக்கள் யாருமே மதீனாவை தாண்டி போகவே இல்லையா? அப்ப எப்படி நீங்கள் மதீனாவில் சொல்லும்பொழுது அனைவரும் கேட்டுக் கொண்டார்கள்?

அனைவரும் கேட்டுக் கொண்டார்கள் என்பதை 2ஆவது வருவோம் தலாக்கை விளக்கும் போது வைத்துக் கொள்வோம். நான் என்ன கேட்கிறேன் என்றால், இது வந்து இஜ்மாஃ என்கிறது எப்படி தீர்மானித்தீர்கள். எவ்வளவு வெயிட்டான ,வேலிவ் புல்லான ஒரு கேள்வி. எவ்வளவு அர்த்த புஷ்டியான கேள்வி. ஷாபி இமாம் அவர்கள் கேட்கிறார்கள். நீ வந்து அவதுாறு செய்கிறாய்.

அவா்களெல்லாம் ஏற்றுக் கொண்டார்கள் என்றால், ஏற்றுக் கொண்டேன் என்று உங்கிட்ட சொன்னார்களா? தெரியவில்லை என்று சொல்லு. இப்படி சொன்னார். உமர் ரலியல்லாஹு அன்ஹு கிலாபை நாங்கள் அறியவில்லை என்று சொல்லு. இஜ்மாஃ என்று சொல்லாதே. அனைவரும் ஒத்துக் கொண்டார்கள் என்று சொல்லாதே.

அவா் சொன்னதற்கு யாரும் மாற்றம் செய்ததாக எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை. இது உண்மை. அவர்களில் மறுப்பவர்களும் இருந்திருக்கலாம். ஏற்பவர்களும் இருந்திருக்கலாம். அப்ப ரண்டுக்கும் வாய்ப்பு இருக்கக் கூடிய நேரத்திலே, ஒருவன் சொல்லாத சொல்லுக்கு அவனை சொந்தக்காரனாக ஆக்குவதுக்கு மிஞ்சின ஒரு அவதுாறு என்ன இருக்க முடியும் என்று ஷாபி இமாம் கேட்கிறார்.

ஏன் அரபியை வாசிக்காமல் சொல்கிறேன் டைம் சேவ் பண்ணுவதற்குத்தான். கேட்டால் ஆதாரம் வைத்திருக்கிறேன். பேப்பர் வைத்திருக்கிறேன். அவர்களும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். சொல்லி ஆதாரம் கொடுத்து பேச வேண்டியது இல்லை. மற்ற குரூப் மாதிரி கிடையாது. அவா்கள் எல்லாம் இதெல்லாம் தெரிந்து படித்துதான் வந்திருக்கிறார்கள். கேட்டால் எடுத்து கொடுப்போம்.

எதற்கு இதைச்  சொல்கிறேன் என்று கேட்டால் இஜ்மாஃ நடந்து விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்களே இது எவ்வளவு வெயிட்டான கேள்வி. இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நீங்கள். எப்படி ரசூலுல்லாஹ் கால ஸஹாபாக்கள் செய்த இஜ்மாஃ பாரசீகம் ரோமாபுரி வரைக்கும் உள்ள அனைத்து ஸஹாபாக்களையும் சென்றடைந்து. அனைவரும் அதை ஆட்சேபனை செய்யவில்லை என்று எதை வைத்து முடிவு செய்வது.?

மதீனாவில் முடிவு செய்தார்கள் என்று ஒரு ஸஹாபி அறிவிப்பார். ஒரு தாபி அறிவிப்பார். அவா் மதீனாவிலே யாருமே ஆட்சேபனை செய்யவில்லை என்று சொன்னால் இஜ்மாஃ ஆயிடுமா? மதீனாவில் ஆட்சேபனை பண்ணவில்லை என்று மட்டும்தான் ஆகும். அகில உலகத்திலேயும் ஆட்சேபனை பண்ணவில்லை என்று ஆகாது.

ஸஹாபாக்கள் அனைவரும் இஜ்மாஃ பண்ணினார்கள் என்று இதை வைத்து எப்படி அவதுாறு சொல்வீா்கள். அவா்கள் மீது நீங்கள் எப்படி பழி சொல்வீர்கள். அப்ப ஏன் இல்லாத ஒன்னை அவதுாறு சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன். இஜ்மாஃ எதனால் சாத்தியம் இல்லை என்கிறோம்.

அடுத்து என்ன என்று கேட்டால் இன்னொன்று பதில் சொல்லி விடுகிறேன். அப்ப இவா் வந்து எதெல்லாம் மாத்துனீங்க சொல்லுங்கள் நாங்கள் கேட்க மாட்டோம் என்கிறார். ஏங்க இஜ்மாஃ சம்பந்தமாக விவாதிக்க வருகிறோம் இல்லையா? ஒப்பந்தம் போடுகின்றோம் இல்லையா. மாற்றி விட்டோம் என்றுதானே அர்த்தம். ஏற்கனவே ஒன்று எழுதினோம் என்று காட்டுகிறாரு. எழுதியதை மாற்றா விட்டால் இந்த விவாதத்துக்கு வருவேனா?

விவாதத்துக்கு கூப்பிடுவதிலேயே விளங்குகிறது. அதை மாற்றி விட்டேன் என்று. அதற்கு இப்ப எடுக்கலாமா? எதெல்லாம் மாற்றி விட்டோம் சொல்லுங்கள் நாங்கள் கேட்க மாட்டோம் என்கிறீர்களே! மாற்றி விட்டோம் என்று உலகறிய ஒப்பந்தம் போட்டதில்தானே கையெழுத்து போட்டு இருக்கிறீா்கள். மாற்றி விட்டுதானே ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம்.

இஜ்மாஃ ஆதாரமா என்று நான் கேள்வி கேட்டு மறுத்துதான் ஒப்பந்தத்திலே சொல்லி விட்டேனே. அதற்குத்தானே விவாதத்திற்கு வந்திருக்கிறேன். வந்ததிலிருந்து அந்த கருத்தில் நான் மாறி விட்டேன் என்று தெரிகிறதா இல்லையா? மாறினால் கேட்க மாட்டேன் விட்டு விடுகிறேன் என்றீர்களே. அதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் மாறியதை. மாறிட்டேன் சொல்லி வாதத்திலே உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். மாறிட்டேனா நான் கேட்பேனா (என்பது) என்ன இது லாஜிக்கு.

ஷரீஅத் அட்வகேட் என்று சொல்கிறார்கள். அட்வகேட் மாதிரி பேச வேண்டாமா? போஸ்ட்டா் அடித்து ஒட்டி இருக்கிறார்கள். அட்வகேட் இப்படித்தான் பேசுவார்களா, ஒரு லாஜிக் இருக்க வேண்டாமா? ஒரு அறிவுப்பூாவமான விவாதம் வேண்டாமா? அப்ப அந்த மாதிரியான அடிப்படையில் உள்ளதற்கு வந்து நீங்கள் வந்து பதில் சொல்லவே கிடையாது.

அப்ப இதற்கெல்லாம் நீங்கள் சொல்லணும். எதற்கு சொல்லணும். அந்த இமாம்கள், அபு ஹனீபா இமாம் சொன்னதற்கு என்ன பதில்? ரண்டு உதாரணம் காட்டி இருக்கிறேன். ரண்டை சொன்னால் அடுத்துடுத்து காட்டுவேன். இஜ்மாஃ ஸஹாபாவை மீறி முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதற்கு என்ன பதில்,

அப்ப ஸஹாபாக்கள் இஜ்மாஃ செய்த பிறகு அதை மாற்றலாமா? அதற்கு என்ன பதில். அல்லது ஆதாரப்பூா்வமான ஒரு ஹதீஸ் இருக்கிறது ஹதீஸில் ஒரு குறையும் இல்லை. இஜ்மாஃ செய்து அதை மாற்றலாமா? அதுவும் கேட்கணும். ஏனென்றால் அதுவும் உங்கள் மத்ஹபு கிதாபுகளில் இருக்கிறது. அதற்கு ஒரு பதில் உங்கள் மத்ஹபு கிதாபுகளில் இருக்கிறது. 

உங்கள் உஸுலில் படித்திருக்கிறீர்கள். (நீங்கள்) நாற்பது வருஷம் படித்த கிதாபிலே இருக்கிறது. அப்ப நீங்க என்ன செய்யணும் ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது. அதற்கு மாற்றமாக எல்லாரும் இஜ்மா பண்ணி விட்டார்கள். இஜ்மாஃ வந்து ஹதீஸை மாற்றி போட்டு விட்டது. என்ற அளவுக்கெல்லாம் சொல்கிறார்களே அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீா்களா? இல்லயைா? அப்படி இல்லை என்கிறீா்களா?

