2:75 குர்ஆன் முந்தையதா? அரபு மொழி இலக்கணம்முந்தையதா? மொழி முந்தையதா? இலக்கணம் முந்தையதா?

தலைப்புக்கான பதில்களை  விரிவான விளக்கங்களை  முந்தைய வெளியீட்டில் கண்டீர்கள். 


வாவுக்கு  இன்னும்,  மேலும்,  பின்னர் பின்பு,  அன்றி  என   இவற்றில் ஏதாவது ஒரு வார்த்தையை மொழி பெயர்ப்பாக  இடம் பெறச் செய்தே ஆக வேண்டும்.  


அந்த அடிப்படையில்தான் எல்லாரும் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். பீ.ஜே. மட்டும்தான்  வாவுக்கு மொழி பெயர்க்காமல் உலக மகா இலணக்கப் பிழை செய்துள்ளார் என்றார்கள். நாமும் நம்பினோம். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/10/275.html



காரணம் அடித்துச் சொன்னவர் அப்பாவி அல்ல அல்லாமா.  சாதாரண அல்லாமா அல்ல. ஏழாண்டுகள் அரபு கல்லுாரியில் படித்து மவுலவி ஸனது பெற்றவர், அதன் பிறகு  அப்ஸலுல் உலமா, டாக்டர் என சூட்கேஸ் நிறை சர்ட்பிகேட்கள் வாங்கி வைத்துள்ளவர்.  ஆகவே   நம்பி விட்டோம்.


நாம் எல்லா தமிழ் தர்ஜமாக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து படிக்க ஆரம்பித் பின் தான்  டாக்டர்,  மவுலவி, அப்ஸலுல் உலமா சொன்னது உண்மை இல்லை என்பதை நிதர்சனமாக அறிந்தோம். 


நீங்கள்  சொன்னது உண்மை இல்லை என  அந்த  அல்லாமாவுக்கும் பல முறை  ஆதாரங்களுடன் தெரிவித்து விட்டடோம்.  அவர் தனது  தவறுக்கு வருத்தம்  தெரிவிக்கவே இல்லை.

-----

இந்த 2:75 வசனத்தில்  வஃகத்,   வஹும்   என  இரண்டு இடங்களில்  வாவு இடம் பெற்றுள்ளது   இந்த 2 வாவுக்கும்


ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,


தென்காசி  E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி

 

உமர் ஷரீப் காஸிமி

பிறை ஆசிரியர் M. அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th,  

K.A. நிஜாமுத்தீன் மன்பஈ ,  

R.K. அப்துல் காதர் பாகவி  

ஜான் டிரஸ்ட் 

ஸலாமத் பதிப்பகம் - A. முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி

குத்புதீன் அஹ்மத் பாகவி,

அப்துர் ரவூஃப் பாகவி,

(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்,)

(மலிவு பதிப்பு)

K.முஹம்மது இக்பால் மதனி  (அல்-மதீனா அல்-முனவ்வரா)

 றஹ்மத் அறக்கட்டளை

K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்

அதிரை ஜமீல்

தாருஸ்ஸலாம், ரியாத் ( இலங்கை ஏழு கலா பீடங்கள்)

ஆகியோர் மொழி பெயர்க்கவே இல்லை. 

---------------


அடுத்து இந்த வசனத்தில் பின்னர் – பின்பு  பின்னும் - பிறகு என்ற பொருள் தரக் கூடியது 2 உள்ளது.  (ஸு)ம்ம ஒரு  இடத்திலும்    மி(ன்)ம்பஃதி ஒரு  இடத்திலும்   இடம் பெற்றுள்ளது


ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி, மலிவு,  திரீயெம், IFT)  அதிரை ஜமீல், ஜான் டிரஸ்ட், ரியாத்  ஆகியோர்  (தமிழ் மொழி நடைக்கு ஒன்று போதும் என்ற அடிப்படையில்)  ஒன்றுக்கு மட்டுமே மொழி பெயர்த்துள்ளார்கள்.  ஒன்றை மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்.


குர்ஆனில்  உள்ள ஒரு வார்த்தையை மொழி பெயர்க்காமல் விட்டால் பெரும் பாவம். அது யூதர்கள் செயல் என்று வானுக்கும் பூமிக்குமாக  குதித்தவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

-----------------

அடுத்ததாக,  வஃகத் கான என்பதில் ஃகத்  என்பது  தஃகீத்  சொல்.  இதற்கு  நிச்சயமாக, திட்டமாக, திண்ணமாக என்று மொழி பெயர்த்தே ஆக வேண்டும்  என்பது அல்லாமாக்கள் நிலை.  


ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி, மலிவு,  திரீயெம், IFT) அதிரை ஜமீல், ஜான் டிரஸ்ட் ரியாத்   ஆகியோர்  இந்த வசனத்தில் உள்ள இந்த  தஃகீத்  சொல்லுக்கு  மொழி பெயர்க்கவே இல்லை.   இதையும்  கவனத்தில் கொள்ளுங்கள். 




ஆக எல்லா  முதர்ஜிமீன் (மொழி பெயர்ப்பபளர்)களும் அவரவர் ஆய்வுப்படி  தஃகீத்  சொல்லை   மொழி  பெயர்க்காமல் விட்டுத்தான் உள்ளார்கள்.



---------


أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللَّـهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِن بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ ﴿٧٥﴾

أَفَتَطْمَعُونَ - அFபதத்மஃஊன 
 ஆசைப்படுகிறீர்களா

أَن يُؤْمِنُوا அ(ன்)ய்யுஃமினுான 
அல்லது நம்பிக்கை கொள்வதை

لَكُمْ - லகும் 
உங்களுக்களை -உங்களுக்காக

وَقَدْ كَانَ வஃகத் கான
இருக்கின்றனர்

فَرِيقٌ -Fபரீஃகுன் 
 ஒரு பகுதியினர் - ஒரு பிரிவினர்

 مِنْهُمْ-ம்மின்ஹும் 
அவர்களில்

يَسْمَعُونَ யஸ்மஃஊன 
செவியுறுகின்றனர் - கேட்கிறார்கள்

كَلَامَ கலாம 
வார்த்தை - - பேச்சு - வாக்கு - சொல்

اللَّـهِ - அல்லாஹி
அல்லாஹ்வின் - அல்லாஹ்வுடைய

ثُمَّ து(ஸு)ம்ம 

பின்னர் – பின்பு  பின்னும் - பிறகு



يُحَرِّفُونَهُ  யுஃஹர்ரிFபனஹு
அதை மாற்றுகின்றனர்

مِن بَعْدِ مَا -  மி(ன்)ம்பஃதிமா 
பின்னர்

عَقَلُوهُ - ஃஅஃகலுாஹு 
அதை சிந்தித்து புரிந்தனர்

وَهُمْ - வஹும் 
அவர்கள்

يَعْلَمُونَ யஃலமூன
அறிகின்றனர் - தெரிகின்றனர் 

மொழிப்பெயர்ப்புகள் :


அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். - (PJதொண்டி)


(முஸ்லிம்களே!) இந்த யூதர்கள் உங்களுக்காக ஓரிறை நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆவல் கொள்கின்றீர்களா? இவர்களில் ஒரு சாரார் இறைவாக்கைச் செவியுற்று விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றியவர்கள். -  (அதிரை ஜமீல்)

 

முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள். - ஜான் டிரஸ்ட் 



உங்களுக்காக அவர்கள் நம்பிக்கை கொள்வதை ஆசைப்படுகிறீர்களா திட்டமாக அவர்களில் ஒர் பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகின்றனர் பிறகு அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்கள் அறிந்தே அதை மாற்றுகின்றனர். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர். ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 


(முஸ்லிம்களே!) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? உண்மை யாதெனில், அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு, நன்குணர்ந்த பின்னரும் வேண்டுமென்றே அதனை மாற்றக்கூடிய ஒரு பிரிவினரும் இவர்களில் இருக்கிறார்கள். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

 

(விசுவாசங்கொண்டோரே!) உங்க(ள் வார்த்தைக)ளுக்காக இவர்கள் விசுவாசங் கொள்வார்கள் என்பதை நீங்கள் (எதிர்பார்த்து) ஆசை வைக்கின்றீர்களா? மேலும், திட்டமாக அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய வசனங்களை கேட்பவர்களாக இருந்தனர்; பின்னர், அதை விளங்கிய பிறகும் அவர்கள் அறிந்தவர்களாகவே அதை மாற்றிவிடுகின்றனர். (அல்-மதீனா அல்-முனவ்வரா)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு