மார்க்கத்துக்கு ஸேப்டி இஜ்மாஃ ரஷாதி5ஆவது உரை


(குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாத இஜ்மாஃவை ஏற்றுக் கொள்வோம் என்று குர்ஆன் ஹதீஸ் உடையவர்கள் சொல்லவே மாட்டார்கள். இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாததால் என்பாருஎன்று ஜோஸ்யம் சொல்ல வேண்டிய நிலைக்குள்ளாகி விட்டார் ரஷாதி.)
(ஐயா பெரியவரே இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டி விட்டால். இஜ்மாஃவை இவா்களால் என்ன எவர்களாலும் மறுக்க முடியாதே. ஆதாரம் வைக்காமல் அதுக்குத்தான் இதுக்குத்தான் என்று இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால் அறிவுடையவர்கள்  எப்படி உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்)
(குர்ஆனில் உள்ளது என்று சொன்னால் குர்ஆனை எடுத்து பார்த்து உறுதி செய்ய முடியும். ஹதீஸில் உள்ளது என்று சொன்னால் ஹதீஸை எடுத்து பார்த்து உறுதி செய்ய முடியும். என்னத்த வேணும்னாலும் கட்டுவதற்கு  வழி ஸைபுத்தீன் அவர்கள் கூறும் இஜ்மாஃ பெயரால்தான் முடியும். இதை பாமரனாலும் புரிய முடியும். இந்த பண்டிதரால் ஏன் புரிய முடியவில்லை.)
(மடங்கி போயி, மடங்கி போயி என்கிறார். மடங்கி போயி என்றால் அந்த விவாதத்தில் பதில் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். 1994இல் நடந்த அந்த விவாதத்திலேயே பதிலும் விளக்கமும்  கொடுக்கப்பட்டு விட்டது. இவர்களோ 2001இல்  தர்ஜுமா  வெளியிட்ட போதுதான் இந்த விளக்கம் எழுதியது போல் பேசி வருகின்றனர்) இவ்வாறு ஆங்காங்கு நமது விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளது.

ஷரீஅத் அட்வகேட்டிற்கு(?) சரமாரி கேள்விகள். பீ.ஜே.யின் 5ஆவது உரைhttp://mdfazlulilahi.blogspot.ae/2013/03/5.html க்கு ஸைபுத்தீன் ரஷாதியின் பதிலுரை.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. கண்ணியத்திற்குரிய  சகோதரர்களே! பேசும்போது சொன்னாங்க. நாங்க எங்க நிலைபாட்டிலே இருந்து மாறினதுனால்தான் உங்களிடம் விவாதத்திற்கே வந்திருக்கிறேன். பழைய நிலைபாட்டில் இருந்திருந்தால் உங்களிடம் இது பற்றி விவாதத்திக்கவே நான் வந்திருக்க மாட்டேனே. அதிலிருந்தே நீங்கள் விளங்கி கொள்ளணும். நாம டிக்லரெல்லாம் செய்ய மாட்டோம். நீங்களா புரிந்து கொள்ளணும் என்கிறார்.

ஆனால் இதிலேயும் உண்மையாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் ஏற்றுக் கொள்கிறோம். இதிலேயும் அவர் உண்மையாக இருந்தால். ஆனால் உண்மையாளி அல்ல அவர். சமீபத்திலே அவா் பேசி இருக்கிறாரு. போடுப்பா கிளப்பை, கேளுங்க.

(பீ.ஜே. பேசிய சி.டி. போட்டு காட்டப்படுகிறது.)
இப்ப சொன்ன விஷயங்கள் எதுவுமே. நான் இப்ப சொல்கிறேன்னு நீங்கள் நினைக்கக் கூடாது. எந்த வருஷத்திலேயும் இதைச் சொல்லி இருக்கிறேன். எதை? குர்ஆன் சுன்னாதான் அடிப்படை ஸஹாபாக்களை பின் பற்றக் கூடாது. அஸ்ஹாபி அஸ்ஹாபி என்கிற இந்த ஹதீஸ்களையெல்லாம் எப்போ சொல்லி இருக்கிறோம். இந்த பிரச்சாரத்தை ஆரம்பிக்கிற (19)80களில் இருந்து சொல்கிறோம்.