அப்ப இஜ்மா என்பது வந்து குர்ஆன் ஹதீஸை வைத்துதான் எடுக்கணும் என்று ஒரு பக்கம் சொல்கிறீர்கள். குா்ஆன் ஹதீஸில் இருந்தாலும் அது வந்து அதையும் நாங்க இஜ்மாஃ மூலம் மாற்றுவோம் என்கிறீர்கள். ஏன் இவ்வளவு பெரிய தடுமாற்றம். அதற்கு நீங்கள் பதில் சொல்லவே கிடையாது.

புதுக் கேள்வி கேட்காமல் நான் பழசையே ஞாபகப்படுத்தி கேட்கிறேன். அதற்கெல்லாம் பதில் வந்ததா என்று நீங்கள் பாருங்கள். நாளு மத்ஹபும் சேர்ந்து இஜ்மாஃ செய்யணுமா? ஒரு மத்ஹபு தனியா செய்யணுமா? என்று கேட்டேனா இல்லையா? அதற்கு எங்கே பதில்? 

இவா்கள் இஜ்மாஃ என்று சொல்கிற மஸாயில்களெல்லாம் வேற மத்ஹபுகளிலே மாற்றமாக இருக்கிறதே. அப்ப இஜ்மாஃ உம்மா என்று ஏன் சொல்கிறீா்கள். முஜ்தஹிதில் உம்மாஃ என்று ஏன் சொல்கிறீா்கள்.

முஜ்தஹிது என்றால் ஹனபி மட்டும்தான் முஜ்தஹிதா? அவா்கள் (ஹனபிகள்) எடுப்பது மட்டும்தான் மார்க்கமா? அப்ப  அவுங்களெல்லாம் ஷாபியாக்களெல்லாம்  இஜ்மாஃ செய்ய அதிகாரம் இல்லை என்கிறீா்களா? ஓபனா சொல்லுங்கள் எல்லாவற்றையும். எல்லாவற்றுக்கும் பொதுவாக சுன்னத் ஜமாஅத் சார்பாகத்தான் பேச வந்திருக்கிறீர்கள். ஹனபி மத்ஹபுக்கு மட்டும் பேச வரவில்லை நீங்கள். உங்கள் வாதப்படி நாளு மத்ஹபும் சுன்னத் ஜமாஅத்து.

இஜ்மாஃ செய்யக் கூடிய அதிகாரம் வந்து ஹனபிக்கு மட்டும் இருப்பதாக சொல்கிறீர்களா? அல்லது நாளு இமாமும் கூடி கூடி மஷுரா பண்ணி, பண்ணி அந்த முடிவு எடுக்கணும் அப்படி (என்று சொல்கிறீா்களா?) தெளிவு படுத்தணும் இல்லையா? இதை கேள்வி கேட்கிறோம் இதற்கு பதில் சொல்லவில்லை.

எதற்காக வேண்டி இந்த விஷயத்தைப் போட்டு குழப்புகிறீர்கள். ஆதாரத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பது என்று வைத்துக் கொண்டால், ஒருத்தன் எடுத்தாலே முடிந்து போய் விட்டது. ஒரு ஆளு அப்படியும் சொல்கிறார். 

நிழாம் என்று ஒருத்தா் சொல்கிறார். ஒரே ஒருத்தர். ஒரு முடிவு எடுத்ததற்கு ஆதாரம் இருந்தால் அதுதான் இஜ்மாஃ என்கிறார். ஒருத்தன்தான் செய்தான் ஆதாரத்தை காட்டி விட்டான் அதுதான் இஜ்மாஃ அப்படி என்று சொன்னவா்களும் இருக்கிறார்கள். இஜ்மாஃவுக்கு விளக்கம். 

அதனாலே இஜ்மா? இஜ்மாஃ என்ற அந்த வார்த்தையை வைத்துக் கொண்டு நீங்கள் வந்து அல்லாஹ் ரசூலுடைய தீனில் விளைாயாடாதீர்கள். மார்க்கத்தில் விளைாயாடாதீர்கள். மார்க்கத்தை உருவாக்குகிற அதிகாரம் மனுஷனுக்கு இருக்கு என்று சொல்ல வராதீர்கள். அல்லாஹ்வுக்கு நீங்கள் தீனை கற்று கொடுக்காதீர்கள். அல்லாஹ் சொல்லாமல் விட்டு விட்டான் என்று காட்டாதீர்கள். 

