வக்கீல் பணி என்பது எவ்வளவு சிறந்தது எவ்வளவு உயர்ந்தது தெரியுமா? வக்கீல்களை வாழ்த்துவோமா? வக்கீல் என்றால் என்ன அர்த்தம்? வக்கீல் என்றால் யார்?
வக்கீல் - வக்காலத்து தமிழ் சொல்லா?
https://mdfazlulilahi.blogspot.com/2020/10/blog-post_30.html
சமீப காலமாக சமூக வலைத் தளங்களில் தாங்கள் வழக்கறிஞராக பொறுப்பு ஏற்று 12 ஆண்டுகள் ஆகி விட்டன. 5 ஆண்டுகள் ஆகி விட்டன. துஆச் செய்யுங்கள். இப்படியாக இளம் வக்கீல்கள் கறுப்புக் கோட்டு போட்ட தங்கள் படத்துடன். குர்ஆன் வசனங்களையும் பதிவுகளாக போட்டு வருகிறார்கள்.
அல்லாஹ்வை மறந்து. சினிமா பட பாடல்களையும், வசனங்களையும் போட்டு தங்களை அடையாளம் காட்டி உள்ள கழிசடைகளும் இருக்கிறார்கள்.
அட்வகேட் என்று ஆங்கிலத்தில் அழைக்க ஆங்கிலேயன் ஆட்சியில் ஆயிரம் முறை சொல்லி இருந்தாலும், வழக்கறிஞர், வழக்குரைஞர் என்று என்னதான் தலை கீழாக நின்று துாய தமிழில் சொல்லச் சொன்னாலும். மக்களால் எளிதில் சொல்லப்படும் வார்த்தை வக்கீல் என்பதே.
வழக்குரைஞரை வக்கீல் ஸாஹிப் என்று அழைக்கும் வழக்கம் 1500 ஆண்டுகள் பழைமையானது. மேலப்பாளையம் மைலக்காதர் (கிராம்சு) தெருவில் வக்கீல் ஸாஹிப் வீடு என்று 100 ஆண்டுகள் பழைமையான வீடு ஒன்று இருக்கிறது. ஆனால் அங்கு இன்று வக்கீல் கிடையாது.
முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று அனைவராலும் வக்கீல் என்று சொல்லப்படும் சொல், தமிழ் சொல் அல்ல. அது அரபு மொழிச் சொல்.
அதனால், தமிழ் மொழி பற்றாளர்கள் என்ற போர்வையில். அரபு மொழி சொல்லை ஒழித்து விட வேண்டும். பயன்பாட்டில் உள்ள வக்கீல் போன்ற அரபு மொழி சொல்களுக்கு எதிராக தமிழ்ச் சொற்களை உருவாக்குவோம் என்று தலைகீழாக நின்றார்கள்.
வக்கீல் - வழக்கறிஞர்
வக்கால(த்து) - வழக்கேற்புறுதி
என்றெல்லாம் வார்த்தைகளை வார்த்து எடுத்தார்கள்.
அதற்கு படித்த (?) தமிழ் மொழி பற்றுள்ள(?) முஸ்லிம்களும் துணை நின்றார்கள். இருந்தாலும் வக்கீல் வக்கால(த்து) போன்ற அரபு சொற்களை ஒழிக்கவே முடியவில்லை.வக்கீல் என்பது சாதாரண வார்த்தை அல்ல.
ஆகவே வக்கீல் என்றால் என்ன அர்த்தம்? என்பதை அரபு மொழியில் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிந்து விட்டு. அந்த தகுதியெல்லாம் துஆ கேட்கச் சொல்லும் வக்கீல்களிடம் இருக்கிறதா? யாருக்கு இருக்கிறது என்று பார்த்து விட்டு துஆச் செய்து வாழ்த்துவோம்.
வக்கீல் என்றால்
1.வாதாடுபவர் - வாதிடுபவர்
2. பரிந்து பேசுபவர்
3. உதவி செய்பவர்
4. (உண்மைக்கு) ஆதரவாளர்
5.உண்மைக்கு சாட்சியாக இருப்பவர்
6. நிர்வகிப்பவர்
7. (நமது காரியங்களை) நிர்வகிக்கும் பொறுப்பாளர்
8. (மக்கள் காரியங்களை) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவர்.
9. காவலனாக இருப்பவர்
10. பாதுகாவலர் - காப்பவர்
11.பொறுப்பாளர்
12.பொறுப்பேற்கக் கூடியவர்
13.சார்ந்திருப்பதற்கு தகுதியானவர்
14. கண்காணிப்பவர்
15. நம்பிக்கையாளர்
16. காரியங்களின்) பொறுப்பை ஒப்படைப்பதற்கு தகுதியானவர்
17. சரீர இச்சையை உடையவனுக்கு பாதுகாப்பாளராக இருக்காதவர்
18. முகவர்
இவ்வளவு சிறப்புத் தன்மை (பொருள்கள்) உடையதுதான் வக்கீல் என்ற வார்த்தை.
இது மட்டுமா? அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் வக்கீல் என்று அல்லாஹ் கூறி உள்ளான். எப்படிப்பட்ட வக்கீல்?
உண்மையை பொய் என்று கூறுபவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் வக்கீல் அல்ல. 6:66.
(வழி கெட்டவர்களுக்கு) நபி(ஸல்) அவர்களை வக்கீலாக ஆக்கவில்லை.
வழிகெட்டவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் வக்கீல் அல்ல
ஷைத்தான் வழியில் சென்றவர்களுக்கு . நபி(ஸல்) அவர்களை வக்கீலாக அல்லாஹ் அனுப்பவில்லை.
(நபியே!)
எவன் தன் (இழிவான) சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்)
தன்னுடைய தெய்வமாக எடுத்துக்கொண்டானோ அவனை நீங்கள் பார்த்தீர்களா? நீங்கள் அவனுக்குப் வக்கீலாக இருப்பீர்களா?
இன்னும் அல்லாஹ் தன்னையும் வக்கீல் என்கிறான் குர்ஆனில். இதை 3:173. 4:81. 4:132 4:171. 33:3. 33:48, 39: 62, 4:109 ,6:102. 11:12. 12:66.-67 , 17:2 17:65. 28:28. 39:41, 73:9. போன்ற பல இடங்களில் காணலாம்.
ஆக வக்கீல் பணி என்பது எவ்வளவு சிறந்தது எவ்வளவு உயர்ந்தது தெரிகிறதா?
யாரிடம் இந்த தகுதிகள் இருக்கின்றனவோ அவர்கள் நமது துஆவுக்கு உரியவர்கள்.
யாஅல்லாஹ் இத்தனை சிறப்புத் தன்மைகள் உடைய வக்கீல்களையும் அவர்களது குடும்பத்தாரையும் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கியவர்களையும் உனது அருள் மழையில் நனையச் செய்வாயாக ஆமீன்.
இந்த சிறப்புத் தன்மைகளுக்கு மாற்றமாக, சரீர இச்சையை உடையவனுக்கு எவன் வக்கீலாக (பாதுகாப்பாளராக) இருந்து சமுதயாத்துக்கு துரோகம் செய்கின்றானோ. அவன் மீதும் அவனை அப்படி உருவாக்கியவர்கள் மீதும் அவனது இழி செயல்களுக்கு துணையாக நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயா ஆமீன்.
Comments