(என்று பி.ஜே. பேசியுள்ளார். சி.டி. நிறுத்தப்படுகிறது. பி.ஜே. 80களில் இருந்து என்று கூறியதை எண்பதிலே இருந்து 1980லே இருந்து என்று திரித்து மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி வாதம் வைக்கிறார். )

எண்பதிலே இருந்து 1980லே இருந்து இதே பிரச்சாரம்தான் என்கிறாரு. நான் உங்களுக்கு வாசித்தது 1986. அப்ப என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். முரண்படுகிறது என்பது தெரியாத்தனமா செய்து விட்டால் வேறு. ஒவ்வொரு கூட்டத்திலேயும் இப்படி கடுமையாக பேசி விட்டு. 1980லே இருந்து ஸஹாபாக்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று நாம சொல்லி இருக்கிறோம்.

குர்ஆன் சுன்னா அல்லாத வேறு எதையும் அங்கீகரிக்கவில்லை. இப்படித்தான் நாங்கள் எண்பதிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று பேசி இருக்கிறாரு. பேசி விட்டு இன்றைக்கு வந்து சொல்கிறார். நான் மாறி விட்டேன். எப்ப மாறினீங்க? எண்பதிலிருந்தே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். 

எண்பத்தி ஆறிலே எழுதுகிறீர்கள். எண்பதில் வந்து சொன்னவங்க. நாங்கள் ஸஹாபாக்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டு எண்பத்தி ஆறிலே ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னால், ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிற நிலையிலிருந்து? ஏற்றுக் கொண்டோம் என்கிறதுதானே வருகிறது. இடையில் சொன்னது குழப்பமா இல்லையா?

எண்பதிலே இருந்தே இன்னைக்கு வரைக்கும் சொன்னா இந்த இடையிலே 86லே எப்படி வந்தது. 86லே மாற்றமான கருத்து எப்படி வந்தது. அதனால் தவறு நடந்தது என்று சொல்லலாம். அதை நாங்கள் விவாதத்திற்கு வந்ததிலே இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளணும் என்கிறார்.

இன்னொன்று வருத்தப்பட்டு சொன்னார். நான் வெறும் அஹ்மது இப்னு ஹன்பலை மட்டும் கேட்டாரு. மற்ற மூன்று இமாம்களையும் கேட்கவில்லை என்று. தயவு செய்து அதையும் கேட்கிறேன் கொடுங்கள். இன்ஷாஅல்லாஹ். உண்மையிலேயே இருந்தது என்றால் நாம ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் அல்ல. 

அதனுடைய பிரதிகளும் கொடுங்கள். நாங்கள் இன்ஷாஅல்லாஹ் பார்த்து விட்டு அடுத்து நம்முடைய அமர்விலே அதைப்பற்றி இன்ஷாஅல்லாஹ் இருக்குமேனால் அதற்குண்டான பதிலை நான் சொல்வதற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன் சகோதரர்களே!.

அதே மாதிரி உமர் ரலியல்லாஹு உடைய ஆட்சி காலத்திலே உமரு தீர்ப்புச் செய்ய அவருடைய தீர்ப்பு எல்லா ஸஹாபாக்களுக்கும் போய் சேர்ந்திருக்குமா? அவா்கள் எங்கெங்கேயெல்லாம் போய் இருப்பாங்க. இது வெறும் சந்தேகத்தை கிளப்பி விடுவதுதான் இது. 

இவங்க இப்ப என்ன விளங்கி வைத்துக் கொண்டார்கள். ஸஹாபாக்கள் என்று சொன்னால், அந்த ஒண்ணே கால் லட்சம் ஸஹாபாக்களும் சேர்ந்து சொன்னது என்று விளங்கிக் கொண்டு, எல்லா ஸஹாபாக்களும் அங்கே போய் இருப்பார்கள். இங்கே போய் இருப்பார்கள். அவா்களிடம் இந்தச் செய்தி போய் சேர்ந்து இருக்குமா? அப்ப சேர்ந்தது . அப்புறமும் அவர்கள் சும்மா இருந்தார்கள். அப்படி நிரூபியுங்கள். அப்ப தான் நாங்க அந்த இஜ்மாஃவை ஏற்றுக் கொள்வோம் என்பாரு..

(குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாத இஜ்மாஃவை ஏற்றுக் கொள்வோம் என்று குர்ஆன் ஹதீஸ் உடையவர்கள் சொல்லவே மாட்டார்கள். இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாததால் என்பாரு என்று ஜோஸ்யம் சொல்ல வேண்டிய நிலைக்குள்ளாகி விட்டார் ரஷாதி.)

