அபுஹனீபா,இமாம் ஷாபி தப்புசெய்து விட்டாரு. ஸைபுத்தீன் ரஷாதி 4ஆவது உரை-


குா்ஆன் ஹதீஸி்ல் இல்லாவிட்டால் இஜ்மாஃ என்று சொல்லி விட்டு குர்ஆன் ஹதீஸில் தெளிவாக உள்ளதற்கு மாற்றமாகவும்- எதிராகவும் சொல்லப்பட்ட சட்டத்தை இஜ்மாஃவுக்கு உதாரணமாக காட்டுகிறார் 

(மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்களுடைய இந்த நிலைபாடு உண்மையானது என்றால் பாராட்டத் தக்கது. இப்படி  சொல்லிக் கொண்டே திரும்ப திரும்ப சொல்லி அவரது மதிப்பை அவரே கெடுத்துக் கொள்கிறார் )
(நிலைபாடுகள் மாற்றம் பற்றி பல பொதுக் கூட்டங்களிலும் பீ.ஜே. விளக்கி இருக்கிறார். அதை அதை விமர்சித்து இவரும் பேசி இருக்கிறார். இப்பொழுது இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் வைக்க முடியாததை மறைக்க இப்படி பேசுகிறார்)
(இஜ்மாஃ என்றால் என்ன என்பது அல்ல கேள்வி. இஜ்மாஃ செய்ய குர்ஆன் ஹதீஸுகளில் ஆதாரம் இருக்கிறதா? என்பதுதான் கேள்வி. இதற்கு பதில் சொல்லாமல்  இஜ்மாஃ என்றால் என்ன என்று விளக்கியே நேரத்தை போக்குவதால். ஸைபுத்தீன் ரஷாதி உரை மூலம் இஜ்மாஃ செய்ய குர்ஆன் ஹதீஸுகளில் ஆதாரம்  இல்லை என்பது தெளிவாகி விட்டது.) 
இவ்வாறு ஆங்காங்கு நமது விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளது.

மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்களது 4ஆவது உரை-

நாங்க பழைய காலத்திலே பல நிலைகளிலே இருந்திருப்போம். நான் வேற மாதிரியெல்லாம் இருந்திருப்பேன். அதெல்லாம் வைத்து இங்கு பேசக் கூடாது. நாங்க இன்னைக்கு எடுத்திருக்கிற நிலைபாடுலேதான் பேசணும் என்கிறார்கள். அதற்கு ஒரு கால வரையரை சொல்லி விடுங்கள். இந்தக் காலம் வரை முன்னாலே நான் செய்ததை விட்டு விடு. அப்படியென்றால் நாங்கள் அதை கிரகித்து சொல்ல முடியும்.

(இஜ்மாஃ மார்க்கத்தின் ஆதாரம் என்று நிறுவ வேண்டியவர் மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்கள். முந்தைய 3 உரைகளிலும் குா்ஆனிலிருந்தோ ஹதீஸ்களிலிருந்தோ ஆதாரம் வைக்கவே இல்லை. இப்பொழுதும் ஆதாரம் வைக்காமல் தலைப்புக்கு அப்பால் பட்டு திசை திரும்பியும்- திசை திருப்பியுமே பேசுகிறார். பீ.ஜே.யின் முந்தைய நிலை என்ன? இன்றைய நிலை என்ன? என்பது அல்ல தலைப்பு இதை சுன்னத் ஜமாஅத்தினா் நன்கு கவனிக்க வேண்டும்)

நான் உங்களுக்கு எடுத்துக் காட்டிய உதாரணங்கள். நீங்கள் தஃவா பணியில் ஈடுபட்டதற்குப் பிறகு. தம்மைத் தாமே மார்க்கத்திற்கு வெளிப்படுத்தக் கூடிய பெரிய மார்க்க விற்பன்னராக வெளிப்படுத்தி எழுதிய காலத்தில் எழுதிய செய்திகளைச் சொல்கிறேன் நான்.