அதிலிருந்து விளங்கிதான் எடுப்பது இஜ்மாஃ என்று சொன்னால் அதற்கு இஜ்மாஃ தேவை இல்லை. ஒருத்தன் சொன்னால் போதும். விளங்குவதுதான் இஜ்மாஃ என்று சொன்னீர்கள் என்றால், விளங்குகிற மாதிரி ஒருவன் ஆய்வு செய்து சொல்லி விட்டானேயானால். அது கரக்டாக இருக்குமேயானால் அது ஓ.கே.

அதை ஏன் ஏற்றுக் கொள்கிறோம். அதிலே இருக்கிறதாலே ஏற்றுக் கொள்கிறோம். அந்த வசனத்தில் அந்த கருத்து இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறோம். அந்த ஹதீஸில் அந்த கருத்து இருக்கு என்று ஏற்றுக் கொள்கிறோம். 

ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து சொல்கிறார்கள். ஆய்வு செய்து சொல்கிறார்கள் ஏற்றுக் கொள்வோம். எதற்காக வேண்டி ஆயிரம் பேருக்காக ஏற்றுக் கொள்ளவில்லை. கரக்டாக இருக்கிறதற்காக வேண்டி.

ஆயிரம் பேர் சொல்கிறார்கள் அவர்கள் சொல்கிற வசனத்திற்கும் அவா்கள் முடிவுக்கும் சம்பந்தமில்லை அப்ப என்ன சொல்வோம் இது தப்பு என்று சொல்லி விடுவோம். அப்ப நம்பரை வைத்து (தீா்மானம் இல்லை)

நீங்களே சொல்கிறீர்கள் ஒப்பந்தத்திலே சொல்கிறீர்கள் இப்பவும் சொன்னீர்கள் என்ன சொன்னீர்கள் (குா்ஆன் ஹதீஸிலே) நேரடியாக இல்லாத விஷயத்தில். இருக்கும் அதில் உள்ளதை எடுத்துக் காட்டிதான் செய்யணும் என்றுதான் சொல்கிறீர்கள். அப்படி எடுத்து காட்டிதான் (நீங்கள் இஜ்மாஃவெல்லாம் (செய்தீர்களா?)

நான் இஜ்மாஃ பட்டியலை வாசிக்கிறேன். இஜ்மாவிலே நீங்கள் எடுத்த முடிவெல்லாம். மத்ஹபு கிதாபுகளிலே இஜ்மாஃ இஜ்மாஃ என போட்டிருக்கிறீர்களே. இதெல்லாம் எந்த வசனத்தை வைத்து எடுத்தீர்கள் என்று நான் கேட்பேன். 

எந்த ஹதீஸை வைத்து ஆய்வு (செய்து எடுத்தீர்கள் என்றும் கேட்பேன்) இஜ்மாஃவா என்பதையும் கேட்பேன். எந்த மாதிரி இஜ்மாஃ கேட்பேன்.

நீங்கள் வந்து தலைப்பு என்ன? இஜ்மாஃ என்பது ஒரு கான்செப்ட்டா? மார்க்கத்தில் உண்டா? எதுக்கு தேவையற்ற ஒன்று. இவ்வளவு குழப்பம் ஒன்றை. இன்னும் சொல்கிறேன். மார்க்க ஆதாரமாக இருந்தால் இம்புட்டு (இவ்வளவு) குழப்பம் வருமா? அடிப்படையிலா குழப்பம் வரும். (உங்கள் கொள்கைப்படி) மார்க்கத்தின் ஒரு மூல ஆதாரம் என்கிற ஒரு வகையில் இருக்கிறது.

உங்கள் உஸுல் பிக்ஹ்லே எழுதி வைத்திருக்கிறார்கள். வஹி வந்து  குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான். ரண்டுதான் வஹி, மற்றதெல்லாம் வஹி இல்லை என்று எழுதி இருக்கிறார்கள். நீங்கள் சொன்ன உஸுல் பிக்ஹ் கிதாபிலேயே. 

அப்ப இஜ்மாஃவெல்லாம் வஹி கிடையாது. அப்ப வஹி இல்லாமல் இருந்து கொண்டு அதைப் போய் நம்ம ஏற்று இது இஜ்மாஃவா? ஸஹாபி சொன்னாதான் இஜ்மாஃவா? மதீனாவாசி சொன்னாதான் இஜ்மாஃவா? மக்கா,மதீனா சேர்ந்து சொன்னாதான் இஜ்மாஃவா, அல்லது முஜ்தஹிது சொன்னாதான் இஜ்மாஃவா? கஸ்ஸாலி இமாம் சொல்கிறார். முஜ்தஹிதெல்லாம் கிடையாது.
(நேரம் முடிந்து விட்டது)



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.