நான் சொல்கிறேன் இங்கே வந்து திருச்சி வரைக்கும் செய்தி வர முடியும் (என்று) சொன்னால். அங்கே இருக்கக் கூடிய, பக்கத்திலே இருந்தா செய்திகள் போகாமல் இருந்ததா? படைகள் அனுப்பப்படாமல் இருந்தார்களா? 

(ஒண்ணே கால் லட்சம் ஸஹாபாக்களும் சேர்ந்து சொன்னது என்று விளங்கிக் கொண்டு என்ற வாதத்தை வைத்தார். அதன்  மூலம் எல்லா பகுதிகளிலுமுள்ள ஸஹாபாக்களுக்கு செய்தி போய் சேரணும் என்ற அவசியம் இல்லை என்ற கருத்தை சொல்லாமல் நிறுவினார். பிறகு செய்திகள் போகாமல் இருந்ததா? என்று அவருக்கு அவரே முரண்படுகிறார். சோ்ந்தது என்பதற்கு கூட ஆதாரம் வைக்க முடியவில்லை )

ஹஸரத் உமர் ரலியல்லாஹு உடைய அத்தனை செய்திகளும் ஆயிரக் கணக்கான மைல்களுக்கு போய் சேர்ந்து கொண்டுதான் இருந்தது. வந்து கொண்டுதான் இருந்தது. ஒரு பிரதானமான மஸ்அலா, மூன்று தலாக்குடைய மஸ்அலா அது. இவர்கள் சொல்வதைப் பார்த்தால், ஹஸரத் உமரைப் பற்றி சொல்லும்பொழுது நான் அடுத்து கிளிப்ஸ் போட்டு காட்டுகிறேன்.

வேணும் என்றே திட்டமிட்டு அவர் இஸ்லாத்திற்கு முரணான சட்டத்தை போட்டாரு. ஜனங்களெல்லாம் பயந்து போய் அதை அப்படியே அங்கீகரித்துக் கொண்டார்கள். உமர் ஜனாதிபதியாக இருந்ததாலே அவர் போட்ட சட்டத்தை அங்கீகரித்தார்கள். 

அங்கீகரித்தார்கள் என்று சொல்லும்பொழுதே என்ன தெரிகிறது. எல்லாரும் அங்கீகரித்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? அப்ப இஜ்மாஃ ஆகி விட்டதா இல்லையா? பயந்தாங்களா? பயப்படவில்லையா? என்கிறதை அடுத்து நான் சொல்கிறேன். 

செய்தி போய் சோ்ந்திருக்காது என்று சொல்லக் கூடியவங்க. முத(லில்) பேசும்போது அவா்களுடைய பேச்சுக்களில் இருக்கிறது. அதை எழுதும் போது எழுதுகிறார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் கூற்றுக்கு மனம் முரண்டாக, வேண்டும் என்றே, வேண்டும் என்றே சட்டத்தை மாற்றமா(க), நபி வழிக்கு மாற்றமா(க) சட்டத்தை போட்டு ஜனங்க பயந்து கொண்டு அதை அப்படியே அங்கீகரித்தார்கள்.

இதை ஏற்க முடியுமா? எந்த உமரைப் பற்றி சொல்(கி)றாரு? எந்த உமருங்க. ஒரு தனிப்பட்ட ஒரு சட்டத்தை சொன்ன நேரத்திலே ஒரு பொம்பளை எந்திரிச்சு கேட்டு உமர் சட்டத்தை வாபஸ் வாங்கினார்கள். உமருக்கு பயந்து கொண்டு இத்தனை ஸஹாபாக்களும் சும்மாவா இருந்து கொண்டார்கள். உமர் சட்டம் போடுறாரு. மூணு தலாக் மூணுதான். மூணுதான் ஆக்கணும் ஒன்று என்று ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதை எல்லா ஸஹாபாக்களும் அங்கீகரிக்கிறார்களே.

பெரிய ஆச்சரியம் என்ன என்றால், இந்த ஹதீஸை இவங்க ஆதாரம் மாதிரி காட்டுறாங்களே. இந்த ஹதீஸெல்லாம் இன்ஷாஅல்லாஹ் நான் சொல்கிறேன். ஆதாரம் மாதிரி எடுத்துக் காட்டி. இந்த ஹதீஸுக்கு முரணாக. இப்னு அப்பாஸ் அறிவிக்கக் கூடிய ஹதீஸுக்கு முரணாக. ஹஸரத் உமர் சட்டம் போட்டார். அந்த சட்டத்தை ஜனாதிபதி என்கிற காரணத்தாலே வாயை பொத்தி பயந்து கொண்டு எல்லாருமே அங்கீகரித்துக் கொண்டார்கள்.

எது வரைக்கும் அங்கீகரித்தார்கள்? இந்த ஹதீஸை ரலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தி்லே நடந்ததாக ஒரு தகவல் இப்னு அப்பாஸ்ட்டே வருதே. அந்த இப்னு அப்பாஸே அங்கீகரித்துக் கொண்டார். பெரிய கொடுமை இதுதான். இப்னு அப்பாஸ் சொல்றாரு ரலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலேயும் அபுபக்கர் அவர்களுடைய காலத்திலேயும் உமர் உடைய ஆரம்ப காலத்திலேயும் மூன்று தலாக்கை ஒரு தலாக்காக கருதப்பட்டது.

கருதப்பட்டு வந்தது என்று ஒரு செய்தி. அந்த செய்தி உடைய அந்தரங்கத்தை அப்புறம் நாம பார்ப்போம். இந்தச் செய்தியை அறிவிச்சவரு இப்னு அப்பாஸு. அந்த இப்னு அப்பாஸே என்ன சொல்றாரு? பத்வாவிலே எட்டுப் பேர் நகல் செய்கிறார்கள். இப்னு அப்பாஸ்ட்டே இருந்து ரிவாயத்து செய்யக் கூடிய எட்டு பேரு.

இப்னு அப்பாஸும் மூன்று தலாக்கை மூன்று என்றுதான் தீர்ப்பு அளித்துக் கொண்டிருந்தார்கள். இவரு என்ன சொல்ல வர்றாரு? இப்னு அப்பாஸு பயந்து கொண்டு ஏற்றுக் கொண்டாரு. ஜனாதிபதி சட்டம் போட்டாரு இப்னு அப்பாஸு பயந்தாரு. இப்னு அப்பாஸ் மாதிரி மற்றவர்களும். மற்ற ஸஹாபாக்களெல்லாம் அதை பயத்தின் அடிப்படையிலே அங்கீகரித்துக் கொண்டார்கள் அப்படி என்ற பெரிய குண்டை துாக்கி போடுகிறாரு. பெரிய குண்டு.

ஹஸரத் உமா் ரலியல்லாஹு அன்ஹு பயந்து கொண்டார்கள். என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம் ஹஸரத் உமா் எப்போது மவ்த்தாகிறார்கள். ஹிஜிரி இருபத்தி மூனிலே (23) இறந்து போகிறார்கள். ஹஸரத் இப்னு அப்பாஸ் ஹிஜிரி நாற்பத்தி எட்டு (48) வரைக்கும் ஹயாத்தாக இருக்கிறார்கள். இந்த உமரு மவ்த்தா போயிட்டாரே அதற்குப் பிறகு மாற்றமாக சொல்ல வேண்டியதுதானே?

உமரு போட்ட சட்டம் நபி மொழிக்கு மாற்றமானது என்கிறதுக்கு கூடிய டிக்லர் பண்ணனுமா இல்லையா? ஒரு ஸஹாபியாக இருக்கக் கூடியவர். நபி இடத்தில் நேரடியாக ஹதீஸை கேட்டவர், நபி இடத்தில் கேட்ட ஹதீஸ் அல்ல. நபியுடைய காலத்தில் நடந்ததாக ஒரு தகவலைச் சொல்கிறவர். இதற்கு மாற்றமா உமர் சட்டம் போடுகிறார் என்று சொன்னால். பயத்தின் அடிப்படையில் வாயை மூடி இருந்தால் கூட மவ்த்தா போன பிறகு சொல்ல என்ன தடை இருந்தது.

இது நடக்கிற கதையா? பயந்து ஸஹாபாக்கள் இருந்திருந்தார்கள் என்று சொன்னால். இப்படி பயந்தாளிகள், பயந்தாங் கொள்ளிகள் சொன்ன அவுங்களுடைய ஹதீஸ்களை ஏங்க ஏற்கணும். கேள்வி கேட்பானுகளா இல்லையா? ஒரு ஜனாதிபதிக்கு பயந்து கொண்டு மார்க்கத்தை சொல்லாமல் ஒரு அடிப்படை சட்டமான ஒரு சட்டத்தை. தலாக்குடைய சட்டத்தை. மறைத்து மறந்து வாழ்ந்த இந்த ஸஹாபாக்கள் குா்ஆனை ஒன்று சேர்த்து கொடுத்தால் எடுத்துக் கொள்ளணுமா?

அல்லது அவுங்க வந்து ஏதாவது மார்க்க விஷயங்கள் எடுத்துச் சொல்லக் கூடிய விளக்கங்கள் சொன்னா ஏற்றுக் கொள்ளணுமா? தள்ளப்பட்டு விடுவார்கள். அப்ப தள்ளப்பட்டு விடுவார்கள். ஸஹாபாக்களை இடையிலிருந்து பிரித்து விட்டோம் என்று சொன்னால் முடிந்து விட்டது. என்ன செய்யலாம். அவுங்க அவுங்க இஷ்டப்பட்டதைச்  சொல்லலாம். கண்டவன்களெல்லாம் கண்ட மஸலாவைச் சொல்லலாம். அதுக்குத்தான் இந்த இஜ்மாஃ மறுப்பு என்பதை அவுங்க வைக்கிறாங்க.

(ஐயா பெரியவரே இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டி விட்டால். இஜ்மாஃவை இவா்களால் என்ன எவர்களாலும் மறுக்க முடியாதே. ஆதாரம் வைக்காமல் அதுக்குத்தான் இதுக்குத்தான் என்று இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால் அறிவுடையவர்கள்  எப்படி உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்)

எதுக்கு வைக்கிறாங்க தெரியுமா? இஜ்மாஃ என்று சொல்வதே மார்க்கத்துக்கு ஸேப்டி அது. பாதுகாப்பு. கண்டவன்களெல்லாம் கண்ட சட்டத்தை சொல்லி விடக் கூடாது. முன்னாலே ஸஹாபாக்களெல்லலாம் இது சம்பந்தமா என்ன தீர்ப்பு செய்தார்கள் கவனிப்போம். 

ஸஹாபாக்களும் தாபியீன்களும் தபவு தாபியீன்களும் எதைச் சிறந்த காலத்து மக்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குப் பிரகடனப்படுத்தினார்களோ, அக்காலத்து மக்கள். இது சம்பந்தமா என்ன தீர்ப்பு செய்திருக்கிறார்கள். அப்படி என்று கவனித்து அதன் அடிப்படையில்தான் நடக்கணும் என்கிறக் கூடிய நிலை இருக்குமேயானால் கண்டவன் சொல்லெல்லாம் எடுபடாது.

சொன்னவங்க மார்க்கமெல்லாம் மார்க்கம் ஆயிடாது. ஆகையினாலே இந்த இஜ்மாஃ என்பது மார்க்கத்துக்கு தீனுக்கு பாதுகாப்பு. இஜ்மாஃ மறுப்பு என்பது நினைத்ததையெல்லாம் சொல்றதுக்குண்டான வழி வகை.குர்ஆன் என்கிற பேரிலே சொல்லு. ஹதீஸ் என்கிற பேரிலே சொல்லு. என்னத்த வேணும்னாலும் கட்டு. ஆனது இப்ப அப்படித்தான். 

(குர்ஆனில் உள்ளது என்று சொன்னால் குர்ஆனை எடுத்து பார்த்து உறுதி செய்ய முடியும். ஹதீஸில் உள்ளது என்று சொன்னால் ஹதீஸை எடுத்து பார்த்து உறுதி செய்ய முடியும். என்னத்த வேணும்னாலும் கட்டுவதற்கு  வழி ஸைபுத்தீன் அவர்கள் கூறும் இஜ்மாஃ பெயரால்தான் முடியும். இதை பாமரனாலும் புரிய முடியும். இந்த பண்டிதரால் ஏன் புரிய முடியவில்லை.)

அவரு காதியானி கிட்ட விவாதம் செய்தாரு. நான் (அவருடைய) விவாதங்களை எடுத்து உதாரணங்களை வைத்து இன்ஷாஅல்லாஹ் தலாக்குடைய விஷயமும் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்த இஜ்மாவுக்கு மாற்றமா அவர் நடந்த காரணத்தினாலே, காதியானி கேட்ட ஒரு கேள்வியிலே மடங்கி போயி, குர்ஆன்லே அவர் கொடுத்து இருக்கிற விரிவுரை. இதற்கு முன்னாலிருந்த அத்தனை ஹதீஸு அந்த குா்ஆனுடைய விரவுரையாளர்களுடைய கருத்துக்கு நேர் மாற்றம். 