நீங்கள் பீடி குடிச்ச செய்தியையோ மற்றதெல்லாம் சொல்ல வேண்டாம். அந்த செய்திகளெல்லாம் நான் இங்கு சொல்ல வரவில்லை. சொல்லவும் வேண்டியது இல்லை. நான் உங்களை கேட்டுக் கொள்வது இந்தக் கருத்தை, நீங்க எப்ப எழுதுனீங்க. அதிலேயும் இன்றைக்காவது எங்களுடைய நிலைகள் உங்களுடை நிலைகள் மாறிப் போய் விட்டது.

கொஞ்சம் கொஞ்சம் இக்லாஸா ஆரம்பித்தீர்கள். துவக்கத்தில் பித்அத்தை கண்டிக்கணும். ஷிர்க்கை கண்டிக்கணும். (என்ற) தோரணையில் ஆரம்பித்த எழுதப்பட்ட காலத்தில், எழுதப்பட்ட கட்டுரைகள் இது. உங்களுடைய நிலைபாடுகள் இது. 

நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன். இருக்குது எனக்கு நல்லாத் தெரியும். நீங்க ஒரு காலத்திலே அல்லாஹ்வே இல்லை என்று சொன்ன ஆள்தான். அதையும் நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.

ஒரு திராவிடக் காரருடைய (கழகத்த வருடன்) பேசும்பொழுது. நாங்களும் அப்படித்தான் இதைப் பற்றி நாங்க (பேச) வரவில்லை. என்ற கருத்துக்களை பேசி இருக்கிறீர்கள். நெட்டிலே நிறைய பார்க்கக் கூடியவா்கள் பார்க்கிறார்கள். அதை நான் சொல்ல வரவில்லை. அது ஆதிய காலத்தில் என்னவோ நடந்திருக்கலாம். தனிப்பட்ட செயல்பாடுகளை நான் உங்களை சொல்லவில்லை. நான் அதை பேசவும் மாட்டேன்.
(மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்களுடைய இந்த நிலைபாடு உண்மையானது என்றால் பாராட்டத் தக்கது. இப்படி  சொல்லிக் கொண்டே திரும்ப திரும்ப சொல்லி அவரது மதிப்பை அவரே கெடுத்துக் கொள்கிறார் )

இல்லாட்டி அதை பேசணும்னா அது வேண்டியதும் இல்லை. இந்த மஜ்லிஸுக்கு அழுகுமல்ல.

நான் இப்ப சொல்வது நீங்க இந்த தஃவா பணியை எடுத்து மக்களுக்கு குர்ஆன் ஹதீஸ், குர்ஆன் ஹதீஸ்தான் மற்ற எதுவும் இருக்கக் கூடாது என்று சொல்லி ஆரம்பம் செய்த காலத்திலே. துவக்க காலத்திலே ஒரு நிலை இருந்தது. அந்த நிலையிலே அந்த ஹதீஸை ஏற்றீா்கள்.

அது மட்டுமல்ல ஸஹாபாக்களை அங்கீகரிக்கிறோம் என்று சொன்னீா்கள். நான் அதைப் படித்து காட்டி விடுகிறேன். காட்டினால்தான் உங்களுக்கு விளங்கும். இல்லா விட்டால் எதையோ முன் காலத்தில் செய்தது என்றால் டிக்லா் பண்ணுங்க. இந்த வருஷத்திலே நான் எழுதின இந்தச் செய்தியிலே நான் தப்பு செய்து விட்டேன் என்று சொல்லுங்கள்.

அல்லது அதற்காக நீங்கள் பரிகாரம் தேட வேண்டும். சொல்லி விட்டீா்கள் என்றால் நாங்கள் அடுத்து பேச மாட்டோம். இன்னைக்கு அவா் அப்படி இருந்தாரு. இன்னைக்கு அவா் மாறிட்டாரு என் நிலைபாடு மாறிக் கொண்டது. அப்ப தப்பு செய்து விட்டோம் இன்னைக்கு ரைட்டான வழிக்கு வந்து விட்டோம் அடுத்து கூட்டத்திலே அல்ல எங்கேயும் பேச மாட்டோம். ஏனென்றால் மனிதன் தவறு செய்யலாம்.

(நிலைபாடுகள் மாற்றம் பற்றி பல பொதுக் கூட்டங்களிலும் பீ.ஜே. விளக்கி இருக்கிறார். அதை அதை விமர்சித்து இவரும் பேசி இருக்கிறார். இப்பொழுது இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் வைக்க முடியாததை மறைக்க இப்படி பேசுகிறார்)

நான் என்றைக்குமே சொல்வதுதான். தவறு இயல்புதான். அதிலேயும் மார்க்க சட்ட விஷயங்களிலே, அடுத்து இன்ஷாஅல்லாஹ் நான் பேசும்போது எடுத்து  சொல்லுவேன். ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டுவதற்கு கடமைப் பட்டிருக்கிறேன். மார்க்க விஷயங்களிலே அபுஹனீபா அப்படி தப்பு செய்து விட்டாரு. இமாம் ஷாபி, 

தப்பு செய்யாத ஆளு உலகத்திலேயே இல்லை. அல்லாஹ் ரசூலைத் தவிர. அல்லாஹ் ரசூலும் தப்பு செய்ய மாட்டாங்க. மன முரண்டாக எப்பொழுதும் செய்யவும் மாட்டாங்க.. மனமுரண்டு இல்லாமலும் பெரிய தவறுகள் நடக்கவே முடியாது. ரசூல்லாஹ்விடமும். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்திடம்.

ஆகையினால் தவறு என்பது வரும். பிக்ஹ் உடைய அடிப்படை சட்டமே என்ன தெரியுமா? இவங்க பாதியை என்னைக்குமே துண்டித்து பேசுகிறவா்கள்தான். நான் இன்னைக்கு இன்ஷாஅல்லாஹ் பீ.ஜே. இடத்திலே அந்த இமாம்கள் சொன்னதாக, அஹ்மது இப்னு ஹன்பல் சொன்னதாக அவ சொன்னதாக சொன்னதுடைய காப்பிகளெல்லாம் வாங்குவேன். 

ஏனென்றால் என் முன்னாலே அந்த ஹன்பலி மத்ஹபுடைய கிதாபுகள் நிறைந்திருக்கிறது. ஏராளமான மஸலாக்களை இஜ்மாஃவைக் கொண்டுதான் நிருபணமாகி இருக்கிறது. என்று கிதாபுகளிலே தெளிவாக எழுதி இருக்கிறார்கள். அப்படி இருக்கும்பொழுது இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் இப்படி சொல்லி இருக்கிறார் என்று சொன்னா. என்னுடைய இதுக்கு தெரியவில்லை. 

அவரிடம் காப்பி வாங்கி பார்ப்பேன். உண்மையிலேயே இருக்குமேயானால் அடுத்த பேச்சிலே நாங்கள் அதற்குண்டான பதிலை சொல்லுவோம். அதைப் பார்க்கணும். இன்ஷாஅல்லாஹ் அந்த காப்பியை அவா் கொடுப்பாரு நாங்கள் இன்ஷாஅல்லாஹ் அதை பார்த்து விட்டு பேசுவோம்.

அவா் ஆரம்ப நிலையிலே, தஃவா பணி ஆரம்பித்த பிறகு, கொஞ்சம் கொஞ்சம் இக்லாஸோடு துவங்கிய காலத்திலே. அவா் எழுதின ஒரு கட்டுரை. திருமறை குர்ஆன் அருளப்பட்ட 23 ஆண்டு காலத்தில். அதனுடன் ஒட்டி உறவாடி. அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து நடந்து. குர்ஆன் விரும்பும் லட்சிய சமுதாயமாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத் தோழர்களின் சுய நிர்ணய ஆற்றல்களுக்கே முதல் இடம் தர வேண்டும்.

ஸஹாபாக்களுடைய சுய நிர்ணய ஆற்றல் தாங்களா எடுத்த முடிவு என்று அர்த்தம். சுய நிர்ணய ஆற்றல் தாங்களாக எடுக்கக் கூடிய ஆய்வுடைய அதற்கு முதலிடம் தர வேண்டும். 

அவா்களிலும் குறிப்பாக இதிலே நல்லா சொல்கிறார் பாருங்கள். ரசூலுல்லாஹ்வுடைய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து 23 வருஷம் ரசூலுல்லாஹ்விடம் ஒட்டி உறவாடி இருந்தவங்க. சேர்ந்து வாழ்க்கையை கழித்தவர்கள் எல்லாம், அவா்கள் வாழ்க்கையிலெல்லாம் அன்மித்து இருந்தவங்க. அந்த மக்கள் சேர்ந்து ஒரு சுய நிர்ணய ஆற்றல் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு முதலிடம் தர வேண்டும். நம்ம அர்த்தமெல்லாம் பின்னாலே போய் விடணும். என் கருத்தை பின்னாலே தள்ளு. அவா்களுடைய கருத்துக்கு முதல் உரிமை  கொடு. எழுதி இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக, அவா்களிலும் குறிப்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களுக்குப் பின் அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அபூபக்கர், உமர், உஸ்மான்,அலி ஆகியோர் அவர்களிலேயே அறிஞா் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் அவா்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.

எழுதுறத எவ்வளவு அழகா எழுதி இருக்கிறார்கள் பாருங்கள். இன்னைக்கு ஏன் மாறினீர்கள். மாறிட்டோம் சொல்லுங்க நாம கேட்க மாட்டோம். அடுத்து. இந்த நிலை இருந்தது. அன்னைக்கு நாங்க பீடி குடிச்சது மாதிரி நினைத்து அதை விட்டு விடுகிறேன். அல்லது அந்தக் காலத்தில் நான் செய்த தவறுகள் மாதிரி இதையும் தவறாக நினைத்து விட்டு விடுகிறேன் டிக்லர் பண்ணுங்க. இன்ஷாஅல்லாஹ் அதற்குப் பிறகு நான் பேச மாட்டேன்.

ஸஹாபாக்களோடு அவா்கள் நிற்கவில்லை. அருமைச் சகோதரா்களே! கேட்டால் ஆச்சரியப்பட்டு போய் விடுவீர்கள். இந்த மாற்றங்கள் ஏன் வந்தது இதை மக்களுக்கு மத்தியிலே விளக்கி கொடுக்கணும். எல்லாரும் எதிர் பார்க்கிறோம். நானும் எதிர் பார்க்கிறேன். 

இப்படி எழுதின நீங்கள். இப்படி மாறக் கூடிய நிலைமைக்கு ஏன் தள்ளப்பட்டுட்டீங்க. ஒன்னு நினைவு இல்லாமல் எழுதினீங்களா? அல்லது கொள்கைகள் மாற்றம் ஏற்பட்டு விட்டதா? அல்லது எங்கிருந்தாவது நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதா? அல்லது தவறுகள் என்ற ரீதியிலே நடந்து விட்டது என்று சொல்கிறீர்கள? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று சொல்கிறீா்களா? இதை மக்களுக்கு முன்னாலே எடுத்துக் காட்டுங்கள்.

நான் கோபப்பட்டு பேசுகிறேன் என்று எனக்கு ரொம்ப கோபம் வரும் என்றால் அந்த இதெல்லாம் வேண்டாம் இங்கே. நல்லா பேசுங்க என்னைப் பற்றி பேசணும் என்றால் முழு உரிமை இருக்கு. நான் செய்திருந்த தவறுகள் இருக்குமேயானால் மஜ்மாவிலே சொல்லுங்க. இந்த கூட்டத்திலே சொன்னா திருத்திக் கொள்வேன். உடனே நான் வாபஸ் வாங்குகிறேன். அப்படி இருக்குமேயானால்.

அதே மாதிரி உங்களுக்கும் மக்கள் மத்தியிலே ரொம்ப குழப்பம் ஆகி போய் விட்டது. 25 வருஷத்திலே குழப்பின மக்கள் மாதிரி வேறு எங்கேயும் எந்தக் காலத்திலேயும் எந்த ஊா்லேயும் குழம்பி இருக்க மாட்டாங்க. அதனால் ஒரு தெளிவுரைகள் தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எடுத்து வைக்கிறேன்.