யாருமே உலகத்திலே எழுதவில்லை. அதிலேயே அவர் எழுதுகிறார். அவருடயை அந்த விரிவுரையில் எழுதுகிறார். தமிழ் மொழி பெயர்ப்பாளா்கள் ஆங்கில மொழி பெயர்ப்பாளா்கள், இன்ன பிறவர்கள். மற்றவர்கள் எல்லாருமே இந்த இடத்தில், இந்த ஆயத்துக்கு பொருள் செய்வதில் தப்பு செய்து விட்டார்கள். நான் ஒரு ஆள்தான் ரைட் செய்து விட்டேன். அங்கீகரிக்க முடிகிறதா?

ஏன்டா முன்னாலே உள்ளவர்களை தட்டி கழிச்சாச்சு. இப்ப என்ன விரிவுரை வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்ன விபரத்தை வேண்டுமானாலும் எடுத்து சொல்லலாம் என்ற ரீதியிலே, நான் அதைத் தெளிவாகச் சொல்லி ஆகணும் உங்களுக்கு. விளக்கமாக சொல்லி ஆகணும். 

பெரிய பெருமை என்னவென்றால், முன்னால் இருந்த அத்தனை அறிஞ பெருமக்களுக்கும் மாற்றமாக, முரணாக, தன்னிச்சையாக, தனிப்பட்ட முறையில் ஒரு வினோதமான கருத்தைச் சொல்லி விட்டு. இதுதான் சரி. மற்ற எல்லா பேரும் இதுவரைக்கும் இருந்தவர்கள் எல்லாருமே தப்பு செய்து விட்டார்கள்.

அப்படீங்கக் கூடிய இந்த ரீதியிலே எப்ப பேச முடியும் என்று சொன்னால். முன்னாலே போனவர்களெல்லாம் கவனிக்க தக்கவர்கள் அல்ல. எடுத்துக் கொள்ள தக்கவர்கள் அல்ல. ஆதார புருஷா்கள் அல்ல. அப்படி தள்ளும்போதுதான் இந்த விதைகளை விதைக்க முடியும்.

காதியானி கேட்டது இதுதான். ஈஸா அலைஹிஸ்ஸலாம். அவர்களை நீங்கள் மவ்த்தாகி விட்டதாக நீங்கள் சொல்கிறீர்களே, (என்று தவறாக சொல்லி விட்ட ரஷாதி திருத்தி சொல்கிறார்) 

இல்லை ஈஸா அலைஹிஸ்ஸலாம். அவர்கள் ஹயாத்தாக இருக்கிறதாக நீங்கள் சொல்கிறீர்களே, நாங்க மவுத்தாகி விட்டோம் என்று சொல்கிறோம். காதியானி என்று சொல்லக் கூடிய காதியானி உடைய கருத்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறந்துட்டாங்க. கஷ்மீரில் அடங்கப்பட்டிருக்காங்க. அப்படி அவனுடைய தப்பான வாதம் கிறுக்கணுக அவணுக. என்னத்தையோ எடுத்து வாதத்திலே வைச்சானுக.

அதற்கு இவரிடத்தில் கேள்வி கேட்கும் பொழுதோ அல்லது யாரு கேட்டாங்களோ தெரியாது. எவனோ கேட்டுட்டான். ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஹயாத்தாக இப்பவும் இருக்கிறதாக குர்ஆன் சொல்கிறதாகச் சொல்றீங்க உங்க மார்க்கத்திலே சொல்லப் பட்டதாக சொல்றீங்களே. ஈஸா அலைஹிஸ்ஸலாம் இப்ப ஹயாத்தாக இருக்கிறதாக இருந்தால் குர்ஆன்லே வருது. வஅவ்ஸானி பிஸ்ஸலாத்தி வஸ்ஸகாத்தி மாதும்து ஹையன். 