தெள்ளத் தெளிவாக நீங்கள் எழுதினீர்கள். அதே மாதிரி அடுத்த இதழில் எழுதுகிறார். நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு குர்ஆன் மூலம் நபி மொழி மூலம் ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது. குர்ஆன் ஹதீஸிலிருந்து தெளிவுரை பெற முடி(யாதபோது) ஸஹாபாக்கள் மூலமும் தெளிவுரை கிடைக்கவில்லை என்று சொன்னால். 

நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத் தோழர்களிடம் அதிகமதிகமாக நட்பும் தோழமையும் வைத்திருந்த தாபியீன்களின் குறிப்பிடத்தக்கவா்களான முஜாஹித் இப்னு ஜப்ர்.  ஸயீது இப்னு ஸுபைர், இக்ரிமா, அதா இப்னு ரபா, ஹஸன் அல் பஸரீ, மஸரூக், ஸயீது இப்னு முஸையப், அபுல் ஆலியா, ரபீஉஇப்னு அனஸ், கதாதா, ழஹ்ஹாக் போன்றோரின் கருத்துக்களுக்கு முதலிடம் தர வேண்டும்.

அருமைச் சகோதரர்களே! ஸஹாபாக்களுக்கு முதலிடம் தரணும், தாபியீன்களுக்கு முதலிடம் தரணும், இது தப்பா இருந்த இந்த நிலை. இது தவறு நான் அன்றைக்கு தவறாக எழுதி விட்டேன் என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்றால் அடுத்து நான் இதை பேச மாட்டேன். நீங்களும் நானும் அவரை விளங்கிக் கொள்ளலாம். எந்த நிலையிலே இருக்கிறார்கள் என்று சொல்லி.

இதை நீங்கள் அதோடு பீடி குடித்ததோடு ஒப்பிட்டு நான் ஒரு காலத்திலே அப்படி புகை பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த தவறு அல்ல. இது. மக்களுக்கு வழி காட்டுவதற்காக வேண்டி சொல்லப்பட்ட கருத்து அது. தனிப்பட்ட முறையிலே கக்கூஸிலே போய் பீடி குடித்த நிலை அல்ல அது.

நீங்கள் கூட பல இடத்திலே சொல்லி இருக்கிறீர்கள். நாங்க அன்வாருல் உலுாமில் ஓதுகிற காலத்தில் அங்கே போய் பேப்பர் படிப்போம் அந்த தனிப்பட்ட தவறுகளை நாங்கள் சொல்வதற்கு வரவில்லை. மக்களுக்கு நீங்கள் எடுத்து வைத்த கருத்துக்கள். அதிலும் அல்லாஹு அக்பர். நஜாத் மே மாதம் 86ஆவது வருஷம் பக்கம் 18,19. ஆகையினாலே இதனுடைய விளக்கத்தை நீங்க உங்களுக்கு சொல்லணும். மக்களுக்கு மத்தியிலே சொல்லணும்.

அதற்கு அடுத்து நான் உங்களுக்கு தெளிவாகச் சொன்னேன். எப்ப இஜ்மாவுக்கு மாற்றம் செய்யலாம். எப்ப செய்யக் கூடாது. ஸஹாபாக்களெல்லாம் சோ்ந்து ஒரு முடிவு செய்து விட்டார்கள் என்று சொன்னால் அதற்கு மாற்றங்கள் செய்யக் கூடாது. அதற்குப் பிறகு யாருக்கும் அதற்கு மாற்றமான முடிவு எடுக்க கூடாது என்கிறதெல்லாம் நிலைபாடுகளை நான் சொன்னேன்.

ஸஹாபாக்களுக்கு மத்தியிலே கருத்து வேறுபாடுகள் உள்ள செய்திகள் இருக்குமேயானால், ஏதாவது ஒன்றிலே ஒருத்தர் இஜ்மாஃ செய்தாரு. அடுத்த வருஷம் அல்லது, அடுத்த கட்டங்களில் இருக்கும்போது இன்னொரு சொல்லில் இஜ்மாஃ செய்ய உரிமை இருக்கிறது. இந்த நிலையும் சொன்னேன்.

ஸஹாபாக்களுடைய கருத்துக்கள் சொல்லப்படாத மற்ற நிலைபாடுகளில் இஜ்மாஃ இருக்குமேயானால் அந்த இஜ்மாஃ காலத்துக்கு தக்கபடி, அந்தந்த காலத்துடைய அறிஞர்களுக்கு தக்கபடி மாறுபடலாம். இன்னைக்குள்ள நிலையிலே ஒரு முடிவு எடுத்தோம்.

ரண்டாவது அவுக சொல்றாக. அவர் சும்மா இருந்து விட்டால் அது எப்படி இஜ்மாஃ ஆகி விடும். பிறகு எப்படி இஜ்மாஃ ஆகும். ஒவ்வொருத்தர் ஓட்டு போடணுமா? சந்தா்ப்பம் கொடுக்கப்படுகிறது. நீங்க இந்த இஜ்மாஃ உடைய நிபந்தனைகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் சொல்வார்கள். 

அவா்களுக்கு உரிய யோசிப்பதற்குண்டான சந்தா்ப்பம் கொடுக்கப்பட்டது. செய்திகளும் சேர்ந்தது. மக்களுக்கு மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட அறிஞா்களாகவும் திகழ்ந்தார்கள். அப்படி இருந்தும் கூட அதற்கு மாற்றம் செய்யாமல் இருந்து விடுவார்களேயானால் அது இஜ்மாவிற்கு அடையாளாம்.

அப்படித்தான் நடந்தது. இப்படி நடக்கப்பட்ட பிறகுதான் இஜ்மாஃ என்று சொல்லப்படும். எல்லாரும் வாய் மூலமா சொன்னார்கள் என்றால் அதுவும் இஜ்மாஃதான். சிலர் சொல்ல மற்றவா்கள் கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பு இருந்தும் கூட, சந்தா்ப்பம் இருந்தும் கூட, கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல், அவா் வாழ்க்கையை விட்டு போய் விட்டார்கள் .என்று சொன்னால் அதற்கு இஜ்மாஃ என்று சொல்லணும்.

(இஜ்மாஃ என்றால் என்ன என்பது அல்ல கேள்வி. இஜ்மாஃ செய்ய குர்ஆன் ஹதீஸுகளில் ஆதாரம் இருக்கிறதா? என்பதுதான் கேள்வி. இதற்கு பதில் சொல்லாமல்  இஜ்மாஃ என்றால் என்ன என்று விளக்கியே நேரத்தை போக்குவதால். ஸைபுத்தீன் ரஷாதி உரை மூலம் இஜ்மாஃ செய்ய குர்ஆன் ஹதீஸுகளில் ஆதாரம்  இல்லை என்பது தெளிவாகி விட்டது.)

நான் இப்படியே இழுத்திட்டு போனால் வெறும் விவாதத்திலேயே போய் விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். தெளிவான உதாரணம் இன்ஷாஅல்லாஹ் அது தொடர்ந்து நடக்கணும். மூன்று தலாக்கை மூன்று தலாக்காக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிலை எங்களது. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்துடைய நிலை. 

இது ஸஹாபாக்களால் அறிவிக்கப்பட்ட இஜ்மாஃ. ஒரு உதாரணத்தை வைத்தால்தான் மக்களுக்கு புரிய முடியும். இல்லா விட்டால் வாதம் பிரதி வாதம் நான் ஒன்னை சொன்னேன் ,இங்கே ஒன்னை இழுத்து பேசணும்னு சொன்னால் ஒன்னுமே இல்லாமல் போய் விடும்.

இப்ப தலாக்குயை விஷயத்திலே வந்துச்சுன்னு வையுங்க. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்துடைய காலத்தில் இருக்கக் கூடிய நிலைபாடுகளை எடுத்து விட்டு. அந்தக் காலத்திலே கருத்து வேறுபாடுகள் பல ஸஹாபாக்களுக்கு மத்தியிலே இருந்திருக்கலாம். இல்லாமல் இருந்திருக்கலாம். இருக்கவும் செய்யலாம். அதனுடைய நிலைபாடுகள் தெரியாது. ஹஸரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்தில் தெளிவாக கிதாபுகளில் எழுதி இருக்கிறது.