வஅவ்ஸானி பிஸ்ஸலாத்தி வஸ்ஸகாத்தி அல்லாஹ் எனக்கு கட்டளை இட்டிருக்கிறான். தொழும்படியும், ஸகாத்து கொடுக்கும்படியும் நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம். நான் எப்ப வரைக்கும் உயிரோடு இருப்பேனோ அந்த உயிரோடு இருக்கிற வரைக்கும் நான் தொழுகவும் வேணும், ஸகாத்தும் கொடுக்கணும் என்று அல்லாஹ் எனக்கு கடமையாக்கி இருக்கிறான் கட்டளையாக்கி இருக்கிறான். அப்படி என்று ஹஸரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் சொன்னாங்க. அந்த கிறுக்கனுக கேள்வி கேட்டுட்டானுக.

என்ன கேள்வி கேட்டுட்டான். அப்ப ஈஸா அலைஹிஸ்ஸலாம் இப்ப ஹயாத்தாக இருக்கிறாங்க என்று சொல்கிறீங்கள் இல்லையா? வானத்திலே உயர்த்தப்பட்டு விட்டதாக சொல்கிறீர்கள் இல்லையா ஆமாம் அப்ப ஹயாத்தா இருங்கிறார்கள் இல்லையா ஆமாம். அப்ப அங்கே தொழுகிறார்களா? அங்கே உட்கார்ந்து கொண்டு ஸகாத் கொடுக்கிறாங்களா? அந்த ஸகாத்தை எப்படி கொடுப்பாங்க.

ஹயாத்தாக இருக்கிறதாக நீங்கள் வாதிக்கிறதா இருந்தா. ஹயாத்தா இருக்கும் காலமெல்லாம். மாதும்து ஹையன் நான் உயிரோடு இருக்கும் காலம் வரைக்கும். நான் ஸகாத்துடைய கடமையாக்கப்பட்டிருக்கிறேன். தொழுகவும் வேணும். ஸகாத்தும் கொடுப்பேன் என்றால் அங்கே மலக்குமார்களுக்கு ஸகாத் கொடுக்கிறாங்களா? 

அங்கே உட்கார்ந்து கொண்டு யாருக்கு ஸகாத் கொடுக்கிறாங்க?. இப்படி ஒரு கேள்வியை போட்டு விட்டான் அவன். மடங்கி போயி. இஜ்மாஃவை பார்க்காமல் இதற்கு முன்னால் செய்த விரிவுரைகளை விட்டு விட்டு முட்டி மோதி என்ன அர்த்த்தை செய்து போட்டார் தெரியுங்களா?

(மடங்கி போயி, மடங்கி போயி என்கிறார். மடங்கி போயி என்றால் அந்த விவாதத்தில் பதில் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். 1994இல் நடந்த அந்த விவாதத்திலேயே பதிலும் விளக்கமும்  கொடுக்கப்பட்டு விட்டது. இவர்களோ 2001இல்  தர்ஜுமா  வெளியிட்ட போதுதான் இந்த விளக்கம் எழுதியது போல் பேசி வருகின்றனர்)

பெரிய அர்த்தம். அர்த்தம் அல்ல அனர்த்தம் அது. மோசமான கருத்தை சொல்லி விட்டு. அதற்கு பெருமை வேறு அடித்துக் கொள்கிறார்கள். நாங்க ரொம்பவும் எங்களை மாதிரி யாருமே எழுதவில்லை. நாங்கதான் ஒழுங்காக எழுதி இருக்கிறோம் என்று.

அதிலே என்ன எழுதி போட்டாரு. ஆஹா இங்கே அப்படி அர்த்தம் வைக்கக் கூடாது. இதுவரைக்கும் பொருள் செஞ்சவனெல்லாம் தப்பு செஞ்சிட்டான். நான் சரியான பொருள் சொல்கிறேன். என்ன பொருளு. அல்லாஹ் சொல்கிறான். நான் தொழுகையையும் ஸகாத்தையும் எப்ப கொடுக்க வேணும் என்று சொன்னா?

நான் உயிரோடும் இருக்ணும், எங்க அம்மாவுக்கு பணிவிடை செய்யணும். அடுத்த ஆயத்துடைய பகுதியை கொண்டு வந்து. இந்த ஆயத்தோடு இணைத்துக் கொண்டு. எங்க அம்மாவுக்கு பணிவிடையும் செய்யணும். நான் உயிரோடும் இருக்ணும் இந்த ரண்டு நிபந்தனைகள் இருக்கும் போதுதான்.
(நேரம் முடிந்து விட்டது)




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.