(குா்ஆன் ஹதீஸி்ல் இல்லாவிட்டால் இஜ்மாஃ என்று சொல்லி விட்டு குர்ஆன் ஹதீஸில் தெளிவாக உள்ளதற்கு மாற்றமாகவும் எதிராகவும் சொல்லப்பட்ட சட்டத்தை இஜ்மாஃவுக்கு உதாரணமாக காட்டுகிறார்.)

இதல்லாமல் எனக்கு இன்னொரு சந்தோஷம் என்ன என்று சொன்னால். இஜ்மாஃ என்று ஒரு பொருளே கிடையாது. அப்படி என்று சொல்லிக் கொண்டு வந்தவர். இஜ்மாஃ இருக்குது, இஜ்மாஃ இருக்குது என்று பல உதாரணங்களை காட்டிக் கொண்டிருந்தாரு. எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இதையாவது இஜ்மாஃ இருக்குது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாரே என்று.

(இஸ்லாத்தில்  இஜ்மாஃ இல்லை ஆனால் ஏட்டில் இருக்கிறது. கிதாபுகளில்-ஏடுகளில்  இஜ்மாஃ  இருக்கிறது. இஸ்லாத்தில்  இஜ்மாஃ இல்லை என்பது தெளிவாக விளக்கப்பட்டும் குழுப்புகிறார். ரஷாதி)

முதலில் இஜ்மாஃ என்ற ஒரு பொருளே இல்லை என்று வாதித்து இருக்கிறார். இஜ்மாஃ நடக்கிறதுக்கு ஜான்ஸே இல்லை என்றார். இப்ப இவங்க சொல்லி இருக்கிறார்கள். நவவி சொன்னாங்க. அவங்க சொன்னாங்க. நீங்க நவவியை சொல்லும் போது 48 இமாம்களுடைய பெயர் சொல்ல முடியும். அத்தனை பேரும்  இஜ்மாஃ இருக்கு இஜ்மாஃ இருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். ஆக இஜ்மாஃ என்று ஒன்று இருக்கிறது என்று அங்கீகரித்ததற்கு சந்தோஷம்.

ஹஸரத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்துடைய காலத்திற்குப் பிறகு ஹஸரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்திலே மூன்று தலாக் மூன்றுதான் அப்படி என்று பிரகடனப்படுத்தப்பட்டது. உமருடைய ஆட்சி. தனிப்பட்ட உமர் செய்யவில்லை. உமர் இடம் இருக்கக் கூடிய ஷுரா உடைய கமிட்டிகள் சேர்ந்து முடிவு எடுத்தது. எடுத்து டிக்லர் பண்ணுனாங்க 

(ஷுரா முடிவு எடுத்தது என்று எந்த கிதாபில் உள்ளது. ஷுராவில் யார் யார் இருந்தார்கள்?)

மற்ற எந்த ஸஹாபியும் அவா்களுடைய வாழ்க்கை முடியும் வரை கூட இதற்கு எதிர்ப்பு செய்யவில்லை. அப்படி இருந்தது என்றால் எனக்கு ஒரு ஆதாரம் காட்டு. ஏதாவது ஒரு ஸஹாபி.

(நேரம் முடிந்து விட்டது.ஆதாரம் காட்டு என்று ஒருமையில் முடித்து இருக்கிறார். ஆதாரமில்லாமல் வெறுமையில் இருப்பதால் ஒருமைக்கு வந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

12 நிமிஷத்திலே ஆதாரம் வைக்க டயம் இல்லை என்று 2ஆவது உரை ஆரம்பத்திலே கூறினார். http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/2.htmlஇது 4ஆவது உரை 40 நிமிடங்கள் முடிந்து விட்டன. இன்னும் குா்ஆனிலிருந்தோ, ஹதீஸ்களிலிருந்தோ இஜ்மாவுக்கு ஆதாரம் வைக்கவில்லை)
தலாக் சம்பந்தமான ஆய்வுகளை படிக்க கீழே உள்ள லிங்குகளை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.